Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 120

மூர்கனின் காதலி CH 120

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 120

சௌபர்ணிகா fashion eventகாக தான் மும்பை செல்ல வேண்டும் என்று சொல்ல, மேகாவும் அவளுடன் தான் செல்ல விரும்புவதாக சொல்கிறாள்.

“ஆபீஸ் போகலையா நீ..?? என்க்கூட வரேன்னு சொல்ற..!!” சௌபர்ணிகா கேட்க, “இல்லக்கா… சும்மா எப்பவும் system முன்னாடியே உட்கார்ந்து அதையே பாத்துட்டு இருந்து எனக்கு ‌stressஆகுது.‌ அதான் ஒரு changeகாக உங்கக்கூட வரலாம்னு பார்த்தேன். உங்களுக்கு என்ன கூட்டிட்டு போக இஷ்டம் இல்லனா சொல்லிடுங்க.. பரவால்ல… நான் எங்க ஊருக்கு கிளம்பி போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வரேன்.” என்றாள் மேகா.

“அட லூசு.. நான் உன்னை கூட்டிட்டு போக கூடாதுன்னு நினைப்பேனா..?? விஷ்வா உன்னை விட்டுட்டு எப்படி அத்தனை நாள் இங்க தனியா இருப்பான்…?? முதல்ல உன்னால அவன் இல்லாம இருக்க முடியுமா..??” சௌபர்ணிகா கேட்க, அதே கேள்வியுடன் விஷ்வா அவளை பார்த்தான்.

“என்னையெல்லாம் அவர் மிஸ் பண்ண மாட்டாரு அக்கா. நான் இல்லனா என்ன..?? இங்க அவருக்கு நிறைய பேர் இருக்காங்க. ஒருத்தர் இல்லைனாலும் இன்னொருத்தரை வச்சு adjust பண்ணிப்பாரு.” என்று குத்தலாக மேகா அவளைப் பார்த்து சொல்ல, அவளுக்கும் தன் தம்பிக்கும் இடையில் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது என்று மட்டும் சௌபரணிகாவிற்கு புரிந்தது.

அவளும் அதே மாதிரியான சூழ்நிலையில் இருப்பதால் ‌“என்ன இருந்தாலும் என் தம்பியும் ஆம்பள தானே… இவளை hurt பண்ற மாதிரி என்ன பண்ணி தொலைஞ்சான்னு தெரியல..!! Husband and wifeன்னா எப்பயும் happyஆ மட்டும்தான் இருக்கணுமா..?? இந்த relationshipல இருந்து மேகா அவளுக்கு ஒரு break வேணும்னு நினைச்சா, எடுத்துக்கிட்டும். அவ என்க்கூட மும்பையில தானே இருக்க போறா.. இவனுக்கு பொண்டாட்டி வேணும்ன்னு தோணுச்சுன்னா அங்க வந்து பாத்துகிட்டும்.” என்று நினைத்த சௌபர்ணிகா, “ஓகே மா. நீ ரெடியா இரு.‌ நம்ம நாளைக்கு morning flightல கிளம்பலாம்.” என்றாள்.

பின் அனைவரும் அவரவர் அறைக்கு சென்றுவிட, சௌபர்ணிகா மட்டும் “அங்க போனா அவனை பார்க்க வேண்டியது இருக்குமே..!!” என்று நினைத்து பாட்டியின் ரூமிற்கு சென்று விட்டாள்.

விஷ்வாவும் மேகாவும் பேருக்கு ஒரே ரூமில் இருந்தாலும் அவர்களுக்கு நடுவில் பெரிய gap இருந்தது. விஷ்வா பலமுறை அவளிடம் பேச முயற்சி செய்தான். ஆனால் எதையும் காதில் வாங்காமல் தொடர்ந்து அவனை புறக்கணித்த மேகா எப்படியோ அந்த ஒரு நாளை ஓட்டிவிட்டு மறுநாள் சௌபர்ணிகாவுடன் கிளம்பி மும்பை சென்றுவிட்டாள்.

ஒரு மாதத்தில் ‌ சௌபர்ணிகா சொன்னதைப்போல அந்த fashion event முடிந்துவிட்டது. இருப்பினும் வேண்டுமென்றே புதிய காரணங்களை உருவாக்கி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அவளும் மேகாவும் சென்னை செல்ல பிடிக்காமல் அங்கேயே டேரா போட்டுவிட்டார்கள். மேகாவின் தொடர் நிராகரிப்புகளால் எரிச்சல் அடைந்த விஷ்வா ஒரு கட்டத்திற்கு மேல் அவளிடம் பேச முயற்சிப்பதையே விட்டுவிட்டான்.

இருப்பினும் அவர்கள் இருவரும்; நான் இங்கே.. நீயும் அங்கே.. இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ..!! என்று ஒருவரை நினைத்து மற்றொருவர் உருகி ஏங்கி தவிக்காமல் இல்லை. இந்த பிரிவு அவர்களுக்குள் இருந்த காதலை பல மடங்கு அதிகப்படுத்தியதே தவிர, இருவரும் ஒரு நொடியும் மற்றொருவரை மறக்கவில்லை. இப்படியே 2 ஜோடிகளும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருக்க, நாட்கள் உருண்டோடியது.

நாளை வெற்றிச்செல்வன் மற்றும் கலைச்செல்விக்கு மதுரையில் engagement. பின் ஒரு நாள் கழித்து திருமணம். வெற்றியும், காளீஸ்வரனும் நேராக மும்பைக்கே சென்று பத்திரிக்கை வைத்து சௌபர்ணிகாவையும், மேகாவையும் அழைத்திருந்தார்கள். அதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் இருவரும் தமிழகம் திரும்பினார்கள். அப்போதும் சென்னை செல்ல மனம் வராமல், நேராக மதுரைக்கு சென்றார்கள்.

“வெற்றி கல்யாணத்துக்கு நீ வந்து தானேடி ஆகணும்..!! அங்க வா.. உன்ன வச்சுக்கிறேன்… இத்தனை நாளா நீ ஓடி ஒளிஞ்சி கண்ணாமூச்சி விளையாடிட்டு இருந்த. சரி உனக்கு நீ mentally stable ஆகுறதுக்கு ஒரு டைம் குடுக்கணுமேன்னு நானும் உன்ன இத்தனை நாளா freeஆ விட்டு வச்சிருந்தேன். But இனிமே முடியாது.” என்று நினைத்த விஷ்வா இரண்டு நாட்களுக்கு முன்பாகவே மதுரைக்கு சென்று வழக்கம்போல் அரண்மனையில் செட்டில் ஆகியிருந்தான்.
மதுரைக்கு சென்ற மேகா விஷ்வாவுடன் அரண்மனையில் தங்காமல், நேராக தன் வீட்டிற்கு சென்று அவளது ரூமில் தங்கினாள்.

“ஓஓ.. நீ என்க் கூட stay பண்ண மாட்டியா..?? It’s ok no problem. நான் உன்க்கூட வந்து stay பண்றேன்.” என்று நினைத்த விஷ்வா தனது பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு அவளது ரூமிற்க்கே சென்று விட்டான்.

“ச்சீ.. சில மானங்கெட்ட கரப்பான்பூச்சி எல்லாம் எத்தனை தடவை அடிச்சு வெளிய துரத்தினாலும் மறுபடியும் மறுபடியும் நம்மகிட்ட தான் வந்து தொலையுது. அதுக்குத்தான் எங்கேயாவது தெருவுக்கு நாலு வீடு இருக்கும்ல..‌‌ அதுக்காக எப்படியும் கதவு திறந்து தானே இருக்கும்.. அங்க போக வேண்டியது தானே.. இங்க வந்து எதுக்கு என் உயிரை வாங்கணும்..??” என்று மேகா ஓரக்கண்ணால் விஷ்வாவை பார்த்து கேட்டாள்.‌

“அந்த கரப்பான்பூச்சியை மனசாட்சியே இல்லாம அடிச்சு கொல்ற உன்னை மாதிரி ஆளுங்க எல்லாம்.. அதுக்கு வெளியில ஆயிரம் வீடு இருக்கும்னு நினைப்பீங்க. ஆனா நீங்க எத்தனை தடவை அடிச்சு துரத்தினாலும் அது மறுபடியும் மறுபடியும் இங்கயே வருதுன்னா..‌‌ அது இந்த இடத்தை மட்டும்தான் வீடா நினைக்குதுன்னு அர்த்தம்னு புரிஞ்சுக்க மாட்டீங்க. உங்களுக்கு இருக்கிற அறிவு அவ்வளவுதான். அதுக்கு அந்த கரப்பான்பூச்சி பாவம் என்னடி பண்ணும்..??” பாவமாக விஷ்வா கேட்க, “correct. அத அடிச்சு துரத்துறது தப்பு. இனிமே அப்படி பண்ணாம ஒரேடியா poison வச்சு போட்டு தள்ளிடனும்.” என்றாள் மேகா. “ஐயோ சரியான கொலைகார குடும்பத்தில வந்து சிக்கிருக்கேன்.” என்று நினைத்த விஷ்வா அதற்கு மேல் அவளிடம் வாய் கொடுக்கவில்லை.

விஷ்வா மற்றும் மேகாவிற்கு திருமணமாகி கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு மேல் ஆகப்போகிறது என்பதால் அனைவரையும் அழைத்து, “இன்னிக்கி நாள் நல்லா இருக்கு. பிரதோஷம் வேற..‌ அதனால இன்னைக்கே மேகாவுக்கு தாலி பிரிச்சு கோர்த்துடலாம்.” என்றார் காளீஸ்வரன்.

“இப்போ எதுக்கு அண்ணா அதெல்லாம் தேவையில்லாம..??” என்று மேகா கேட்க, “சூப்பர் மாமா.. பாட்டி இத பத்தி உங்ககிட்ட கேட்க சொன்னாங்க. நானே பேசலாம்னு இருந்தேன். கரெக்டா நீங்களே கேட்டுட்டீங்க. என் பொண்டாட்டிக்கு நான் ஏற்கனவே தாலி chain எல்லாம் வாங்கி வச்சிருக்கேன். இருங்க போய் எடுத்துட்டு வரேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்ன விஷ்வா அவளுக்காக அவன் பார்த்து பார்த்து வாங்கிய தாலி செயினை கொண்டு வந்து காளீஸ்வரனிடம் கொடுத்தான்.

“தாலி chain ‌வாங்கி வச்சிருக்கேன்னு முன்னாடியே ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்ல்ல தம்பி..‌ நாங்களும் ஒன்னு வாங்கிட்டோம். இப்ப அத என்ன பண்றது..??” காளீஸ்வரன் கேட்க, “அதான் வெற்றிக்கு இப்ப கல்யாணம் ஆகப்போகுதுல… இத எடுத்து வச்சிருந்து அவன் பொண்டாட்டிக்கு போடுங்க. என் பொண்டாட்டி கழுத்துல நான் வாங்கின தாலி chainதான் இருக்கணும். இது என்னோட ஆசை.” என்றான் விஷ்வா.‌ “அவர் பொண்டாட்டிக்கு அவர் செய்யனும்னு ஆசை படுறாரு. என்னமோ செஞ்சுட்டு போகட்டும்.” என்று நினைத்த காளீஸ்வரன் எதுவும் சொல்லவில்லை.

இரண்டு மணி நேரத்திற்கு பின் வேண்டா வெறுப்பாக தயாராகி பட்டுப்புடவையில் அழகாக மேகா வந்து நடு ஹாலில் அமர, பட்டு வெட்டி சட்டையில் இருந்த விஷ்வா சந்தோஷமாக வந்து அவள் அருகில் அமர்ந்தான். அப்போதும் அவர்கள் முன்னே ஏராளமான சீர்வரிசைகள் அடுக்கி வைக்கப்பட, சௌபர்ணிகாவுடன் சேர்த்து 5 சுமங்கலிகள் சேர்ந்து மேகாவின் தாலியை பிரித்து செயினில் கோர்த்து விஷ்வாவிடம் கொடுத்தார்கள்.

சந்தோஷமாக அதை வாங்கி “இதுதான் நம்ம உண்மையான marriage. இன்னைல இருந்துதான் நம்ம lifeஐ freshஆ start பண்ண போறோம்னு நெனச்சுக்கோ.” என்று மேகாவின் காதுகளில் கிசுக்கிசுத்த விஷ்வா அவள் கழுத்தில் தாலி செயினை அணிவித்தான்.

மறுநாள் காலையில் சிம்பிளாக அவர்களது உற்றார் உறவினர்கள் முன்னிலையில் வெற்றிச்செல்வன் மற்றும் கலைச்செல்விக்கு அரண்மனையிலேயே நிச்சயதார்த்தம் நடந்தது.

கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் ‌ சரியாக பயன்படுத்திக் கொண்டு ‌‌ விஷ்வா பலவிதமாக மேகாவை நெருங்க முயற்சித்தான். இருப்பினும் பாலை வனத்தில் இருக்கும் கானல் நீராய் கண்களில் அகப்பட்டும், கைகளில் கிடைத்து அள்ளி பருக அவனுக்கு வாய்ப்பு கொடுக்காமல் மேகா அவனைவிட்டு விலகி சென்று கொண்டே இருந்தாள்.

தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)

You may also like

Leave a Comment

About Me

Featured