Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 73

மூர்கனின் காதலி CH 73

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 73

விஷ்வா பேசியதை கேட்டு மனசு உடைஞ்சு அழுதுகிட்டே படிக்கட்டுல எறங்கி கீழ போய்ட்டு இருந்த மேகாவ, யாரோ ஒரு மர்ம நபர் மயக்க மருந்து குடுத்து மயக்கமடைய வச்சு யாருக்கும் தெரியாம கடத்திட்டுப் போனான். குடிச்சுட்டு மொட்டை மாடியில மட்டையாகிக் கிடந்தான் விஷ்வா.

விடிய காலையில முகூர்த்தம்ங்கறதால, ராத்திரி ரெண்டு மணி சுமாருக்கு மேகாவத் தயார் பண்றதுக்காகப் போன மேக்கப் ஆர்ட்டிஸ்ட் டீம், அவ ரூம்ல மேகா இல்லாததால, விஷ்வாவோட ஆட்கள்கிட்ட அவளப் பத்தி விசாரிச்சாங்க. அதனால, மேகாவோட குடும்பத்தினர் தங்கியிருக்கற ரூம்களுக்குப் போயி விசாரிச்ச விஷ்வாவோட ஆட்கள், அங்கேயும் அவ இல்லாததால, ‘ஏதோ சரியில்ல’ னு நெனச்சு, மொட்டை மாடிக்குப் போயி, மயக்கத்துல கிடந்த விஷ்வாவத் தண்ணி ஊத்தி எழுப்பி, “சார், மேகா மேடமக் காணோம்” னு கோரஸா சொன்னாங்க.

அந்த ஒரு சென்டென்ஸைக் கேட்டவுடனே, விஷ்வாவுக்கு எறின போதை எல்லாம் ஒரே செகண்ட்ல இறங்கிடுச்சு. அதனால, தன்னோட தலைய இடமும் வலமும் ஆட்டினவன், “போய் சிசிடிவி கேமராவுல லாஸ்ட்டா அவ எங்க இருந்தா, அவ கூட யார் யாரெல்லாம் இருந்தாங்க, அவ எங்க போனான்னு செக் பண்ணுங்க” னு சொன்னான்.

அதுக்குள்ள மேகாவோட குடும்பத்தினர் ஒரு பக்கம் பதறி அடிச்சுக்கிட்டு, அந்தப் பெரிய மண்டபம் முழுக்க அவளத் தேட ஆரம்பிச்சாங்க.
மாடியில இருக்கற ரூம்ல ரெஃப்ரெஷ் ஆன விஷ்வா கீழ போக, அரை போதையில அவனத் தேடிக்கிட்டு ஓடி வந்த மகேஷும், தயாளனும் “பாஸ்… பாஸ்… இந்த சிசிடிவி ஃபுட்டேஜப் பாருங்க. மேகா மேடம் லாஸ்ட்டா உங்களப் பாக்கத்தான் மொட்டை மாடிக்கு வந்திருக்காங்க. அவங்க ரிட்டர்ன் கீழ போகும்போது, எவனோ ஒருத்தன் அவங்கள கடத்திட்டுப் போயிருக்கான்” னு சொன்னாங்க.

“தயா… நீ போயி வெளியில இருக்கற கேமரால, அவன் மேகாவ எங்கயாவது தூக்கிட்டுப் போற மாதிரி ரெக்கார்ட் ஆகியிருக்கான்னு செக் பண்ணு” னு சொன்ன விஷ்வா, மகேஷைக் கூட்டிக்கிட்டுத் தன்னோட ரூமுக்குப் போனான்.

தன்னோட லேப்டாப்பை ஓப்பன் செஞ்சு, சில நிமிஷம் அதுல ஏதோ நோண்டிக்கிட்டு இருந்த விஷ்வா, “என் கார ரெடி பண்ணு. பேக் கேட் வழியா நாம வெளிய போறோம். யாருக்கும் நாம எங்க போறோம்னு தெரியக் கூடாது. அப்புறம் நம்ம பசங்க ஒரு இருபது, முப்பது பேர என் காரை ஃபாலோ பண்ணி கன்-னோட வரச் சொல்லு” னு சொன்னவன், தன் இடுப்புல ஒரு துப்பாக்கியை எடுத்துச் சொருகிக்கிட்டு, தன்னோட ரூமை விட்டு வெளியில வந்தான்.

வெளியில வசந்தி மற்றும் வெண்ணிலாவோட நின்னுக்கிட்டு இருந்த சௌபர்ணிகா, “அவளுக்கு எதுவும் ஆகாதுல்ல…!!” னு பதட்டமா கேக்க, “நான் உயிரோட இருக்கற வரைக்கும் அவளுக்கு எதுவும் ஆகாது” னு சொன்ன விஷ்வா, தன்னோட ஆட்களோட அந்த மண்டபத்தை விட்டு வெளியில போனான்.

சரியா இருபத்தஞ்சு நிமிஷம் டிராவல் பண்ணதுக்கப்புறம், அவனோட கார் ஒரு பழைய கெமிக்கல் ஃபேக்டரி முன்னாடி போய் நின்னுச்சு. தன்னோட மொபைல் போன்ல தெரிஞ்ச ஜிபிஎஸ் சிக்னலை ஒருதடவை செக் பண்ணின விஷ்வா, “அவள இங்கதான் அடைச்சு வச்சிருக்காங்க” னு சொல்லிட்டு, தன்னோட ஆட்களோட கையில துப்பாக்கிய வச்சுக்கிட்டு உள்ளே போனான்.

அவங்க அங்க வந்து சேர்றதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடியே, இவங்க இங்க வந்துட்டு இருக்கறதக் கவனிச்சுட்ட அந்த கடத்தல்கார கும்பல், அங்க இருந்து தப்பிச்சு ஓடிருந்தாங்க. அவங்க அங்க வந்துட்டுப் போனதுக்கான தடயம்னு எதுவும் இல்ல. அதனால, “சிக்னல் இங்கதான் காட்டுது. ஆனா இங்க யாரும் இருக்கற மாதிரி தெரியலையே…!! அவ பெண்டன்ட்ல லொகேஷன் ட்ராக்கர் இருக்கறதக் கண்டுபிடிச்சு அத மட்டும் கழட்டி இங்க தூக்கி போட்டுட்டுப் போய்ட்டானுங்களா…?? அதுக்கெல்லாம் வாய்ப்பு இல்லையே…!! ஏய் மேகா, எங்கடீ இருக்க…???” னு நெனச்ச விஷ்வா, அந்தப் பெரிய கெமிக்கல் ஃபேக்டரி முழுக்க அவளத் தேடி அலைஞ்சான்.

ஒரு பெரிய கெமிக்கல் இருந்த பேரலுக்குப் பின்னால, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில மயங்கிக் கிடந்தா மேகா. அவளோட கட்டுகளைப் பிரிச்ச விஷ்வா, அவ மூஞ்சியில தட்டி, “ஏய்… மேகா… எந்திரிடீ. என்னக் கண்ணத் தொறந்து பாரு” னு எவ்ளோவோ சொல்லி கெஞ்சிப் பார்த்தான்.

ஆனா மேகாகிட்ட ஒரு அசைவும் இல்ல. அதனால அவன் கொஞ்சம் கூடத் தாமதிக்காம, அவ கையப் புடிச்சு பல்ஸ செக் பண்ண, அது நிமிஷத்துக்கு நிமிஷம் லோ ஆகிக்கிட்டே இருந்துச்சு. அதனால, பக்கத்துல இருக்கற ஹாஸ்பிடலுக்கு அவளத் தூக்கிக்கிட்டு ஓடினான் விஷ்வா.

அவள நல்லா செக் பண்ணின டாக்டர், “இவங்களுக்கு யாரோ அனஸ்தீசியா ஹெவி டோஸ் குடுத்திருக்காங்க. அதான் நீங்க எவ்ளோ எழுப்பியும் இவங்களுக்கு மயக்கம் தெளியல. எப்படியும் இவங்களுக்கு மயக்கம் தெளிய, அட்லீஸ்ட் இருபத்தி நாலு மணி நேரம் ஆகும் மிஸ்டர் விஷ்வா. அதுக்கு முன்னாடி இவங்கள மயக்கத்துல இருந்து எழுப்பறதுக்காக நாம எதாவது பண்ண ட்ரை பண்ணினா, அது இவங்களுக்குப் பாய்சன் குடுத்து, நம்மளே இவங்களக் கொல்றதுக்குச் சமம். சோ, அவங்களுக்கு மயக்கம் தெளியற வரைக்கும் அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம இருக்கறதுதான் நல்லது” னு சொன்னார்.

“ஒருவேள மேகா இருக்கற இடத்த நான் தேடி கண்டுபுடிச்சாலும்… எங்க மேரேஜ் நடக்கக் கூடாதுன்னுதான் எவனோ பிளான் பண்ணி அவளுக்கு இப்படி மயக்க மருந்து குடுத்திருக்கான்” னு நெனச்ச விஷ்வா, “அவளுக்கு வேற எந்த பிராப்ளமும் இல்லையே டாக்டர்…!! நான் அவளக் கூட்டிக்கிட்டுப் போலாமா…???” னு கேட்டான்.

“யா… அவங்களுக்கு வேற ஒண்ணும் இல்ல. அவங்கள எழுப்பறேன்னு யாரும் எதுவும் பண்ணி அவங்கள டிஸ்டர்ப் பண்ணாம மட்டும் பாத்துக்கோங்க” னு சொன்ன டாக்டர், மேகாவ டிஸ்சார்ஜ் செஞ்சுட்டார்.

ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி, மேகாவப் பத்தின தகவல யார்டயும் சொல்லக் கூடாதுன்னு டாக்டர மிரட்டின விஷ்வா, அவளத் தூக்கிக்கிட்டு கார்ல மண்டபத்துக்குப் போனான். மயக்கத்துல கிடந்த மேகாவப் பாத்து எல்லாரும் பயந்து போய், ‘என்ன ஆச்சு’ னு விசாரிக்க, “அவளுக்கு ஒண்ணும் இல்ல. நான் ஹாஸ்பிடல் போயிட்டுதான் வரேன். நீங்க கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையப் போயி பாருங்க” னு சொன்னவன், மேகாவத் தூக்கிக்கிட்டுப் போயி அவளோட ரூம்ல படுக்க வச்சுட்டு, “நீங்க இவ கூடயே இருந்து மத்தவங்கள ஹெல்ப்புக்கு வச்சுக்கிட்டு இவள சீக்கிரமா ரெடி பண்ணுங்க” னு சௌபர்ணிகா கிட்ட சொல்லிட்டு, அவன் தயாராகறதுக்காகத் தன்னோட ரூமுக்குப் போயிட்டான்.

“என்ன்க்கா… மயக்கத்துல கிடக்கிறவள மேரேஜுக்கு ரெடி பண்ணச் சொல்லிட்டுப் போறாரு…!! இவ இப்படி இருக்கும்போது கல்யாணம் எப்படி நடக்கும்…???” னு மீரா சௌபர்ணிகா கிட்ட கேக்க, “எனக்கும் அதான் தெரியல. அவன் ஏதாவது பிளான் பண்ணிருப்பான். நாம அவன் சொன்னத மட்டும் செய்வோம்” னு சொன்னவ, கல்யாணத்துக்காக மேகாவத் தயார் பண்ண ஆரம்பிச்சா.
ஒரு மணி நேரத்துக்குப் பின்… குறித்த நேரத்துல மாப்பிள்ளையாப் போயி மேடையில உக்காந்தான் விஷ்வா. மயங்கிக் கிடந்த மேகாவத் தயார் செஞ்சு கூட்டிக்கிட்டு வந்து அவன் பக்கத்துல உக்கார வச்சு, அவ கீழ விழாம இருக்க, அவளோட உடல விஷ்வா மேல சாத்தி வச்சாங்க. எல்லா சடங்குகளையும் மயக்கத்துல இருக்கற மேகாவோட சேர்ந்து அப்படியே செஞ்ச விஷ்வா, லாஸ்ட்டா ஐயர் “கெட்டி மேளம் கெட்டி மேளம்…!!” னு சொல்லிட்டு மந்திரத்தைச் சொல்ல ஆரம்பிச்ச உடனே, அவர் கையில இருந்த திருமாங்கல்யத்த வாங்கி, தன்னோட பாட்டியோட ஆசீர்வாதத்தோட மேகாவோட கழுத்துல கட்டினான் விஷ்வா.
பின்னாடி அவ நெத்தியில குங்குமமும் வச்சு, முழுசா அவளத் தன்னோட சரி பாதியா ஏத்துக்கிட்டவன், அவளத் தூக்கிக்கிட்டு ஏழு தடவை அக்னியச் சுத்தி வந்தான்.

இந்த விசித்திரமான கல்யாணத்த மத்தவங்க எல்லாரும் ஆச்சரியமாப் பாத்துக்கிட்டு இருக்க, “மேகாவக் காணாமப் போனதால கல்யாணம் எங்க நின்னு போயிடுமோன்னு நாங்க எல்லாரும் ரொம்பப் பயந்துட்டோம்.

ஏற்கனவே முடிவு பண்ண கல்யாணம்தானே… எப்படி நடந்தா என்ன…?? யாருக்கும் பாதிப்பு இல்லாம நல்லபடியா நடந்து முடிஞ்சிருச்சு. அதுவே போதும்” னு நெனச்சு மேகாவோட வீட்டார்கள் நிம்மதியாப் பெருமூச்சு விட்டாங்க.
ரெண்டு மனசும் முழுசா இணையாம நடந்த இந்தக் கல்யாணம், எல்லாராலயும் ஏத்துக்கப் பட்டாலும், விஷ்வா மற்றும் மேகாவால ஏத்துக்கப்படுமா…??

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured