Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 60

மூர்கனின் காதலி CH 60

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 60

“என் தம்பிய லவ் பண்ணிட்டு, உன்னால வேற யாரையாவது கல்யாணம் பண்ணி அவன் கூட சந்தோஷமா வாழ முடியுமா..??”ன்னு சௌபர்ணிகா கேட்க, இல்லைன்னு தலையாட்டினா மேகா. அவ கண்ணு கலங்கி இருந்துச்சு. எல்லாருமே அமைதியா மேகாவையும், சௌபர்ணிகாவையும் பாத்துக்கிட்டு இருக்க, எதையோ தீவிரமா யோசிச்சுக்கிட்டு இருந்தார் காளீஸ்வரன். 

பாவமா தன் அண்ணனப் பாத்த மேகா “ப்ளீஸ் அண்ணா.. இந்த மேரேஜ் வேண்டாம்னு சொல்லிடாதீங்க..!!”ன்னு கெஞ்ச, அவளப் பாத்து முறைச்சுட்டு மத்தவங்களப் பாத்த காளீஸ்வரன் “மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கட்டும். வாங்க நாம எல்லாரும் போய் கல்யாணத்துக்கு ஆக வேண்டிய வேலையப் பாக்கலாம். அதான் மாப்பிள்ளையோட அக்காவே வந்துட்டாங்களே.. அவங்கள வச்சு பேச வேண்டியதெல்லாம் பேசி முடிவு பண்ணிக்கலாம்.”ன்னாரு கம்பீரமா.

வழக்கம்போல காளீஸ்வரனை எதிர்த்து யாரும் ஒரு வார்த்தை பேசலை. சௌபர்ணிகா அவரப் பாத்து “தேங்க்ஸ்”ன்னு சொல்ல, சரின்னு தலையாட்டிய காளீஸ்வரன் அரண்மனையில இருந்து தன் வீட்ட நோக்கி நடக்கத் தொடங்கிட, அவருடன் வந்தவங்கெல்லாம் வெளியேறத் தொடங்கினாங்க.

காளீஸ்வரன் கல்யாணத்தப் பத்தி சௌபர்ணிகா கிட்ட பேசணும்னு சொன்னதால அவளும் அவங்கள பின்னாடி போக, வேகமா ஓடிப் போயி அவள பின்னால இருந்து அணைச்சுகிட்ட மேகா, “தேங்க்ஸ் மேடம். எங்க ஃபேமிலில இருக்கறவங்களோட சம்மதம் இல்லாம எங்க மேரேஜ் நடந்துடுமோனு நெனச்சு நான் ரொம்ப பயந்துட்டேன். எங்க வீட்ல இருக்கறவங்களுக்கு என் மேல பாசம் ரொம்ப அதிகம். அதான் அவங்க இப்படி எல்லாம் பண்ணிட்டாங்க. நீங்க லாஸ்ட்ல எல்லா உண்மையும் சொல்லி, மறுபடியும் மறுபடியும் அண்ணாவ ஓகே சொல்ல வெச்சுட்டீங்க..!!”ன்னா.

திரும்பி அவள அணைச்சுகிட்ட சௌபர்ணிகா “இவ்ளோ நடந்தும், நீ விஷ்வா சைடுல இருக்கறதுக்காக நான்தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லணும் மேகா. நானும் கிராமப் பக்கத்துல வளர்ந்தவ தான். உன் ஃபேமிலில இருக்கறவங்கள என்னால புரிஞ்சுக்க முடியுது. நீ சொன்ன மாதிரி அவங்க உன் மேல ரொம்ப பாசமா இருக்காங்க. உனக்கு கிடைச்சிருக்க இந்த நல்ல ஃபேமிலிய நீ மிஸ் பண்ணிட கூடாதுன்னு தான், என்ன ஆனாலும் பரவாயில்லைன்னு இத்தனை நாளா நாங்க ரகசியமா வச்சிருந்த எல்லாத்தையும் வெளிப்படையா சொல்லிட்டேன். மறுபடியும் இங்க இருக்கறவங்க யாராலயாவது இந்த நியூஸ் மீடியாவுக்குப் போய் இதுவும் ட்ரெண்ட் ஆகி விஷ்வாவோட பெயர டேமேஜ் பண்ணாம இருந்தா சரி.”ன்னு சொல்ல,

“அப்படியெல்லாம் நடக்காது மேடம். இங்க இருந்தவங்க எல்லாரும் என்னோட நெருங்கிய உறவினர்கள். எங்க பெரியண்ணா ஏதாவது சொல்லிட்டா, அவர மீறி யாரும் எதுவும் பண்ண மாட்டாங்க. நான் அண்ணாகிட்ட ஒரு வார்த்தை சொல்லி எல்லார்கிட்டயும் இத வெளியில சொல்ல கூடாதுன்னு சொல்லி வைக்க சொல்றேன்.”ன்னு சொன்ன மேகா அவ கூடவே அவங்களோட வீட்டுக்கு போனா.

மேகாவோட வீட்ல எல்லாருமே கூடி அமர்ந்திருக்க, வந்தவங்களுக்கு சிற்றுண்டி, டீ, காபி எல்லாம் பரிமாறப்பட்டுச்சு. சிவன் கோயில்ல வேலை பாக்குற ஐயர் வந்து நடுநாயகமா உட்கார்ந்திருக்க, மேகாவோட ஜாதகத்த ‌அவர்ட்ட கொடுத்த காளீஸ்வரன் சௌபர்ணிகா கிட்ட விஷ்வா பிறந்தநாள் மற்றும் நேரத்தைக் கேட்டு அவனோட ஜாதகத்தையே ஐயர தயார் செய்ய சொல்லி “மாப்பிள்ளை வீட்ல கல்யாணத்த ஒரு மாசத்துக்குள்ள முடிக்கணும்னு சொல்றாங்க சாமி. எங்க பொண்ணு மாப்பிள்ளை ஜாதகத்தப் பாத்துட்டு நிச்சயதார்த்தம் பண்றதுக்கும், கல்யாணத்துக்கும் நல்ல நாளா குறிச்சுக் குடுங்க.”ன்னாரு.

அவங்க ரெண்டு பேரோட ஜாதகத்தையும் புரட்டிப் புரட்டிப் பாத்த ஐயர் “விஷ்வா, மேகவாணி இவங்க ரெண்டு பேரோட ஜாதகமும் ரொம்ப நல்லா பொருந்தி இருக்கு. இன்னும் ரெண்டு நாள்ல‌ நல்ல முகூர்த்த நாள் ஒண்ணு வருது. அப்ப நீங்க நிச்சயதார்த்தத்த வச்சுகிட்டு, அப்புறம் அதுல இருந்து பத்து நாள் கழிச்சு வர்ற 22ஆம் தேதி நல்லபடியா கல்யாணத்த வெச்சுக்கோங்க.”ன்னு சொல்ல, “சரிங்க சாமி.. நாள் ரொம்பப் பக்கத்துல தான் இருக்கு. இருந்தாலும் பரவால்ல. கூட கொஞ்சம் ஆளுங்கள போட்டு கல்யாண வேலையப் பாத்துக்கலாம்.”ன்னு சொன்ன காளீஸ்வரன் சௌபர்ணிகாவோட சம்மதத்த வேண்டி அவளப் பாத்தாரு.‌

“பாட்டியோட உடல்நிலை ரொம்ப மோசமா இருக்கு. விஷ்வாவுக்கு சீக்கிரம் கல்யாணம் பண்ணிப் பாத்துட்டா, அவங்க கொஞ்சம் நார்மல் ஆயிடுவாங்கன்னு நாங்க நம்புறோம். சோ இந்த தேதியிலேயே ஃபங்ஷனை வெச்சுக்கலாம்.”னு சௌபர்ணிகா சொல்ல, எல்லாருமே இதுக்கு ஒத்துக்கிட்டாங்க. 

எல்லாமே நல்லபடியா பேசி முடிவு செய்யப்பட்ட பின் வந்த சொந்தக்காரங்கெல்லாம் கிளம்பிப் போயிட, சௌபர்ணிகா கூட தன்னோட ரூம்ல இருந்த மேகா “உங்க ஃபேமிலியும் இந்த ஊர்க்காரங்க தானே.. விஷ்வா சின்ன வயசுல இங்க வந்திருக்காராம். அப்போ நானும் அவரும்க் கூட மீட் பண்ணிப் பேசி இருக்கோம். உங்களுக்கு அதெல்லாம் தெரியுமா மேடம்..?? எனக்கே அவர் சின்ன வயசு போட்டோவப் பாத்ததுக்கப்பறம் தான் அதெல்லாம் ஞாபகம் வந்துச்சு.”ன்னவள், நடந்த எல்லாத்தையும் அவ கிட்ட சொன்னா.

“ஆமா எங்க தாத்தாவுக்கு மதுரை தான் சொந்த ஊரு.‌”ன்னு சொன்ன சௌபர்ணிகா ஏதோ ஞாபகம் வந்தவளா “எனக்கு இப்ப தான் புரியுது. விஷ்வா சின்ன வயசுலயே உன்னப் பாத்து உனக்குக் கூட நல்லாப் பேசிப் பழகிருக்கான். அதான் இத்தனை வருஷமாகியும் உனக்குக் கூட அவனால நார்மலா பழக முடியலை.”ன்னு உற்சாகமான குரல்ல சொல்ல, “நானும் அப்படித் தான் மேடம் நினைச்சேன்.”ன்னா மேகா. 

“ம்ம்.. அதெல்லாம் இருக்கட்டும். முதல்ல என்ன மேடம்ன்னு கூப்பிடறத நிறுத்து.”ன்னு சௌபர்ணிகா செல்ல, “அப்புறம் நான் உங்கள வேற எப்படி கூப்பிடுறது..??”ன்னு கேட்டா மேகா.

“நான் உன் கணவரோட அக்கா. சோ நீ என்ன அண்ணின்னு கூப்பிடலாம். இல்லன்னா அக்கான்னு கூட கூப்பிடு no problem.”னு சௌபர்ணிகா சொல்ல, “எனக்கு ஏற்கனவே அண்ணி இருக்காங்க. பட் அக்கா தான் இல்ல. சோ இனிமே நான் உங்கள அக்கான்னு கூப்பிடுறேன்.”ன்னா மேகா.

“எனக்கு எங்க தாத்தா பாட்டி வாழ்ந்த இடத்த சுத்திப் பார்க்கணும்னு ஆசையா இருக்கு. கூட்டிட்டுப் போறியா..??”ன்னு சௌபர்ணிகா கேட்டதால, அவளக் கூட்டிட்டு ‌வெளியில கிளம்புனா மேகா.

ராமலிங்க தேவரோட சொத்துக்கள் எல்லாத்தையும் வந்த விலைக்கு விஷ்வாவின் அப்பா வாசுதேவன் முனியாண்டி கிட்ட தான் வித்துட்டு போயிருந்தார். இப்போ முனியாண்டியோட குடும்பத்த ‌ ஊரை விட்டு ஒதுக்கி வெச்சுட்டதால, அவங்க தங்களோட பொருளையெல்லாம் எடுத்துக்கிட்டு பக்கத்து ஊருக்கு தஞ்சம் போயிருந்தாங்க. 

இந்த நிலைமையில, யாரும் இல்லாத முனியாண்டியோட மாளிகை வீடு பூட்டப்பட்டு கிடந்துச்சு. அந்த வீட்டின் முன்னால போய் கார நிறுத்தின மேகா, “இங்கதான் உங்க தாத்தாவும், பாட்டியும் இருந்தாங்கன்னு எங்க அண்ணா சொன்னாரு. நீங்க வெயிட் பண்ணுங்க. பக்கத்துல இருக்கற ஊர் பெரியவர் வீட்லதான் சாவி இருக்கும். நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்லி நான் போய் வாங்கிட்டு வரேன்.”ன்னவள் கார்ல இருந்து கீழ இறங்கிப் போயிட்டா.

அந்த வீட்டப் பாத்தவுடனேயே சௌபர்ணிகாவுக்கு தன்னோட தாத்தா பாட்டியோட அங்க தங்கி இருந்த ஞாபகங்கள் எல்லாம் வந்துட்டுப் போக, காரவிட்டு கீழ இறங்கி அந்த வீட்ட ஏக்கமான கண்ணோட பாத்தா. 

“அப்பா இந்த வீட்ட விற்காம இருந்திருந்தா, இன்னைக்கு யாரோ மாதிரி வந்து இப்படி நான் வாசல்ல நிக்க வேண்டிய நிலைமை வந்திருக்காது.”ன்னு அவ நெனச்சுக்கிட்டு இருக்க, அப்போ அவளுக்கு அவளோட தனிப்பட்ட உதவியாளர் நேத்ரா கிட்ட இருந்து கால் வந்துச்சு.

அத அட்டெண்ட் செஞ்சு பேசியபடி சாலையோரம் போய் நின்னா சௌபர்ணிகா. ஒரு வேலைக்காக மதுரை உயர்நீதிமன்றம் வரைக்கும் போயிருந்த ‌ முத்துவிற்கு கால் செஞ்ச காளீஸ்வரன் “டேய்.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துட்டாங்க. மேகாவுக்கு கல்யாணம் பேசி முடிவு பண்ணி தேதி குறிச்சாச்சு. கல்யாண வீட்ல வாசல்ல வாழை மரம் கட்டாம இருந்தா நல்லா இருக்காது. நீ வரும்போது நம்ம தோட்டத்தில இருந்து வெட்டிட்டு வந்து போடு.”ன்னு சொல்லி இருந்ததால ‌ தன்னோட பைக்ல வாழை மரத்த வெச்சுக் கட்டி எடுத்துக்கிட்டு வந்துக்கிட்டு இருந்தான் மாரிமுத்து.

எதிர்பக்கத்த பாத்தபடி மும்மரமா ஃபோன்ல பேசிட்டிருந்த சௌபர்ணிகா முத்து பைக்ல தன்ன நோக்கி வரதையோ, அவன் ஹாரன் அடிச்சதையோ கூட கவனிக்கலை. அதனால ‌“யார் இந்த பொண்ணு.. இத்தனை தடவை ஹாரன் அடிச்சும் கவனிக்காம அவ பாட்டுக்கு ஃபோன்ல பேசிட்டிருக்கா..!!”ன்னு நெனச்சு கடுப்பானவன் அவ மேல மோதாம போறதுக்கு பைக்க ஸ்லோ செஞ்சு சிரமப்பட்டு போயிட்டு இருந்தான். 

அப்போ அவனோட பைக்குக்கு பின்னால கட்டப்பட்டிருந்த வாழைமரம் சௌபர்ணிகாவோட மேல லேசா மோதிட, அவளோட புதிய டிசைனர் புடவையில கரை பட்டுடுச்சு.

கோபப்பட்ட சௌபர்ணிகா “I will call you back.”ன்னு சொல்லிட்டு அந்த கால கட் பண்ணிட்டு, முத்துவை எரிச்சு விடுற மாதிரிப் பாத்து “படிக்காத முட்டாளே.. அறிவில்லையா உனக்கு..?? இப்படித்தான்  வாழை மரத்தக் கொண்டு வந்து‌ மேல இடிப்பியா ..?? இந்த ரோடுல எவ்ளோ இடம் இருக்கு.. அந்தப் பக்கமாப் போய் தொலைஞ்சுட வேண்டியதுதானே..!! இது என்னோட ரொம்பப் புடிச்ச புடவை. உன்னால இப்போ கெட்டுப் போயிடுச்சு. பைக்ல ஹாரன் எல்லாம் இருக்குல்ல… அத யூஸ் பண்ணத் தெரியாதா உனக்கு..??”ன்னு சரமாரியா அவன திட்டிக்கிட்டே இருந்தா.

அவ சிம்பிளா நீலமும் வெள்ளையும் கலந்த அழகான ஃபேன்ஸி டிசைனர் புடவை கட்டியிருக்க, அவளோட நீளமான முடி ஹை போனிடைல்க்குள்ள கட்டுண்டு கிடந்துச்சு. 

அவளே நல்ல பால் நிறத்துல இருந்ததால, “நமக்கு எதுக்கு எக்ஸ்ட்ரா மேக்கப்..??”ன்னு நெனச்சு அவ லேசான ஒப்பனை செஞ்சிருப்பா போல. மொத்தத்துல அந்த எளிமையான தோற்றத்திலயும் முத்துவோட கண்ணுக்கு அவ பேரழகியாவே தெரிய, அவ தன்னப் பாத்து வண்டை வண்டையா திட்டறதைக்கூட ஏதோ அவ தனக்குப் பாராட்டு பத்திரம் வாசிப்பதா நெனச்சு சந்தோஷமா வெக்கமில்லாம சிரிச்ச முகமா கேட்டுக்கிட்டு இருந்தான் முத்து.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured