Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 53

மூர்கனின் காதலி CH 53

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 53

ஆதி குரூப்ஸ்-ன் அலுவலகக் கட்டிடத்துக்கு முன்னாடி, கசக்கிப்போட்ட பேப்பர் மாதிரி ஆதித்யாவையும் பாலாவையும் ஒரு கார்ல இருந்து தூக்கி வீசிட்டுப் போனாங்க. அந்தக் கம்பெனிக்காரங்க அந்த காரைக் கவனிக்கிறதுக்குள்ள, அது மின்னல் வேகத்துல அவங்க கண்ணுல இருந்து மறைஞ்சு போச்சு. 

நேத்து ராத்திரியில இருந்து காணாமப்போன தன்னோட மகனைக் கண்டுபிடிக்கிறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த ஆதித்யாவோட அப்பா மரகதமணி, தன் மகன் இருந்த நிலையைக் கண்டு மனசு உடைஞ்சுபோனார்.

உடனே பதறி அடிச்சுக்கிட்டு ஆம்புலன்ஸை வரவழைச்சு, அதுல ஆதித்யாவையும் பாலாவையும் ஏத்தி அனுப்பிட்டு, தன் ஆட்க கிட்ட,

“என் பையனுக்கு இப்படி ஆன விஷயம் யாருக்கும் தெரியக் கூடாது. இந்த விஷயம் வெளிய வந்துச்சுன்னா, உங்க ஒருத்தனையும் உயிரோட விட மாட்டேன்”னு மிரட்டிட்டு, தானும் ஹாஸ்பிடலுக்குப் போனார்.

அதனால, ஆதி குரூப்ஸை சேர்ந்தவங்க, அவங்க ஆபீஸ்ல இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் கூட அழிச்சிட்டு, பொது மக்கள் எடுத்த வீடியோக்களையும் கைப்பற்றி கொடுத்துட்டாங்க. ஆனா, மேகாவை அசிங்கப்படுத்த நினைச்ச ஆதித்யாவை விஷ்வா எப்படி சும்மா விடுவான்? ஆதித்யாவோட நிலைமையை மத்தவங்களுக்குத் தெரியப்படுத்தணும்னுதானே அவன் இந்த வேலையையே செஞ்சிருக்கான்!

விஷ்வாவோட ஆட்கள், ஆதித்யா அவன் ஆபீஸுக்கு முன்னாடியே ஆதரவில்லாத பிச்சைக்காரன் மாதிரி கிடந்ததை யாருக்கும் தெரியாம வீடியோ எடுத்து, சமூக வலைதளங்கள்ல பரப்பிட்டாங்க. அந்த வீடியோ ட்ரெண்ட் ஆகிப் போச்சு.

இப்போ அதை ஆன்லைன்ல இருந்து நீக்குறதுக்கு வழி தெரியாம ஆதி குரூப்ஸ்-ன் பிஆர் டீம் மண்டை காய்ஞ்சு நின்னது.

ஈவினிங் டைம்ல…

விஷ்வா அரண்மனையில இருக்குற தன்னோட ரூம்ல லேப்டாப்பை வச்சுக்கிட்டு, தன் கம்பெனியில இருந்த பிரச்சினைகள் எல்லாம் சரியாயிடுச்சான்னு பார்த்துக்கிட்டு இருந்தான். அவனோட பி.ஆர் டீம் கொடுத்த யோசனைப்படி, அவன் மேகாவோட இங்க கிராமத்துக்கு வந்திருக்கிறதைத் தெரியப்படுத்துற மாதிரி, சமூக வலைத்தளங்கள்ல அவளோட ஒரு செல்ஃபி எடுத்து, அவளை டேக் செஞ்சு,

“With love of my life..!!”ங்கிற கேப்ஷனோட சோஷியல் மீடியால போஸ்ட் பண்ணான். அந்த போஸ்ட்டும் உடனே வைரல் ஆச்சு.

அதை மாதிரியே, ஷேர் மார்க்கெட்லயும் எம்.வி டெக்னோட ஷேர்கள் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு புது உச்சங்களைத் தொட்டுக்கிட்டு இருந்தது.

மொத்தத்துல, மேகா வந்த ஒரே நாள்ல இருண்டுபோய்க் கிடந்த அவனோட வாழ்க்கையில லைட்டைப் போட்டு எல்லாத்தையும் வெளிச்சமாக்கிட்டா. தன்னோட வேலையில மூழ்கி இருந்த விஷ்வா, அவனோட ரூம்ல பிஸியா இருக்க, தயாளனும் அரவிந்தும் மத்த பாடி கார்டுகளோட சேர்ந்து கீழ குஸ்தி சண்டை போட்டு விளையாடிக்கிட்டு இருந்தாங்க.

புது பாவாடை தாவணி, தலை நிறைய மல்லிகைப்பூனு போட்டுக்கிட்டு, வெண்ணிலாவோட அரண்மனைக்குப் போன மேகா, அவங்க எல்லாரும் “ஆஆ.. ஊஊ”ன்னு கத்திக்கிட்டு ஒருத்தரை ஒருத்தர் அடிச்சு தாக்கிக்கிட்டு இருக்குறதைப் பார்த்து அதிர்ந்தவள், “என்ன ஆச்சு? ஏன் நீங்க எல்லாரும் இப்படி சண்டை போட்டுக்கிறீங்க? அப்புறம், இது பழைய பில்டிங். அப்படியே சண்டை போடுறதா இருந்தாலும், வெளிய போய் சண்டை போடுங்க”ன்னா.

“நாங்க சண்டை போடலை. சும்மா போர் அடிக்குதுன்னு விளையாடிட்டு இருந்தோம்”னு மகேஷ் சொல்ல, அவன்கிட்ட அடி வாங்கி தரையில கிடந்த அரவிந்த், அப்படியே தன் கைய தலையணையா வச்சு, அப்பட்டமா வெண்ணிலாவைப் பார்த்து சைட் அடிச்சவன், “அக்காவும் தங்கச்சியும் இந்த டைம்ல ஏதோ ஃபங்ஷனுக்குப் போற மாதிரி ரெடியாகி இருக்கீங்க… என்ன விசேஷம்?”னு கேட்டான்.

“இன்னைக்கு சிவராத்திரில்ல… அதான் நாங்க கோவிலுக்குப் போறோம். அப்பா, நீங்களும் வர்றீங்களான்னு கேட்டுட்டு வரச் சொன்னாரு”ன்னு நிலா சொல்ல, “உங்க அப்பா என்ன வரச் சொன்னாரா?”னு ஷாக் ஆகிக் கேட்டான் அரவிந்த்.

“எல்லாரையும் தான். ஆனா, மெயினா விஷ்வாவை கூட்டிட்டு வரச் சொன்னாரு. இன்னைக்குக் கோவிலுக்குப் போய் சாமி கும்பிட்டுட்டு, விடிய விடிய முழிச்சிருந்தா நல்லதாம்”னு மேகா சொல்ல,

“எங்க பாஸுக்கு கடவுள் நம்பிக்கையே இல்லையேம்மா! அவர் எப்படி கோவிலுக்கு வருவாரு?”னு கேட்டான் மகேஷ்.

“நான் கூப்பிட்டுப் பார்க்கிறேன் அண்ணா. வர்றதும் வராததும் அவரோட இஷ்டம்”னு மேகா விஷ்வாவோட ரூமை நோக்கிப் போக, “டேய், இந்த மாதிரி டைம்ல கோவிலுக்கு கலர் கலரா நிறைய பொண்ணுங்க வரும்டா. போனா விடிய விடிய ஜாலியா இருக்கும். தினமும் நம்ம பாஸோட சேர்ந்து இவனுங்க மூஞ்சியைத் தானே மாறி மாறி பார்த்துட்டு இருக்கோம்! எப்படியாவது அவரை கன்வின்ஸ் பண்ணிக் கோவிலுக்கு கூட்டிட்டுப் போயிடணும்”னு தயாளன் மகேஷை இழுத்துக்கிட்டு மேகாவுக்குப் பின்னாடியே விஷ்வாவோட ரூமுக்கு போனான்.

தனியா நின்னுக்கிட்டு இருந்த நிலாகிட்ட போன அரவிந்த், “அப்படி என்னங்க இந்த சிவராத்திரி ரொம்ப ஸ்பெஷல்?”னு கேட்க, “இன்னைக்கு விடிய விடிய முழிச்சிருந்து, மனசார எதை வேணாலும் கேட்டா, அத சிவபெருமான் அப்படியே கொடுத்திடுவாருன்னு எங்க அம்மா சொல்லுவாங்க”ன்னு சொன்னா வெண்ணிலா.

“அப்போ நமக்கு என்ன வேணுமோ, அது எதுவா இருந்தாலும் கேட்கலாமா?”னு ஆர்வமா அரவிந்த் கேட்க, “ம்ம்ம்… கேட்கலாமே! ஆனா, அது நியாயமான வேண்டுதலா இருந்தா மட்டும்தான் நடக்கும்”னு சொன்னா அவ.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured