அத்தியாயம் 123
விஷ்வாவும், மேகாவும் வானில் parachute-ல் பறந்தபடி, தங்கள் காதலை பரிமாறிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதை பார்த்து இயற்கைக்கே பொறாமை வந்துவிட்டது போல. திடீரென வானிலை மாறி அங்கே மழை வருவதற்கான சாயல் தெரிந்தது. அதை அவர்கள் சுதாரித்துக்கொண்டு தரை இறங்குவதை பற்றி யோசிப்பதற்குள் மழை வேகமாக கொட்டத் தொடங்கியது.
அது நள்ளிரவு நேரம் என்பதால்; மழை ஒரு பக்கம் வெளுத்து வாங்க, சூறாவளி காற்றும் சுற்று சுற்றி அடித்தது. அதில் அவர்களது காதல் கொண்ட இதயங்கள் இரண்டும் parachute-ல் அங்குமிங்கும் உயிர் பிழைக்க ஊசலாடிக் கொண்டிருந்தது.
பதறிய மேகா “டேய் என்னடா அப்படியே சும்மா இருக்க.. ஏதாவது செஞ்சு சீக்கிரம் என்ன காப்பாத்து.
எனக்கு birthday wish பண்றேன்னு கூட்டிட்டு வந்து இன்னைக்கே எனக்கு death day ஆக்கிராத. எனக்கு மட்டும் ஏதாவதாகி, நீ உயிரோட இருந்தினா.. நான் பேயா வந்து உன்னை போட்டு தள்ளிடுவேன் பாத்துக்கோ.” என்று அவன் காதில் கத்த, “ஹே லூசு… நீ இப்படி என் காதுக்கிட்ட வந்து கத்துனா என் மூளை எப்படி டி வேலை செய்யும்..?? கொஞ்ச நேரம் வாய மூடிட்டு இரு. நான் யோசிக்கணும்..!!” என்று விஷ்வாவும் பதிலுக்கு கத்தினான்.
“என்னது இனிமேதான் யோசிக்கவே போறியா..?? நம்ம செத்ததுக்கு அப்புறம் யோசிச்சு என்னடா பண்ண போற..?? இது எல்லாமே உன்னோட planதானே டா.. emergency situation வந்தா என்ன பண்றதுன்னு யோசிச்சு நீதான் safety measuresஐ ready பண்ணி வச்சிருக்கணும். You fool.. இன்னைக்கு உன்னால உன்க்கூட சேர்ந்து நானும் சாகப் போறேன்.” என்று மேகா கோபமாக சொல்ல, “அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது. நீ மூடு. நான் செத்தாலும் அதுக்குள்ள உன்ன காப்பாத்திட்டு தான் சாவேன். போதுமா..??” என்ற விஷ்வா ஒரு நொடி தன் கண்களை மூடி காற்று அடிக்கும் திசையை கவனித்தான்.
பின் தங்களது உடல்களை அதற்கு ஏற்றவாறு அசைத்து குறிப்பிட்ட திசையில் ஒரே பக்கமாக அவர்களது weight balance செய்து, அவனுக்கு தெரிந்த அனைத்து வித்தைகளையும் பிரயோகித்து எப்படியோ சிரமப்பட்டு அந்த parachuteஐ தரை இறக்கினான்.
மழை பெய்து கொண்டு இருந்ததாலும், காற்று பலமாக வீசியதாலும், அங்குமிங்கும் மோதி மோதி வந்ததில் மொத்தத்தில் அது smooth landingஆக இருக்கவில்லை. ஆனால் இத்தனை பெரிய சவாலை எதிர்த்து அவர்கள் இருவரும் சிறு கீறல்களுடன் உயிர் தப்பியதே பெரிய விஷயம் தான்.
அதை நினைத்து சந்தோஷப்பட்ட மேகா எழுந்து நின்று வானத்தைப் பார்த்து தன் இரு கைகளையும் விரித்து “தேங்க்யூ கடவுளே.. தேங்க்யூ பூமி மாதா. என் மேல இரக்கப்பட்டு நீங்க எல்லாம் சேர்ந்து என் birthday அதுவுமா என்னை கொல்லாம விட்டுட்டீங்க.” என்று சத்தமாக கத்திச்சொல்ல, எழுந்து அவள் அருகில் சென்ற விஷ்வா “last minuteல கரெக்டா யோசிச்சு பிளான் பண்ணி உன்னை காப்பாத்துனது நானு. தேங்க்ஸ் மட்டும் கடவுளுக்கா..??” என்று கேட்டான்.
வந்த கோபத்தில் அவன் சட்டையை பிடித்து இழுத்து “இந்த emergency situationஏ உன்னால தான் வந்துச்சு. இதுல நான் உனக்கு வேற தேங்க்ஸ் சொல்லனுமா..?? நீ என்னை கொல்ல பாத்ததுக்கு.. உன்ன இன்னும் நான் கொல்லாம வச்சிருக்கறனேன்னு சந்தோஷப்படு டா.” என்ற மேகா அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ள,
இரண்டடி பின்னே சென்று தடுமாறி நின்றான் விஷ்வா.
மழை தொடர்ந்து கொஞ்சமும் break எடுக்காமல் கொட்டிக் கொண்டே இருந்ததால், தொப்பலாக நனைந்திருந்த அவர்கள் இருவருக்கும் ஜில்லென்ற காற்றால் குளிரில் உடல் நடுங்கியது. இன்னும் இரண்டு நாட்களில் பௌர்ணமி வரப்போகிறது என்பதால் ஓரளவிற்கு நிலா வெளிச்சம் இருந்தது. இருப்பினும் அவ்வப்போது அதையும் மேகமகள் ஒளித்து வைத்து விளையாட, அவர்களுக்கு எதிரில் இருக்கும் பொருட்களைக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சில சமயங்களில் அந்த இடம் இருட்டானது.
விஷ்வாவின் mobilephone waterproof கொண்டது என்பதால் அந்த மழையிலும் அது work ஆனது. ஆனால் network coverage சுத்தமாக இல்லை.
“இந்த ஃபோன வச்சிக்கிட்டு யாருக்கும் கால் பண்ண முடியாது. எப்படியும் இந்நேரம் நம்மள காணோம்னு தேட ஆரம்பிச்சுருப்பாங்க. அவங்களா நம்மள கண்டுபிடிச்சு இங்க வந்தா தான் உண்டு. Flashlight off ஆகுறதுக்குள்ள நம்ம மழையில நினையாம இருக்க ஒரு இடத்தை கண்டுபிடிக்கணும். சீக்கிரம் வா.” என்ற விஷ்வா அவள் கையை பிடித்துக்கொண்டு வேகமாக நடந்தான்.
“கொண்டு வந்து இப்படி ஒரு இடத்துல நல்லா என்னை சிக்க வச்சிட்டு.. வியாக்கியானமா அத பண்ணலாம் இத பண்ணலாம்னு வாய் பேசுறியா நீ..?? நம்ம இங்க இருந்து வீட்டுக்கு போற வரைக்கும் நீ எதுவுமே பேசக்கூடாது. எனக்கு நீ பேசினாலே அப்படியே உன் தலையில கல்ல எடுத்து தூக்கி போட்டு கொன்னுடலாமான்னு யோசிக்கிற அளவுக்கு கோபம் கோபமா வருது. ஒழுங்கா வாய மூடிட்டு இரு” என்று கோபமாக சொன்ன மேகா அவனுடன் வேண்டா வெறுப்பாக நடந்தாள்.
இப்படியே அவர்கள் வெகு நேரமாக தொடர்ந்து மழையில் நனைந்தபடி காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்று பின் ஒரு ஒத்தையடி பாதையை அடைந்தார்கள். அதற்குள் அவர்கள் ஒரு அரை மணி நேரம் நடக்க, அவர்கள் முன்னே சிறிய வீடுகள் ஆங்காங்கே தென்பட்டது. மழை பெய்து கொண்டிருந்ததால் எங்கேயும் current இல்லை. அந்த ஏரியா முழுவதிலும் எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டாக இருந்தது. அவர்கள் இருவரும் தங்கள் கண்களில் பட்ட முதல் வீட்டின் அருகே சென்று பார்த்தார்கள்.
அந்த பாலடைந்து போய்க் கிடந்த பழைய வீடு இடிந்து பராமரிக்க ஆளில்லாமல் மோசமான நிலையில் இருந்தது. “என்ன இந்த வீடு எப்படி இருக்கு… இந்த இடத்தை பார்த்தாலே எங்கயும் மனுஷங்க வாழ்ற மாதிரியே தெரியல… ஒருவேளை நம்ம கீழே விழுந்ததுல ஏதோ ஆளில்லாத மர்ம ஊருக்குள்ள மாட்டிகிட்டோமோ..!!” என்று விஷ்வா பயந்த குரலில் சொல்ல, “என்ன இவனே இப்படி பயப்படுறான்..!!” என்று நினைத்து அவனைவிட இன்னும் பயந்த மேகா “எல்லாம் உன்னால தான்டா. நான் உன்கிட்ட கேட்டனா.. உன்னை இப்படி எல்லாம் பண்ண சொல்லி..??” என்று கேட்டுவிட்டு சரமாரியாக அவனை அடிக்க தொடங்கினாள்.
சிரித்துக் கொண்டே அத்தனை அடிகளையும் சந்தோஷமாக வாங்கிக் கொண்ட விஷ்வா, “ஏய்.. நீ இந்த இடத்தை பார்த்து பயப்படுறேன்னு சும்மா சொன்னேன்டி. அது எப்படி இங்க இத்தனை வீடு இருக்கும்போது, இங்க மனுஷன் வாழாம இருப்பான்..?? கொஞ்சம்க்கூட brainக்கு வேலை கொடுத்து common senseஐ யூஸ் பண்ண மாட்டியா நீ..??” என்று கிண்டலாக கேட்க, “போதும். அதான் என்னை விட உனக்கு மூளை நல்லா பெருசா இருக்குல்ல.. நீ இங்க யாரையாவது கண்டுபிடிச்சு அவங்ககிட்ட நம்ம தப்பிக்க ஹெல்ப் கேளு.” என்றாள் மேகா கோபமாக.
“நீ சொன்னாலும், சொல்லலைனாலும் நான் அதத்தான் பண்ண போறேன்.” என்ற விஷ்வா அவளுடன் அடுத்தடுத்த வீடுகளுக்கு சென்று பார்த்தான். அவன் கண்களில் பட்ட அத்தனை வீடுகளும் ஆளில்லாமல் பாழடைந்து போய்க் கிடந்தது.
“அது எப்படி இவ்ளோ பெரிய ஊர்ல ஒரு வீட்லக்கூட ஆள் இல்லாம இருப்பாங்க..?? Something is strange here. இங்க நம்ம Carefulஆ தான் இருக்கணும்.” என்று நினைத்த விஷ்வா மேகாவின் கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு அவளுடன் தொடர்ந்து உள்ளே சென்றான்.
சில நிமிட பயணத்திற்கு பிறகு அவர்கள் கண்களில் ஒரு பழைய government school building தென்பட்டது.
அதுவும் சிதைந்து போய்தான் காணப்பட்டது. அங்கேயும் யாரும் இல்லை. இருப்பினும் அவர்களுக்கு அங்கே தங்க இடம் கிடைத்தது. அங்கே இருந்த Office room கொஞ்சம் decentஆக இருந்ததால் இருவரும் உள்ளே சென்று benchல் அமர்ந்தார்கள். பின் அங்கே உருப்படியாக ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்த விஷ்வா பாதி எரிந்த candle ஒன்றை கண்டுபிடித்தான்.
“ச்ச்.. இப்போ இத பத்த வைக்க தீப்பெட்டி வேணுமே..!! அதுக்கு எங்க போறது..??” என்று நினைத்து தீப்பெட்டியை தேடினான். சில நிமிட தேடலுக்கு பின் அவன் கையில் ஒரு பழைய தீப்பெட்டி கிடைத்தது.
நமுத்து போய் கிடந்த அந்த தீப்பெட்டியுடன் போராடி ஒருவழியாக மெழுகுவர்த்தியை பற்றவைத்தான் விஷ்வா. குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த மேகா அங்கே கிடந்த நோட் புக்ஸ்களை எல்லாம் தீயில் காட்டி எரித்து குளிர் காயத் தொடங்கினாள்.
இவ்வளவு நேரம் திக்கு திசை தெரியாமல் மழையில் சுற்றி திரிந்ததற்கு இப்படி ஒரு இடத்தில் வந்து செட்டில் ஆனதால் விஷ்வா அடுத்து “இங்க இருந்து எப்படி தப்பிச்சு போறது..??” என்று யோசித்துக் கொண்டிருக்க, அவனையே பார்த்தபடி அமர்ந்திருந்த மேகா கலங்கிய கண்களுடன் “யார் அந்த பொண்ணுன்னு இப்பயாவது நீ சொல்லுவியா மாட்டியா விஷ்வா..??” என்று உடைந்த குரலில் கேட்டாள். பாவமாக அவளை திரும்பி பார்த்தான் விஷ்வா.
தொடரும்..