அத்தியாயம் 85
திடீர்னு மேகா அழுததும், “நான் புதுசா இப்ப அப்படி என்ன சொல்லிட்டேன்னு இவ இப்படி தேம்பி தேம்பி குழந்தை மாதிரி அழுகுறா..??” அப்படின்னு நினைச்சு குழம்பிப்போன விஷ்வா, “ஏய் லூசு… எதுக்குடி அழுகுற..?? என்னன்னு சொல்லிட்டாவது அழுது தொலை. நீ பாட்டுக்கு இப்படி அழுதுட்டு இருந்தா நான் என்னன்னு நினைக்கிறது..??” அப்படின்னு கேட்டான்.
“நீங்க ஒன்னும் நினைக்க வேண்டாம். அதான் உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்ற மாதிரி பேசிட்டிங்கள்ல.. அப்புறம் என்ன..?? நான் அழுதா உங்களுக்கு என்ன.. இல்ல நான் எங்கயாவது ஓடிப்போனா தான் உங்களுக்கு என்ன..?? நீங்கதான் என்ன கண்டுக்க மாட்டிங்களே..!! ப்ரீயா விடுங்க.” அப்படின்னு சொல்லிட்டு மேகா தன் கண்ணீரை துடைச்சுட்டு அந்த வீட்டுல இருந்த ஒரு சின்ன ரூமுக்கு போனா.
அந்த ரூம் அவங்களோட ஃபர்ஸ்ட் நைட்டுக்காக டெக்கரேட் செய்யப்பட்டு பலபலன்னு இருந்தது. கோபமா இருந்த மேகா வேகமா போய் அங்கிருந்த மரக்கட்டிலில் உட்கார, அவ பக்கத்துல போய் உட்கார்ந்த விஷ்வா, “நல்லா தானேடி இருந்த… திடீர்னு ஏன் இப்படி சம்பந்தம் இல்லாம பேசிட்டு இருக்க..?? இப்ப என்ன தான் உனக்கு பிரச்சனை..?? ஒழுங்கா என்னன்னு சொல்லு.” அப்படின்னான்.
“ஒன்னும் இல்ல. எனக்கு தூக்கம் வருது. நான் தூங்குறேன். குட் நைட்.” அப்படின்னு கோபத்துல எரிஞ்சு விழுற மாதிரி சொன்ன மேகா கட்டில்ல படுத்துக்கிட்டா.
தானும் அவ பக்கத்துல போய் படுத்த விஷ்வா அவளை தன் பக்கம் திருப்பி, “நீ என்னன்னு என்கிட்ட சொல்லாம நான் உன்னை தூங்க விடமாட்டேன்.” அப்படின்னு உறுதியா சொல்ல, “ஐயோ ப்ளீஸ்… சீக்கிரம் என்னை கொஞ்ச நேரம் தனியா விடுங்க. இப்படி ஏன் என்னை டார்ச்சர் பண்ணிட்டே இருக்கீங்க…?? என்ன தான் நம்ம சேர்ந்து இருந்தாலும், நீங்களும் நானும் தனித்தனி ஆளுன்னு அன்னைக்கே நீங்கதானே நம்ம ஹோட்டல் ரூம்ல இருக்கும் போதே சொன்னீங்க..!! அப்புறம் என்ன..?? எனக்கு நீங்க ஜஸ்ட் X இல்லனா Y தானே.. நமக்குள்ள என்ன ரிலேஷன்ஷிப் இருக்கு..?? நீங்க எதுக்காக என்ன பத்தி கவலைப்படணும்..?? என்னை விடுங்க..!!” அப்படின்னு மேகா அவனை பிடிச்சு தள்ளிவிட்டுட்டு மறுபடியும் திரும்பி படுத்துக்கிட்டா.
“ச்ச்ச்.. என்ன இவ இன்னைக்கு ஓவரா பண்றா..??” அப்படின்னு நினைச்ச விஷ்வா, அப்படியே அவ மேலே உருண்டு போய் அவ முன்னாடி விழுந்தவன் அவ முகத்தை பார்த்து, “அன்னைக்கு நான் இதை மட்டும்தான் சொன்னேனா..?? நீ என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி. உனக்கு எதுவும் ஆகாம நான் பாத்துக்குறேன். உனக்கு எந்த பிராப்ளம் வந்தாலும் அதை என்கிட்ட சொல்லலாம்னு கூட தான் சொன்னேன். அதெல்லாம் மட்டும் மறந்துட்டியா..??” அப்படின்னு கேட்டான்.
“நான் எதையும் மறக்கல விஷ்வா. நீங்க என்னோட ஹஸ்பண்ட். அதை நீங்கதான் மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன். நான் உங்ககிட்ட இருந்து பெருசா எதையும் எக்ஸ்பெக்ட் பண்ணல. நான் எப்பவாவது உங்ககிட்ட வந்து, நீங்க ஏன் இப்படி இருக்கீங்க..?? ஹஸ்பண்ட் மாதிரி பிஹேவ் பண்ணுங்க, என்னை லவ் பண்ணுங்கன்னுலாம் உங்ககிட்ட வந்து கேட்டேனா..?? நீங்க சும்மா சும்மா ‘நீ யாரோ நான் யாரோ’, ‘என்னை நீ கண்டுக்காத’, ‘உனக்கு தோணுச்சுன்னா என்னை விட்டுட்டு எங்கயாவது போயிடு’ அப்படின்னு சொல்லிக்கிட்டே இருக்கீங்களே.. அது எந்த அளவுக்கு என்னை ஹர்ட் பண்ணும்னு யோசிச்சு பாத்தீங்களா..?? நீங்க எனக்கு யாரா வேணாலும் இருந்துட்டு போங்க விஷ்வா. அது எனக்கு இப்ப பிராப்ளம் இல்ல. ஆனா எல்லாத்தையும் கிளியர் பண்றேன்ற பேர்ல நான் உங்களுக்கு யாரோ மாதிரி நீங்க பேசுறதைத் தான் என்னால தாங்க முடியல.
என்னதான் இது எல்லாமே நீங்க என்னை ஃபோர்ஸ் பண்ணதுனால ஸ்டார்ட் ஆகி இருந்தாலும், அதுக்கப்புறம் இவ்வளவு நடந்தும் உங்களுக்காக உங்கக்கூட எப்பவும் இருக்கணும்னு நான் நினைச்சேன்ல.. அதெல்லாம் அப்ப ஒண்ணுமே இல்லையா..?? நீங்க என்னை கேர் பண்ணி எவ்வளவோ செஞ்சு இருக்கீங்களே.. அதுக்கெல்லாம் அப்ப என்ன அர்த்தம்..?? இதெல்லாம் பண்ண வேண்டியது ஜஸ்ட் உங்களோட ரெஸ்பான்சிபிலிட்டிங்கிறதுக்காக பண்ணிருந்தீங்கன்னா, ப்ளீஸ் விஷ்வா… பி இர்ரெஸ்பான்சிபில். எனக்கு இது வேண்டாம்.” அப்படின்னு மேகா மறுபடியும் வேற பக்கமா திரும்பி படுத்துக்கிட்டா.
அதனால வேகமா எழுந்து அவளை நசுக்கிக்கிட்டு விஷ்வா பொத்தென அவ பக்கத்துல போய் விழ, அந்த பழைய மரக்கட்டிலோட ஒரு பக்க கால் உடைஞ்சு கட்டில் ஒரு பக்கமா சாய்ஞ்சது. அதனால மேகா கீழே விழப்போக, “ஏய் விழுந்திடாதடி..!!” அப்படின்னு அவசரமான குரல்ல சொன்ன விஷ்வா, அவ இடுப்புல கை வச்சு அவளை தன் பக்கம் இழுத்து அவளை தன்னோடு சேர்த்து இறுக்கமா அணைச்சு பிடிச்சுக்கிட்டான். அதனால அவ தன் கழுத்தை மட்டும் திருப்பி அவனைப் பார்க்க, அவனும் அவளைத்தான் பார்த்துட்டு இருந்தான்.
அவளோட இதயம் வேகமா துடிச்சுட்டு இருக்க; இவ்வளவு நேரம் அவ அழுததுல அவளோட மூக்கும், காதுகளும் சிவந்து போயிருந்தது. அதனால அத்தனை நெருக்கத்துல அவ முகத்தைப் பார்த்து அப்படியே உறைந்து போன விஷ்வா, தன்னை அறியாமலேயே ஏதோ ஒரு வேகத்துல அவளோட காதுல லேசா ஒரு முத்தம் கொடுத்தான். அதுல இன்னும் அவ முகம் குங்குமமா சிவந்து போக, அவன் கைகளுக்குள்ள அடங்கிக் கிடந்தவளோட உடல் அந்த நெருக்கத்தை தாங்க முடியாம ஒரு நொடி சிலிர்த்து அடங்குச்சு. அவங்க ரெண்டு பேரோட வெயிட்டும் இப்போ ஒரு பக்கமா இருந்ததுனால, அந்தக் கட்டிலோட இன்னொரு காலும் முறிஞ்சு போக, ரெண்டு பேரும் உருண்டு போய் தரையில விழுந்தாங்க.
மேகாவுக்கு அடிபட்டு விடக்கூடாதுன்னு நினைச்ச விஷ்வா அவளோட சின்ன உருவத்தை தனக்குள்ள புதைச்சுக்கிட்டு அவ தலையை தன் கையால பிடிச்சுக்கிட்டான்.
இப்போ மேகா தரையில கிடக்க, அவன் அவ மேல கிடந்தான். அவங்க பக்கத்துல இருந்த ஒரு சின்ன சேர் மேல தெரியாம மோதினதுல, அது மேல ஒரு தட்டுல வைக்கப்பட்டிருந்த பழங்கள் தட்டோட சேர்ந்து விஷ்வாவோட தலையில விழுந்தது. அதனால அவன் வலியில “ஆஆஆ..!!” அப்படின்னு கத்த, உடனே பதறிப்போய் அவன் தலையை தேய்த்து விட்ட மேகா, “ஆர் யூ ஓகே..? ரொம்ப வலிக்குதா..??” அப்படின்னு அக்கறையா கேட்டா. இல்லைன்னு தலையாட்டினான் அவன்.
இப்படி அவங்க ரெண்டு பேரும் உள்ளே மாறி மாறி ஒருத்தர் மேல ஒருத்தர் அக்கறை காட்டிட்டு இருக்க, வெளியில மகேஷும் மத்தவங்களும் கையில் டார்ச் லைட்டை பிடிச்சுக்கிட்டு வாசல்ல உட்கார்ந்திருந்தாங்க. இப்போதும் உள்ளிருந்து வந்த விசித்திரமான சத்தங்கள் சுத்தி அமைதியா இருந்ததுனால அவங்களுக்கு தெளிவா கேட்டுச்சு.
அதனால தயாளன் உறுதியா, “டேய் இந்த தடவை கன்பார்மா நம்ம பாஸ் சக்சஸ் பண்ணிருப்பாரு. இன்னும் ஒரு வருஷத்துல விஷ்வா வெர்ஷன் 2.0 கண்டிப்பா வந்துரும்டா. 5000 ரூபாய் பெட்.” அப்படின்னு சொல்ல, “அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லடா. எனக்கு அவரைப் பத்தி நல்லா தெரியும். அப்படியே அந்த சம்பவம் நடந்தாலும், கண்டிப்பா ஒரு வருஷத்துல எல்லாம் நடக்க வாய்ப்பில்லை. என்ன நடக்குதுன்னு வெயிட் பண்ணி பாக்கலாமா..?? 10,000 பெட்.” அப்படின்னு வேகமா சொன்னான் மகேஷ்.
“டேய் நம்ம ஒன்னு நினைச்சா எப்பயும் நம்ம பாஸ் அவர் இஷ்டத்துக்கு வேற மாதிரி ஏதாவது ஒன்னைத்தான் பண்ணுவாரு. சோ நீங்க ரெண்டு பேர் சொல்றதும் நடக்காது.” அப்படின்னு அரவிந்த் தன் பங்குக்கு சொல்ல, இப்படியே அவங்க மூணு பேரும் டைம் பாஸ் பண்றதுக்காக அவங்களை அட்டாக் பண்ணிட்டு இருந்த கொசுக்களை அடிச்சுக்கிட்டே பேசிட்டு இருந்தாங்க.
“டேய்.. இந்த கையால நம்ம எத்தனை பேரை அடிச்சு கொன்னுருப்போம்.. இப்படி நம்மள போய் கொசு அடிக்க விட்டுட்டாங்களேடா..!!” அப்படின்னு வாய் விடாம புலம்பிட்டு இருந்தான் அரவிந்த்.
மேகாவை விட்டு பிரிந்து எழுந்து நின்ன விஷ்வா தன் கையை அவ முன்னாடி நீட்ட, அவன் கையை பிடிச்சு எழுந்து நின்ன மேகா தன் இடுப்பை பிடிச்சுக்கிட்டு, “ஆஆஆ.. வலிக்குது. என்னை பழிவாங்குறதுக்குனே இப்படி எல்லாம் பண்றீங்களா நீங்க..?? எதுக்கு இப்போ கட்டில் காலை உடைச்சீங்க..?? உங்களாலதான் நம்ம ரெண்டு பேருமே கீழே விழுந்தோம்.” அப்படின்னு கோபமா சொன்னா.
“ஐயோ இருக்குற பிரச்சனையில இது வேறயா.. ஏற்கனவே இவங்க அண்ணி எங்க ரெண்டு பேரையும் கலாய்ச்சிட்டு இருக்காங்க. இதுல நாங்க கட்டிலை உடைச்சுட்டோம்ன்னு தெரிஞ்சதுன்னா, அடுத்து அவங்களுக்கு வேற ஏதாவது கன்டென்ட் கிடைக்கிற வரைக்கும் இதை வச்சுதான் ஓட்டுவாங்க. நான் ஏதாவது நிஜமாவே சம்பவம் பண்ணி இந்த மாதிரி பேர் எல்லாம் வாங்கிருந்தா கூட பரவால்ல.. நான் தான் இவளை ஒண்ணுமே பண்ணலையே.. ஆனாலும் எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ..!!” அப்படின்னு நினைச்ச விஷ்வா, “சும்மா எல்லாத்துக்கும் என்னையே குறை சொல்லிட்டு இருக்காத. விடியறதுக்குள்ள இந்த கட்டிலை ரெடி பண்ண வேண்டியது என் பொறுப்பு. இல்லைனா இதுக்கும் சேர்த்து எல்லாரும் நம்மள கிண்டல் பண்ணிட்டே இருப்பாங்க.” அப்படின்னான்.
“அட ஆமா.. அப்புறம் இன்னும் ஒரு மாசம் கழிச்சு எதுவும் விசேஷம் இல்லையா இல்லையான்னு கேட்டு டார்ச்சர் பண்ணிடுவாங்க. முதல்ல அதை பண்ணுங்க.” அப்படின்னு சொன்ன மேகா தன் இடுப்பை பிடிச்சபடி மெல்ல நடந்து வெளிய போனா.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)