Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 121

மூர்கனின் காதலி CH 121

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 121

குலதெய்வம் கோவில் கல்யாணம்
காளீஸ்வரன் வீட்டு குலதெய்வ கோவிலில் வெற்றி மற்றும் கலைச்செல்வியின் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“ஏன் எல்லாமே ரொம்ப சிம்பிளா பண்றீங்க..?? உங்களுக்கு ஓகேன்னா சொல்லுங்க. நானே எல்லாத்தையும் arrange பண்ணி grandஆ இவங்களுக்கு marriage பண்ணி வைக்கிறேன்.” என்று விஷ்வா சொல்ல,

“இதுக்கு பேரு சிம்பிளா பண்றது இல்லப்பா.‌ கல்யாணத்தை இப்படித்தான் முறைப்படி பண்ணனும். வீண் ஆடம்பரம் செலவு செஞ்சு நம்ம குடும்பத்துல பெரிய பெரிய மண்டபத்துல எல்லாம் யாருக்கும் கல்யாணம் பண்ணி பழக்கமே இல்ல. எந்த விசேஷம் செஞ்சாலும் நம்ம இருக்கிற இடத்துல செய்யணும். அப்பதான் அக்கம் பக்கம் இருக்கிறவங்க எல்லாம் வந்து‌ வயிறார சாப்பிட்டு மனசார வாழ்த்திட்டு போவாங்க.

கல்யாணத்தைப் பொறுத்த வரைக்கும் காலங்காலமா நாங்க நம்ம குலதெய்வம் கோயில்லதான் வைப்போம்.
‌ உங்க கல்யாணம்தான் தினுசு தினுசா எப்படி எப்படியோ நடந்துச்சு.‌ அதான் வெற்றி கல்யாணத்தையாவது முறைப்படி ஒழுங்கா நடத்தணும்னு நான் எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்சிருக்கேன்.” என்றார் காளீஸ்வரன்.‌ கேள்வி கேட்ட விஷ்வாவிற்கு nose cut ஆகிவிட்டது. வழக்கம் போல இந்த திருமணத்திலும் எப்போதும் சௌபரணிகாவும் சேரனும் ஒன்றாகத்தான் இருந்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் தாமரை இலை மேல் விழுந்த நீர்த்துளி போல ஒட்டாமல் இருப்பது அவர்களைக் கூர்ந்து கவனித்த முத்துவின் கண்களில் அப்பட்டமாக தெரிந்தது.

அதனால் மேகாவை அழைத்து “இந்த பொண்ணுக்கு என்னாச்சு..?? எப்பயும் கலகலன்னு பார்க்க சந்தோஷமா இருப்பாங்களே.. இப்போ இவங்க முகத்துல முன்ன இருந்த சந்தோஷமும் பொலியும் இல்ல.‌

அவங்களுக்கும் அவங்க husbandக்கும் ஏதாவது பிரச்சனையா..??” முத்து விசாரிக்க, “தெரியலன்னா. ஆனா எனக்கும் அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை இருக்கும்ன்னு தான் தோணுது. நீங்க சொன்ன மாதிரி சௌபர்ணிகா அக்கா முன்ன இருந்த மாதிரி இப்ப இல்ல. நானும் அப்பப்போ indirectஆ அவங்ககிட்ட என்னன்னு கேட்டு பார்த்தேன். அவங்க சரியா answer பண்ணல. அவங்களுக்கு சொல்ல விருப்பம் இல்லாதப்ப‌ நம்ம எப்படி Force பண்ணி கேக்கறதுன்னு அப்படியே விட்டுட்டேன்.” என்றாள் மேகா.

“ஏன்மா பிரச்சனை இருக்குன்னு தெரிஞ்சும் அது எப்படிமா அப்படியே விட முடியும்..?? உன்னால அவங்ககிட்ட பேச முடியலன்னாலும், நீ விஷ்வா சார் கிட்ட சொல்லி அவரை அவங்ககிட்ட பேச சொல்லலாம்ல..??” முத்து ஒருவித பரிதவிப்புடன் கேட்க, அவன் விஷ்வாவை பற்றி பேசியதால் எரிச்சலடைந்த மேகா “அவருக்கு அந்த அளவுக்கு எல்லாம் அறிவு இல்லன்னா. அவர் கிட்ட பேசுறது waste. நீங்க வேணும்னா அவர் கிட்ட பேசி பாருங்க.” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டாள். “நான் போய் இதை பத்தி எப்படி அவர்கிட்ட பேச முடியும்..?? உங்களுக்கு என்ன எங்க அக்கா வாழ்க்கை மேல எதுக்கு அவ்ளோ அக்கரைனு அவர் கேட்டுட்டா நான் என்ன பதில் சொல்றது..??” என்று நினைத்த சேரன் சோகமானான்.

கோவில் வளாகத்தில் உள்ள சிறிய மண்டபத்தில் அழகாகவும் எளிமையாகவும் வெற்றி, கலைச்செல்வியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.‌ அவன் தாலி கட்டும்போது கலைச்செல்வி அழுததால் கட்டி முடித்துவிட்டு, “எதுக்குடி தாலி கட்டும்போது அப்படி அழுகிற..?? பாக்குறவன் நான் என்னமோ உன்ன கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்றேன்னு நினைக்க மாட்டானா..??” என்று கேட்டான் வெற்றி.

“அதுவா.. இப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில எப்பயுமே வராமயே போயிடுமோன்னு நினைச்சு‌ நான் தினமும் நைட்டு தூங்காம அழுதிருக்கேன்.‌ இன்னைக்கு அந்த நாள் வந்திருச்சுல்ல.. அதான் சந்தோஷத்துல கண்ணு கலங்கிருச்சு.” என்று சொல்லிவிட்டு கலை சிரிக்க, விளையாட்டாக அவள் கன்னத்தில் கிள்ளிய வெற்றி “இனிமே நீ எதுக்காகவும் அழவே கூடாது சரியா..??” என்று கேட்டான். சரி என்று தலையாட்டினாள் அவள்.

அவர்கள் அருகில் நின்று கொண்டிருந்த விஷ்வா “கட்டின பொண்டாட்டி சந்தோஷத்துலக்கூட அழக்கூடாதுன்னு நினைக்கிறான் இவன்.. ஆனா நான் என் பொண்டாட்டிய தெரிஞ்சோ தெரியாமலோ நிறைய தடவை அழ வெச்சிட்டேன். நான் பண்ண mistakes எல்லாத்தையும் correct பண்ண அவ எனக்கு ஒரே ஒரு chance குடுத்தாக்கூட போதும். ஆனா அத அவ குடுக்க மாட்டா. சரியான கல்நெஞ்சகாரி. இவ மட்டும் இப்படி எல்லாம் என்னை கொடுமைப்படுத்துறா.. ஆனா கடைசியில என்ன feelings இல்லாத robotன்னு சொல்லவா..!!” என்று நினைத்து சோகமாக அங்கிருந்து சென்றான்.

மற்ற bodyguards போல சாராவும் மற்ற பெண்களும் கருப்பு நிற uniform அணிந்திருக்க, அவர்களை அழைத்த காளீஸ்வரன் “ஏம்மா.. நீங்க எல்லாம் இங்க வேலை பாக்க வந்திருந்தாலும் பரவால்ல. இது கிராமம். கல்யாண வீட்டுக்கு நாலு பேர் வருவாங்க போவாங்க. எல்லார்கிட்டயும் நீங்க யாருன்னு கூப்பிட்டு சொல்லிட்டு இருக்க முடியாது. இப்படி பொம்பள புள்ளைங்க pant, சட்டையை போட்டுட்டு திரிஞ்சா நல்லாவா இருக்கு..?? ஒன்னு பாவாட தாவணி கட்டுங்க. இல்லன்னா சுடிதார் மாதிரி பொம்பள புள்ளைங்க போடுற டிரஸ் ‌ஏதாவது போட்டுக்கோங்க.” என்று strictஆக சொல்லிவிட்டார். அதனால் அதுவரை கெத்தாக black uniformல் சுற்றிக் கொண்டிருந்த அவர்கள் எல்லாம் get up change செய்து பாவாடை தாவணிக்கு மாறினார்கள்.

என்னதான் வெளியில் மிடுக்காக தெரிந்தாலும், அவர்களும் பெண்தானே..!! இப்படி எல்லாம் பாவாடை தாவணி அணிந்து, பூ சூடி, பொட்டு வைத்து அழகாக அலங்கரித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசை அவர்களுக்குள்ளும் எங்கேயோ இருக்கத் தான் செய்தது. அதனால் அவர்கள் வழக்கம்போல இன்றும் traditional wearல் இருக்க, “நேத்து சுடிதார்லையே செமையா இருந்தா.. இன்னிக்கி பாவாடை தாவணியில சும்மா கும்முனு இருக்காளே..!!” என்று நினைத்து சாரவை சைட் அடித்துக்கொண்டு இருந்தான் ரிஷி.

அதை கவனித்த அணு “ஓய்.. அங்க பாரு உன் ஆளு உன்ன பாத்துத்தான் லுக்கு விட்டுட்டு இருக்கான்..!!” என்று சாராவின் தோள்களில் இடித்து சொல்ல, “அட.. சும்மா இருடி. அவன் ஒன்னும் என் ஆள் இல்லை. எத்தனை தடவை சொல்றது உனக்கு..??” கோபமாக கேட்டாள் சாரா. “சும்மா நடிக்காத சாரா.

உன் ஃபோன்ல அவன் போட்டோ இருக்கிறத நான் பாத்தேன். உன் personal playlistல கூட அவன் பாடின songsதான் நிறைய இருக்கும். நான் நோட் பண்ணிருக்கேன்.” என்று அனு சொல்ல, “அடிப்பாவி.. இதையெல்லாம் நீ எப்ப பார்த்த..??” என ஷாக்காகி கேட்டாள் சாரா.
“அதெல்லாம் உனக்கு எதுக்கு..?? நான் சொன்னது உண்மையா இல்லையா..?? அதுக்கு மட்டும் ஆன்சர் பண்ணு.” என்று அனு கேட்க,

“அவன பாக்குறத்துக்கு முன்னாடி வரைக்கும் நான் அவனோட பெரிய fanஆ இருந்தேன் தெரியுமா..?? இவனோட நிறைய live concertsஐ நேரா Americaவுக்கே போய் பாத்திருக்கேன்.. அப்போலாம் ரிஷின்னா ஒரு Craze. பட் எப்போ இவன நேர்ல பார்த்தனோ.. அன்னைக்கே எனக்கு இவன் மேல இருந்த good impressions எல்லாம் போயிடுச்சு. அவன் ஒரு சரியான ‌monkey. அவனை எல்லாம் எந்த பொண்ணுக்கும் பிடிக்காது. முக்கியமா எனக்கு சுத்தமா பிடிக்காது.” என்றாள் சாரா.

இப்படியே இவர்கள் இருவரும் பேசியபடி நடந்து சென்று கொண்டிருக்க, சாராவை பார்த்தபடி சென்ற அனு ஓரமாக நின்று கொண்டிருந்த மகேஷின் மீது தெரியாமல் இடித்து விட்டாள்.

திருமண பந்தியில் சாப்பிட்டு முடித்துவிட்டு கையில் பாயாசக்கப்புடன் வந்த மகேஷ் ஓரமாக நின்று அதைக் குடித்துக் கொண்டிருக்கும் போது அவள் அவன்மீது மோதியதால், பாயாசம் fullஆக அவன் முகத்தில் ஊற்றியது. அதனால் எரிச்சல் அடைந்த மகேஷ் முகத்தில் இருந்த பாயாசத்தை துடைத்தவாறு “டேய்.. எவண்டா அவன் கண்ணு தெரியாத கபோதி நாயி..!!” என்றபடி வேகமாக அவள் பக்கம் திரும்பினான்.

அவன் கோபமாக பேசியே இதுவரை அவர்கள் பார்த்ததில்லை என்பதால் பயந்துப்போன அனுப்பமா, “அச்சோ.. சாரி சார். இவகிட்ட பேசிக்கிட்டே வந்ததுல தெரியாம உங்க மேல இடிச்சிட்டேன்.” என்று சொல்ல, முதல்முறையாக அவளை பாவாடை தாவணியில் பார்த்து சொக்கிப்போன மகேஷ், “பரவால்லம்மா. நான் வேற யாரோன்னு நினைச்சு கோவமா பேசிட்டேன் sorry.” என்றான்.

“நீங்க எதுக்கு சார் sorry சொல்றீங்க..?? நான் தான் sorry சொல்லணும். I am so sorry sir. இனிமே இப்படி carelessஆ இருக்க மாட்டேன்.” என்று அனு சொல்ல, “போதும்மா போதும். எத்தனை sorry சொல்லுவ..?? போங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடுங்க.” என்றான் மகேஷ். “ஓகே சார்.” என்று கோரசாக சொன்ன அனுவும், சாராவும் சாப்பிட சென்றார்கள்.

தொடரும்..

You may also like

Leave a Comment

About Me

Featured