Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 2

மூர்கனின் காதலி CH 2

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 2 

விஷ்வால கொல்லப்பட்ட மல்லிகா ரத்த வெள்ளத்துல ரோட்டு ஓரமா கிடந்தா. இறுக்கமான முகத்தோட விஷ்வா அந்த பொண்ணை பாத்துட்டு இருந்தான். பொம்பளைங்க கிட்ட சேர்றதையே அறவே வெறுக்கிற விஷ்வாவுக்கு, அந்த மல்லிகாவோட மனசும் பேச்சும் ரொம்ப பாதிப்பை ஏற்படுத்திடுச்சு. அதனால, அவனுக்குத் தலை சுத்தல் வந்துடுச்சு.

தலையைப் பிடிச்சுக்கிட்டு, கார் பின் சீட்டுல போய் விழுந்த விஷ்வா, “Situation out of control-ல போயிட்டு இருக்கு.” -ன்னு நினைச்சு, சிரமப்பட்டு மொபைல் ஃபோனைத் தேடி எடுத்தான்.

அவன் கண்ணுக்கு எழுத்துக்கள் மங்கலா அரைகுறையாத் தெரிய, எப்படியோ மகேஷோட நம்பரைக் கண்டுபிடிச்சு, தன்னோட லைவ் லொகேஷனை அவனுக்கு அனுப்பி, “Emergency come fast.”ன்னு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிட்டு மயங்கிட்டான். அவனோட பிஸ்டல் காருக்குள்ள ஒரு ஓரமா கிடந்துச்சு.

விஷ்வாவைத் தேடி அங்க இங்கன்னு கார்ல சுத்திக்கிட்டு இருந்த மகேஷ், அவன் கிட்ட இருந்து வந்த மெசேஜைப் பார்த்துட்டு, “What a fish man… ஆல்ரெடி இருக்கிற பிராப்ளமே இன்னும் சால்வ் ஆகாம இருக்கு. அதுக்குள்ள இவர் போய் எந்த பிராப்ளம்ல சிக்கிருக்காருன்னு தெரியலையே.”ன்னு புலம்பிக்கிட்டே, விஷ்வா இருக்கிற லொகேஷனை நோக்கிப் பறந்தான். கூடவே, அவங்க ஆட்களுக்கும் லொகேஷனை ஷேர் பண்ணி, அவங்களையும் வரச் சொன்னான்.

மயக்கத்துல கிடந்த விஷ்வாவுக்குக் கனவு மாதிரி ஏதோ ஒரு காட்சி தெரிஞ்சுச்சு. அதுல…

ஒரு பெரிய பங்களா வீட்ல ஹால்ல இருக்கிற சோஃபாவுல அஞ்சு வயசு மதிக்கத்தக்க ரெண்டு பசங்க உட்கார்ந்து டிவியில கார்ட்டூன் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வேகமா அவங்க பக்கமா போன நடுத்தர வயசுப் பொம்பள ஒருத்தி, “ஸ்கூல்ல இருந்து வந்தா உடனே டிவிதான் பார்ப்பீங்களா? உங்களையெல்லாம் எதுக்குத்தான் பெத்தேன்னே தெரியல. ஒழுங்கு மரியாதையா எந்திரிச்சுப் போய் யூனிஃபார்மை மாத்திட்டு ஹோம் ஒர்க் பண்ணுங்கடா.”ன்னு கோபமா சொன்னா.

“ஹோம் ஒர்க் தானே அப்புறம் பண்ணிக்கலாம்மா. எங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க… நாங்க கொஞ்ச நேரம் டிவி பார்க்கிறோம்.”ன்னு அந்தப் பசங்கள்ல ஒருத்தன் சொல்ல, எரிச்சல் அடைஞ்ச அந்தப் பொம்பள, “என்னது டிவி பார்க்கணுமா? இந்த வயசுல உங்களுக்கு டிவி கேக்குதா டிவி…? பிள்ளைங்கன்னா அம்மா சொல்றதைக் கேட்கணும். ஆனா நீங்க மட்டும் ஏன்டா இப்படி இருக்கீங்க? அப்ப உங்களுக்கு என்னைப் பார்த்தா பயமா இல்ல? உங்களுக்கு இவ நம்மள என்ன பண்ணிடப் போறான்ற திமிரு. அதானே…!! இருங்கடா… வர்றேன்…!!”ன்னு சொல்லிட்டு வேகமா உள்ளே போயி கையில இரும்பு ஸ்கேலோட வந்தா.

அவ, தன்னோட வாய் பேசினவனோட முடியைப் பிடிச்சு, அவனோட கால்ல மாறி மாறி அந்த ஸ்கேலால அடிச்சு, “அம்மாவை எதிர்த்துப் பேசுவியா? சொல்லு… பேச மாட்டேன்னு சொல்லு.”ன்னு கேட்க, “ஆஆஆ… ஆஆஆ… ப்ளீஸ்மா வலிக்குது. விடுங்க.”ன்னு கெஞ்சினான் அவன்.

அப்பவும் விடாம, “சொல்லுடா வாயைத் தொறந்து சொல்லு. இனிமே என்னை எதிர்த்துப் பேச மாட்டேன்னு சொல்லு. ஸ்கூல்ல இருந்து வந்ததுக்கு அப்புறம் டிவி பார்ப்பியா? சொல்லு… பார்க்க மாட்டேன்னு சொல்லு.”ன்னு சொல்லிச் சொல்லி அவனை அடிச்சு வெளுத்தா அவ.

அங்க இருந்த இன்னொரு பையன் அவங்களுக்குக் குறுக்கால போயி, “அம்மா, அவனை விடுங்கம்மா. இனிமே நாங்க டிவி பார்க்கவே மாட்டோம். ப்ளீஸ் விடுங்க… அவன் பாவம்.”ன்னு தன்னோட பங்குக்குக் கெஞ்ச, “என்னடா நீ அவனுக்கு சப்போர்ட்டா? ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு தானே எல்லா களவாணித்தனமும் பண்றீங்க? இவனை முக்காவாசி செல்லம் கொடுத்து கெடுக்கிறதே நீதான்டா.”ன்ன அந்தப் பொம்பள, அவனையும் சேர்த்து தன் கை வலிக்க வலிக்க அடிச்சா. வலி தாங்க முடியாம ரெண்டு பசங்களும் “ஆஆஆ ஆஆஆஆ அம்மா… வலிக்குது விடுங்க.”ன்னு தொடர்ந்து அவகிட்ட சொல்லிக் கதறி அழுதுக்கிட்டு இருக்க, அதெல்லாம் அவ காதுல விழுந்த மாதிரி தெரியல.

அதனால, அதுல ஒருத்தன் அழுதுக்கிட்டே, “டேய் விஷ்வா, அம்மா இப்பல்லாம் நம்மள ரொம்ப அடிக்கிறாங்க. இப்படியே டெய்லியும் அடி வாங்கிக்கிட்டே இருந்தா நம்ம சீக்கிரம் செத்துருவோம்டா. வா… தப்பிச்சு ஓடிடலாம்.”ன்னு தன்னோட இருந்த பையன் கிட்ட மெல்லிய குரல்ல சொல்லி, அவன் கையைப் பிடிச்சு இழுத்தான். அந்தப் பொம்பள கிட்ட இருந்து தப்பிச்சு ரெண்டு பேரும் ஓடிப்போயி, ஒரு ரூமுக்குள்ள பூந்துக்கிட்டு டோரை லாக் பண்ணினாங்க. வெளியில இருந்து, “டேய் கதவைத் திறங்கடா… கதவைத் திறங்க… நான் உள்ள வந்தா உங்களை அடிச்சே கொன்னுடுவேன். உங்களை நான் தானே பெத்தேன்… நான் சொல்றதையே கேட்க மாட்டீங்களா நீங்க? டேய் விஷ்வா… விஜய்… ரெண்டு பேரும் இப்ப கதவைத் திறக்கப் போறீங்களா இல்லையா!!”ன்னு தன்னோட அடித்தொண்டையில இருந்து கத்திக்கிட்டே, அந்தப் பொம்பள விடாம கதவைத் தட்டிக்கிட்டு இருந்தா.

பயத்துல நடுங்கின உடம்போட இருந்த பசங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கட்டிப்பிடிச்சுக்கிட்டு, “அம்மா எங்களை விட்ருங்கம்மா ப்ளீஸ்… இனிமே பிராமிஸா நாங்க டிவி பார்க்க மாட்டோம். எங்களை அடிக்காதீங்க.”ன்னு அழுதபடி கெஞ்சினாங்க. அப்பவும் மனம் இறங்காத அந்தப் பொம்பள, “கதவைத் திறங்க…!! கதவைத் திறங்கடா!!”ன்னு பைத்தியம் பிடிச்சவளைப் போல திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கிட்டே வெறிக்கொண்டு கதவைத் தட்டினவ, அந்த ஸ்ட்ராங்கான மரக்கதவுல மறுபடியும் மறுபடியும் தன் தலையால முட்டி, தன்னைத் தானே காயப்படுத்திக்கிட்டு மயங்கி விழுந்தா.

பயத்துல வியர்த்து வடிய, மயக்கம் தெளிஞ்சு, “விஜய்…!!”ன்னு சத்தமா கத்திக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான் விஷ்வா. பதட்டத்துல அவனோட இதயம் படபடன்னு துடிக்க, அவனுக்கு “டேய் விஷ்வா… நான் போறேன்டா. நீதாண்டா ரைட்டு. நான்தான் தப்பு. ரொம்ப தப்புடா. நீ சொன்னதை நான் கேட்டிருக்கணும். நீ இப்படியே இருடா. எந்தப் பொண்ணையும் நம்பாத. எவளுமே சரியில்ல. எல்லாரும் ரொம்ப மோசமானவளுங்க. நம்மள மாதிரி ஆம்பளைங்க வாழ்க்கையைக் கெடுக்கிறதுக்குத்தான் அந்தக் கடவுள் சாத்தான் மாதிரி இந்தப் பொண்ணுங்களைப் படைச்சிருக்கான். எவளையும் நம்பாத விஷ்வா. உன்னை ஏமாத்திட்டுப் போயிடுங்கடா.”ன்னு உடைஞ்ச குரல்ல ஏதோ ஒரு இளைஞன் சொல்றது போல நாலாபுறமும் கேட்டுச்சு.

அந்தக் குரல் நேரம் ஆக ஆக தன் மண்டைக்குள்ள ஒலிக்கிற மாதிரி உணர்ந்த விஷ்வா, தன்னோட ரெண்டு கைகளாலயும் காதுகளை இருக்கமா பொத்திக்கிட்டு, “இல்லடா… நான் யாரையும் நம்ப மாட்டேன். என் லைஃப்ல எவளும் வரமாட்டா. எனக்கு நீ மட்டும் போதும். என்னைவிட்டுப் போயிடாதடா ப்ளீஸ்…!!”ன்னு உளறினான். கடைசியில, மறுபடியும் மறுபடியும் அவனுக்கு எக்கோ போல காதுகளுக்குள்ள “எவளையும் நம்பாத. எவளையும் நம்பாத.”ன்னு தொடர்ந்து கேட்க, “நான் நம்ப மாட்டேன். நான் நம்ப மாட்டேன். நம்ப மாட்டேன். என்னைவிட்டுப் போயிடாதடா.”ன்னு புலம்பின விஷ்வா, அந்த frustration-ஐத் தாங்க முடியாம மறுபடியும் காருக்குள்ள மயங்கி விழுந்தான்.

சில நிமிஷங்களுக்குப் பின்…

விஷ்வாவைத் தேடிக்கிட்டுத் தன்னோட ஆட்களோட அங்கே போனான் மகேஷ். அவனால விஷ்வாவோட காரையும், அதுக்குள்ள மயங்கி இருந்த விஷ்வாவையும், உள்ளுக்குள்ள கிடந்த பிஸ்டலையும், வெளியில செத்துக் கிடந்த பிராஸ்டிடியூட்டையும் வச்சு என்ன நடந்திருக்கும்ன்னு நல்லா புரிஞ்சுக்க முடிஞ்சுச்சு. அதனால, தன்னோட ஆட்கள்கிட்ட, “டேய் உடனே யாருக்கும் தெரியாம அந்த டெட் பாடிய டிஸ்போஸ் பண்ணிட்டு, இங்க பக்கத்துல ஏதாவது சிசிடிவி கேமரா இருக்கான்னு பார்த்து, அதோட ஃபுட்டேஜையும் இல்லாம பண்ணிடுங்க. Go fast…!!”ன்னு சொல்லி அவசரப்படுத்தினவன், தன்னோட இருந்த விஷ்வாவோட டூப்ளிகேட் கார் சாவியை யூஸ் பண்ணி அவனோட காரைத் திறந்தான்.

உள்ளே கிடந்த விஷ்வாவோட கன்னத்துல தட்டி, “பாஸ், கண்ணைத் தொறந்து பாருங்க பாஸ். நான் மகேஷ் வந்திருக்கேன்.”ன்னு அவன் சொல்ல, அசைவில்லாம கிடந்தான் விஷ்வா. அவன் முகத்துல தண்ணியைத் தெளிச்ச மகேஷ், மறுபடியும் “பாஸ்… எந்திரிங்க பாஸ்ஸ்ஸ்… சீக்கிரம் இங்க இருந்து நம்ம கிளம்பணும்.”ன்னு சொல்ல, சட்டெனக் கண் விழிச்ச விஷ்வா, “டேய் மகேஷ்… நீ வந்துட்டியாடா…? I miss you so much da. I love da மகேஷ் உம்மா…!!”ன்னு போதையில உளறிட்டு, அவன் கையைப் பிடிச்சு முத்தம் கொடுத்தான்.

“ஐயோ கடவுளே இது என்ன கொடுமை… இதே இவர் தெளிவா இருந்தாருன்னா, யாரா இருந்தாலும் பேயை அடிச்சு விரட்டுற மாதிரி விரட்டுவாரு. இப்ப குழந்தை மாதிரி என்ன கொஞ்சிட்டு இருக்காரே… என்னத்த சொல்ல… எல்லாம் நேரம்!!”ன்னு நினைச்ச மகேஷ், “உங்களால முடிஞ்சா, நீங்க நார்மலா இருக்கும்போது என்ன லவ் பண்ணுங்க பாஸ். அப்ப நானும் சந்தோஷமா உங்களுக்கு லவ் யூ டூ சொல்றேன். இப்ப எந்திரிச்சு உட்காருங்க. நம்ம வீட்டுக்கு போகலாம்.”ன்னவன், விஷ்வாவைத் தூக்கி ஒழுங்கா உட்கார வச்சு, அந்தக் காரோட டிரைவர் சீட்டுல போய் உட்கார்ந்து காரை ஸ்டார்ட் பண்ணி கிளம்பினான். 

அவங்க ஆட்கள் அங்க நடந்த சம்பவத்துக்குத் தடயமே இல்லாம செஞ்சுட்டு, மகேஷோட காரையும் எடுத்துக்கிட்டு அங்க இருந்து கிளம்பிட்டாங்க.

விஷ்வாவோட பங்களாவுல…

கை தாங்கலா விஷ்வாவை அவனோட ரூமுக்குக் கூட்டிட்டுப் போன மகேஷ், அவனைப் பெட்டுல படுக்க வச்சுட்டு, “ஏன் பாஸ் இப்படி எல்லாம் பண்றீங்க? பாட்டி உங்களை நினைச்சு எவ்வளவு ஃபீல் பண்றாங்க தெரியுமா?”ன்னு கேட்க, அவன் கிட்ட இருந்து பதில் வரல. அதுக்கு பதிலா, விஜய் விஜய்ன்னு பிதற்றிக்கிட்டு இருந்தான் விஷ்வா.

மானசீகமா தன் தலையில அடிச்சுக்கிட்ட மகேஷ், “நீங்க ரெண்டு நாளா எதுவுமே சாப்பிடல பாஸ். உங்களுக்கு என்ன வேணும்ன்னு சொல்லுங்க. நான் கொண்டு வரச் சொல்றேன்.”ன்னு சொல்ல, அவனைத் திரும்பிப் பார்த்த விஷ்வா, “எனக்குத் தலை வலிக்குதுடா. சூடா ஒரு டீ வேணும்.”ன்னான். “இந்த கண்டிஷன்ல இவர் டீ குடிக்கிறது சரியில்ல. இருந்தாலும் என்ன பண்ணித் தொலைக்கிறது… இப்ப நான் வேண்டாம்ன்னு சொன்னாலும் இவர் கேட்க மாட்டாரு. இவர் பண்றதையெல்லாம் பார்த்து சம்டைம்ஸ் கோபம் வந்தாலும், சம்டைம்ஸ் பாவமாதான் இருக்கு. நீங்க வேணா உங்க லைஃப்ல எந்தப் பொண்ணும் வரக்கூடாதுன்னு நினைக்கலாம் பாஸ். 

ஆனா நாங்க எல்லாருமே உங்க லைஃப்ல ஒரு ஏஞ்சல் வந்து உங்க வாழ்க்கையை beautiful-ஆ மாத்துற நாளுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கோம். அன்னைக்கு நீங்க ஹாப்பியா இருப்பீங்க.”ன்னு நினைச்ச மகேஷ், இன்டர்காம்ல கிச்சனுக்குக் கால் செஞ்சு டீ கொண்டு வரச் சொன்னான்.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured