Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 55

மூர்கனின் காதலி CH 55

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 55 

சிவராத்திரியை முன்னிட்டு நடந்த டான்ஸ் ப்ரோக்ராம்ல, மேகா ஸ்டேஜ்ல சிவதாண்டவம் ஆடிக்கிட்டு இருந்தா. அதை ஆச்சரியமாப் பார்த்துக்கிட்டு இருந்த விஷ்வா தன்னோட ஃபோன்ல வீடியோ எடுத்தான். அதைக் கவனிச்ச தயாளன், அவன் கிட்டக்கப் போய், “என்ன பாஸ்… கோவிலுக்கே வர மாட்டேன்னு சீன் போட்டீங்க… இங்க எங்க லேடி பாஸைப் பார்த்தவுடனே, அப்படியே அசந்துபோய் வீடியோ எல்லாம் எடுத்துக்கிட்டு இருக்கீங்க!”ன்னு கேட்டான்.

தன் முழங்கையால அவன் வயித்துல சட்டுன்னு இடிச்ச விஷ்வா, “என்ன டிஸ்டர்ப் பண்ணாம, போடா அந்தப் பக்கம்,”ன்னு அவனை விரட்டிவிட்டான்.

அவனைப் போலவே வெண்ணிலாவும் மேகா ஆடுறதை வீடியோ எடுத்துக்கிட்டு இருக்க, “நீங்க டான்ஸ் எல்லாம் ஆட மாட்டீங்களா மேடம்?”ன்னு அவள் பக்கத்துல போய் கேட்டான் அரவிந்த். “அட நீங்கதானா? நான் வேற யாரோன்னு நினைச்சு பயந்துட்டேன்,”ன்னு சொன்ன நிலா, “எனக்கு டான்ஸ் எல்லாம் ஆட வராது,”ன்னு சொல்லிட்டா.

“அப்போ ஸ்பெஷலா உங்களுக்கு வேற என்ன தெரியும்? நீங்க காலேஜ் படிக்கிறீங்கன்னு மேகா சொன்னாங்க. என்ன படிச்சிக்கிட்டு இருக்கீங்க?”ன்னு அவன் கேட்க, “எனக்கு ஸ்பெஷலா எல்லாம் எதுவும் தெரியாது. நான் மதுரை மெடிக்கல் காலேஜ்ல MBBS 2nd வருஷம் படிச்சிக்கிட்டு இருக்கேன்,”ன்னு சொன்னா வெண்ணிலா.

‘பர்றா! அப்போ என் பொண்டாட்டி, வருங்கால டாக்டரா!’ன்னு நினைச்சு அரவிந்த் சந்தோஷப்பட, ‘முதல்ல அவ உன் பொண்டாட்டியாகட்டும். அப்புறம் நீ பெருமைப்படலாம்,’ன்னு மனசுக்குள்ளேயே அவன் மண்டையில அடிச்சு சொன்னுச்சு அவனோட மனசாட்சி.

பக்கத்து ஊர்ல இருக்குற அவங்களுக்குச் சொந்தமான தோட்டத்து வீட்ல கோபமா இருந்த மித்ராவும், முனியாண்டியும், இப்போதே ஏதாவது செஞ்சு, தங்களை இந்த நிலைக்கு ஆளாக்குனவங்களைப் பழிவாங்கணும்னு தங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டு இருந்தாங்க.

“அப்பா, எனக்குக் கிடைக்காத அந்த விஷ்வா எவளுக்கும் கிடைக்கக் கூடாது. அவன் இந்த ஊரைவிட்டுப் பிணமா தான் வெளிய போகணும். அப்படியே மேகாவுக்கு ராசி இல்லாதவன்னு பட்டம் கட்டிவிட்டு, கடைசி வரைக்கும் அவளுக்குக் கல்யாணமே ஆக விடக் கூடாது. அவளப் பார்த்துப் பார்த்து அந்தக் காளீஸ்வரன் கதறணும்,”ன்னு கண்ணுல கோபத்தீ பறக்க சங்கமித்ரா சொல்ல, “நம்மள இந்த நிலைக்கு ஆளாக்குனவங்களை நான் எப்படி சும்மா விடுவேன் மித்ரா? அதெல்லாம் ஏற்கனவே அவனுக்குக் கட்டம் கட்டியாச்சு. 

நீ பொறுமையாப் இருந்து என்ன நடக்குதுன்னு மட்டும் பாரு. இந்தக் சிவராத்திரியை காளீஸ்வரன் குடும்பம் ஜென்மத்துக்கும் மறக்காது,”ன்னு முனியாண்டி வில்லத்தனமா சிரிச்சான்.

மேகா டான்ஸ் ஆடி முடிச்சு வணக்கம் சொல்லும்போது, எல்லாரும் கைத்தட்டி அவளை உற்சாகப்படுத்தினாங்க. ஸ்டேஜ்ல இருந்து கீழ இறங்குன மேகா, “விஷ்வா வர்றேன்னு சொன்னாரே, வந்துட்டாரா இல்லையான்னு தெரியலையே! ச்… அவர் சீக்கிரம் வந்திருந்தா என்னோட பர்ஃபார்மன்ஸைப் பார்த்திருப்பாரே,”ன்னு புலம்பிக்கிட்டே, தன் முன்னாடி இருந்த பெரிய கூட்டத்துல அவனைத் தேடிக்கிட்டு இருந்தா.

அவளையே கவனிச்சுக்கிட்டு இருந்த விஷ்வா, வேணும்னே இப்போதான் அங்க வந்தவன் மாதிரி பாவனை செஞ்சு, தன்னோட ஆட்களோட போய் ஓரம்மா கிடந்த சேர்ல உட்கார்ந்தான்.

ஒரு வழியா அவனைக் கண்டுபிடிச்ச மேகா, வேகமா அவன் கிட்டக்கப் போய், “நீங்க எப்ப வந்தீங்க? நான் டான்ஸ் ஆடினனே, பார்த்தீங்களா?”ன்னு ஆர்வமா கேட்க, “நல்லவேளை நான் இப்பதான் வந்தேன். அதனால அந்தக் கண்றாவி காட்சியை எல்லாம் பார்க்க முடியாமப் போயிடுச்சு!”ன்னு கிண்டலாச் சொன்னான் விஷ்வா.

வந்த கடுப்புல அவன் கையில கிள்ளி வச்ச மேகா, “நான் சின்ன வயசுல இருந்தே கிளாசிக்கல் டான்ஸ் கத்துக்கிறேன் தெரியுமா? முதல்ல உங்களுக்கு டான்ஸ்ன்னா என்னன்னு தெரியுமா? நீங்களே ஒரு ரோபாட். உங்களுக்கு எப்படி அதைப் பத்தி எல்லாம் தெரியப் போகுது? உங்ககிட்ட போய் ஆசையா கேட்டேன் பாருங்க, என்ன சொல்லணும்,”ன்னு சொல்லிட்டு, அவங்க குடும்பத்துல எல்லாரும் சேர்ந்து கோவிலுக்கு வந்த பக்தர்களுக்குப் பாதாம் பால் கொடுத்துக்கிட்டு இருக்குறதப் பார்த்துட்டு, அங்கே போயிட்டா.

அவ கூட்டத்துக்குள்ள போய் மறைஞ்சதப் பார்த்துக்கிட்டே இருந்த விஷ்வா, “எங்கடா போனா அவ?”ன்னு கேட்க, “அங்க காளீஸ்வரன் சார் ஃபேமிலியோட எல்லாருக்கும் பாதாம் பால் கொடுத்துட்டு இருக்காரு. அன்னதானமும் போடுவாங்க போல. ஃபுட் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. மேகா மேடம் அங்கதான் போயிருக்காங்க,”ன்னு அரவிந்த் சொன்னான்.

“ஓஓஓ… இருக்கட்டும் இருக்கட்டும்,”ன்னான் விஷ்வா.

அந்தக் கூட்டத்துல இருந்து கையில ரெண்டு கப் பாதாம் பாலோட வந்த மகேஷ், ஒண்ணு அரவிந்த்கிட்ட கொடுத்துட்டு, இன்னொண்ணை விஷ்வாகிட்ட நீட்டி, “பாஸ், பாதாம் பால் செமையா இருக்கு. குடிங்க!”ன்னான்.

“எனக்கெல்லாம் வேணாம், நீயே குடி,”ன்னு விஷ்வா சொல்லிட்டான்.

“நான் ஆல்ரெடி மூணு கப் வாங்கி குடிச்சிட்டேன். செமையா இருக்கு. உங்களுக்கு வேணாம்னா போங்க. நானே குடிக்கிறேன்,”ன்னு சொன்ன மகேஷ், அவன் முன்னாடியே வாய்க்கு வாய் அதைப் புகழ்ந்தபடி ரசிச்சு ருசிச்சுக் குடிச்சான்.

‘என்ன இவன், ஒரு பேச்சுக்கு வேணாம்னு சொன்னா… உடனே இதுதான் சான்ஸ்ன்னு என்னைப் பார்க்க வச்சுக் குடிக்கிறான்! ம்… யாருக்கும் என் மேல பாசமே இல்ல. நிஜமாவே அந்தப் பாதாம் பால் நல்லா தான் இருக்கும் போல. ஸ்மெல் சும்மா கும்முன்னு இங்க வரைக்கும் வருது. இல்லாத பசியை இதுவே வர வச்சுடும் போல!’ன்னு நினைச்சு, தன் உதட்டைச் சுழிச்ச விஷ்வா தனக்குள்ளேயே புலம்பிக்கிட்டு இருந்தான்.

அப்போ மேகா தன் தாவணியை இழுத்து இடுப்புல சொருகிக்கிட்டு, ஒரு கையில பெரிய பாக்குமட்டை தட்டுல வெஜ் பிரியாணி, ஆனியன் பச்சடி, ரெண்டு இட்லி, சட்னி வச்சுக்கிட்டு வந்தா.

இன்னொரு கையில பெரிய தண்ணி குடிக்கிற கிளாஸ்ல பாதாம் பாலையும் கொண்டு வந்துகிட்டு இருந்தா. அவளப் பின் தொடர்ந்து வாட்டர் ஜக் மற்றும் கிளாஸோட வந்தா வெண்ணிலா.

“அண்ணா, அந்த சேரை இந்தப் பக்கம் திருப்பிப் போடுங்க,”ன்னு தயாளன் கிட்ட சொன்ன மேகா, அவன் அதைத் திருப்பிப் போட்டவுடனே தன் கையில இருந்த சாப்பாட்டுத் தட்டை அதுல வச்சுட்டு, பாதாம் பாலை விஷ்வாகிட்ட நீட்டி, “இந்தாங்க குடிங்க. இதை நான்தான் செஞ்சேன். உடனே அதுக்காகவே வேணும்னே இது நல்லா இல்லைன்னு சொன்னீங்கன்னா நான் கடுப்பாயிடுவேன். ஆல்ரெடி குடிச்சுட்டு நிறைய பேர் நல்லா இருக்குன்னு சொல்லிட்டுப் போனாங்க,”ன்னு தன் முகத்தை சீரியஸா வச்சுக்கிட்டு சொன்னா.

விஷ்வாவுக்குப் பெண்களைப் பிடிக்காதுங்கிறதால, பொது இடத்துல தேவையில்லாத வம்பு வேணாம்ன்னு நினைச்சு, தானே ஒரு சேரை எடுத்துப் போட்டு அதுல தண்ணியை வச்சுட்டு அங்க இருந்து போயிட்டா வெண்ணிலா.

இதுவரை எனக்கென்னு யாரும் இல்லையேன்னு புலம்பிக்கிட்டு இருந்த விஷ்வாவுக்கு, மேகா தன் வருகையால ‘உங்களுக்கு நான் இருக்கேன் விஷ்வா’ன்னு சொல்லாமச் சொன்ன மாதிரி உணர்ந்தான். எதுவும் சொல்லாம அவள் கையில இருந்த பாலை வாங்கி குடிச்சான். அதனால மேகா அவனை ஆச்சரியமாப் பார்க்க, அவளை மேலும் ஆச்சரியப்படுத்துற மாதிரி, “நல்லா இருக்கு. இன்னொரு கிளாஸ் கிடைக்குமா?”ன்னு கேட்டான் விஷ்வா.

“ஒய் நாட்? இருங்க, நான் போய் எடுத்துட்டு வரேன்,”ன்னு சொன்ன மேகா, சந்தோஷமா ஓடிப் போய் மறுபடியும் பாதாம் பாலை வாங்கிக் கொண்டு வந்து அவன்கிட்ட கொடுத்தா. அதைக் குடிச்ச விஷ்வா, அவள் கொண்டு வந்ததைச் சாப்பிட ஆரம்பிச்சான். மேகாவோட சொந்த பந்தங்கள் எல்லாம் அவளைக் கடந்து போகும்போது அவள்கிட்டப் பேசிட்டும், விஷ்வா கிட்ட நலம் விசாரிச்சிட்டும் போனாங்க.

ஆண்கள்கிட்ட மட்டும் ஓரிரு வார்த்தைகள்ல பதில் பேசுன விஷ்வா, பெண்கள் வந்தா இப்பதான் வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி தலை குனிஞ்சபடி உட்கார்ந்துக்க, அவன் சார்பா, “அவர் சாப்பிடும்போது யார் கிட்டயும் பேச மாட்டாரு. அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம்,”ன்னு ஏதேதோ சொல்லி சமாளிச்சுக்கிட்டு இருந்தா மேகா.

அவன் சாப்பிட்டு முடிச்சவுடனே அவன் கையைப் பிடிச்சு இழுத்த மேகா, “எல்லாரும் வாங்க, உள்ளே போய்ச் சாமிகும்பிட்டு வந்தரலாம்,”ன்னு சொல்ல, “எனக்கு அதுல எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல,”ன்னான் விஷ்வா.

“இவ்வளவு தூரம் கோவில் வாசல் வரைக்கும் வந்துட்டு, பிரசாதச் சாப்பாடு எல்லாம் சாப்பிட்டுட்டு, நீங்க கோவிலுக்குள்ள வராம இருந்தா சிவன் கோவிச்சுக்க மாட்டாரா? ப்ளீஸ் வாங்க விஷ்வா,”ன்னு கெஞ்சுற குரல்ல கேட்ட மேகா, வலுக்கட்டாயமா அவனை இழுத்துக்கிட்டு கோவிலுக்குள்ள போனா.

அந்த இடம் கூட்டமா இருந்ததால, அவங்களுக்குப் பாதுகாப்பா விஷ்வாவோட பாடிகார்டுகள் அவனைச் சுத்தி நின்னுகிட்டாங்க. தன் முன்னாடி இருந்த கூட்டத்தைப் பார்த்து எரிச்சலடைஞ்ச விஷ்வா,

“இது என்ன இவ்ளோ கூட்டமா இருக்கு! எனக்கு இதுக்குள்ள எல்லாம் போகப் பிடிக்காது,”ன்னு உள்ளே போக மறுத்தான்.

“அதான் தெரியுமே! அந்த சைடு விஐபி என்ட்ரி இருக்கு. வாங்க அப்படியே டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போலாம்,”ன்னு சொன்ன மேகா அவனை உள்ளே அழைச்சுக்கிட்டுப் போக, மத்தவங்களும் அவங்களைப் பின் தொடர்ந்து போனாங்க.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured