Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 88

மூர்கனின் காதலி CH 88

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 88

விஷ்வா கூட சென்னைக்கு வந்து சேர்ந்தா மேகா. விஷ்வாவோட வீட்ல எல்லாரும் சேர்ந்து டின்னர் சாப்பிட்டுட்டு இருக்க, “இனிமே எப்ப நிலாவ பாக்க முடியுமோ..!!” அப்படின்னு நினைச்சு சோகமா இருந்தான் அரவிந்த். சாப்பிட்டுட்டு இருந்த மேகாகிட்ட, “நீ உங்க வீட்ட மிஸ் பண்றியாமா..?” அப்படின்னு மகேஷ் கேட்க, “ஆமா அண்ணா. பண்ணாம எப்படி? அங்க பாத்தீங்கல்ல.. நம்மள சுத்தி எப்பயும் யாராவது இருந்துட்டே இருப்பாங்க. இங்க முன்னாடியாவது சௌபர்ணிகா அக்கா இருந்தாங்க. இப்போ அவங்களும் என்னமோ எங்களுக்கு ப்ரைவசி குடுக்கிறதா நினைச்சு அவங்க பிளாட்க்கே போய்ட்டாங்க. இவ்ளோ பெரிய வீட்ல ஆளுங்க ரொம்ப கம்மியா இருக்கிறது கஷ்டமாதான் இருக்கு” அப்படின்னு சொன்னா மேகா.

“ஆமா, அதுவும் இங்க ஒரு பொண்ணு கூட இல்ல. எல்லாரும் தடி பசங்களா இருக்காங்க. சோ இவங்களுக்கு நடுவுல நீ இருக்க பழகுறதுக்கே கொஞ்சம் டைம் ஆகத்தான் செய்யும்” அப்படின்னு மகேஷ் சொல்ல, “ஆமாமா, சோ எனக்காகவாவது நீங்க எல்லாம் சீக்கிரம் மேரேஜ் பண்ணுங்க. அப்புறம் உங்க வைஃப் எல்லாம் வந்துட்டாங்கன்னா, நான் அவங்களையெல்லாம் ப்ரெண்ட்ஸ் ஆக்கிப்பேன். ஜாலியா இருக்கும்” அப்படின்னு உற்சாகமா சொன்னா மேகா.

“ஆமா, அதுவும் வர்ற பொண்ணு உங்களுக்கு ஆல்ரெடி தெரிஞ்ச பொண்ணா இருந்தா இன்னும் நல்லா இருக்கும்ல..!” அப்படின்னு வேகமா அரவிந்த் சொல்ல, ‘இவர் நிலாவத்தான் சொல்றாரு போல! அவளும் இங்க வந்துட்டா நல்லாத்தான் இருக்கும்’ அப்படின்னு நினைச்ச மேகா, “ஆமா அண்ணா” அப்படின்னு சொன்னா.

இப்படியே எல்லாரும் மேகாகூட பேசி சிரிச்சுட்டே சந்தோஷமா சாப்பிட்டுட்டு இருந்தாங்க. பெரும்பாலும் விஷ்வா அமைதியாவே இருப்பான் என்பதால், சாப்பிடும் நேரத்துல எல்லாரும் ஒண்ணா சாப்பிட்டாலும் கையில போனோடவே அதுல மூழ்கி கிடப்பாங்க. ஆனா மேகா வந்தவுடனே எல்லாரும் அங்க விஷ்வான்னு ஒரு கேரக்டர் இருக்கிறதையே மறந்துட்டு அவகூடவே பேசிட்டு இருந்தாங்க. அவ எல்லாரையும் அண்ணா அண்ணான்னு உரிமையா கூப்பிடுறதால, அவளை தங்களோட குட்டி தங்கச்சியாவே எல்லாரும் பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.

‘என்ன.. நான் ஒருத்தன் இங்க இருக்கும்போது என்னை யாரும் கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க! இவனுங்க எப்பவும் இப்படித்தான் இருப்பானுங்க. ஆனா இவளுக்கு என்ன? எப்ப பாத்தாலும் அவங்கூடயே பேசிட்டு இருக்கா! இவங்களோட அண்ணன் தங்கச்சி பாசம் ஓவரா போயிட்டு இருக்கே.. போற போக்க பாத்தா இவங்க எல்லாம் டீம் சேர்ந்துக்கிட்டு என்னை கழட்டி விட்டுருவாங்க போல!’ அப்படின்னு நினைச்ச விஷ்வா, என்ன பேசுறதுன்னு தெரியாம “புட் நல்லா இருக்கா?” அப்படின்னு மேகாகிட்ட கேட்டான்.

சாப்பிட்டுட்டு இருந்த மேகா, “ம்ம்ம்.. ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இங்க சமைக்கிறவங்க ஹோட்டல் செஃப் தானே.. சோ இந்த சாப்பாட்டை சாப்பிடுறது ஏதோ ரெஸ்டாரண்ட்ல சாப்பிடுற மாதிரிதான் பீல் ஆகுது. ஏன்னு தெரியல இது வீட்டு சாப்பாடு மாதிரி இல்ல. டெய்லியும் இப்படியே சாப்பிட்டா ஒரு மாதிரி இருக்காதா?” அப்படின்னு கேட்டா.

‘ஆமா, நான் அங்க ஊர்ல சாப்பிட்ட சாப்பாட்டுக்கும் இதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. டேஸ்ட் வைஸ் அதைவிட இது நல்லா இருந்தாலும், அந்த வீட்டு சாப்பாட்டுல இருந்த ஏதோ ஒன்னு இதுல மிஸ் ஆகுது’ அப்படின்னு நினைச்ச விஷ்வா, செஃப் சாமுவேல் தாத்தாவை கூப்பிட்டு, “நீங்க உங்க வீட்டுக்கு சமைக்கிற மாதிரிதான் இங்கயும் சமைக்கிறீங்களா?” அப்படின்னு கேட்டான்.

“நோ சார். வீட்டுக்கு சமைக்கும்போது டேஸ்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காம சாப்பிடுறவங்க ஹெல்த்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமைப்பேன். ஆனா இங்க சமைக்கும்போது டேஸ்ட், குவாலிட்டி, பிரசன்டேஷன் எல்லாத்தையும் பார்த்து பக்குவமா செய்வேன்” அப்படின்னு சாமுவேல் சொல்ல, “இனிமே உங்க வீட்ல இருக்குறவங்களுக்கு சமைச்சா எப்படி சமைப்பீங்களோ, அதே மாதிரி இங்கயும் செய்ங்க” அப்படின்னு விஷ்வா சொல்ல, சரிட்டாரு செஃப்.

சாப்பிட்டு முடிச்சதும் எல்லாரும் அவங்க அவங்க ரூமுக்கு போயிட்டாங்க. தன்னோட திங்க்ஸ் எல்லாம் பெட்டி பெட்டியா அப்படியே இருக்கிறதை கவனிச்ச மேகா, “இதையெல்லாம் நான் எங்க வைக்கிறது?” அப்படின்னு அவன் கிட்ட கேட்க, “நீ எங்க தங்க போற?” அப்படின்னு கேட்டான் அவன்.

“ஏன் அப்படி கேக்குறீங்க? நான் இங்கதானே இருக்கணும்! என்னை வேற ரூம்ல இருக்க சொல்றீங்களா?” அப்படின்னு மேகா வேகமா கேட்க, “ஏய் லூசு.. நீ இங்கதானே தங்க போற.. சோ இங்க தான் வைக்கணும்னு சொல்ல வந்தேன். அதுக்குள்ள ஏன் இப்படி?” அப்படின்னு சொன்ன விஷ்வா, அங்க இருந்த டிரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடியை திருப்புனான்.

அவன் அதை திருப்புனதும் அங்க ஒரு சின்ன கதவு தெரிஞ்சுது. அதை திறந்த விஷ்வா, “இதான் வார்ட்ரோப். இதுல ரெண்டு செக்ஷன் இருக்கு. ஒன்னுல என்னோட திங்க்ஸ் இருக்கும், இன்னொன்னு நீ யூஸ் பண்ணிக்கோ” அப்படின்னு சொல்ல, “பார்றா.. பியூச்சர்ல உங்க வைஃப் வரும்போது யூஸ் ஆகும்னு வீடு கட்டும்போதே இதெல்லாம் பிளான் பண்ணி கட்டிட்டீங்களா?” அப்படின்னு கேட்ட மேகா, தன் பேக் எடுத்துட்டு அந்த கதவு கிட்ட போனா.

“அதுக்காக இல்ல. நானும் என் தம்பியும் எப்பவும் ஒரே ரூம்ல தான் ஸ்டே பண்ணுவோம். சோ இது எங்களுக்காக பிளான் பண்ணது. அவனோட திங்க்ஸ் எல்லாம் பார்க்கும்போது மெண்டலி எனக்கு ரொம்ப டிஸ்டர்ப் ஆச்சு. சோ அதையெல்லாம் வேற ரூமுக்கு ஷிப்ட் பண்ணிட்டேன்” அப்படின்னு விஷ்வா உடைந்த குரல்ல சொல்ல, “சாரி விஷ்வா. தேவையில்லாம நானே உங்களுக்கு பழைய விஷயத்தை ஞாபகப்படுத்தி விட்டுட்டேன்” அப்படின்னா மேகா.

“அவன் என்கூட பிறந்தவன்டி. அவனை பத்தி நான் நினைக்கிறதுக்கு யாராவது ஞாபகப்படுத்தணும்னு அவசியம் இல்ல. அவனை நினைக்கணும்னா முதல்ல அவனை நான் மறந்திருக்கணும். இந்த விஷ்வா உயிரோட இருக்கிற வரைக்கும் விஜய் அவனோட மெமரிஸ்ல எப்பவும் உயிரோட இருப்பான்” அப்படின்னு சொன்ன விஷ்வா, நேரா பாத்ரூமுக்கு போய் ஷவரை திறந்து கொட்டுற தண்ணிக்கு அடியில நின்னான். கண்ணாடிக்கு பின்னாடி இருந்த அந்த சின்ன ரூமுக்குள்ள நுழைஞ்சா மேகா. ஆனா அவ நினைச்சதை விட அது பெரிய ரூமா தான் இருந்தது. மினி ஷோரூம் மாதிரி இருந்த அந்த ரூம்ல அவங்களுக்கு தேவையான எல்லா பொருளும் நேர்த்தியா அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. லெப்ட் சைடு விஷ்வாவோட திங்க்ஸ் இருந்ததால, ‘இந்த சைட் நம்ம திங்க்ஸ் வச்சுக்கலாம்’ அப்படின்னு நினைச்ச மேகா, ரைட் சைடு இருந்த கதவை தள்ளி திறந்தா.

அங்க ஏற்கனவே பார்மல் வேர், கேஷுவல் வேர், அதுக்கு ஏத்த மாதிரி அக்சஸரீஸ், ஸ்லிப்பர்ஸ், பேக்ஸ்னு அவளுக்கு தேவையான எல்லாமே தயாரா இருந்தது. குறிப்பா ஒரு இடத்துல ‘பங்க்ஷன் வேர்’னு லேபிள் பண்ணி ஒரு தனி செக்ஷன் இருந்தது. அங்க இருந்த ஒவ்வொரு டிரஸ்ஸும் ரொம்ப கிராண்டாவும் விலை உயர்ந்ததாவும் இருந்தது. உண்மைய சொல்லப்போனா அவ கொண்டு வந்த திங்க்ஸை அங்க வைக்க கூட இடம் இல்லை.

அதையெல்லாம் வாய் பிளந்து பார்த்துட்டு இருந்த மேகா, ‘இதெல்லாம் இவர்தான் எனக்காக ரெடி பண்ணி இருப்பாரோ! ஆனா சொல்லவே இல்லையே..!’ அப்படின்னு நினைக்க, ‘ஆமா, அவர் அப்படியே எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டுதான் செய்வாரு பாரு..!’ அப்படின்னு அவ மனசாட்சி கேள்வி கேட்டுச்சு.

‘அதுவும் கரெக்ட் தான். எது எப்படியோ எனக்காக யோசிச்சு இவ்ளோ பண்ணி இருக்காரே.. இதெல்லாம் பார்த்தாலே எவ்ளோ மெனக்கெட்டு எனக்காக ஒவ்வொன்னையும் பார்த்து பார்த்து வாங்கியிருக்காருன்னு தெரியுது. அதுவே பெரிய விஷயம்தான்’ அப்படின்னு நினைச்சுட்டு, சிரமப்பட்டு அவ கொண்டு வந்த திங்க்ஸையும் அங்க வச்சுட்டு வெளிய வந்தா.
விஷ்வா அங்க இல்ல. ‘எங்க போனாரு இவரு?’ அப்படின்னு நினைச்சு தேட, பாத்ரூம்ல தண்ணி விழற சத்தம் கேட்டுச்சு.

‘நான் அந்த ரூமுக்குள்ள போய் ஒரு மணி நேரமாவது இருக்கும். இவர் இன்னமுமா குளிச்சிட்டு இருக்காரு? இப்படி இவ்வளவு நேரம் தண்ணிக்குள்ள இருந்தா என்ன ஆகுறது?’ அப்படின்னு நினைச்ச மேகா, வேகமா போய் பாத்ரூம் கதவைத் தட்டி, “விஷ்வா… உள்ள போய் எவ்ளோ நேரம் ஆச்சுன்னு தெரியுமா? இன்னும் என்ன பண்றீங்க? வெளிய வாங்க!” அப்படின்னா.
அவ வந்து கூப்பிடுற வரைக்கும் ஷவருக்கு அடியில அப்படியே தான் நின்னுட்டு இருந்தான் விஷ்வா. அவளோட குரல் அவனை தட்டி எழுப்ப, ஷவரை ஆப் பண்ணிட்டு “5 மினிட்ஸ்” அப்படின்னு மட்டும் சொன்னான். “சரி சீக்கிரம் வாங்க. ரொம்ப நேரம் ஈரத்துல இருக்காதீங்க” அப்படின்னு சொன்ன மேகா, நைட் டிரஸ் போட்டுட்டு வந்து பெட்ல உட்கார்ந்தா.
விஷ்வா குளிச்சுட்டு வந்து தலையை துவட்டிட்டு வெளிய வர, அவன் பார்க்க ஒரு மாடல் மாதிரி ஹாட்டா இருந்தான். அவனை சைட் அடிச்சுட்டே மேகா, “காலையிலதானே தலைக்கு குளிச்சீங்க.. மறுபடியும் இப்ப எதுக்கு? இப்படி சும்மா சும்மா ஹேர் வாஷ் பண்ணா இன்னும் கொஞ்ச வருஷத்துல மண்டையில முடியே இருக்காது. அப்புறம் மழைக்காலத்துல இப்படி குளிச்சா உடம்பு என்ன ஆகுறது?” அப்படின்னு கேட்க, “வெளிய போயிட்டு நைட் வந்தா எனக்கு குளிக்காம இருக்க பிடிக்காது” அப்படின்னு சொன்ன விஷ்வா, ஒரு ஷார்ட்ஸ் போட்டுட்டு வந்தான்.

‘என்ன இவரு மறுபடியும் அரைகுறையாவே வர்றாரு..!’ அப்படின்னு நினைச்ச மேகா, “நீங்க இப்படியேதான் இருக்க போறீங்களா?” அப்படின்னு அவனை மேலேயும் கீழேயும் பார்த்தபடி கேட்டா.
“பின்ன வீட்டுக்குள்ள இருக்கும்போது கூட கோட் சூட் போட்டுட்டா சுத்த முடியும்? நாங்க எல்லாரும் வீட்டுக்குள்ள இப்படித்தான் சுத்துவோம். இப்ப நீ இருக்கிறதால மத்தவனுங்க எல்லாம் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறானுங்க. இல்லனா இந்த வீடே வேற மாதிரி இருக்கும்” அப்படின்னு சொன்ன விஷ்வா, தன் கையில இருந்த துண்டை அவ மடியில போட்டுட்டு அவ பக்கத்துல உட்கார்ந்து, “துவட்டிவிடு” அப்படின்னான். அவ அவன் தலையை துவட்ட ஆரம்பிக்க, அவன் போன் எடுத்து பார்க்க ஆரம்பிச்சான்.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured