Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 71

மூர்கனின் காதலி CH 71

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 71

நிச்சயதார்த்தம் முடிஞ்சு பாதிப் பேரு அவங்க வயித்த நிரப்ப சாப்பாடு போடுற இடத்துக்குப் போய்ட்டாங்க. விஷ்வாவையும் மேகாவையும் நிக்க வெச்சு போட்டோகிராஃபர் விதவிதமா ஃபோட்டோஸ் எடுத்துக்கிட்டு இருந்தாரு. அப்போ, வெள்ளை வேட்டி சட்டைப் போட்டிருந்த வெற்றி, சமையல் கான்ட்ராக்டர்கிட்ட எதோ பேசிக்கிட்டே போறதையும், அவன ஏக்கம் நிறைந்த கண்ணோட பாத்துக்கிட்டே சோகமா கலைச்செல்வி போறதையும் கவனிச்ச மேகா, “நாமதான் நிறைய ஃபோட்டோஸ் எடுத்துட்டோமே விஷ்வா.. எனக்குக் கால் வலிக்குது. போதும். இதோட ஸ்டாப் பண்ணிக்கலாமா..??”ன்னு கெஞ்சலா கேட்டா. “ம்ம்ம்.‌. ”ன்னாரு அவரு.

“தேங்க்ஸ் விஷ்வா. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. நான் போய்ட்டு கொஞ்ச நேரத்துல வந்துடறேன். உங்களுக்குப் பசிச்சா நீங்க போய் சாப்பிடுங்க, ஓகேவா..??”ன்னு கேட்டுட்டு, அவரோட பதிலுக்குக்கூடக் காத்திராம அங்கிருந்து வேகமா தன் புடவையத் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு ஓடிட்டா மேகா.

“இந்த நேரத்துல அப்படியிவளுக்கு என்னதான் முக்கியமான வேலையோ..!!”ன்னு நெனச்ச விஷ்வா சலிச்சுக்க, “சார், நான் வேணா உங்கள வெச்சு சோலோ ஷாட்ஸ் எடுக்கவா..?? உங்களுக்கு ஃபோட்டோஜெனிக் ஃபேஸ் இருக்கு. எந்த ஆங்கிள்ல ஃபோட்டோ எடுத்தாலும் நீங்க ஹேண்ட்சம்மாக் இருப்பீங்க..!!”ன்னு வந்திருந்த போட்டோகிராஃபர் அவர்கிட்ட சொன்னாரு.

“வாங்குன காசுக்கு மூடிக்கிட்டு சொல்ற வேலைய மட்டும் செய்.”ன்னாரு விஷ்வா. தன் வேட்டிய மடிச்சு கட்டிக்கிட்டுப் போய் ஒரு சேர்ல உக்காந்தாரு. அவர் பக்கத்துல போய் உக்காந்த மகேஷ், “இன்னும் உங்களுக்கு மேரேஜ் நடக்கப்போகுதுன்னு என்னால நம்பவே முடியல பாஸ். எல்லாமே ஒரே‌ ட்ரீம் மாதிரி இருக்கு.”ன்னு சொல்ல, அவர் தொடையில நறுக்குன்னு கிள்ளுன விஷ்வா “இப்ப தூக்கம் தெளிஞ்சுருச்சா..??”ன்னு கேக்க, அவருக்கு மறுபக்கம் உக்காந்திருந்த தயாளன், “தேவையில்லாம ஏண்டா அவர்கிட்ட வாயக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கிற..!!”ன்னு சொல்லிட்டு நக்கலா சிரிச்சான்.‌

“எனக்கு உங்கள அடிக்கணும்னு தோணுச்சுன்னா, நீங்க எதுவுமே பண்ணலன்னாலும் நான் உங்கள கூப்பிட்டு வெச்சு அடிப்பேன்டா.”ன்னாரு விஷ்வா. தயாளனோட தலையில தட்டுனாரு. “போங்க பாஸ். இனிமே நான் உங்க பக்கத்துல உக்காரவே மாட்டேன்.”ன்ன தயாளன், நாலு சேர் தள்ளி உக்காந்துக்கிட்டான்.‌ சாப்பிட்டு முடிச்சுட்டு வந்தவங்களுக்கு வெற்றிலை பாக்கு கொடுத்துக்கிட்டு இருந்த வெண்ணிலாவ வழிமறிச்ச அரவிந்த், “அடுத்து உங்களுக்கு எப்பங்க மேரேஜ்..??”ன்னு கேக்க, “ராங் கொஸ்டீன்.”ன்னா அவ.‌

“ஏங்க, நீங்க கல்யாணமே பண்ணிக்காம மதர் தெரசா மாதிரி இந்த நாட்டுக்குச் சேவை செய்யணும்னு நெனைக்கிறீங்களா..?? உங்கள மாதிரி அழகான பொண்ணுங்க எல்லாம் அப்படி நெனச்சா என்ன மாதிரி சிங்கிள் பசங்க நிலைமையெல்லாம் என்னாகுறது..??”ன்னு தன் இஷ்டத்துக்கு பேசிக்கிட்டு இருந்தான் அரவிந்த்.
அவன் வாயில கைவெச்சு அவன பேசவிடாம செஞ்ச வெண்ணிலா, “நீங்க அந்த கொஸ்டீன கேக்க வேண்டிய ஆள் நான் இல்லைன்னு மட்டும்தான் சொன்னேன்.‌

அதுக்கு ஏன் ஒரு செகண்ட்ல இவ்ளோ யோசிக்கிறீங்க..??”ன்னு கேட்டுட்டு அவன் மேல இருந்து தன் கைய எடுத்தா. “இன்னும் கொஞ்ச நேரம் வெச்சிருக்கலாமே..!!”ன்னு நெனச்ச அரவிந்த், அவளோட உள்ளங்கை தன்னோட உதட்டுல பட்டதுக்கே, தான் என்னவோ அவளுக்கு முத்தம் கொடுத்துட்ட மாதிரி நெனச்சு உள்ளுக்குள்ள குத்தாட்டம் போட்டவன், “அப்ப வேற யார்கிட்ட கேக்கணும்..??”ன்னு கேக்க, “வேற யாரு.. எங்க அப்பாகிட்ட தான் கேக்கணும்.”ன்னா வெண்ணிலா.

அவ காளீஸ்வரனைப் பத்தி ஞாபகப்படுத்தின ஒடனே, தன்னைவிட ஹைட்டாவும், வெயிட்டாவும், முறுக்கு மீசையோட கம்பீரமா இருக்குற அவரோட உருவம் அரவிந்தோட கண்முன்ன வந்து போக, பயத்துல அவனுக்கு வயித்தக் கலக்குன மாதிரி இருந்துச்சு.

அதனால “அத நான் அப்புறமா அவர்கிட்ட கேக்குறேன். இப்போ நான் கொஞ்சம் பிஸி. உங்ககிட்ட அப்புறம் பேசுறேன், பை.”ன்னு அவசரமா சொல்லிட்டு ஓடிட்டான்‌.
போற அரவிந்தைப் பாத்து சத்தமா சிரிச்சிகிட்டு இருந்தா வெண்ணிலா. அவளக் கடந்து போற எல்லாரும், “என்ன, இந்தப் பொண்ணு தனியா நின்னு சிரிச்சிகிட்டு இருக்கு..!! இந்தப் புள்ள டாக்டருக்குப் படிக்குதுன்னு சொன்னாங்க.. ஆனா, ஏன் இப்படி பண்ணிகிட்டு இருக்கு..?? ஒருவேள ஏதாவது பிரச்னை இருக்குமோ..!!”ன்னு எல்லாம் யோசிச்சுக்கிட்டே போனாங்க.

விஷ்வாகிட்ட தனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குன்னு சொல்லிட்டு வந்த மேகா, சாப்பிடுற இடத்துல வெற்றியத் தேடிக்கிட்டு இருந்தா.
அவ அந்த இடம் பூரா தேடியும் வெற்றிய அவளால கண்டுபிடிக்க முடியல.

அதனால தன்னோட ரெண்டாவது அண்ணன் மணியக் கூப்பிட்டு, “அண்ணா, நீங்க வெற்றியப் பாத்தீங்களா?”ன்னு கேக்க, “அவனா.. அவன் சமையல் ரூம்ல இருப்பான். இன்னைக்கு உனக்குதானே விசேஷம்.. அங்க முன்னாடி போய் மாப்பிள்ளைக்கூட நிக்காம, இங்க வந்து எதுக்கு அந்த வெட்டிப் பய வெற்றிய தேடிட்டு இருக்க..?? மாப்பிள்ளை பாத்தா தப்பா நெனைக்கப் போறாரு.. நீ போ.”ன்னு மணிகண்டன் அவளப் போகச் சொல்லி விரட்டுனாரு.

“அவரெல்லாம் ஒண்ணும் நெனைக்க மாட்டாரு. நான் அவர்கிட்ட சொல்லிட்டுத்தான் வந்தேன். நான் வெற்றிகிட்ட முக்கியமா கொஞ்சம் பேசணும். நீங்க நகருங்க.”ன்ன மேகா, மணிகண்டனோட கையப் பிடிச்சு இழுத்து, அவன ஓரமா தள்ளிவிட்டு வெற்றியப் பாக்க சமையல் ரூம்க்குப் போனா. அங்க, சமையல் செய்யுறவங்க கிட்ட “வந்தவங்களுக்குப் பந்தியில எந்தக் கொறையும் இருக்கக்கூடாது. இருக்குற பொருள் எல்லாம் பத்தலைன்னா சொல்லுங்க. கூட எவ்ளோ வேணும்னாலும் வாங்கியாந்து போடறேன். மொதப் பந்தியில எப்படி எல்லாரும் திருப்தியா சாப்பிட்டாங்களோ, அதே மாதிரி கடைசிப் பந்தியில சாப்பிடுறவங்களும் சாப்பிடணும்.”ன்னு சொல்லிக்கிட்டு இருந்தான்.‌

“உன் நல்ல மனசுக்கு நீ எப்பவும் நல்லா இருக்கணும் வெற்றி.”ன்னு நெனச்ச மேகா, “மாமா..!!”ன்னு அவனக் கூப்பிட்டா. அவ குரல் கேட்டு திடுக்கிட்டுத் திரும்பிப் பாத்தான் வெற்றி. இன்னைக்குப் பட்டுப் புடவையில மேகா அழகா ஜொலிச்சதால, “இதே மாதிரி நீ என் பக்கத்துல பட்டுச் சேலை கட்டி என் பொண்டாட்டியா நிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, இன்னைக்கு உன் பக்கத்துல வேற ஒருத்தன் நிக்கிறான்..!!”ன்னு நெனச்சு வருத்தப்பட்டான்.

அதனாலயே அவளப் பாக்கறதத் தவிர்க்க நெனச்சு, தன்னைத்தானே வேலையில மூழ்கடிச்சு பிஸியாக வெச்சுக்கிட்டான்.
அதனால, இப்போ மேகாவே அவனத் தேடி வந்திருக்கிறது அவனுக்கு ஷாக்கிங்கா இருந்துச்சு. வேகமா மடிச்சிக் கட்டியிருந்த தன் வேட்டியக் கீழ இறக்கிவிட்டு, அவள நோக்கிப் போன வெற்றி, “என்னமா, எதாவது வேணுமா..??”ன்னு கேட்டான்.

“எதாவது வேணும்னா தான் நான் உன்னப் பாக்க வரணுமா மாமா..??”ன்னு அவ கேக்க, “சேச்சே.. அப்படி இல்ல. இன்னைக்கி உனக்குதானே ஃபங்ஷன். நீ மாப்பிள்ளைக்கூட பிஸியா இருப்ப. இந்த நேரத்துல இங்க வந்து இருக்கேல்ல.. அதான் கேட்டேன்.”ன்னா அவன்.

“நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும் மாமா. அங்க போய் பேசலாமா..??”ன்னு, கொஞ்சம் தூரத்துல இருந்த தென்னை மரத்தக் காட்டுனா. அவ, இந்த நேரத்துல தன்ன வரச் சொல்லிக் கூப்பிடுறான்னா, கண்டிப்பா முக்கியமான விஷயமாத்தான் இருக்கும்னு நெனச்ச வெற்றி, அவ கூடப் போனான். வெற்றி கேள்வியா அவ முகத்தையே பாத்துக்கிட்டு இருக்க, “நீ நம்ம கலைச்செல்வியப் பத்தி என்ன நெனைக்கிற மாமா..??”ன்னு கேட்டா.

“அவளப் பத்தியா… அவளப் பத்தி நான் என்ன நெனைக்கறது..??”ன்னு வெற்றி குழப்பமா கேக்க, “என்ன மாமா இப்படி கேக்குற… அப்போ உனக்கு அவளப் பிடிக்காதா..??”ன்னு சோகமா கேட்டா மேகா. “ஏய்.. அவளப் பிடிக்காம என்ன..!! அவ நல்லாத் தங்கமான புள்ள. காலையில இருந்து நானும் பாக்கறேன்.. நம்ம வீட்டு விசேஷத்தை அவ வீட்டு விசேஷம் மாதிரி நெனச்சு அப்படியே பம்பரமா எல்லாப் பக்கமும் சுத்தி வேலை பாத்துக்கிட்டு இருக்கா.

அவள மாதிரி எல்லாம் யாரும் இருக்க மாட்டாங்க.”ன்னு வெற்றி சொல்ல, “ஆமா மாமா, அவள மாதிரி யாரும் இருக்க மாட்டாங்க. அதச் சொல்றதுக்குதான் நானும் வந்தேன்.”ன்னா மேகா.
“இந்த நேரத்துல அவளப் பத்திப் பேச வந்தியா..?? எதுக்கு..?? எனக்கு ஒண்ணும் புரியல.”ன்னு குழப்பமா வெற்றி சொல்ல, “நம்ம ஸ்கூல் படிக்கும்போதுல இருந்தே கலை ஒன்-சைடா உன்ன லவ் பண்றா மாமா. நம்ம ஸ்கூல்ல ஒண்ணா எடுத்த க்ரூப் ஃபோட்டோவுல உன்ன மட்டும் தனியா கட் பண்ணி எடுத்து, அதுல லவ் யூன்னு அப்பவே அவ எழுதி வெச்சிருப்பா. அதப் பாத்ததனாலயோ என்னமோ எனக்கு உன் மேல கடைசி வரைக்கும் எந்த ஃபீலிங்ஸும் வரல. சரி அதவிடு. நான் இப்போ போய் அவகிட்ட பேசி, அவள உன்கிட்ட வந்து ப்ரோபோஸ் பண்ண சொல்றேன்.
அவள மாதிரி ஒரு பொண்ணு எங்க தேடினாலும் உனக்குக் கெடைக்க மாட்டா. சோ, ஒழுங்கா நீ அவளுக்கு ஓகே சொல்லி, அடுத்த முகூர்த்தத்துல நீ அவ கழுத்துல தாலி கட்டுற. நான் அண்ணன்கிட்ட பேசறேன். ஓகேவா..?? உன்கிட்ட நான் ரெக்வெஸ்ட் எல்லாம் பண்ணல. இது ஆர்டர். அவதான் உன் பொண்டாட்டி. நீ ஃபிஸ் ஆகிக்கோ. உங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகும்.”ன்னு, தான் சொல்ல வந்தத அவன் கிட்ட சொன்ன மேகா, அவனுக்குப் பதில் சொல்ல டைம் கொடுக்காம, வந்த வேலை முடிஞ்சுதுன்னு கலைச்செல்வியத் தேடி போய்ட்டா.

“என்ன சொல்றா இவ..?? நெஜம்மாவே கலை என்ன லவ் பண்றாளா..?? இல்ல சும்மா இவங்க எல்லாரும் ஒண்ணா சேர்ந்துக்கிட்டு என்ன வெச்சு ஃபன் பண்றாங்களா..?? ஆனா, இவ பேசுனத வெச்சுப் பாத்தா..‌‌ சும்மா சொல்ற மாதிரி தெரியலையே..!!”ன்னு நெனச்ச வெற்றி, என்ன நடக்குதுன்னு புரியாம, அதே எடத்துல அப்படியே ஸ்டன் ஆகி நின்னுட்டான்.

தொடரும்…

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured