காலை பொழுது அழகா விடிஞ்சது..
ஆழ்ந்த உறக்கத்துல இருந்த மேகா, தன் மேல ஏதோ கனமா கிடக்கற மாதிரி உணர்ந்து கண்ணைத் திறந்து பார்த்தா. ஏதோ டெடி பியரைக் கட்டிப்பிடிச்சுட்டு தூங்குற மாதிரி, விஷ்வா அவ மேல படுத்துக்கிட்டு இருந்தான். அதனால அவளால நகரக் கூட முடியல.
“ஐயோ மூச்சு கூட விட முடியலையே.. இவரு என்ன எருமை மாடு மாதிரி இருந்துட்டு என் மேல இப்படி வந்து படுத்துருக்காரு..!!” அப்படின்னு நினைச்சுக்கிட்டே, அவனைத் தள்ளிவிட ட்ரை பண்ணா.
அவளோட குட்டி உருவத்துக்கு அவனோட ஜிம் பாடிய ஒன்னும் பண்ண முடியல. முயற்சி பண்ணிப் பார்த்து டயர்ட் ஆன மேகா, “உஃப்…”னு பெருமூச்சு விட்டுட்டு, “இவரை எழுப்பறதைத் தவிர வேற வழி இல்லை”னு முடிவு பண்ணா.
“விஷ்வா.. விடிஞ்சிருச்சு விஷ்வா.. எந்திரிங்க..!!” அப்படின்னு மேகா மெதுவான குரல்ல சொல்ல, “ஐயோ பேய்..!!”னு கத்திக்கிட்டே விஷ்வா டக்குனு எழுந்தான். அவன் அப்படி பதறி அடிச்சு எழுந்த வேகத்துல, அவனோட வேட்டி கழண்டு விழுந்துடுச்சு.
அவன் வெறும் டிரவுசரோட இருக்கறதைப் பார்த்துட்டு மேகா விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சா.
“என்னங்க.. காலங்காத்தால என்ன காமெடி பண்ணிட்டு இருக்கீங்க??”னு கேட்க, “ச்சீ.. போ.. உன்னை யாரு காதுகிட்ட வந்து பேய் மாதிரி கத்தி எழுப்ப சொன்னது? குட்டி பிசாசு..!!” அப்படின்னு சொல்லிக்கிட்டே, விஷ்வா தன் வேட்டியை எடுத்து கட்டிக்கிட்டு வெளில போனான்.
“நமக்கு வேணுங்கறதெல்லாம் இங்கயே இருக்குனு சொன்னாங்களே.. என்ன இருக்குன்னு தெரியல. இங்கயே ரெஃப்ரெஷ் ஆகிட்டு வீட்டுக்கு போயிட்டா பரவாயில்லை”னு நினைச்ச மேகா, குளிக்கப்போனா.
அவ ரெடியாகி வந்து ரூம்ல பார்த்தப்போ, உடைஞ்சு போயிருந்த கட்டில் விஷ்வா சொன்ன மாதிரியே புதுசு மாதிரி ரெடியாகி இருந்தது. மத்தவங்களுக்கு சந்தேகம் வராத அளவுக்கு அவனோட ஆளுங்க பக்காவா ரெடி பண்ணி வெச்சிருந்தாங்க. அதைப் பார்த்த மேகா சந்தோஷப்பட்டு, “சப்பா.. ஒரு பெரிய பிரச்சனைல இருந்து தப்பிச்சாச்சு..!!”னு நினைச்சுட்டு வெளில வந்தா.
பம்பு செட்ல எல்லார் கூடயும் சேர்ந்து குளிச்சுட்டு வந்த விஷ்வா, வெறும் டிரவுசர் மட்டும் போட்டுக்கிட்டு வெயில்ல நின்னு தலையைத் துவட்டிக்கிட்டு இருந்தான்.
அவனோட அந்த கவர்ச்சியான ஆறடி சிக்ஸ் பேக்ஸ் உடம்பைப் பார்த்துட்டு மேகா அப்படியே ஷாக் ஆகி நின்னுட்டா. விஷ்வா பேரழகன்னு அவளுக்குத் தெரியும் தான், ஆனா தன் காதல் கணவனோட உடம்பு அந்த காலை வெயில்ல மின்னுறதை இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் சட்டை இல்லாம பார்க்குறா. அந்த ரியாக்ஷன்ல அப்படியே நின்னுட்டா. குளிச்சுட்டு வந்த மேகா தலையில துண்டோட தன்னையே பார்த்துகிட்டு இருக்கறத கவனிச்ச விஷ்வா, “என்னடி அப்படியே வேடிக்கை பார்த்துட்டு நிக்கிற?? இங்க வா.. வந்து வெயில்ல நின்னு தலையைத் துவட்டு”னு கூப்பிட்டான்.
அவன் சொன்னதுக்காக அவனருகில் போன மேகா, தலையில இருந்த துண்டைக் கழட்டி அரைகுறையா துவட்டிக்கிட்டே அவனை சைட் அடிச்சுட்டு இருந்தா.
“தலையை கூட உனக்கு ஒழுங்கா துவட்டத் தெரியாதா??”னு கேட்ட விஷ்வா, அவ கையில இருந்த துண்டைப் பிடுங்கி அவளோட நீளமான முடியைத் துடைக்க ஆரம்பிச்சான். அந்த மொமென்ட்டை என்ஜாய் பண்ண மேகா, “நீங்க என்னை லவ் பண்ணாலும் சரி, பண்ணலனாலும் சரி.. ரியல் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா நாம ஒண்ணு சேர்ந்து வாழலனா கூட பரவாயில்லை விஷ்வா.
எப்பவும் நாம இப்படியே இருந்தா கூட எனக்கு அதுவே போதும்”னு மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டா.
“சிங்கிளா சுத்திக்கிட்டு இருந்த இவரு மிங்கிள் ஆகி ஜாலியா சுத்திக்கிட்டு இருக்காரு. ஆனா நாங்க எல்லாம் எப்பவும் இவரு கூடவே சுத்திட்டு இருக்கோம். இவனுங்க எல்லாம் பாவமாச்சே.. அப்பப்போ இவனுங்களுக்கும் ஒரு அஞ்சு நாள், பத்து நாள் லீவு கொடுத்து எங்கயாவது வெளில அனுப்பி வைப்போம்னு இந்த மனுஷனுக்குத் தோணுதா? அப்பதானே அவங்க வாழ்க்கையிலயும் ஒரு விடிவு வரும், கல்யாணம் நடக்கும்.
சரியான கல்நெஞ்சக்காரன். ஹர்ஷினி டார்லிங்.. ஐ மிஸ் யூ டி செல்லம்”னு மகேஷ் தனக்குள்ளேயே கண்ணீர் விட்டுக்கிட்டு இருந்தான்.
கொஞ்ச நேரம் கழிச்சு எல்லாரும் கிளம்பி மேகா வீட்டுக்கு போனாங்க. மேகாவை மட்டும் தனியா கூட்டிட்டுப் போன வசந்தி அத்தை உட்பட மத்த சொந்தக்காரப் பெண்கள் எல்லாம்,
“எல்லாம் நல்லபடியா முடிஞ்சதா? மாப்பிள்ளை வேற கொஞ்சம் அப்படி இப்படி இருக்காரு.. அந்த விஷயத்துல எல்லாம் எப்படிக் நடந்துக்குறாரு? உனக்கு பிடிச்ச மாதிரி இருக்காரா? ஒருவேளை முரட்டுத்தனமா ஏதாச்சும் பண்ணா சொல்லு, நம்ம வீட்டு ஆம்பளைங்களை விட்டு அவர்கிட்ட பேசச் சொல்லலாம்”னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க.
அதுக்கு மேகா சலிக்காம, “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை.. எல்லாம் நல்லபடியா தான் போகுது”னு எல்லாருக்கும் ஒரே பதிலைச் சொன்னா.
எல்லாருக்கும் பதில் சொல்லி டயர்ட் ஆன மேகா, சாப்பிட்டு முடிச்சுட்டு ரூமுக்குப் போனா. அங்க வந்த சௌபர்ணிகா அவ பக்கத்துல உட்கார்ந்து, “எல்லாம் ஓகே தானே??”னு நாசூக்கா கேட்டாங்க. “ஐயோ அக்கா நீங்களுமா?? நீங்க மட்டும் தான் கேட்கலன்னு நினைச்சேன், நீங்களும் கேட்டுட்டீங்க..!!” அப்படின்னு செல்லமா சிணுங்கிட்டு அவங்க மடியில படுத்துக்கிட்டா.
சௌபர்ணிகா சிரிச்சுக்கிட்டே, “எங்க அம்மா இருந்திருந்தா உன்கிட்ட கேட்டு இருப்பாங்க இல்ல? அவங்க சார்பா நான் கேட்கிறேன். ஏன் கேட்கக்கூடாதா??”னு கேட்க, மேகா எழுந்து உட்கார்ந்தா.
“அவங்க கேட்டிருந்தா மத்தவங்ககிட்ட சொன்ன மாதிரி பொய்தான் சொல்லி இருப்பேன். ஆனா உங்களுக்குத் தான் எல்லாமே தெரியுமே.. அப்புறம் எதுக்கு பொய் சொல்லணும்? எங்களுக்குள்ள ஒண்ணுமே நடக்கல அக்கா. நேத்துதான் நாங்க ரெண்டு பேரும் பேசி பிரண்ட்ஸ் ஆகி இருக்கோம். ஓகேவானு கேட்டீங்கன்னா, ஓகே தான். நான் அவர்கூட ஹேப்பியா இருக்கேன்”னு சொன்னா.
“இதுவே பெரிய பாசிட்டிவ் சைன் தான் மேகா. எனக்கு நம்பிக்கை இருக்கு, சீக்கிரமே உங்களுக்குள்ள இருக்கிற கேப் காணாம போயிடும்”னு சௌபர்ணிகா சொல்ல, “அப்படி நடந்தா நல்லாத்தான் இருக்கும்”னு சொல்லி அவங்களை மேகா கட்டிப்பிடிச்சுக்கிட்டா.
அப்புறம் சுத்தி இருக்குற மேகாவோட சொந்த பந்தங்கள் எல்லாரும் விருந்துக்காக புது ஜோடியை வீட்டுக்கு கூப்பிட்டாங்க. “இதுக்கெல்லாம் நாம கண்டிப்பா போகணும் விஷ்வா. இல்லைனா அவங்க கோவிச்சுப்பாங்க, அப்புறம் எங்க வீட்டு ஆளுங்க கூட பேச மாட்டாங்க. நாளைக்கு வெண்ணிலாவுக்கு ஒரு விசேஷம்னா அவங்க வந்து நிக்கணும்ல? நீங்க இதைப் பெருசா நினைக்க மாட்டீங்க, ஆனா மத்தவங்க அப்படி இல்ல”னு மேகா கட்டாயப்படுத்தி அவனை கூட்டிட்டுப் போனாள்.
விருந்துங்கற பேர்ல ரெண்டு மூணு நாளைக்கு விதவிதமா பறக்குறது, ஊர்றது, நடக்குறதுனு அத்தனை அசைவ அயிட்டங்களையும் சமைச்சுப் போட்டு மேகா வீட்டு சொந்தக்காரங்க விஷ்வாவை ஓஹோனு கவனிச்சாங்க. “ஐயோ டேய் போதும்டா.. என்னால முடியல. சாப்பாடு போட்டே என்னைக் கொன்னுடுவீங்க போல!!”னு விஷ்வா புலம்பிட்டு இருந்தான். ஆனா அவன்கூட போன தயாளன், மகேஷ், அரவிந்த் மூணு பேரும், “ஐயோ சோறு.. வகை வகையா வீட்ல சமைச்ச சோறு! கிடைக்கும்போதே நல்லா கட்டிக்கணும்”னு ஜாலியா சாப்பிட்டாங்க.
“எனக்கும் வெண்ணிலாவுக்கும் கல்யாணம் நடந்தா, எங்களையும் கூப்பிட்டு இப்படித்தான் விருந்து வைப்பாங்க.. நினைக்கும்போதே குஷியா இருக்கே! சீக்கிரம் நடந்தா நல்லா இருக்கும்”னு அரவிந்த் மனக்கோட்டை கட்டிக்கிட்டு இருந்தான்.
ஒரு வாரம் கழிச்சு, ரிசப்ஷன் எப்போ, எங்க நடக்கும்னு பிளான் பண்ணிட்டு சொல்றதா விஷ்வா சொன்னான். அப்புறம் மேகாவை அழைச்சுக்கிட்டு சென்னைக்கு கிளம்புறதா சொன்னான்.
“சரிங்க தம்பி. நீங்க முடிவு பண்ணிட்டுச் சொல்லுங்க. உங்க ரிசப்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறமா வெற்றிக்கும் கலைச்செல்விக்கும் கல்யாணம் வச்சுக்கலாம்னு இருக்கோம். எல்லாம் முடிவானதும் நாங்க முறைப்படி ஊருக்கு வந்து பத்திரிக்கை வைக்கிறோம். நீங்க ரெண்டு பேரும் கண்டிப்பா வரணும். அப்புறம் நாங்க எங்க பிள்ளைக்கு வாங்கி வெச்சிருக்கற சீர் வரிசை எல்லாம் வண்டியில ஏத்தி ரெடியா இருக்கு. கூட நம்ம ஆளுங்களும் வருவாங்க, நீங்க எங்க இறக்கணும்னு சொல்றீங்களோ அங்க இறக்கிடுவாங்க”னு காளீஸ்வரன் சொன்னாரு.
அவர் காட்டிய இடத்தைப் பார்த்த விஷ்வா ஷாக் ஆகிட்டான். ரெண்டு லாரி ஃபுல்லா வீட்டு சாமான்கள், பர்னிச்சர், எலக்ட்ரானிக் பொருட்கள்னு எல்லாம் புதுசா அடுக்கி வெச்சிருந்தாங்க.
“இதெல்லாம் நான் கேட்கவே இல்லையே.. நீங்க தான் எங்க வீட்டைப் பார்த்திருக்கீங்களே, இதெல்லாம் அங்க இல்லாமையா இருக்கு? ஏன் இவ்ளோ புதுசா வாங்குனீங்க??”னு விஷ்வா கேட்டான். அதுக்கு அவர், “உங்ககிட்ட இல்லைன்னு நாங்க செய்யல தம்பி. இதெல்லாம் முறைப்படி நாங்க செய்ய வேண்டியது. நீங்க வேண்டாம்னு சொல்லக்கூடாது”னு சொல்லிட்டாரு.
விஷ்வா மறுத்துப் பேச வர, “வேண்டாம்.. எதுவும் சொல்லாம சும்மா இருங்க. அப்புறம் எங்க அண்ணா கோவிச்சுப்பாரு”னு மேகா தடுத்ததால அவன் அமைதியாகிட்டான். அப்புறம் அவங்க கார்ல கிளம்ப, அந்த ரெண்டு லாரிகளும் அவங்களைப் பின் தொடர்ந்து சென்னை நோக்கிப் போச்சு.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)