அத்தியாயம் 19
அந்தக் கல்யாணத்துல தனக்கு இருக்குற விதிமுறைகள், நிபந்தனைகள் எல்லாத்தையும் மேகாக் கிட்ட கட்டளையிடுற மாதிரி சொன்ன விஷ்வா, “உனக்குப் புரியுதா…?”ன்னு சத்தமா கேட்க, ஸ்கூல் ஹெட்மாஸ்டரப் பார்த்துக் கலங்கிப் பயப்படுற ஸ்டூடண்ட்டைப் போல அவனைப் பார்த்து திருதிருன்னு முழிச்சிக்கிட்டிருந்த மேகா, “சரிங்க சார்”ன்னா.
“குட்”னு சொன்ன விஷ்வா, அங்க இருந்த அவனோட திங்ஸை எடுத்துக்கிட்டு, “இங்க உடைஞ்சதுக்கெல்லாம் சேர்த்து மொத்தமா நீ செட்டில் பண்ணிட்டு வா. அப்புறம், டென்ஷன்ல டாக்டர் ஃபோன் பண்ணத மறந்தே போயிட்டேன். அவரு பாட்டிக்கு ஏதோ ஒரு இன்ஜெக்ஷன் ஆஸ்திரேலியாவுல இருந்து வர வைக்கணும்னு சொன்னாரு. நான் அவரை ஆர்டர் பண்ணச் சொல்லிட்டேன். மொத்தமா 10 கோடி ஆகும்னு சொன்னாரு. அதனால அந்தப் பணத்தை சீக்கிரம் ப்ராசஸ் பண்ணிடு”ன்னு மகேஷ்கிட்ட சொல்லிட்டு, “நீ என்கூட வா”ன்னு மேகாவைப் பார்த்துட்டு வேகமா கதவை நோக்கிப் போனான்.
“நான் மட்டும் எப்படி இவர்கூட தனியாப் போறது?”ன்னு நெனைச்ச மேகா நகராம அப்படியே நிக்க, “என்னமா நீன்னு யோசிச்சிட்டு இருக்க..? அவர் எதுன்னாலும் ஒரு தடவைதான் நார்மலா சொல்லுவாரு. அவரு கோவக்காரனா மாறி உன்ன ஏதாவது பண்றதுக்குள்ள வேகமா போ!”ன்னு சொன்னான் மகேஷ்.
அதனால வேக வேகமா அடி எடுத்து வச்சு மேகா போக, “ஏய், ஃபேஸை கவர் பண்ணிட்டுப் போம்மா! அஞ்சு விரல் கன்னத்துல பதிஞ்சது சும்மா பார்த்தாலே அழகாத் தெரியுது!”ன்னு அவளக் கூப்பிட்டுச் சொன்னான் மகேஷ்.
“சரி சரி ப்ரோ, நான் பாத்துக்குறேன், தேங்க்ஸ்”னு சொன்ன மேகா, தன்னோட நீளமான கூந்தலைப் போட்டு முகத்தை ஓரளவுக்கு மறைச்சுக்கிட்டு, ஓட்டமும் நடையுமா விஷ்வாவைப் பின்தொடர்ந்து பார்க்கிங் ஏரியாவுக்குப் போனா.
தன்னோட காருக்குள்ள ஏறி உக்காந்த விஷ்வா, “உனக்கு என்ன அதுக்குள்ள வயசாயிடுச்சா? இவ்ளோ மெதுவா நடந்து வர்ற? சீக்கிரம் ஏறு”ன்னான்.
அதனால, “என்ன ஏதாவது சொல்லி திட்டிக்கிட்டே இருக்குறது இந்த மனுஷனுக்கு ரொம்ப ஜாலியா இருக்கும்போல! சரியான சிடுமூஞ்சி!”ன்னு நெனைச்ச மேகா போயி பின் சீட்ல உக்காந்தா.
கோவமா அவளத் திரும்பிப் பார்த்த விஷ்வா, “நான் என்ன உனக்கு டிரைவரா? ஜாலியாப் போயிப் பின்னாடி உக்காருற! ஒழுங்கா முன்னாடி வந்து உக்காருடி!”ன்னு அவள மிரட்டினான்.
“ச்ச்… சரியான இம்சை!”ன்னு முனகினபடி வந்து முன் சீட்ல அவனருகில் உக்காந்த மேகா, கார் டோரை வேகமா அடிச்சுச் சாத்தினா.
அதனால எரிச்சலடைஞ்ச விஷ்வா, “என்ன நீ? என் மேல இருக்குற கோவத்தை அதுல காட்டுறியா, இடியட்? என் கார் எனக்கு எவ்ளோ முக்கியம்னு உனக்குத் தெரியுமா? உன்னால ஏதாவது டேமேஜ் ஆச்சுன்னா இப்போ ஊர்ல இருந்து கிளம்பி வர்றாங்களே, உங்க அண்ணனுங்க, அவனுங்க வந்து நீ பண்ணதுக்கு காம்பன்சேஷன் கொடுப்பாங்களா? முதல்ல நீ இதுக்கு முன்னாடி இந்த மாதிரி காஸ்ட்லியான கார்ல எல்லாம் போயிருந்தாதானே அதோட அருமை உனக்குத் தெரியும்! சரியானப் பட்டிக்காடு!”ன்னான்.
“அதான் ஒண்ணும் ஆகலல்ல? அப்புறம் எதுக்கு இவ்ளோ பேசுறீங்க? இதுல தேவையில்லாம எங்க அண்ணனுங்களையெல்லாம் எதுக்கு இழுக்குறீங்க? நீங்க வச்சிருக்கிறது முதல்ல ஓல்டு மாடல் கார். இதே பிராண்ட்லேட்டஸ்ட் கார் ரெண்டு மூணு கலர்ல ஆதித்யா வச்சிருக்கான். அவன்கூட அந்தக் கார்ல நான் நிறைய தடவை டிராவல் பண்ணி இருக்கேன். அதனால என்னைப் பட்டிக்காடு அப்படி இப்படின்னு எல்லாம் சொல்ற வேலை வச்சுக்காதீங்க!”ன்னு கோவமா மேகா சொல்ல,
“நீ இப்படித் தான்டி அவன்கிட்ட ஓவரா வாய் பேசியிருப்ப. அதான் உன்னைக் கழட்டி விட்டுட்டு ஆதித்யா உன் ஃப்ரெண்டை பிக்கப் பண்ணிட்டான். அவனுக்கு ஏதோ நேரம் நல்லா இருந்திருக்கு அதான் அவன் உன்கிட்ட இருந்து தப்பிச்சுட்டான். நான்தான் மாட்டிக்கிட்டேன்”ன்னு சொன்ன விஷ்வா, காரை ஸ்டார்ட் பண்ணினான்.
அவனோட வார்த்தைகளால ஊமையான மேகா, “ஒருவேளை இவரு சொல்றதுதான் உண்மையா இருக்கும்போல! இந்த காலத்துல உண்மையாக, ஸ்ட்ரெயிட் ஃபார்வர்டா இருக்கிறவங்களை யாருக்குப் பிடிக்குது? எல்லாரும் அந்த மீரா மாதிரி ஸ்வீட் ஸ்வீட்டா தேன் ஒழுகப் பேசுறவங்களைத்தானே பெருசா நினைக்கிறாங்க! எனக்கு அதெல்லாம் வராது. வரவும் வேண்டாம்”னு நெனைச்சவ, தன் முகத்தைத் திருப்பிக்கிட்டா.
அவ கண்ணெல்லாம் கலங்கி இருந்துச்சு.
“என்ன இவ நல்லாத்தானே இருந்தா? திடீர்னு மூஞ்சியை இப்படி வச்சிருக்கா! ஒருவேளை நான் அப்படி சொன்னதுனால சோகமாயிட்டாளா?”ன்னு நெனைச்ச விஷ்வாவுக்கு அப்பவும் அவள் கிட்ட சாரி கேட்கத் தோணல.
இருந்தாலும், “இந்தப் கார் என் மனசுல ஒரு ஸ்பெஷல் இடம் பிடிச்சிருக்கு மேகா. என்னோட பிறந்தநாளுக்கு என் தம்பி இதை எனக்குப் பரிசு கொடுத்தான். அப்போல இருந்து இதைத் தவிர நான் வேற எந்தக் காரையும் யூஸ் பண்றதில்ல. இதே மாதிரி, இல்லைனா இதைவிட பெட்டரா வேற கார் என்னால வாங்க முடியும். ஆனா அது இந்தக் காராக முடியாது”ன்னு நிதானமா சொன்னான் விஷ்வா.
“இப்போ இவர் எனக்காகத்தான் இந்த எக்ஸ்பிளனேஷன் கொடுக்கிறாரா? அந்த அளவுக்கு இவர் சாஃப்ட் ஸ்போக்கனா?”ன்னு யோசிச்ச மேகா, “சாரி மிஸ்டர் விஷ்வா. இனிமே நான் கவனமா இருக்கேன்”ன்னா.
ஆதித்யாவோட ஆஃபீஸ்ல:
தன்னோட அப்பா மரகதமணி மற்றும் அசிஸ்டன்ட் பாலாவுடன் தன்னோட ஆஃபீஸ்ல இருக்குற பிரைவேட் ரூம்ல உக்காந்து குடிச்சுக்கிட்டிருந்தான் ஆதித்யா. ராவாக ஒரு கிளாஸ் வோட்காவை தன் மகனுடன் சேர்ந்து குடிச்ச மரகதமணி, “என்னடா உன்னோட மாஸ்டர் பிளான் இப்படி மண்ணைக் கவ்விச்சு! நீ விஷ்வாவுக்கு ஸ்கெட்ச் போட்ட. உன் ஆளையே வச்சு அவன் ஒரு ஸ்கெட்ச் போட்டு எல்லாத்தையும் ஒரே செகண்ட்ல சால்வ் பண்ணிட்டான் பாரு! அதான் விஷ்வா. நீ இன்னும் அவன் கிட்ட இருந்து கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு”ன்னாரு.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)