Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 57

மூர்கனின் காதலி CH 57

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் ‌57 

முத்துவோட உதவியோட விஷ்வா பக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில மேகாவ சேத்தான். அந்த சின்ன ஆஸ்பத்திரி ஃபுல்லா மேகாவோட சொந்தக்காரங்களால நெறஞ்சு போயிருந்துச்சு.

மேகாவோட கையில இருந்த காயத்துக்கு ஸ்டிட்ச் போட்ட டாக்டருங்க, ரத்தம் வெளிய போனதால அவ கொஞ்சம் வீக்கா இருந்தா. அதனால அவளுக்கு ட்ரிப்ஸ் போட்டு வெச்சிருந்தாங்க. அதனால அரை மணி நேரத்துல மேகாவுக்கு மயக்கம் தெளிஞ்சிருச்சு.

ஆஸ்பத்திரியில இருந்த கூட்டத்த சமாளிக்க முடியலைங்கிற ஒரே காரணத்துக்காக டாக்டர் அவள பத்திரமா பாத்துக்கச் சொல்லி மருந்து மாத்திரைகள எழுதி கொடுத்து டிஸ்சார்ஜ் பண்ணி அனுப்பி வெச்சிட்டாரு.

அவளோட வீட்டுக்குப் போய்ட்டு இருந்த விஷ்வா, “ஏண்டி இப்படிப் பண்ண?”னு கேக்க, “எப்படிப் பண்ணேன்!”னு கிண்டலா கேட்டா அவ. அதனால கார் ஓட்டிட்டு இருக்கும்போதே ஓரக்கண்ணால அவள விஷ்வா முறைக்க, “இப்படிப் பண்ணாம நான் வேற என்ன பண்ணனும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்க? என் கண்ணு முன்னாடியே ஒருத்தன் உங்கள கத்தியில குத்த வருவான். நான் பாத்துட்டு எப்படி சும்மா இருக்க முடியும்?”னு கேட்டா அவ.

“நீ சும்மா எனக்கு ஒரு வார்னிங் மட்டும் கொடுத்திருக்கலாம்ல.. உன்னை யாருடி கத்தியப் போய் கையில புடிக்கச் சொன்னது? டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்குல்ல.. இன்னும் கொஞ்சம் ஆழமா காயம் பட்டிருந்தா heavy injury ஆயிருக்கும்னு..!!”னு அவன் கொஞ்சம் கோபமாகவே கேக்க, “அதான் ஆகலல்ல.. ஃப்ரீயா விடுங்க. பாத்துக்கலாம்.”னா மேகா.

“உனக்கு மட்டும் எதாவது ஆகி இருந்துச்சுன்னா.. உன்னைக் காப்பாத்த வந்துதான் என் தங்கச்சிக்கு இப்படி ஆயிடுச்சுன்னு மறுபடியும் உங்க அண்ணன் அரிவாள தூக்கிட்டு என்ன வெட்ட வந்திருப்பாரு.”னு விஷ்வா கிண்டலா சொல்ல,

“அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு. எனக்கு என்னமோ பஞ்சாயத்துல முனியாண்டியையும், அவரோட குடும்பத்தையும் ஒதுக்கி வெச்சதுனால அந்த கோபத்துல அவர்தான் ஆள அனுப்பி உங்கள கொல்ல பாத்திருப்பாருன்னு தோணுது. நாளைக்கு நீங்க அண்ணா கூட போய் ஸ்டேஷன்ல ஒரு கம்ப்ளைன்ட் கொடுத்துருங்க. அண்ணாவையும் விசாரிக்க சொல்லலாம்.”னா மேகா.

“அதெல்லாம் ஒண்ணும் தேவையில்லை. என்ன போட வந்தவன் யாருன்னு நானே கண்டுபிடிக்கிறேன். உங்க அண்ணனையும் போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டாம்னு சொல்லு.”னு விஷ்வா சொல்ல,

“கம்ப்ளைன்ட் கொடுக்கலைன்னாலும் பரவால்ல. அட்லீஸ்ட் நீங்க இங்க இருக்கிற வரைக்கும் உங்களுக்கு போலீஸ் ப்ரொடக்ஷனாவது கொடுக்க சொல்லலாம்.”னா அவ. 

“அது எதுக்கு? என் ஆளுங்கள விட அவங்க எனக்கு பெட்டர் ப்ரொடக்ஷன் கொடுக்கப் போறாங்களா? அவங்க துப்பாக்கியை எடுத்து சுடணும்னா அவங்களுக்கு பர்மிஷன் வேணும். பட் எங்களுக்கு அப்படி இல்ல.”னு விஷ்வா சொல்ல, “இவர் நம்ம என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரு”னு நெனச்ச மேகா அதுக்கு மேல எதுவும் சொல்லல.

மேகாவுக்கு தன்னால தான் அடிபட்டுருச்சுனு நெனச்ச விஷ்வா அவள நேர அரண்மனைக்குக் கூட்டிட்டுப் போய் தன் ரூம்ல தங்க வெச்சு, அவனே அவள கவனிச்சுக்கிறதா காளீஸ்வரன் கிட்ட சொல்லிட்டான். 

“பகல் நேரத்துல யாராவது வரப் போக இருப்பாங்க. அது ஒண்ணும் பிரச்சினை இல்லை தம்பி. ஆனா ராத்திரி நேரத்துல மட்டும் புள்ள வந்து அங்க நம்ம வீட்லயே படுத்துக்கட்டும். ஏற்கனவே தூங்குற நேரம் ஆயிடுச்சுதான். கொஞ்ச நேரம் கழிச்சு வெண்ணிலாவ இங்க அனுப்பி விடுறேன். இன்னைக்கு மட்டும் பக்கத்துல இருக்கிற ரூம்ல மேகாவும் வெண்ணிலாவும் படுத்துக்கட்டும்.”னு காளீஸ்வரன் சொல்ல, ‘சரி’ன்னான் விஷ்வா.

விஷ்வா வேற ரூமுக்கு போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்து கட்டில்ல உக்கார, “எனக்குப் பசிக்குது”ன்னா மேகா. “ஸாரி. நைட் ரொம்ப நேரம் ஆயிடுச்சுல்ல.. நீ இன்னும் சாப்பிட்டுருக்க மாட்டேன்னு நான் யோசிக்காம விட்டுட்டேன்.”னு சொன்னவன் அரவிந்த கூப்பிட்டு மேகாவுக்கு சாப்பாடு கொண்டு வரச் சொன்னான். வெண்ணிலாவ பாக்க மறுபடியும் ஒரு சான்ஸ் கிடைச்சிருச்சுன்னு நெனச்சு சந்தோஷமா போனான் அரவிந்த்.

மகேஷ் நடந்ததெல்லாம் சௌபர்ணிகா கிட்ட சொல்லியிருந்ததுனால, “நான் அவகிட்ட பேசணும். நீ வீடியோ கால்ல வா.”னு அவ சொல்ல, “ஆமா நானும் என் பேரனோட வருங்கால பொண்டாட்டிய பாக்கணும். நான் அவகிட்ட பேசணும்னு விஷ்வா கிட்ட கேட்டுட்டே இருக்கேன். அவன் எனக்கு கால் போட்டு கொடுக்க மாட்டேங்குறான்.”னு தன் பங்குக்கு பாட்டியும் சொன்னதால மகேஷ் சௌபர்ணிகாவுக்கு வீடியோ கால் பண்ணிட்டே விஷ்வா ரூமுக்கு போனான்.

“இட்லி மட்டும் தான் இருக்கு.”ன்னு சொன்ன வெண்ணிலா ஒரு தட்டுல இட்லிய வெச்சு சாம்பார ஊத்தி அரவிந்த் கிட்ட கொடுத்துட, அத வாங்கிக்கிட்டு அவனும் விஷ்வா ரூமுக்கு போனான்.

“பாஸ்! பாட்டி மேகா கிட்ட பேசணும்னு சொன்னாங்க. அவங்களும் சௌபர்ணிகா மேடமும் வீடியோ கால்ல வெயிட்டிங்.”னு மகேஷ் சொல்ல, “இங்க கொடுங்க நான் பேசுறேன்”ன மேகா அவன்கிட்ட இருந்து ஃபோனை வாங்கி பாட்டி கிட்ட பேச ஆரம்பிச்சா. அரவிந்த் கிட்ட இருந்து சாப்பாடு தட்ட வாங்கின விஷ்வா மேகாவுக்கு ஊட்டிவிட ஆரம்பிச்சான்.

“என்னமா உனக்கு கையில அடிபட்டுருச்சுன்னு மகேஷ் சொல்லிட்டு இருந்தான். என்னாச்சு?”னு பாட்டி கேக்க, “வேணாம் சொல்லாத”னு விஷ்வா சைகை பண்ண, “பெருசா ஒண்ணும் ஆகல பாட்டி. இங்க நம்ம ஊர்ல சிவராத்திரி பெருசா கொண்டாடுவோம். அன்னதானம் போட எல்லாரும் சேர்ந்து சமைச்சுட்டு இருந்தோம்ல.. அப்போ கையில கத்தி பட்டுருச்சு.”னா மேகா.

“என்னமா நீ பாத்து வேலை செய்யக்கூடாதா? எங்க கையக் காமி..!!”னு அக்கறையோட பாட்டி கேக்க, கேமராவுல கையக் காமிச்ச மேகா தொடர்ந்து பாட்டி கூட பேசிக் கிட்டே இருக்க, விஷ்வா அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டான். விஷ்வா மேகா மேல பாசம் வெச்சு அவளுக்காக இப்படி எல்லாம் மெனக்கெடறதப் பாக்க பாட்டிக்கு சந்தோஷமா இருந்துச்சு.

“மேரேஜ் டேட் நாளைக்கு ஃபிக்ஸ் பண்ணிடலாம்னு அண்ணா சொல்லிட்டு இருந்தாரு.”னு பாட்டி கிட்டயும் சௌபர்ணிகா கிட்டயும் சொன்ன மேகா, ரெண்டு பேரு கிட்டயும் கொஞ்ச நேரம் பேசிட்டு, “நான் உங்களுக்கு டெக்ஸ்ட் பண்றேன் மேடம்”னு சௌபர்ணிகா கிட்ட சொல்லிட்டு அந்த கால கட் பண்ணா. மேகா சாப்பிட்டு முடிச்சதும், விஷ்வா தன்னோட லேப்டாப்ப எடுத்து வெச்சு வேலை பாக்க ஆரம்பிச்சுட, “உங்க ஆபீஸ்ல இருந்த இஷ்யூஸ் எல்லாம் சால்வ் ஆயிடுச்சா?”னு கேட்டா மேகா.

“ம்ம்ம் எல்லாம் ஓகே தான்.. உன்னோட எக்ஸ் பாய்ஃபிரெண்ட்தான் ட்ரெண்டிங்ல இருக்கான். ரெண்டு நாளைக்கு முன்னாடி எனக்கு நடந்ததெல்லாம் இப்போ அவனுக்கு நடந்துட்டு இருக்கும்.”னு விஷ்வா உற்சாகமான குரல்ல சொல்ல, “ம்ம். நானும் பாத்தேன். ஸ்டார்டிங்ல இந்த அளவுக்கு இறங்கிப் போய் பண்ணனுமானு தோணுச்சு. அப்புறம் அவன் பண்ணதெல்லாம் நெனச்சுப் பாத்தேன். அவனுக்கு இதெல்லாம் தேவை தான். உங்களப் பத்தின ரூமர்ஸ ஸ்பிரெட் பண்ணது கூட அவனாதான் இருக்கும் விஷ்வா. நான் இப்பதான் இதுக்கு முன்னாடி நடந்ததெல்லாம் யோசிச்சுப் பாத்தேன். அவன் எப்பயுமே MV Techஐ விட நம்ம பெஸ்ட்டா இருக்கணும். அவங்க அத பண்ணிட்டாங்க. சோ நாம இத பண்ணனும்னு உங்கள பத்தியும், உங்க கம்பெனிய பத்தியும்தான் எதாவது சொல்லிட்டே இருப்பான்.

நாங்க கூட அது ஜஸ்ட் பிசினஸ் காம்படிஷன்ன்னு நெனச்சேன். ஆனா அவன் பண்ணத எல்லாத்தையும் வெச்சு பாத்தா, இதையும் அவன் பண்ணியிருக்கதுக்குதான் சான்ஸ் நெறய இருக்கு.”னா மேகா.

இப்படியே அவங்க ரெண்டு பேரும் தொடர்ந்து பேசிக்கிட்டு இருந்ததில, சாப்பிட்ட மருந்தோட விளைவா அப்படியே தூங்கிட்டா மேகா. மேகாவுக்காக பக்கத்து ரூம்ல காத்திருந்த வெண்ணிலா ரொம்ப நேரம் ஆகியும் அவ வரலைன்னு “என்ன இன்னும் அத்தைய காணோம்! நம்ம அங்க போய் கூப்பிடவும் முடியாதே.. இப்ப என்ன பண்றது?”னு யோசிச்சபடியே வெளிய போனா. அங்க அரவிந்த் புது இடம்ங்கிறதுனால தூக்கம் வராம அங்க இங்க நடந்துட்டு இருக்க, “இன்னைக்கு அப்பா அத்தைய என்கூட தூங்க சொன்னாரு. இவ்ளோ நேரம் ஆகியும் அவங்கள காணோம். நான் கூப்பிட்டேன்னு நீங்க மாமா ரூமுக்கு போய் அவங்கள கூட்டிட்டு வரீங்களா?”னு அவன்கிட்ட கேட்டா வெண்ணிலா.

“நீங்க உங்க ரூமுக்கு போங்க. நான் அவங்கள வர சொல்றேன்.”னு சொன்ன அரவிந்த் விஷ்வா ரூமுக்குப் போய் மேகாவ வெண்ணிலா கூப்பிடுறதா சொல்ல, கட்டில்ல படுத்து அயர்ந்து தூங்கிக்கிட்டு இருந்த மேகாவப் பாத்த விஷ்வா,

“அவ நல்லா தூங்கிட்டா. எழுப்பி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். நீ அந்தப் பொண்ண போய் தூங்க சொல்லு.”னு சொல்லி அரவிந்த அனுப்பிவிட்டான்.

விஷ்வாவ எதிர்த்து எதையும் செய்ய முடியாதுங்கிறதுனால அரவிந்தும் வெண்ணிலாவும் அமைதியா அவங்க அவங்க ரூமுக்குப் போய்ட்டாங்க.

ரொம்ப நேரமா லேப்டாப் ஸ்கிரீனப் பாத்துட்டு இருந்த விஷ்வாவோட கண்ணு கப கபன்னு எரிய, அத ஷட்டவுன் பண்ணிட்டுப் போய் மேகாவோட பக்கத்துல படுத்தான். விஷ்வாவுக்கு இன்சோம்னியா அதாவது தூக்கமின்மை நோய் இருக்கு. தூக்க மாத்திரை இல்லாம அவனால தூங்க முடியாது. இங்க அவசரமா கிளம்பி வந்ததுல அவன் அத கொண்டு வந்திருக்கல. இருந்தும் சோர்வா போய் கட்டில்ல மேகா பக்கத்துல படுத்த விஷ்வாவுக்கு, அவளோட பக்கத்துல இருந்த இதமான உணர்வால பல வருஷங்களுக்குப் பிறகு தூக்க மாத்திரை இல்லாம தூக்கம் வந்துச்சு.

கொஞ்ச நேரத்துல அவன் நல்லா தூங்கிட, அவனோட வலிமையான கை மேகாவோட வயித்துல விழுந்துச்சு. அப்புறம் அப்படியே அவள தன் பக்கம் இழுத்து தூக்கத்துலயே அணைச்சுகிட்டவன், அவனோடவளோட வாசனைய தனக்குள்ள இழுத்துகிட்டு நிம்மதியா தூங்குனான்.

காலையில நேரம் அழகா விடிஞ்சுச்சு..

வழக்கம் போல சீக்கிரமாகவே கண்ணு முழிச்ச வெண்ணிலா அரவிந்தோட ரூம் கதவைத் தட்டி, “எங்க அப்பா தூங்கி எந்திரிச்சு வர்றதுக்குள்ள போய் அத்தைய எழுப்பி கூட்டிட்டு வாங்க”னு சொல்ல, அரை தூக்கத்துல போய் விஷ்வா ரூம் கதவைத் தட்டினான் அரவிந்த்.

“நைட் இங்கயே தூங்கிட்டேன் போல”னு நெனச்சு தூக்கம் கலைஞ்சு கொட்டாவி விட்டபடியே எந்திரிச்ச மேகா தன் மேல கிடந்த விஷ்வாவ தள்ளி விட்டுட்டு போய் கதவ திறந்தா. மேகாவே வந்து கதவ திறந்ததுனால நிம்மதி அடைஞ்ச நிலா அவள கூட்டிட்டு அவங்க ரூமுக்கு போய்ட்டா.

எல்லாமே சாதாரணமாக இருக்க, இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த கல்யாணம் நடக்காதுன்னு சொன்னா என்ன செய்வா மேகா?

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured