அத்தியாயம் 61
பைக்கில் வந்த முத்து தன்மேல இடிச்சிட்டதுனால, சௌபர்ணிகா அவன கோபமா திட்டிக்கிட்டு இருந்தா. அவளோட அழகுல மயங்குன முத்து அதையும் கூட ரசிச்சுக் கேட்டுக்கிட்டு இருந்தான்.
சாவி வாங்கிக்கிட்டு அங்க வந்த மேகா அந்த காட்சிய பாத்துட்டு வேகமா அவங்க கிட்ட ஓடிப் போய் “என்னக்கா ஆச்சு??”ன்னு கேக்க, “இந்த இடியட் ஒழுங்கா வண்டி ஓட்டத் தெரியாம என் மேல இடிச்சிட்டான். இங்க பாரு.. அந்த வாழைமரம் பட்டு என்னோட favorite சேலையில இப்படி கரை ஆயிடுச்சு.
இது வாஷ் பண்ணா கூட போகாது. படிச்சிருந்தா தானே அறிவு இருக்கும்.. இவன மாதிரி ஆளுங்களுக்கு சுத்தமா common senseஏ இருக்காது. நான் எவ்ளோ நேரமா திட்டிட்டு இருக்கேன்.. எரும மாடு மாதிரி இவன் அப்படியே நிக்கிறான் பாரு”ன்னு முத்துவை ஓரக்கண்ணால பாத்தபடி இருந்த கடுப்புல பொரிஞ்சு தள்ளுனா சௌபர்ணிகா..
மேகா வாடின முகத்தோட முத்துவைப் பாக்க, “நான் பாத்துக் கரெக்டா தான்மா வந்தேன். இவங்க தான் யார் கூடயோ பிசியா ஃபோன்ல பேசிட்டு இருந்தாங்க. நான் ஹாரன் அடிச்சும் இவங்க கவனிக்கல. சரி அப்படியே மேனேஜ் பண்ணி போயிடலாம்ன்னு நினைச்சேன். தெரியாம வாழைமரம் இவங்க மேல மோதிடுச்சு”ன்னு தன்னிலை விளக்கம் கொடுத்தான் முத்து. அவன் இவ கிட்ட பேசின விதத்த வச்சு “இவன உனக்குத் தெரியுமா??”ன்னு சௌபர்ணிகா கேக்க, “இவர் என்னோட கடைசி அண்ணன் மாரிமுத்து. மதுரையிலயே one of the famous advocates”ன்னா மேகா.
அதனால சுதாரிச்சுக்கிட்ட சௌபர்ணிகா “சாரி நீங்க யாருன்னு தெரியாமப் பேசிட்டேன்”ன்னு சொல்ல, “யாரா இருந்தா என்ன மேடம்? நீங்க எதாவது கேட்டிங்கன்னா, ஆப்போசிட்ல இருக்குறவங்களுக்கு கொஞ்சம் நடுவுல பேச டைம் கொடுங்க. கொஞ்சம்கூட gap விடாம நீங்களே பேசிக்கிட்டே இருந்துட்டு, அப்புறம் நான் வாயத் திறந்து எதுவுமே சொல்லலைன்னு என் தங்கச்சி கிட்ட complaint பண்றீங்க! இருந்தாலும் நீங்க சூப்பர் தான்.
ஒரு lawyer என்னவே பேசவிடாம பண்ணிட்டீங்க மேடம்”ன்ற முத்து லேசா அவள பாத்து புன்னகைச்சான்.
என்ன சொல்றதுன்னு தெரியாம தானும் சிரிச்சு சமாளிச்ச சௌபர்ணிகா, “இனிமே நான் கொஞ்சம் carefulஆ இருக்க try பண்றேன்”ன்னு சொல்ல, “ம்ம்.. என்ன மேகா இவங்க கூட இங்க நின்னு என்ன பண்ணிட்டு இருக்க? யார் இவங்க??”ன்னு கேட்டான் முத்து.
“இவங்க சௌபர்ணிகா, விஷ்வாவோட சிஸ்டர். எங்க மேரேஜ்க்காக வந்திருக்காங்க”ன்னு மேகா சொல்ல, “ஓகே ஓகே. ரெண்டு பேரும் பாத்து வீட்டுக்குப் போங்க. அண்ணா என்ன சீக்கிரம் வர சொன்னாரு. நான் கிளம்புறேன்”ன்னு சொல்லிட்டு தன்னோட பைக்க ஸ்டார்ட் பண்ணின முத்து அப்பவும் கிளம்புறதுக்கு முன்னாடி ஓரக்கண்ணால சௌபர்ணிகாவ ஒரு பார்வை பாத்துட்டுப் போனான்.
இங்கே அரண்மனையில..
மயங்கி விழுந்து கிடந்த விஷ்வாவ எல்லாரும் போன அப்புறம் அவனோட ஆட்கள் தூக்கி பெட்ல படுக்க வச்சுட்டுப் போயிருந்தாங்க. நைட் 7:00 மணி அளவுல மயக்கம் தெளிஞ்சு கண் விழிச்ச விஷ்வா “அம்மா..!!”ன்னு கத்திக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். திடீர்னு அவனுக்கு வியர்த்து கொட்ட, அவனோட மனசும் உடம்பும் “மேகா எங்க??”ன்னு தான் தேடுச்சு. அதனால வேகமா எழுந்து வெளிய போனவன் பால்கனி வழியா வெளிய தெரிஞ்ச வானத்தப் பாத்துட்டு “அதுக்குள்ள இருட்டிடுச்சா?? டைம் என்ன ஆகுது??”ன்னு நினைச்சு சுவத்துல மாட்டியிருந்த கடிகாரத்தப் பாத்தான்.
“ஓஓ Shit..!! Eveningஏ ஆயிடுச்சா??”ன்னு நினைச்சு தன் தலையில கை வச்ச விஷ்வாவுக்கு காலையில அவன் செஞ்சதெல்லாம் அரைகுறையா ஞாபகம் வர, “மேகா..!! ஏய் மேகா எங்கடி இருக்க..!!”ன்னு சத்தமா கத்தி அவள தேடினான்.
அவன் குரல் கேட்டு அங்க போன மகேஷ் “பாஸ் மேகா இங்க இல்ல. சௌபர்ணிகா மேடம் கூட இருப்பாங்கன்னு நினைக்கிறேன்”ன்னு சொல்ல, “நான் அவளப் பாக்கணும். போய் அவள வரச் சொல்லு”ன்னான் விஷ்வா.
“ஓகே பாஸ். பட் அதுக்கு முன்னாடி நீங்க எப்படி இருக்கீங்கன்னு முதல்ல பாருங்க..!! நீங்க போய் குளிச்சுட்டு ரெடி ஆகுங்க. அப்புறமா மேகா மேடமப் பாத்துக்கலாம். இங்க நிறைய பேர் அப்பப்ப வந்துட்டு வந்துட்டு போறாங்க. நீங்க இன்னும் இப்படியே இருக்குறதப் பாத்தா, மறுபடியும் எதாவது நினைப்பாங்க”ன்னு மகேஷ் சொல்ல, “கண்டிப்பா நான் பண்ண atrocities எல்லாத்தையும் எல்லாரும் பார்த்திருப்பாங்க. பெரிய problem ஆகியிருக்குமே… இருந்தாலும் இவன் நார்மலா பேசுறான்னா, அத எல்லாத்தையும் மேகா தான் தனியா handle பண்ணிருக்கணும். Refresh ஆகிட்டு போய் அவ கிட்ட என்ன ஆச்சுன்னு கேக்கணும்”ன்னு நினைச்ச விஷ்வா குளிக்குறதுக்காகப் போயிட்டான்.
சில நிமிஷங்களுக்குப் பின் தயாராகி வந்த விஷ்வா மகேஷ் கிட்ட மேகாவப் பத்தி கேக்க, “அங்க வீட்ல மேகா மேடம் இல்ல சார். இங்க தான் இருப்பாங்கன்னு அவங்க சொல்றாங்க. பட் இங்க எல்லாப் பக்கமும் தேடிப் பாத்துட்டேன். அவங்கள காணோம். அவங்களுக்கு காலும் போக மாட்டேங்குது. எத்தனை தடவ பண்ணினாலும் not reachableன்னு வருது. நான் வேணா நம்ம ஆளுங்கள அனுப்பி அவங்களத் தேடிப் பாக்க சொல்லட்டுமா பாஸ்??”ன்னு அக்கறையோட கேட்டான் அவன். “எனக்கும் அவ இங்க தான் இருப்பான்னு தோணுது”ன்னு நினைச்ச விஷ்வா,
“வேண்டாம் நீ போ. நான் தேவைப்பட்டா கூப்பிடுறேன்”ன்னவன் தன் கண்களை சுழல விட்டு அவளத் தேடியபடி அந்த அரண்மனைக்குள்ள சுத்தினான்.
அப்போ தற்செயலா அவன் தியான மண்டபத்துக்குப் போற வழியப் பாக்க, என்ன நினைச்சானோ தெரியல. சின்ன சந்து வழியாப் போய் தியான மண்டபத்துக்குள்ள நுழைஞ்சான் விஷ்வா. இன்னிக்கு பௌர்ணமிங்கறதுனால, நிலவு மகள் முழுமை பெற்று பூமி எங்கும் ஒலி வீசிக்கிட்டிருக்க அவள சைட் அடிச்சபடி ஒரு தூண்ல சாய்ந்து வானத்தைப் பாத்துபடி உட்கார்ந்திருந்தா மேகா. அதே தூணோட மறுபக்கம் போய் சாய்ந்து உட்கார்ந்த விஷ்வா “sadஆ இருக்கியா??”ன்னு கேக்க, “இல்லையே..!! ஏன் அப்படி கேக்குறீங்க??”ன்னு கேட்டா அவள்.
“காலையில நான் என்ன பண்ணேன்னு எனக்குத்தான் தெரியுமே.. பெரிய problem ஆகியிருக்கும்ல.. எப்படி எல்லாரையும் சமாளிச்ச??”ன்னு அவன் கேக்க, “இங்க என் பக்கத்துல வந்து உட்காருங்க சொல்றேன்”ன்னா மேகா. அதனால விஷ்வா போய் அவள் பக்கத்துல உட்கார, “நான் சொல்றத பொறுமையாக் கேப்பீங்களா??”ன்னு மெல்லிய குரல்ல கேட்ட மேகா அவன் தோள்கள்ல சாய்ஞ்சிக்கிட்டா.
“கேக்குறேன் சொல்லு”ன்ன விஷ்வா அவள் மேல தானும் சாய்ஞ்சிக்கிட்டான்.
அவன் கைய இறுக்கமா பிடிச்சுக் கிட்ட மேகா, “நீங்க அப்படி behave பண்ணதப் பாத்துட்டு எல்லாரும் உங்களுக்கு ஏதோ psychological problem இருக்குன்னு சொன்னாங்க. அதனால எங்க அண்ணா இந்த மேரேஜ் நடக்கக் கூடாதுன்னு பிடிவாதமா சொல்லிட்டாரு. என்னால எதுவுமே பேச முடியல. அப்போ சௌபர்ணிகா அக்கா தான் இங்க இருந்து அத்தனை பேர் கூடயும் ஒரே ஆளா நின்னு அவங்க தம்பிக்காக சண்டை போட்டாங்க. உங்களுக்கு என்ன problemன்னு எல்லாருக்கும் explain பண்ணாங்க.
அப்புறம் என் கிட்ட விஷ்வாவத் தவிர உன்னால வேற யாரையாவது கல்யாணம் பண்ணிக்க முடியுமான்னு கேட்டாங்க. நானும் முடியாதுன்னு சொன்னேன். நான் பிடிவாதமா இருந்ததுனால எங்க அண்ணா மறுபடியும் நம்ம கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு. But உங்க அக்கா இல்லனா, இது எதுவுமே நடந்திருக்காது”ன்னு அவனுக்கு சௌபர்ணிகாவோட அன்பப் புரிய வைக்குற எண்ணத்துல பொறுமையாச் சொன்னா.
மேகாவ விட்டு சற்று விலகி உட்கார்ந்த விஷ்வா, “அவங்க மட்டும் இங்க வரலைன்னா, இந்த பிரச்சனையே வந்திருக்காது”ன்னு சற்று கோபமாகவே சொல்ல, “அவங்க உங்களோட அக்கா விஷ்வா. நம்ம வீட்ல நடக்குற first function இது. அவங்களுக்கு நம்ம ஃபங்ஷனுக்கு வர உரிமை இல்லையா?? இல்லன்னு யாராலையும் சொல்ல முடியாது. ஏன் சம்பந்தம் பேச உங்க சைடுல இருந்து யாருமே வரலைன்னு எங்க வீட்ல எத்தனை பேர் என்கிட்ட கேட்டுட்டே இருந்தாங்க தெரியுமா??”ன்னு கேட்டா மேகா.
விஷ்வா பதில் பேசாம அமைதியாவே இருக்க, “இங்க பாருங்க விஷ்வா.. உங்க மனசுக்குள்ள இன்னும் உங்களுக்கு உங்க அம்மா மேல பயம் இருக்கு. அவங்களே இறந்து போயிட்டாங்க. பாவம் அவங்க அப்ப என்ன situationல இருந்தாங்களோ தெரியல! ஏதோ தெரியாம அப்படியெல்லாம் behave பண்ணிருக்காங்க. இன்னமும் அவங்கள நினைச்சு நீங்க உங்களையும் hurt பண்ணிக்கிட்டு மத்தவங்களையும் hurt பண்றீங்க. உங்க அம்மா மேல உங்களுக்கு இருக்குற கோபம், வருத்தம், பயம் எல்லாத்தையும் விட்டுட்டு அவங்கள மன்னிச்சிருங்க. நடந்தத அப்படியே accept பண்ண try பண்ணுங்க.
And பாக்குறதுக்கு சௌபர்ணிகா அக்கா உங்க அம்மா மாதிரி இருக்குறதுனால, ரெண்டு பேரையும் connect பண்ணி யோசிச்சு emotionally triggerஆகி எப்பவோ நடந்ததெல்லாம் இப்ப நடக்குற மாதிரி நெனச்சு react பண்றீங்க. நான் இதப் பத்தி onlineல காலையில இருந்து நிறைய படிச்சுப் பார்த்தேன்.
நீங்க இன்னும் நடந்த விஷயத்துல இருந்து வெளிய வராததுனால தான் இப்படி இருக்கீங்கன்னு எனக்கு தோணுது. Just accept everything as it is and move on விஷ்வா. நீங்க அந்த Painஐ கடந்து வந்துட்டீங்க. So அந்த horrible past relatedஆன bad memoriesஐ baggagesஆ வச்சுக்கிட்டே இருக்குறதுக்கு, create some new good memories with your sister.
நீங்க உங்களோட pastஐ பார்த்து பயந்து ஓடிக்கிட்டே இருந்தீங்கன்னா, அது உங்களத் துரத்திக்கிட்டே தான் இருக்கும். சௌபர்ணிகா சிஸ்டர் உங்களுக்கு ரொம்ப நல்ல அக்கா. உங்களுக்குக் கல்யாணம் பண்ணாம அவங்க கல்யாணம் பண்ணிக்கக் கூடாதுன்னு இத்தனை வருஷமா உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
அந்த அளவுக்கு அவங்க உங்க மேல பாசமா இருக்காங்க. இத மட்டும் உங்க subconscious mindல ரிஜிஸ்டர் பண்ண try பண்ணுங்க விஷ்வா”ன்னு ஒரு therapist ஆகவே மாறி அவனுக்காகப் பேசினா மேகா.
அத்தனையும் பொறுமையா கேட்ட விஷ்வா அவள் கண்களை நேருக்கு நேராப் பாத்து “நீ என்ன விட்டுட்டுப் போயிடு மேகா”ன்னு உடைந்த குரல்ல சொன்னான்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)