Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 58

மூர்கனின் காதலி CH 58

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 58

கண் விழிச்ச விஷ்வாவின் கைகள் ஆட்டோமேட்டிக்கா தன் பக்கத்துல இருந்த மேகாவத் தேட, அங்க அவ இல்லாததுனால எழுந்து ஃப்ரெஷ் ஆகிட்டு வெளியில போனான். அவன் தன்னோட ரூம்க்கு வெளியில இருந்த பால்கனி வழியா கீழே பார்க்க, அவனுக்கு முன்னாடியே எழுந்து குளிச்சு கிளம்பி இருந்த மேகா காளீஸ்வரன் கிட்ட நின்னு ஏதோ சீரியஸா பேசிக்கிட்டு இருந்தா. அவ இன்னைக்கு சாதாரணமான பேபி பிங்க் கலர் சுடிதார் போட்டு தன்னோட கூந்தலை பின்னி இருந்தா.

“எப்புடி இவ மட்டும் எந்த டிரஸ் போட்டாலும் அழகா இருக்கா?”ன்னு நெனச்ச விஷ்வா அப்படியே அவளை சைட் அடிச்சிக்கிட்டு இருந்தான்.

அதை கவனிச்ச காளீஸ்வரன் “அங்க பாரு.. மாப்பிள்ளை மேல நின்னு உன்னத்தான் பாத்துட்டு இருக்காரு. அவர் கிட்ட நீ எதுவும் சொல்லலையா? இன்னும் குளிச்சு கிளம்பாமயே இருக்காரு..!!”ன்னு கேட்க, “இல்லீங்க அண்ணா. அவர் தூங்கிக்கிட்டு இருந்தாரு. அதான் சொல்லல. நீங்க போங்க.. நான் அவர்கிட்ட போய் பேசிட்டு வர்றேன்.”ன்னு மேகா அரண்மனைக்குள்ள போகப் போக, அந்த அரண்மனை வாசல்ல ஒரு கார் வந்து நின்னுச்சு. 

அதனால அவ அப்படியே நின்னு வாசலைப் பார்க்க, “அவங்க வந்துட்டாங்க போல..!!”ன்னு நெனச்ச காளீஸ்வரனும் ஆவலாக அந்தக் காரைப் பார்த்தார்.

அந்த காருக்குள்ள இருந்து இறங்கின சௌபர்ணிகா மேகா கிட்ட ஏதோ பேசிட்டு காளீஸ்வரனுக்கு வணக்கம் வெச்சா. சின்ன பொண்ணா இருந்தாலும் அவ சம்மந்தி வீட்டிலிருந்து வந்திருக்கறதால தானும் கை கூப்பி மரியாதையோட அவளை வரவேத்தாரு காளீஸ்வரன். சௌபர்ணிகா அப்படியே அவளோட அம்மாவை ஜெராக்ஸ் காப்பி போட்ட மாதிரி இருப்பா. அதனாலதான் அவ தன்னோட சொந்த அக்காவா இருந்தாலும், இத்தனை வருஷமா அவளைத் தவிர்த்துக்கிட்டு இருந்தான் விஷ்வா. 

இப்போ அவளா வந்து தன் முன்னாடி நிக்கிறதால, தன்னோட அம்மாவுடனான அவனுடைய மோசமான கடந்த கால நினைவுகள் எல்லாம் இப்போ விஷ்வாவிற்கு ஞாபகம் வந்து அவனை டிஸ்டர்ப் பண்ணுச்சு.

அதனால விஷ்வா வின்..வின்…ன்னு வலிக்க ஆரம்பிச்ச தன்னோட தலையைப் பிடிச்சுக்க, “என்ன விஷ்வா நடந்ததை எல்லாம் இவ்ளோ சீக்கிரம் மறந்துட்டியா நீ..?? எப்புடி உன்னால இப்படி சாதாரணமா மேரேஜ்க்கு ரெடி ஆக முடியுது..?? நீ என்னையும் மறந்துட்ட.. நான் சொன்னதையும் மறந்துட்ட.. அப்படித்தானே..!!”ன்னு ஒரு இளைஞனோட மர்மக் குரல் அவன் மண்டைக்குள்ள எதிரொலிச்சுது. 

“இல்லi.. நான் எதையும் மறக்கல. என்னால எப்படிடா உன்ன மறக்க முடியும்..??”ன்னு விஷ்வா தன் கண்ணை மூடிட்டு சத்தமாகக் கத்தி கேட்க, மூடி இருந்த அவன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்துச்சு.

விஷ்வாவின் சத்தம் கேட்டு அங்க ஓடிப் போன அவனோட ஆட்கள் “பாஸ் திடீர்னு உங்களுக்கு என்ன பாஸ் ஆச்சு..??”ன்னு அவன் கிட்ட கேட்க, “டேய் நான் உன்னை மறக்கலடா..!! ப்ளீஸ் அதையே திரும்பத் திரும்ப சொல்லி என்ன ஹர்ட் பண்ணாத.”ன்னு தன் காதைப் பொத்திக்கிட்டு தொடர்ந்து கத்தின விஷ்வா தன் முன்னாடி யார் இருக்காங்க, அவங்க தன்னாட்ட என்ன பேசுறாங்கன்னெல்லாம் பாக்குற நிலைமையில இல்லை.

சௌபர்ணிகாவைப் பார்த்ததால அவனுக்கு அவனோட அம்மாவோட ஞாபகங்கள் வேற வந்துட, “அம்மா.. ப்ளீஸ் எங்கள அடிக்காதீங்க..!! டேய் விஜய்.. வேணாம்டா. அம்மாவ கோவப்படுற மாதிரி எதுவும் பண்ணாத. அம்மா எங்கள விட்டுருங்க அம்மா..!! ரொம்ப வலிக்குதும்மா..!! ஆஆஆ‌… அம்மா..!!”ன்னு அவன் அந்நியன் போல நொடிக்கு நொடி சில சமயங்கள்ல தன்னோட அம்மா கிட்ட, சில சமயங்கள்ல அந்த மர்மக் குரல்கிட்டன்னு மாறி மாறி பேசிக்கிட்டு இருந்தான்.

“அய்யய்யோ என்ன இவரு வந்த இடத்துல இப்டி பிஹேவ் பண்ணிட்டு இருக்காரு..!! இதை யாராவது பார்த்தா பெரிய பிரச்சினையாகிடுமே..!!”ன்னு நெனச்ச மகேஷ் வேகமா அவன் பக்கத்துல போய் “பாஸ் நீங்க நினைச்சு பயப்படுற மாதிரி அவங்க யாரும் இங்க இல்ல. ப்ளீஸ் நார்மலா இருக்க ட்ரை பண்ணுங்க. வாங்க நம்ம உங்க ரூம்க்கு போலாம்.”ன்னு சொல்லி விஷ்வாவின் கையப் ‌ பிடிச்சு இழுத்தான்.

அப்போதும் தன் அம்மாதான் தன்னை தொடுவதா நெனச்சு பயந்த விஷ்வா தன் கண்ணை மூடி இருந்த நிலையில அப்படியே “அம்மா என்ன தொடாதீங்க. என்கிட்ட வராதீங்க. என்ன விட்டுருங்கமா ப்ளீஸ்..!! இனிமே உங்களுக்குப் பிடிக்காத மாதிரி நான் எதுவுமே பண்ண மாட்டேன். I am so sorry..!!”ன்னு ‌ சத்தமாகக் கத்தினான்.

அவன் பால்கனியில நின்னுக்கிட்டு அங்குமிங்கும் கண்ணை மூடியவாறு வேகமா நகர்ந்துக்கிட்டு இருந்ததால, “இவருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன பண்றது…??”ங்கிற பயத்துல அவனோட ஆட்கள் அவனைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்க, அங்க சில நொடியில விஷ்வால குட்டி கலவரமே நடக்க ஆரம்பிச்சுச்சு. கீழே நின்னுக்கிட்டு இருந்தவங்களுக்கு மேல இருந்து வந்த சத்தங்கள் அரைகுறையா கேக்க, ‌ எல்லாரும் அரண்மனையை அண்ணாந்து பார்த்தாங்க.

தன் தலையைப் பிடிச்சுக்கிட்டு விஷ்வா பைத்தியம் பிடிச்சவனை போல எதையோ சொல்லி புலம்பியபடி அங்கும் இங்கும் ஓடிக்கிட்டு இருந்ததை கீழே நின்ன எல்லாராலயும் பார்க்க முடிஞ்சுது. சம்மந்தி வீட்டிலிருந்து கல்யாணம் சம்பந்தமா பேச வர்றாங்கன்னு கேள்விப்பட்ட உடனேயே மேகாவோட சொந்த பந்தங்கள் எல்லாம் சௌபர்ணிகாவை வரவேற்பதற்காக வந்து வாசல்ல குவிஞ்சிருந்தாங்க. இப்போ அவங்க எல்லாரும் அந்தக் காட்சியப் பார்த்து ஷாக் ஆகி நின்னாங்க. 

“அட கடவுளே நம்ம மாப்பிள்ளைக்கு என்னமோ ஆயிடுச்சு..!! வாங்க எல்லாரும் போய் என்னன்னு பார்க்கலாம்.”ன்னு மணிகண்டன் சொல்ல, “இங்க என்னமா நடக்குது..??”ன்னு கொஞ்சம் கோவமாகவே காளீஸ்வரன் மேகா கிட்ட கேட்டாரு.

“ஃபக்.. இவரு கண்ணுல கடைசி வரைக்கும் அவங்க அக்காவைக் காட்டாமயே எப்படியாவது ஊருக்கு அனுப்பிச்சிடலாம்னு நெனச்சேன். இப்ப எல்லாமே கை மீறி போயிடுச்சே..!!”ன்னு நெனச்சு பதறின மேகா, “ஒன்னு இல்ல அண்ணா. அவர் சும்மா போர் அடிக்குதுன்னு அவர் ஃப்ரெண்ட்ஸ்கூட சேர்ந்து விளையாடிட்டு இருக்கிறாருன்னு நெனக்கிறேன்.”ன்னு சொல்லி சமாளிக்கப் பார்த்தா. 

விஷ்வாவின் செயல்கள் அவன் நிதானத்திலேயே இல்லாதவனைப் போல இருந்ததால, “பார்த்தா.. அப்படி ஒன்னும் தெரியலையே..!!”ன்னு காளீஸ்வரன் சொல்லிக்கிட்டு இருக்கும் போதே.. தன் கண்ணையும், காதுகளையும் மூடிய நிலையில இருந்த விஷ்வா அங்குமிங்கும் ஓடி கீழே விழப் போனான்.

அதனால பயந்து போய் சௌபர்ணிகாவும், மேகாவும் ஒரு சேர “விஷ்வா..!!”ன்னு கத்திக்கிட்டு ‌ வேகமா படிகள்ல ஏறி மேல ஓட, “அய்யோ மாப்பிளைக்கு என்னாச்சுன்னு தெரியலையே..!! அவர் ஏன் இப்படி எல்லாம் சின்ன பிள்ளைங்க மாதிரி வினோதமா பண்ணிட்டு இருக்காரு..?? நல்லா இருந்த மனுஷனுக்கு திடீர்னு என்ன ஆச்சு..??”ன்னு தங்களுக்குள்ள பேசினபடி மேகாவோட சொந்த பந்தங்களும், காளீஸ்வரனும் விஷ்வாவை காண மேலே ஓடினாங்க. விஷ்வா கீழே விழுறதுக்குள்ள, வலுக்கட்டாயமா அவனோட ஆட்கள் அவனைச் சூழ்ந்துகிட்டு அவனைப் பிடிச்சு இந்த பக்கமா இழுத்து வந்து அவனை அவனோட அறைக்குள்ள தள்ளி கதவைச் சாத்த ட்ரை பண்ணிக்கிட்டு இருந்தாங்க.

விஷ்வாவும், விஜயும் சின்னப் பசங்களா இருந்தபோது அவங்க ஏதாவது தப்பு செஞ்சா உடனே அவங்களோட அம்மா சகுந்தலா அவங்களுக்கு பனிஷ்மென்ட் குடுக்கிறேன்னு பேர்ல இதே மாதிரிதான் பலமுறை அவங்களை அந்த சின்ன வயசுலயே இருட்டு அறைக்குள்ள தள்ளி சாப்பாடு கூட குடுக்காம பல நாட்கள் கொடுமை செஞ்சிருக்கா.

இப்போ அந்த தருணங்கள் எல்லாம் விஷ்வாவின் கண் முன்னாடி வந்து போக, இப்போதும் தன்னை அந்த சின்னப் பையனாவே உணர்ந்த விஷ்வா தான் யாரு எந்த நிலையில இருக்கோம்னெல்லாம் மறந்துட்டு, “அம்மா ப்ளீஸ்மா எங்கள டார்க் ரூம்ல போடாதீங்க. இங்க ரொம்ப பயமா இருக்கு. ‌ டேய் விஜய் நீ எங்கடா இருக்க..??? விஜய்..‌ விஜய்…!!”ன்னு கண்ணை மூடிய நிலையில தன் கைகளை நீட்டி தேடினவன், தன்னைப் பிடிக்க வந்த‌ தன்னோட ஆட்களை தன் அம்மான்னு நெனச்சு பயந்து “என்ன விடுங்க..!! என்ன விடுங்க.. நான் மறுபடியும் அந்த டார்க் ரூம்குள்ள போக மாட்டேன்..!!”ன்னு சொல்லி பயத்துல எல்லாரையும் பிடிச்சுத் தள்ளினான்.

இதையெல்லாம் பார்த்து மேகாவும் அவளோட சொந்த பந்தங்களும் வாயடைச்சுப் போய் நின்னுட, “கடவுளே.. உனக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா..!! இன்னும் எத்தனை வருஷம்தான் என் தம்பி இந்த கொடுமையை எல்லாம் அனுபவிச்சுட்டு இருக்கணும்..!! இப்பதான் எல்லாம் கரெக்டா போயிட்டு இருந்துச்சு. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டியே..!!”ன்னு நெனச்சு மனசு உடைஞ்ச சௌபர்ணிகா தொடர்ந்து அவனைப் பார்த்து “டேய் பயப்படாதடா விஷ்வா. உனக்கு எதுவும் இல்லை.”ன்னு சொன்னா.

அவ குரல் இன்னும் அவனுக்கு அவனோட அம்மாவோட ஞாபகங்களை அதிகப்படுத்திக்கிட்டே இருந்ததால, தன் அம்மா தன் முன்னாடி நிக்கிறதாவே நம்பின விஷ்வா இன்னும் பயந்து நடுங்கினான்.

அவனோட உடம்பு வேர்வையில நனைஞ்சிருக்க, அவனோட கை கால்கள் ஷிவர் ஆகிக்கிட்டு ‌ இருந்ததை ‌ எல்லாராலயும் பார்க்க முடிஞ்சுது. 

“போச்சு.. நடந்ததை எல்லாரும் பார்த்துட்டாங்க. இதுக்கு மேல இந்த மேரேஜ் எப்படி நடக்கும்..?? அட்லீஸ்ட் சிச்சுவேஷன் இன்னும் வோர்ஸ்ட் ஆகாமயாவது பார்த்துக்கணும்.”ன்னு நெனச்ச மகேஷ் தயாளன் மற்றும் அரவிந்தின் உதவியோட விஷ்வாவைக் குண்டுகட்டாக தூக்கிக்கிட்டு போய் அவனோட அறையில இருந்த பெட்ல படுக்க வெச்சுட்டு வெளியில வந்து டோர்ஐ லாக் பண்ணாங்க.

“அவ்ளோ பெரிய பணக்காரன்.. நம்ம வீட்டு பொண்ணை எதுக்கு காதலிக்கணும்? கல்யாணம் பண்ணிக்கணும்னு.. நானும் இந்த விஷயம் தெரிஞ்சதுல இருந்து யோசிச்சுட்டுத்தான் இருந்தேன். சரி பரவால்ல நம்ம வீட்டுப் புள்ள மனசு தெரிஞ்சு.. இந்த மாதிரி ஒரு பொண்ணு எங்கயும் கிடைக்காதுன்னு நெனச்சு இவரு நம்ம மேகா மேல ‌ ஆசைப்பட்டிருப்பாருன்னு நெனச்சேன். ஆனா இப்ப தான் தெரியுது.. இந்த பைத்தியக்காரனை வேற எவளும் கட்டிக்க மாட்டான்னு எத எதையோ சொல்லி நம்ம பிள்ளையைப் பேசி இவன் மயக்கிட்டான் அண்ணே..!! நம்மளும் இளிச்சவாய் மாதிரி நம்ம புள்ளைய பூ மாதிரி வளர்த்து இப்படி ஒரு குரங்கு கைல புடிச்சுக் குடுக்க நெனச்சுட்டோமே..!!”ன்னு சத்தமாகவும், கோபமாகவும் மணிகண்டன் காளீஸ்வரன் கிட்ட சொன்னான்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured