அத்தியாயம் 74
எந்தக் காரணத்துக்காகவும் தன் கல்யாணம் நின்னுடக் கூடாதுன்னு நெனச்ச விஷ்வா, மயக்கத்துல இருந்த மேகாவுக்குத் தாலியைக் கட்டி அவளைத் தன் மனைவி ஆக்கிகிட்டான்.
விஷ்வாவோட கல்யாணத்தைப் பாக்க வந்திருந்த பத்திரிகையாளர் டீம், இந்த விசித்திரத் திருமணத்தையும் உடனே நியூஸ்ல போட்டு ட்ரெண்ட் ஆக்கிட்டாங்க. அதனால, சமூக வலைத்தளங்கள்ல விஷ்வாவோட கல்யாணம் எல்லாரும் பேசற விஷயமா மாறிடுச்சு.
ஒரு தரப்பினர், “விஷ்வா தரப்புல இருந்து இந்தத் தடவையும் எந்த விளக்கமும் வரல. என்னதான் இந்தக் கல்யாணம் வித்தியாசமான முறையில நடந்திருந்தாலும், நடந்தா கல்யாணம், கல்யாணம்தானே! எல்லாரோட சம்மதத்தோட நிச்சயதார்த்தம் நடந்திருக்கு. அப்போ இந்தக் கல்யாணமும் பொண்ணு வீட்டார் சம்மதத்தோடத்தான் நடந்திருக்கு. அதனால, இதை எப்படி செல்லாதுன்னு சொல்ல முடியும்?”-ன்னு கேக்க,
இன்னொரு தரப்பினர், “எது எப்படியோ, ஒரு பொண்ணு மயக்கத்துல இருக்கும்போது இவரு எப்படிங்க தாலி கட்டுவாரு? இந்தக் கல்யாணம் செல்லாதுன்னு அறிவிச்சு, உடனே மிஸ்டர் விஷ்வாவைப் போலீஸ் அரெஸ்ட் பண்ணனும். இது பொதுமக்களுக்கு ஒரு தப்பான உதாரணம். இத அரசாங்கம் சரின்னு சொன்னா, நாளைக்கு யார் வேணா எப்படி வேணா கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஆயிடாதா?”-ன்னு கேட்டு பிரச்னைகளைக் கிளப்பிக்கிட்டு இருந்தாங்க.
அதனால, அங்க கல்யாண மண்டபத்துல திருமணத்துக்கு வந்தவங்க காலையில விருந்து சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள அங்க போலீஸார் குவிஞ்சுட்டாங்க. அவங்ககூடச் சில மகளிர் அமைப்பினரும் அந்த மண்டபத்தோட வாசல்ல நின்னுக்கிட்டு, “நாங்க இப்பவே அந்தப் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு பாக்கணும். ஏற்கனவே அவங்க ரெண்டு பேரும் உண்மையாவே லவ் பண்ணித்தான் கல்யாணம் பண்றாங்களா இல்லையான்னு எல்லாருக்கும் ஒரு சந்தேகம் இருக்கத்தான் செய்யுது.
அந்தப் பொண்ணுக்குக் கல்யாணத்துல விருப்பம் இல்லேன்னு சொன்னதுனால கூட, விஷ்வா அவள அடிச்சு மயக்கமாக்கி கல்யாணம் பண்ணிருக்கலாமே! அந்தப் பொண்ணு வாயால உண்மை என்னன்னு தெரிஞ்சுக்காம நாங்க யாரும் இங்க இருந்து போக மாட்டோம். வேண்டும்! வேண்டும்! மேகாவுக்கு நியாயம் வேண்டும்!”-ன்னு கோஷம் போட்டு போராட்டம் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
ஆனா, யார் என்ன பண்ணாலும் வாசல்ல பாதுகாப்புக்காக நின்னுக்கிட்டிருந்த விஷ்வாவோட செக்யூரிட்டி டீமைத் தாண்டி ஒருத்தராலும் உள்ளே போக முடியலை. ஆனா, வெளியில இவங்களோட திருமண விஷயம் காட்டுத்தீயா பரவி, விஷ்வாவோட நல்ல பேர மறுபடியும் கெடுத்து அழிச்சிக்கிட்டு இருந்துச்சு. அதையெல்லாம் பார்த்து வருத்தப்பட்ட சௌபர்ணிகா, மேகாவுடன் அவனோட ரூம்ல இருந்த விஷ்வாகிட்ட போய்,
“இப்போ என்னடா பண்றது? இவளுக்கு மயக்கம் தெளியறதுக்கு இன்னும் 10, 15 மணி நேரத்துக்கு மேல ஆகும்னு சொல்ற… இவளுக்கு மயக்கம் தெளிஞ்சு, இவ ஸ்டேட்மென்ட் கொடுக்குறதுக்குள்ள இந்த இஸ்யூ பெருசாகி போலீஸ் உன்னை அரெஸ்ட் பண்ணிட்டுப் போயிடுவாங்க போல! நீ இவளை விடு. ரெஸ்ட் ரூமுக்குக் கூட்டிட்டுப் போய் இவ மேல தண்ணி ஊத்தி குளிப்பாட்டிப் பார்க்கலாம். இவளுக்கு இப்ப எப்படியாவது மயக்கம் தெளிஞ்சே ஆகணும்!” என்றவள்,
கலைச்செல்வியையும் வெண்ணிலாவையும் தனக்கு உதவி செய்யக் கூப்பிட்டாள்.
அவங்க மூணு பேரும் சேர்ந்து மேகாவைத் தூக்க முயற்சி செய்ய, சௌபர்ணிகாவோட கையைப் பிடிச்ச விஷ்வா, “நான் தான் இவளுக்கு மயக்கம் தெளியறதுக்கு 24 மணி நேரம் ஆகும். அதுவரைக்கும் யாரும் இவள டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காருன்னு கிளியரா சொன்னேன்ல? என்ன வெண்ணிலா… நீ மெடிக்கல் ஸ்டூடென்ட்தானே? உனக்குக் கூட அறிவில்லையா? இவங்ககூடச் சேர்ந்துக்கிட்டு அவளை எழுப்ப ட்ரை பண்ற?”-ன்னு கோபமா கேட்டான்.
“சாரி மாமா. சிச்சுவேஷன் அவுட் ஆஃப் கண்ட்ரோல்ல போயிட்டு இருக்கிறதால நானும் ஒரு செகண்ட் மத்தவங்கள மாதிரி யோசிச்சுட்டேன். நீங்க சொன்ன மாதிரி ஹெவி அனஸ்தீஸியா கொடுத்திருக்கும்போது பேஷன்ட்டை மயக்கத்துல இருந்து எழுப்ப ட்ரை பண்றது அவங்களுக்கு ஆபத்துதான். அத்தை ரெஸ்ட் எடுக்கட்டும்”-ன்னு வெண்ணிலாவும் சொல்லிட, சௌபர்ணிகாவால அதுக்கு மேல எதுவும் சொல்ல முடியல.
அப்போ பதட்டமா தயாளன்கூட அந்த ரூமுக்குள்ள நுழைஞ்ச மகேஷ்,
“பாஸ், கமிஷனரே நேரா உங்களை அரெஸ்ட் பண்ண வந்திருக்காரு. இதுல மகளிர் ஆணையத்துல இருந்து வேற வந்து மேகா மேடமைப் பார்த்தே ஆகணும்னு கூட்டமா நிறைய லேடீஸ் என்ட்ரன்ஸ் கிட்ட நின்னுக்கிட்டு சீன் கிரியேட் பண்ணிட்டு இருக்காங்க. ஒரு அளவுக்கு மேல அவங்களை உள்ள விடாம கண்ட்ரோல் பண்றது சரி இல்ல பாஸ். அப்புறம் எல்லாமே நமக்கு எதிராத் திரும்பிடும். நம்ம மேலதான் தப்பு இருக்குன்னு எல்லாரும் கன்ஃபார்மே பண்ணிடுவாங்க”-ன்னான்.
அதனால, ஒரு நொடி அமைதியா யோசிச்ச விஷ்வா, “ஓகே. நான் வெளிய போறேன். அவங்க என்ன அரெஸ்ட் பண்றதுன்னா பண்ணட்டும். But, At any cost என் பொண்டாட்டிய இந்த ரூமுக்குள்ள வந்து எவனும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாது. எவன் உள்ள வர ட்ரை பண்ணாலும், சுட்டுத் தள்ளுங்க. என்ன ஆனாலும் நான் பாத்துக்குறேன்”-ன்னவன், சௌபர்ணிகாவையும் வெண்ணிலாவையும் உள்ளே மேகாவுடன் இருக்கச் சொல்லிட்டு, அந்த ரூமை வெளியில பூட்டி கீ கார்டைத் தன்னோட எடுத்துக்கிட்டு வெளியே போனான். மேகா இருந்த ரூமுக்கு முன்னால துப்பாக்கி ஏந்திய பாடி கார்டுகள் அவளோட பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டாங்க.
விஷ்வா வெளியில வந்தவுடனே பெண்கள் காவலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக்கிட்டு வந்த பெண்களும், போலீஸ்காரங்களும், மீடியா ஆட்களும் மாறி மாறி விஷ்வாகிட்ட கேள்வி கேக்க, “Wait, let me speak!”-ன்ன விஷ்வா, “இந்த மாதிரி ஒரு க்ரூஷியல் சிச்சுவேஷன்ல எங்க மேரேஜ் நடக்கும்னு நாங்களும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல. But, என்ன ஆனாலும் எங்க மேரேஜ் ஸ்டாப் ஆகக்கூடாதுன்றது மட்டும்தான் எங்க இன்டென்ஷனா இருந்துச்சு. அதான் வேற வழி இல்லாம நான் மேகா கழுத்துல தாலி கட்டினேன். Now she is my wife”-ன்ற விஷ்வா, கடைசி வாக்கியத்தை மட்டும் அழுத்திச் சொன்னான்.
“சார், இந்த மேரேஜ் ஸ்டாப் ஆகிடக் கூடாதுன்றது உங்க எல்லாரோட இன்டென்ஷனா இல்ல, உங்களோட பர்சனல் இன்டென்ஷனா? எல்லாரும் மேகா மேடம்க்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் இல்லாததுனால நீங்க அவங்களை ஃபோர்ஸ் பண்ணி, அடிச்சு, காயப்படுத்தினதுனால தான் அவங்க இப்படி மயக்கத்துல இருக்காங்கன்னும், உங்களுக்குப் பயந்துதான் அவங்களோட வீட்லயும் உங்களை எதிர்த்துப் பேசலைன்னும் சொல்றாங்களே! அது பத்தி உங்களோட கருத்து?”-ன்னு ஒரு ரிப்போர்ட்டர் கேக்க, நகலா அவனைப் பார்த்துச் சிரிச்ச விஷ்வா, “நீங்க சொன்ன மத்த விஷயம் எல்லாம்கூட ஓகே. பட், மேகாவோட ஃபேமிலி என்னைப் பார்த்துப் பயப்படுறாங்கன்னு சொல்றீங்களே… அதத்தான் என்னால டைஜெஸ்ட் பண்ண முடியல. It’s a good joke. கொஞ்ச நாளைக்கு முன்னாடி நானும் மேகாவும் லவ் பண்றோம்னு இதே மாதிரி ப்ரஸ் மீட்ல அனவுன்ஸ் பண்ணதுக்கு, அவ வீட்ல இருக்கிறவங்க என்னைக் கொல்றதுக்காக அருவாளைத் தூக்கிட்டு வந்தாங்க. இன்னைக்கு அவங்க பொண்ணுக்கு என்னால ஏதாவது ஆனா, பார்த்துட்டுச் சும்மா இருப்பாங்களா அவங்க?”-ன்னு கேட்டான்.
“அதெல்லாம் ஓகே சார். உங்க மேல எந்தத் தப்பும் இல்லேன்னே வச்சுக்குவோம். அப்புறம் மேகா மேடம்க்கு என்னதான் ஆச்சு? அவங்களோட ஹெல்த் கண்டிஷன் சரி இல்லேன்னு தெரிஞ்சும், நீங்க ஏன் அவங்களை இப்பவே மேரேஜ் பண்ணிக்கிட்டிங்க?”-ன்னு இன்னொரு ரிப்போர்ட்டர் கேக்க, “இந்த மேரேஜ் எங்களோட ட்ரீம். எங்க லவ் மேட்டர் மீடியா மூலமா மேகாவோட வீட்டுக்குத் தெரிஞ்சதுல இருந்தே நிறைய இஸ்யூஸ் வந்து எங்க மேரேஜ் நடக்குமா நடக்காதான்ற சிச்சுவேஷன் இருந்துச்சு. சோ, டெப்ரஷன்ல என் மனைவி இன்சோம்னியாவால அஃபெக்ட் ஆகிட்டாங்க. மேரேஜ் டேட் பக்கத்துல வர வர, அவங்களால ஸ்லீப்பிங் பில்ஸ் போடாம தூங்க முடியல.
சோ, இப்படியே தூங்காம இருந்தா நம்ம மேரேஜ் ஃபங்ஷன்ல டல்லா தெரிவோம்னு நெனச்சு, டாக்டர் அட்வைஸ் கேக்காம அவங்க ரெண்டு, மூணு ஸ்லீப்பிங் பில்ஸ் போட்டுருக்காங்க. எர்லி மார்னிங் தான் இந்த விஷயமே எங்களுக்குத் தெரியும். டாக்டரைக் கூட்டிட்டு வந்து அவங்களைச் செக் பண்ணோம். She’s alright now. ஸ்லீப்பிங் பில்ஸ் ஓவர் டோஸ் ஆகியிருக்கிறதுனால அவங்க மயக்கத்துல தான் இருப்பாங்க. அவங்களுக்கா மயக்கம் தெளியுற வரைக்கும் அவங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டுப் போயிட்டாரு. அதான் வேற வழி இல்லாம அவங்க மயக்கத்துல இருக்கும்போதே இந்த மேரேஜ் நடந்துச்சு”-ன்னு பாதி உண்மையோடு சேர்த்து பாதிப் பொய்யையும் மிக்ஸ் செஞ்சு சொன்னான் விஷ்வா.
“இப்படி ஒரு சிச்சுவேஷன் வரும்போது நீங்க மேரேஜை சிம்பிளா போஸ்ட்போன் பண்ணிருக்கலாமே சார்? மயக்கத்தில இருக்கிறவங்களுக்கு மேரேஜ் நடந்துச்சுன்னு எங்கயாவது நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா? ஏன் இப்படிப் பண்ணீங்க?”-ன்னு ரிப்போர்ட்டர் கேக்க, “என்னது சிம்பிளா போஸ்ட்போன் பண்ணிருக்கலாமா? How could you say that? என்னோட மேரேஜை போஸ்ட்போன் பண்றது உங்களுக்கு அவ்ளோ சிம்பிளா தெரியுதா? More than my reputation, இந்த டேட்ல, இந்த டைம்ல எங்க மேரேஜ் இப்படி நடக்கணும்ன்றது எங்களோட ட்ரீம்.
என்னவிட என்னோட வைஃப்தான் இந்த மேரேஜுக்காக ரொம்ப எக்சைட்டடா இருந்தாங்க. இப்போ அவங்களாலயே எங்க மேரேஜ் நின்னுருச்சுன்னு தெரிஞ்சா, அவங்களால எப்படி இதை ஏத்துக்க முடியும்? Definitely She will feel guilty. And I don’t want that to happen. We are happily married. ஸ்டில் எங்க மேரேஜ் சம்பந்தமாப் பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தா, என் வைஃப் நார்மல் ஆனதுக்கப்புறம் அவங்களே வந்து கிளியர் பண்ணுவாங்க. Until that, அவங்களை டிஸ்டர்ப் பண்ண நான் யாரையும் அலோவ் பண்ண மாட்டேன்”-ன்னு உறுதியா சொன்னான் விஷ்வா.
விஷ்வா ஓரளவுக்கு எல்லாரோட கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டதால், இதுக்கு மேலயும் மீடியா ஆட்களை அவன் கிட்ட பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கக் கூடாதுன்னு நெனச்ச கமிஷனர், போலீஸாரை வெச்சு அவங்களை அந்த இடத்தைவிட்டுப் போகச் செய்தார். பின் விஷ்வாவோட அருகே சென்று, “சார், உங்களை அரெஸ்ட் பண்ண எங்ககிட்ட வாரன்ட் இருக்கு. So please co-operate with us” என்றார்.
விஷ்வாவை அரெஸ்ட் செய்து விடுவார்களா?
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)