Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 15

மூர்கனின் காதலி CH 15

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 15 

தான் தற்கொலை செஞ்சிக்கப் போறதா சொன்ன மேகா பால்கனியில இருந்து கீழே குதிக்கிறதுக்காக வேகமா போனா. அவளை விட வேகமா சோபால இருந்து எந்திரிச்சு ஓடிப்போய், ரெண்டு எட்டில்லாமத் தாவி அவளைப் பிடிச்சு அறைக்குள்ள விஷ்வா தள்ளிவிட, தரையில போய் பொத்தென்று விழுந்தா மேகா. அவளைக் காப்பாத்துற வேகத்துல, கீழே உடைஞ்சு கிடந்த பீர் பாட்டிலோட கண்ணாடித் துண்டுகளை அவன் தெரியாம மிதிச்சிருந்ததால், அவனோட கால்கள்ல இருந்து இரத்தம் வந்துக்கிட்டு இருந்துச்சு.

கீழே விழுந்து கிடந்த மேகா எந்திரிச்சு அவனைப் பாவமாப் பார்த்து “சார்..!!” ன்னு எதையோ சொல்ல வந்தா. அவள் பேசி முடிக்கிறதுக்குள்ள அவளோட கன்னத்துல பளார்ன்னு விஷ்வா அறைய, தன் கன்னத்தைப் பிடிச்சுக்கிட்டு மறுபடியும் கீழே விழுந்தா அவள்.

“ஏதோ ஒரு வேகத்துல இப்படிப் பண்ணிட்டேன். சூசைட் பண்றதெல்லாம் தப்பு. பண்ணாதன்னு சொல்லியிருந்தா கேட்டிருக்கப் போறேன். அதுக்கு எதுக்கு சார் இப்படிப் பலார்னு அடிச்சீங்க..? எனக்கு ரொம்ப வலிக்குது தெரியுமா? இதுவரைக்கும் யாருமே என்னை அடிச்சதில்ல.” என்று கண்ணுல கண்ணீரோட தன்னோட உதடுகளைப் பிதுக்கிக்கிட்டு குழந்தை மாதிரி கேட்டுட்டுத் தேம்பித் தேம்பி அழுதா மேகா.

அவள் திரும்பத் திரும்ப “சூசைடு”ங்கிற வார்த்தையைப் பயன்படுத்திக்கிட்டே இருந்ததால் விஷ்வாவை அது மனசுல ரொம்பவே பாதிச்சுது. அவனோட தலையில யாரோ சுத்தியலை வெச்சு நங் நங்னு அடிக்கிற மாதிரி உணர்ந்த விஷ்வா, தன் தலையைப் பிடிச்சுக்கிட்டு “ஆஆஆ..!!” ன்னு சத்தமா கத்தினான். அதனால, அழுறதை நிறுத்திட்டு ஷாக் ஆகி அவனைப் பார்த்த மேகா, “என்ன இவரு திடீர்னு பைத்தியம் பிடிச்ச மாதிரி கத்துறாரு??” ன்னு நினைச்சுப் பயத்துல அப்படியே ரெண்டு அடி பின்னே நகர்ந்து போய் உட்கார்ந்தா.

“ஹே விஷ்வா… என்ன டா பண்ணிக்கிட்டு இருக்க நீ? இவ சொல்றதெல்லாம் உண்மைன்னு நம்பி நீ இவளை மேரேஜ் பண்ணிக்கப் போறியா? டேய் இவ பொய் சொல்லிட்டு இருக்கடா. இவளை நம்பாத. எல்லாப் பொண்ணுங்களும் ஒரே மாதிரிதான். இவளை நம்பி மோசம் போயிடாத.”ன்னு விஷ்வாவோட மண்டைக்குள்ள மறுபடியும் அந்தக் மர்மக் குரல் கேட்டுச்சு. அதனால டிஸ்டர்ப் ஆன விஷ்வா, “இல்ல… நான் நம்ப மாட்டேன். யாரையும் நம்ப மாட்டேன். நீ எதுவும் சொல்லாத. இங்க இருந்து போ.” ன்னு தன்னோட காதுகளைப் பொத்தியபடி தன் கண்களை இறுக்கமா மூடிக்கிட்டுச் சொன்னவன், தன் கைக்குக் கிடைச்ச பொருட்களை எல்லாம் அங்கேயும் இங்கேயும் தூக்கி எறிஞ்சான். 

டெக்கரேஷனுக்காக வெச்சிருந்த பீங்கான் பொருட்கள் எல்லாம் டமால் டுமீல்ங்கிற சத்தத்தோட கீழே விழுந்து உடைஞ்சுது. அதனால பயந்துபோன மேகா, “ஆஆஆ..!! Stop it விஷ்வா. என்ன பண்ணிட்டு இருக்கீங்க? எனக்கு ரொம்பப் பயமா இருக்கு.”ன்னு சத்தமா சொல்ல, அவளோட குரலைக் கேட்டு இன்னும் வெறி பிடிச்சவனைப் போல மாறினான் விஷ்வா.

🛣️ மதுரையில் பரபரப்பு!

“என்னலே, நம்ம பசங்க எல்லாம் வந்துட்டானுங்களா??”ன்னு காளீஸ்வரன் கேட்க, “நம்ம பசங்க எல்லாரும் கிளம்பிட்டாங்க அண்ணே. பின்னாடி எல்லாம் லாரியில வந்துட்டு இருக்கானுங்க.”ன்னான் மணிகண்டன். வேகமா அவங்ககிட்டப் போன மேகாவோட மூணாவது அண்ணன் மாரிமுத்து, “அண்ணா… கொஞ்சம் பொறுமையா என்ன பண்ணலாம்னு யோசிச்சுப் பண்ணலாம். அந்த விஷ்வா ரொம்பப் பெரிய ஆளு. அவன்கிட்ட இப்படி வேல் கம்பு வீச்சருவாவை வெச்செல்லாம் சண்டை போட்டு ஜெயிக்க முடியாது. பிரஸ் மீட்ல எல்லாருக்கும் தெரியுற மாதிரி மேகா அவரை லவ் பண்றதா சொல்லியிருக்கா. சோ, நம்ம போலீஸ், கோர்ட்டுன்னு போனாக்கூட எதுவும் பண்ண முடியாது. நம்ம மூணு பேரும் மட்டும் போய் முதல்ல தங்கச்சிகிட்டயும் விஷ்வா சார்கிட்டயும் பேசிப் பார்க்கலாம். அப்புறம் பிரச்சினைன்னா இவங்களை எல்லாம் வரச் சொல்லலாம். போகும்போதே கூட்டிட்டுப் போய்ப் பிரச்சினை பண்ண வேண்டாம் அண்ணா.”ன்னான்.

“இப்ப என்ன? நாம அங்க போனா… என்ன பண்ணிக் கிழிச்சிருவான் அந்த விஷ்வா? என் தலையைச் சீவிட்ருவானா? நாம எல்லாம் மதுரைக்காரங்கலே. மான ரோசத்தோட வாழ்ந்து பழகினவங்க. அவன் பணக்காரன்னு எல்லாம் அவனைப் பார்த்துப் பயந்து நடுங்க முடியாது. என்ன நடந்தாலும் பரவாயில்லை. அவனா நம்மளான்னு ஒரு கை பார்த்துப்புடலாம்.”ன்னு சொன்ன மணிகண்டன், தன்னோட வேட்டியை மடிச்சுக் கட்டிக்கிட்டு, முட்டத் தயாராக இருக்கிற காளைபோலச் சீறிக்கொண்டு நின்னான்.

அதனால், “அண்ணா… மணி இப்படித்தான் எல்லாத்துக்கும் சீறிக்கிட்டு இருப்பான். ஆனா உங்களுக்கு என்ன அண்ணா ஆச்சு? நீங்களும் அவன்கூடச் சேர்ந்துக்கிட்டு இப்படி எல்லாம் பண்றீங்க? ஏதாவது பெரிய பிரச்சினை ஆயிடப் போகுது! எனக்கு இதெல்லாம் சரியாப் படல அண்ணா. நீங்க இந்த ஊர் பிரசிடெண்ட். நம்ம தப்பா சின்னதா ஏதாவது பண்ணாக்கூட அது வெளிய பெருசா தெரிஞ்சுரும். நம்ம ஊருக்குள்ள உங்களுக்குன்னு ஒரு பேர் இருக்குல்ல… அதை நெனச்சுப் பாருங்க.”ன்னு தன்னோட பெரிய அண்ணன் காளீஸ்வரன்கிட்ட முத்து பக்குவமாச் சொல்ல,

“நம்ம குடும்ப மானத்தை வாங்குறதுக்கு ஏற்கனவே நம்மகூடப் பொறந்தவ டி.வி. நியூஸ்ல கண்டதைப் பேசி எல்லாரும் நம்மளை நாக்கு மேல பல்லைப் போட்டுப் பேசுற மாதிரி பண்ணிட்டாளே… இப்ப நம்ம நிதானமா இருந்தா மட்டும் போன குடும்பக் கௌரவம் மறுபடியும் வந்துருமா? என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம் முத்து. ஏதாவது போலீஸ் கேசுன்னு ஆனா, நம்ம பசங்களை நீதான் வெளிய எடுக்கணும். அதுக்குத்தான் உன்னை வக்கீலுக்குப் படிக்க வெச்சிருக்கோம்.”ன்ன காளீஸ்வரன், முத்துவோட பேச்சைப் புறக்கணிச்சுட்டு எல்லாரையும் கூட்டிக்கிட்டுச் சென்னைக்குக் கிளம்பினான்.

தொடரும்… 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured