Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 6

மூர்கனின் காதலி CH 6

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 6

ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருந்த மீனாள் பாட்டி, தன்னை பார்க்க வந்த விஷ்வாவிடம் “நீ கல்யாணம் பண்ணிப்பேன்னு எனக்கு சத்தியம் பண்ணி கொடு,” என்று கேட்டாங்க. அதைக் கேட்டு ஆடிப்போன விஷ்வா “என்ன பாட்டி சொல்றீங்க? நான் எப்படி மேரேஜ் பண்ண முடியும்? என்ன பத்தி உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்க, “உன்னை பத்தி நல்லா தெரிஞ்சதுனாலதான் சொல்றேன் விஷ்வா. உன் வாழ்க்கையில ஒரு பொண்ணு வந்தாதான் நீ சந்தோஷமா இருப்ப. இந்தப் பாட்டி இருக்கணும்னு நினைச்சின்னா, நான் சொன்ன மாதிரி இன்னும் ஒரு மாசத்துல நீ கல்யாணம் பண்ணிட்டு வர. இல்லைன்னா நீ என்ன உயிரோட பார்க்க முடியாது, அவ்ளோதான் சொல்லிட்டேன்,” என்று உறுதியா சொன்னாங்க பாட்டி.

பாட்டியோட பதிலில் வாயடைச்சுப் போன விஷ்வா, “What the F***(Beep sound) is wrong with my bloody Life…? இருக்கிற பிரச்சினையை சால்வ் பண்ண ஐடியா சொல்லுங்கடான்னா, எந்த பொண்ணையாவது கேர்ள் ஃப்ரெண்ட்ன்னு சொல்லுங்கன்னு ஒருத்தன் சொன்னான்னு காலையில தான் அவனை அடிச்சேன். மத்தியானம் இன்னைக்குள்ள எல்லா ப்ராப்ளமையும் முடிங்கன்னு அவனுங்க எனக்கு டைம் கொடுத்துட்டுப் போறானுங்க. இப்போ இங்க வந்தா பாட்டி ஒரு மாசத்துல என்ன கல்யாணம் பண்ண சொல்றாங்க! ஆஆ… இதெல்லாம் எப்படி நடக்கும்?” என்று யோசிச்சான். அவனுக்குத் தன் தலையைப் பிய்ச்சுக்கலாம் போல இருந்துச்சு.

“பாட்டி… கரெக்டா இவரை லாக் பண்ணிட்டீங்க! பாட்டி சொன்னா கேட்டுதானே ஆகணும். இப்போ என்ன பண்ண போறீங்க பாஸ்?” என்று நினைச்ச மகேஷ் ஆர்வமா விஷ்வாவைப் பார்க்க, அவன் அமைதியா இருந்தான். அதனால “என்ன அமைதியா இருக்க விஷ்வா? நான் சொன்னா சொன்னதுதான். உன் பேச்சை நான் கேட்கணும்னா, என் பேச்சை நீ கேட்டுதான் ஆகணும். உனக்கும், சௌபர்ணிகாவுக்கும் கல்யாணம் பண்ணிப் பார்க்காம நான் சாகக் கூடாதுன்னு நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிற?” என்று திக்கித் திணறி கேட்டுட்டு இருந்த பாட்டிக்கு திடீர்னு மூச்சுத் திணறல் வந்துச்சு.

அதனால் பதறியடிச்சுட்டு எழுந்த விஷ்வா “டாக்டர்… டாக்டர்… சீக்கிரம் வாங்க!” என்று கத்த, “நான் போய் டாக்டரை கூட்டிட்டு வரேன். நீங்க பாட்டி கூட இருங்க,” என்ற மகேஷ் டாக்டரை அழைத்துட்டு வர, அவரோட கேபினை நோக்கி ஓடினான். அடுத்த இரண்டு நிமிஷத்துல டாக்டர் அங்கே வந்து மீனாள் பாட்டிக்கு ஆக்சிஜன் மாஸ்க்கை மாட்டிவிட ட்ரை பண்ணினார். ஆனா தன் முகத்தை இடவலமா அசைச்சு வேண்டாம் என்ற மீனாள் பாட்டி விஷ்வாவை நோக்கி தன் கையை நீட்டி “சத்யம் பண்ணு,” என்று முடியாத அந்த நிலையிலும் உடைந்த குரலில் கேட்டாங்க.

“பாருங்க சார்… இன்னைக்கு மார்னிங்ல இருந்து இவங்க இப்படித்தான் பண்றாங்க! இவங்களோட கண்டிஷன் ரொம்ப க்ரிட்டிகலா இருக்கு. இப்போ ஆக்சிஜன் சப்ளை கொடுக்கலைன்னா இவங்களுக்கு என்ன வேணாலும் ஆகலாம். அவங்கதான் உங்ககிட்ட ஏதோ ப்ராமிஸ் கேட்கிறாங்கள்ல… சீக்கிரம் பண்ணிக் கொடுங்க சார். நீங்க இப்படி சைலன்ட்டா இருக்கிற ஒவ்வொரு செகண்ட்டும் உங்க பாட்டி செத்துட்டு இருக்காங்க,” என்று டாக்டர் விஷ்வாவை அவசரப்படுத்த, ஒரு வேகத்துல சென்று பாட்டியோட கையை இறுக்கமா பிடிச்சுக்கிட்ட விஷ்வா “ஓகே பாட்டி. நீங்க சொன்ன மாதிரி இன்னும் ஒரு மாசத்துல நான் கண்டிப்பா மேரேஜ் பண்ணிக்கிறேன். அதை இருந்து நீங்க பார்க்கணும். ட்ரீட்மென்ட் வேண்டாம்னு சொல்லாதீங்க ப்ளீஸ்!” என்று கண்ணீருடன் கெஞ்சினான்.

அதனால் லேசா சிரிச்ச பாட்டி விஷ்வாவோட தலையில் கை வச்சு “நீ நல்லா இருக்கணும்பா விஷ்வா. கண்டிப்பா நீ நல்லா இருப்ப,” என்று சொல்ல, பாட்டியோட முகத்துல ஆக்ஸிஜன் மாஸ்க்கைப் பொருத்திய டாக்டர் அவருக்கு டிரீட்மென்ட் கொடுக்க ஆரம்பிச்சுட்டார். அதை பார்த்தபடி விஷ்வா மனமுடைந்து ஓரமாக அங்கேயே இருக்க, “டாக்டர் ட்ரீட்மென்ட் ஸ்டார்ட் பண்ண நர்ஸ் உள்ள வரணும். வாங்க பாஸ் நம்ம வெளிய போய் வெயிட் பண்ணலாம்,” என்ற மகேஷ் விஷ்வாவை அழைச்சுட்டு வெளியில் சென்று விட்டான்.

டாக்டர் வருவதற்காக விஷ்வாவும் மகேஷும் வெளியில் காத்திருந்தாங்க. பாட்டியோட உடல்நிலை சீரானதும் வெளியில் வந்த டாக்டரிடம் வேகமா சென்று “டாக்டர் பாட்டி இப்ப எப்படி இருக்காங்க?” என்று விஷ்வா கேட்க, “She is fine now. But unfortunately இப்போதைக்கு அவங்க நல்லா இருக்காங்கன்னு மட்டும்தான் என்னால சொல்ல முடியும்,” என்ற டாக்டர். அதனால் வாடிய முகத்துடன் பேசக்கூட முடியாம விஷ்வா டாக்டரைப் பார்க்க, “பாட்டியோட கண்டிஷன் இப்போ எப்படி இருக்கு டாக்டர்? அவங்களுக்கு எதுவும் ஆகாதுதானே?” என்று கேட்டான் மகேஷ்.

“அவங்க ஆல்ரெடி ஒரு ஹார்ட் பேஷண்ட். அவங்க ஹார்ட் வீக்கா இருக்கு. ஒரு பக்கம் நாங்க அதுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்துட்டு இருக்கும்போது, அவங்களுக்கு இருக்கிற blood கேன்சர் அவங்க body conditionஐ இன்னும் worst ஆக்கிட்டே போகுது. எங்க சைடுல இருந்து என்ன பண்ண முடியுமோ அதெல்லாம் நாங்க பண்ணிட்டுதான் இருக்கோம். ட்ரீட்மென்ட் கரெக்டா கொடுத்தா, அவங்க வாழ்நாளை நம்மளால expand பண்ண முடியும். அதுக்கு அவங்களோட Cooperationம், எப்பவும் அவங்கள சந்தோஷமாவும் நிம்மதியாகவும் வச்சுக்கிறதுக்கு உங்களோட Cooperationம் ரொம்ப முக்கியம்,” என்று டாக்டர் உறுதியாகவும் தெளிவாகவும் சொன்னார்.

புரிஞ்சுது என்பதைப்போல தலையசைச்ச விஷ்வா “எனக்குன்னு இருக்கிறது எங்க பாட்டி மட்டும்தான். அவங்களுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் டாக்டர். இனிமே அவங்களை ஹேப்பியா வச்சுக்க வேண்டியது என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி,” என்றவன் சிறிது நேரம் டாக்டருடன் பேசிவிட்டு மகேஷ் உடன் அங்கிருந்து கிளம்பினான். கார் ஓட்டிக்கொண்டிருந்த மகேஷ், “இப்போ எங்க போய் பாஸ் பொண்ணு தேடுறது? மேட்ரிமோனியில போட்டுப் பார்க்கலாமா? இல்ல யாராவது marriage brokerஐ கூப்பிட்டு பேசிப் பார்க்கலாமா?” என்று கேட்க, “எனக்கு இந்த மேரேஜ்ல நிறைய Terms and conditions இருக்கு. நான் அதை பத்தி எல்லாம் கிளியரா யோசிச்சுட்டு அப்புறமா தான் பொண்ணு பார்க்கிறதப் பத்தி எல்லாம் கன்சிடர் பண்ணனும். இப்போதைக்கு மீடியாவை ஆஃப் பண்ணனும். அதுக்கு என்ன பண்றதுன்னு பார்க்கலாம்,” என்றான் விஷ்வா.

“ஓகே சார்… இப்போ என்ன, நம்ப அகைன் ஆபீஸ்க்கு போவோமா? இல்ல டைரக்டா வீட்டுக்கே போயிடலாமா?” என்று மகேஷ் கார் ஓட்டியபடி கேட்க, “காரை ஓரமா ஸ்டாப் பண்ணு சொல்றேன்,” என்று விஷ்வா சொன்னதால் காரை ஓரம் கட்டினான் அவன். “கீழ இறங்கு,” என்று விஷ்வா சொல்ல, “பாஸ்!” என்று புரியாம கேட்ட மகேஷிடம் “இறங்குடா,” என்று அழுத்திச் சொன்னான் அவன். வேற வழியில்லாம மகேஷ் காரைவிட்டு கீழே இறங்கிட, டிரைவர் சீட்டிற்கு ஷிஃப்ட் ஆன விஷ்வா, “எனக்குத் தனியா இருக்கணும். நீ வீட்டுக்குக் கிளம்பு,” என்றான்.

“என்ன தனியா போறேன்னு சொல்றாரு… நேத்து நடந்த மாதிரி இன்னைக்கும் ஏதாவது நடந்துட்டா என்ன பண்றது? டெய்லியும் ஒரு டெட்பாடிய பார்சல் பண்ணி எல்லாம் என்னால மறைக்க முடியாது,” என்று நினைச்ச மகேஷ் தயக்கத்துடன் “பாஸ் நீங்க தனியா போறது ரிஸ்க். சோ வேண்டாமே!” என்று இழுக்க, “I can take care of myself. நேத்து மாதிரி இன்னைக்கு எதுவும் நடக்காது,” என்ற விஷ்வா அவனோட பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வேகமா காரை ஸ்டார்ட் செய்து சென்று விட்டான்.

“இவர் என்னைக்கி நம்ம சொல்றதை கேட்டுருக்காரு!” என்று நினைச்ச மகேஷ் விஷ்வாவுக்கே தெரியாம அவனை ஆட்டோவில் follow செய்து கொண்டு சென்றான். நேராக ஒரு செவன் ஸ்டார் ஹோட்டலுக்குச் சென்ற விஷ்வா அங்கே வழக்கமா தான் தங்கும் ரூம்ல தங்கினான். “நல்லவேளை இவர் வெளியே எங்கேயும் சுத்தாம ஹோட்டல் ரூம்ல வந்து செட்டில் ஆயிட்டாரு,” என்று நினைச்ச மகேஷ் விஷ்வாவோட அறைக்கு அருகிலுள்ள அறையை புக் செய்து அவனுக்காக அங்கே தங்கிட்டான்.

தனது அறைக்குள் நுழைஞ்ச விஷ்வா வேகமா அவன் அணிஞ்சிருந்த coatஐ கழட்டி கீழே போட்டுட்டு, அவனோட favourite brand beerஐ ஆர்டர் செய்துட்டு சலிப்புடன் சென்று சோஃபாவில் அமர்ந்தான். அவனோட வாழ்க்கையைப் பற்றி நினைச்சா அவனுக்கே வெறுப்பா இருந்துச்சு. சில நிமிஷத்துல அவன் ஆர்டர் செய்த பீர் அங்கே வந்து சேர, வேகமா பாட்டிலை திறந்து அதைத் தன் வாயில ஊத்தவிருந்த விஷ்வாவுக்கு நேற்று நடந்த அனைத்தும் ஞாபகம் வந்துச்சு.

அதனால் “முன்னாடிலாம் நான் தூங்கினாதான் அந்த மாதிரி கனவு வரும். அவன் என்கிட்ட பேசுற மாதிரி கேட்கும். ஆனா நான் நேத்து போதையில இருந்ததுனாலதான் நான் நார்மலா இருந்தப்பவே அப்படி கேட்டிருக்கும் போல!” என்று நினைச்ச விஷ்வா குடிக்காமல் அந்த பீர் பாட்டிலை அப்படியே தூக்கி வீச, டமார் என்ற சத்தத்துடன் அந்தக் கண்ணாடி பாட்டில் உடைந்து அதிலிருந்த பீர் தரையில ஊத்துச்சு. பின் சோஃபாவில் கால் நீட்டி படுத்துக்கொண்டு ceilingஐ வெறிச்சுப் பார்த்தவனுக்கு ஒரே feeling ஆக இருக்க, தனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதை போல உணர்ந்தான் விஷ்வா.

அப்போ “டேய் விஷ்வா! நான் சொன்னது உனக்கு ஞாபகம் இருக்காடா? யார் சொன்னாலும் சரி. நீ எந்த பொண்ணையும் உன் லைஃப்க்குள்ள வர விட்டுறாத. எந்த பொண்ணையும் நம்பாதடா,” என்று யாரோ சொல்வதைப் போல மீண்டும் அவனோட மண்டைக்குள்ள ஒலிக்க, தன் காதுகளை இறுக்கமா மூடிக்கிட்ட விஷ்வா வேகமா எழுந்து நின்னு “டேய் போதும் வாயை மூடுடா. இப்படியே எதையாவது சொல்லி சொல்லி என்ன சைக்கோ ஆக்கிடாத. நான் எனக்கு என்ன தோணுதோ அதைத்தான் பண்ணுவேன். ஒழுங்கா இங்கிருந்து போயிடு!” என்று சத்தமா கத்தினான்.

சில நொடிகளுக்குப் பின் அவன் தன்னோட காதுகளில் இருந்து கையை எடுக்கும்போது, அந்தக் குரல் அவனுக்குக் கேட்கலை. பெருமூச்சு விட்ட விஷ்வா “இதை இப்படியே விட்டா சரிப்பட்டு வராது” என்று நினைச்சு சைக்காட்ரிஸ்ட் பிரவீனுக்குக் கால் செய்து தனக்கு வரும் கனவு பற்றியும், கேட்கும் மர்ம குரல் பற்றியும் அவனிடம் சொன்னான். அனைத்தையும் பொறுமையா கேட்ட டாக்டர் பிரவீன், “நான் உங்க கூட ரொம்ப நாளா ட்ராவல் பண்ணிட்டு இருக்கேன் விஷ்வா. But still என்கிட்டையே நீங்க நிறைய விஷயத்தை மறைக்கிறீங்க. இது ஒரு psychological problem. நீங்க உங்களோட Personal life அண்ட் நீங்க ஏதாவது childhood trauma face பண்ணிருந்தீங்கன்னா அத பத்தி எல்லாம் நீங்க கிளியரா சொன்னாதான் என்னால உங்களுக்கு டிரீட்மென்ட் கொடுக்க முடியும்,” என்றான்.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured