Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 12

மூர்கனின் காதலி CH 12

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 12 

“என்னோட ஃபுல் பேரு மேகவாணி. மதுரைக்குள்ள ஒரு சின்ன கிராமம் எங்க ஊரு. என் ஃபிரெண்ட் மீராவுக்கு இங்க ஆதித்யா குரூப்ஸ்ல வேலை கிடைச்சது. சோ நானும் சென்னை வரணும்னு ஆசைப்பட்டு எங்க வீட்ல இருக்குறவங்கள கன்வின்ஸ் பண்ணி மீரா ஒர்க் பண்ற ஆபீஸ்லயே வேலைக்குச் சேர்ந்தேன்.” என்று மேகா தன் கதையை சொல்லிட்டு இருக்க, “ஏய் நிறுத்து நிறுத்து… என்ன போட்டு ஜவ்வா இழுத்துட்டு இருக்க..?? உன் ஹிஸ்டரிய எல்லாம் இப்போ யாராவது கேட்டாங்களா..?? கரெக்ட்டா பிரஸ் மீட் நடக்கும்போது நீ எதுக்கு இங்க வந்து என்ன கிஸ் பண்ண…?? ஆதித்யா எதுக்கு உன்ன துரத்திட்டு வந்தான்..?? உனக்கும் அவனுக்கும் என்ன சம்மந்தம்..?? அதுக்கு மட்டும் ஷார்ட்டா பதில் சொல்லு.” என்று அவளை இடைநிறுத்தி சொன்னான் விஷ்வா.

“ம்ம்ஹும்ம்.. ரொம்பத்தான்.” என்று தன் உதட்டை சுளிச்ச மேகா “நானும் ஆதித்யாவும் லவ் பண்ணிட்டு இருந்தோம். இன்னொசென்ட்டா நான் அவனை நம்பிட்டு இருந்தேன். அவன் ஒரு பொம்பள பொறுக்கின்னு அப்ப எனக்குத் தெரியாது. ரீசண்டா தான் இதே ஹோட்டல்ல என்னோட பெஸ்ட் ஃபிரெண்ட் மீராவும், அவனும் ‌ ஒன்னா ஜாலியா ஒரே பெட்ல இருக்குறத பாத்தேன். சோ அப்பவே அவன் கூட சண்டை போட்டு பிரேக் அப் பண்ணிட்டேன்.

அந்த டாக் அதுக்கு முன்னாடி என் கூட க்ளோஸா இருக்குறதுக்கு நிறைய தடவை ட்ரை பண்ணிருக்கான். கல்யாணத்துக்கு முன்னாடி அதெல்லாம் வேணாம்னு நான் சொல்லிட்டேன். இருந்தாலும் அவனுக்குள்ள இருந்த என்ன அடையணும்னு இருக்குற ஆசை அவனுக்கு அடங்கல. நானும் அவனும் லவ் பண்ணிட்டு இருக்கும்போது எடுத்த போட்டோஸ், வீடியோஸ் எல்லாத்தையும் எங்க வீட்ல இருக்குறவங்களுக்கு சென்ட் பண்ணிடுவேன்னு மிரட்டி என்ன இந்த ஹோட்டலுக்கு வரச் சொன்னான்.

நானும் என்ன பண்றதுன்னு தெரியாமதான் ஒரு கன்பியூஷன்லயே இங்க வந்தேன். வந்தேனே தவிர என்னால அவன் எதிர்பார்த்ததையெல்லாம் செய்ய முடியல. அதான் அவன்கிட்ட இருந்து தப்பிச்சு ஓடி வந்தேன். அப்பவும் அந்த ராஸ்கல் விடாம என்ன துரத்திட்டு வந்தான். நான் உங்களைப் பார்க்கும்போது, நீங்க அந்தப் பக்கமா திரும்பி ஓரமா நின்னுட்டு இருந்தீங்க. ஆதித்யா உங்க பேரைச் சொல்ற வரைக்கும் உங்க முகத்தை நான் பாக்கவே இல்ல. அந்த டைம்ல எனக்கு அவன்கிட்ட இருந்து தப்பிச்சா போதும்னு மட்டும்தான் தோணுச்சு. அதான் உங்களை கிஸ் பண்ணேன்‌. எனக்கு சப்போர்ட்டா என் கூட என் பாய்ப்ஃப்ரெண்ட் இருக்கான்னு தெரிஞ்சா அட்லீஸ்ட் இப்போதைக்காவது ஆதித்யாகிட்ட இருந்து தப்பிக்கலாம்னு நினைச்சுதான் நான் உங்களை கிஸ் பண்ணேன். மத்தபடி எனக்கு வேற எந்தத் தப்பான இன்டென்ஷனும் இல்ல.” என்றாள்.

தொடரும்.. 

You may also like

Leave a Comment

About Me

Featured