அத்தியாயம் 56
VIP டிக்கெட் வாங்கி விஷ்வாவையும் அவன் கூட வந்தவங்களையும் கூட்டிட்டு கோவிலோட கருவறைக்குள்ள நுழைஞ்சா மேகா. அவளும் விஷ்வாவும் பக்கத்துல பக்கத்துல நிக்க, எல்லாம் வல்ல சிவபெருமானை கண்ணை மூடி மனமுருகி பிராத்தனை பண்ணிக்கிட்டு இருந்தா மேகா.
ஆரத்தி தட்டோட வந்த பூசாரி விஷ்வாவைப் பார்த்துட்டு அவங்க ரெண்டு பேருக்கும் மாலை போட்டு மரியாதை செஞ்சு “அம்மா மேகா… நீயும் இந்தத் தம்பியும் அந்தச் சிவபெருமானுடைய அருளாலே எல்லா நலமும் வளமும் பெற்று எப்பவும் நல்லா இருப்பீங்கமா.”ன்னு ரெண்டு பேருக்கும் ஆசீர்வாதம் பண்ணாரு.
“தேங்க்ஸ் சாமி.” என்ற மேகா அவரோட தட்டுல 500 ரூபாயை போட்டுட்டு, தீபத்தை தொட்டுக் கும்பிட்டுட்டு திருநீரை வாங்கி தன் நெத்தியில வச்சா.
“கோவில்ல கூட எல்லாம் காசுதான். Money is ultimate..!!”ன்னு நினைச்சு நடக்குறத கவனிச்சுட்டு இருந்த விஷ்வா, அப்படியே நின்னதால “இவர் ஒருத்தர்.. இவருக்கு எல்லாத்தையும் சொல்லணும்..!!”ன்னு நினைச்சு சலிச்சுக்கிட்ட மேகா ஒரு அம்மா தன் குழந்தைக்கு செய்றாப்புல தானே தீப ஆரத்தியை தொட்டு அவன் நெத்தியில வச்சவ, தன் கையில இருந்த திருநீரையும் அவனுக்கு வச்சுட்டா.
பின் அவளே அவன் மூக்குல சிந்தியிருந்த திருநீரையும் துடைச்சுக்கிட்டு இருக்க, தன் தாய்க்கிட்ட கிடைக்காத பேரன்பை அவள்கிட்ட உணர்ந்தான் விஷ்வா. அவங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்க மகேஷிற்கு கண்ணுல தண்ணியே வந்துருச்சு. அவன் இப்படித்தானே விஷ்வாவ பார்க்கணும்னு விரும்பினான்..!! அதனால உடனே அவங்களுக்கே தெரியாம ஃபோட்டோ எடுத்து பாட்டிக்கும், சௌபர்ணிகாவிற்கும் உடனே அனுப்பி வச்சான்.
சாமி கும்பிட்டுட்டு விஷ்வாவும் மேகாவும் வெளிய வந்துகிட்டு இருக்க, மத்தவங்க அவங்கள பின் தொடர்ந்து வந்தாங்க. முன்ன இருந்ததைவிட வெளியில இப்போ அன்னதானம் ஸ்டார்ட் ஆகிட்டதால ஒரே கூட்டமா இருந்துச்சு.
“ச்சே.. இங்க என்ன இவ்வளவு கூட்டமா இருக்கு..!! திடீர்னு யாராவது பொண்ணுங்க வந்து இவர் கிட்ட பேசிடுவாங்களான்னு என்னால பயந்துகிட்டே இருக்க முடியல. என்னமோ சின்ன குழந்தைய திருவிழாவுக்கு கூட்டிட்டு வந்த மாதிரி இருக்கு. அண்ணாகிட்ட சொல்லிட்டு முதல்ல இவர அரண்மனைக்கு கிளம்பி போக சொல்லணும்.”ன்னு நினைச்ச மேகா ஒருவித எச்சரிக்கை உணர்வுடனே, விஷ்வாவையும் அவனை கடந்து போறவங்களையும் கவனிச்சுட்டு இருந்தா.
அப்போ அந்தக் கூட்டத்துல ஒருத்தனா கலந்த முனியாண்டியோட ஆள் ஒருத்தன் விஷ்வாவோட பக்கத்துல வந்ததும், தான் மறைச்சு வச்சிருந்த கத்தியை எடுத்து அவனோட வயித்துல குத்தப் போனான். அது ராத்திரி நேரம்ங்கிறதால விஷ்வாவையே கூர்ந்து கவனிச்சுட்டு இருந்த மேகாவோட கண்ணுக்கு அந்தக் கத்தி பளிச்சுன்னு தெரிய, “விஷ்வா”ன்னு கத்தின மேகா, சட்டென அந்தக் கத்தியை தன்னோட ஒரு கையால பிடிச்சுட்டு தன் கையில ஏற்பட்ட தாங்க முடியாத வலியை பொருட்படுத்தாம விஷ்வாவ கத்தியால குத்த வந்தவனோட மெயின் பாயிண்ட்டில நல்லா எட்டி உதைச்சா.
அதனால சுதாரிச்சுக்கிட்ட அந்த நடுத்தர வயசு ஆள் கத்தியை கீழே போட்டுட்டு ஓட, “டேய் நில்லுடா.. You bloody ####”ன்னு தன்னோட அடி தொண்டையில இருந்து கத்தின விஷ்வா அவனை துரத்திக்கிட்டு ஓடினான். அதனால மத்த பாடிகார்டுகள் அவனோட பாதுகாப்புதான் அவங்களுக்கு முக்கியம்ங்கிறதால அவன பின் தொடர்ந்து ஓடினாங்க. கையில ரத்தம் வடிய கண்ணீர் குலமா போற விஷ்வாவ பார்த்தபடி நின்னுட்டு இருந்த மேகாவோட பக்கத்துல பதறி அடிச்சுட்டு ஓடிப்போன வெற்றி தன் வேட்டியை கிழிச்சு அவ கையில கட்டு போட்டபடி “என்ன.. என்னடி ஆச்சு? எப்படி உனக்கு இவ்வளவு பெரிய காயம் பட்டுச்சு..??”ன்னு கண்ணுல தண்ணி வடிய உடைந்த குரல்ல கேட்டான்.
மேகாவுக்கு தலை சுத்துற மாதிரி இருந்ததால, தன் தலையை பிடிச்சுக்கிட்டு தன் இன்னொரு கையை விஷ்வாவப் பார்த்து நீட்டினவ, அந்த நிலைமையிலும் “விஷ்வா..!!”ன்னு சத்தமா அவனைத்தான் கூப்பிட்டா. அதுக்குள்ள அவ கையில கட்டு போட்டிருந்த வெற்றி அவ இப்போதும் விஷ்வாவைத் தேடுவதை நினைச்சு வருத்தப்பட்டு அவ கையை விட்டுட, மயங்கி அவன் தோள்ல விழுந்தா மேகா. அந்தக் பெரும் கூட்டத்துல தன்னை கத்தியால் குத்த வந்தவனை தேடிக்கிட்டு ஓடின விஷ்வாவிற்கு ஏதோ அசரிரீ போல எங்கயோ தூரத்துலேருந்து கேட்டுச்சு மேகாவோட குரல்.
அந்த நொடி அவ தன்னை காப்பாத்தின காட்சிகள் அவன் மண்டைக்குள்ள ஓட, “வாணி..!!”ன்னு முனுமுனுத்த விஷ்வா தனக்கு எதிர்ல யார் இருக்காங்கன்னு பார்க்காம ஆண்கள் பெண்கள்னு எல்லாரையும் பிடிச்சு தள்ளிவிட்டு அந்தக் கூட்டத்துக்குள்ள மேகாவ தேடி ஓடினான்.
அங்க தரையில உட்கார்ந்திருந்த வெற்றியின்மேல விழுந்து கிடந்த மேகாவ பார்த்ததும் கோபத்துல விஷ்வாவோட ரத்தமெல்லாம் கொதிச்சது.
வெற்றி மயக்கத்துல இருந்த மேகாவ தூக்க முயற்சி பண்ண, வேகமா போய் அவன் நெஞ்சுல எட்டி உதைச்ச விஷ்வா “இவ கிட்டவே வரக்கூடாதுன்னு உன்ன நான் ஆல்ரெடி warn பண்ணிருக்கேன். உயிர் மேல ஆசை இருந்தா ஒழுங்கா ஓடிப்போயிடு.”ன்னு ஒரு விரல் நீட்டி அவனை எச்சரிச்சவன் வேகமா போய் மேகாவ தூக்கிக்கிட்டு தன் காரை நோக்கி ஓடினான்.
நடந்த விஷயம் தெரிஞ்சு “ஐயோ மேகா.. என் புள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியலையே..!!”ன்னு கலங்கின கண்ணோட விஷ்வாவ பின் தொடர்ந்து காளீஸ்வரன் ஓட, அவளோட மத்த சொந்த பந்தங்கள் எல்லாரும் உடனே அந்த இடத்தை சூழ்ந்துக்கிட்டாங்க.
“ஏய் இந்தாடி… கண்ண தொறந்து பாரு.. எனக்கு பயமா இருக்குடி. ப்ளீஸ் கண்ண தொற..!!”ன்னு கலங்கின கண்ணோட விஷ்வா சொல்ல, அவன் கண்ணீர் துளி அவளோட முகத்துல விழுந்துச்சு. லேசா தன் கண்ணைத் தொறந்த மேகா “விஷ்வா..!!”ன்னு மெல்லிய குரல்ல அவன் முகத்தைப் பார்த்து சொன்னவ, தன் கையால அவன் முகத்தைத் தொடப்போனா.
அதிக ரத்தம் வெளியாயிருந்ததால அதற்கான தெம்பு அவ கிட்ட இல்லாம போக, மறுபடியும் மயங்கினா மேகா. அவ கை பாதியில அப்படியே கிழே தொங்கிடுச்சு. அவளை அப்படி பார்க்க பொறுக்காம உடைந்த குரல்ல “உனக்கு எதுவும் ஆகாது வாணி. நான் ஆகவும் விடமாட்டேன்.”ன்னு சொன்ன விஷ்வா அவளை தன்னோட மடியில போட்டுக்கிட்டு அவனோட காரோட பின் சீட்ல உட்கார்ந்தான்.
“நான் ட்ரைவ் பண்றேன். பக்கத்துல இருக்குற ஹாஸ்பிடலுக்கு உடனே போகணும்.”ன்னு சொன்ன முத்து, மகேஷ்கிட்ட இருந்து கார் சாவியை வாங்கி காரை ஸ்டார்ட் செஞ்சு வேகமா ஹாஸ்பிடலுக்கு போனான்.
மேகாவோட குடும்பத்தினர்கள் தங்களோட ஜீப்ல விஷ்வாவோட காரைப் பின் தொடர்ந்து போனாங்க.
விஷ்வா எங்க தன்னை உதைச்சு தள்ளினானோ அதே இடத்துல எந்திரிச்சுக்க மனசில்லாம அப்படியே தரையில கிடந்தான் வெற்றி. கோவிலுக்குள்ள இருந்த கலைச்செல்வி சாமி கும்பிட்டுட்டு வெளிய வரும்போது தரையில உட்கார்ந்திருந்த வெற்றியைப் பார்த்து அதிர்ந்து வேகமா அவன் பக்கத்துல ஓடிப்போய் “டேய் என்னடா ஆச்சு..?? ஏன் இப்படி நடுரோட்டுல உட்கார்ந்து இருக்க..!! உன் சட்டை வேற அழுக்கா இருக்கு.. வேட்டி கிழிஞ்சிருக்கு.. யார் கூடயாவது சண்டை போட்டயா நீ..??”ன்னு பதட்டமா கேட்டா.
ஏற்கனவே கலங்கின கண்ணோட இருந்த வெற்றி தன் மனசுல இருக்கிறதை பத்தி அவ கேட்கவும் இந்த உலகத்துல தன்னை பத்தி யோசிக்கவும் ஒரு உயிர் இருக்குதேன்னு நினைச்சு வேகமா அவளை கட்டிப் பிடிச்சுட்டு “மேகா என்னைவிட மூணு வயசு சின்ன பொண்ணுடி. எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து நான் அவளை என் கண்ணுக்குள்ள வச்சு பார்த்துகிட்டேன் தெரியுமா.. அவளுக்கு என்ன பிரச்சனைனாலும் முதல்ல வெற்றி மாமா அப்படி ஆயிடுச்சு இப்படி ஆயிடுச்சுன்னு வந்து என்கிட்டதான் சொல்லுவா. இத்தனை வருஷமா நான் அவளை என் மனசுல ராணி மாதிரி வச்சு தூங்கிட்டு இருந்தேன். இன்னைக்கு அவ மேல எனக்கு உரிமை இல்லல்ல கலை..!!”ன்னு கேட்டபடி உடைஞ்சு அழுதான்.
அவன் மனசுல இருந்த வலி அவனோட குரல்ல அப்பட்டமா தெரிய, அவன்மேல அவ காதல் வச்சிருந்ததால அவளுக்கும் அது வலிச்சுச்சு. அதனால கலங்கின கண்ணோட “அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடா. நாளைக்கு அவளுக்கு கல்யாணமே ஆனாலும், முறை மாமனா போய் நின்னு நீ செய்ய வேண்டியதை எல்லாம் செய்யணும்ல.. நீ இல்லாமையா என்ன கல்யாணம் பண்ணி விடுவா அவ..?? நீ அழாதடா வெற்றி. அவ போனா போறா. உனக்கு நான் இருக்கேன்.”ன்னு சொன்ன கலைச்செல்வி தங்களை சுத்தி இருக்குற ஒரு பெரும் கூட்டம் தங்களையே கவனிக்கிறதை உணர்ந்து, “நீ முதல்ல எந்திரி.” என்றவ அவனை கூட்டிட்டுப் போய் மறைவான ஒரு இடத்துக்கு போயி உட்கார்ந்து அவன்கூட பேச ஆரம்பிச்சா.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)