அத்தியாயம் 119
விஷ்வாவின் கால்களில் விழுந்து தன்னை இப்படி torture செய்து கொல்ல வேண்டாம் என்று கெஞ்சினாள் லயா. “உன்னால தானேடி என் தம்பி அவ்ளோ கஷ்டப்பட்டு எவ்ளோ வலியையும் வேதனையையும் அனுபவச்சு suicide பண்ணி செத்தான்.. அதை நீயும் அனுபவிக்க வேண்டாம்..!! அப்ப தானே உனக்கு அந்த pain எப்படி இருக்கும்னு தெரியும்..!!” என்று அவன் தன் பற்களை கடித்துக் கொண்டு செல்ல, “ஐயோ நான் ஏதோ தெரியாம ஆர்வக்கோளாறில அப்படி ஒரு தப்ப பண்ணிட்டேன் சார். அது தப்புன்னு இப்போ நல்லா புரிஞ்சுகிட்டேன். இனிமே எப்பயும் எப்படி பண்ண மாட்டேன்.
தயவுசெஞ்சு உங்களை கெஞ்சி கேட்கிறேன் என்ன விட்டுருங்க சார்.
எனக்கு ஒரு தங்கச்சி இருக்கா. அவ இப்பதான் schoolல படிச்சிட்டு இருக்கா. நான்தான் அவளை பாத்துக்குறேன். அவ என்ன மாதிரி இல்ல. ரொம்ப innocent. நான் செத்துட்டா அவளை பாத்துக்க யாரும் இருக்க மாட்டாங்க. எங்க அப்பாவும் அம்மாவும் divorce வாங்கிட்டு பிரிஞ்சு போயிட்டாங்க. அவ இப்ப என்கூட தான் இருக்கா. ப்ளீஸ் சார் அவளுக்காகவாது என்ன விட்டுருங்க.” என்று சென்டிமெண்டாக பேசி கண்ணீர்விட்டு கெஞ்சினாள்.
“என் தம்பி செத்துப் போகும்போது… என்னை பாத்துக்கவும் யாரும் இல்ல. என் பொண்டாட்டி வர்ற வரைக்கும் நானும் தனியாதான் இருந்தேன்.
அந்த மாதிரி உன் தங்கச்சியும் அவளுக்கு மேரேஜ் ஆகுற வரைக்கும் தனியா இருக்கட்டும். ஒன்னும் தப்பில்ல. உன்ன மாதிரி ஒருத்திக்கூட இருந்தா தான் அவளும் கெட்டு சீரழிஞ்சு போவா…!!” என்ற விஷ்வா அவனது ஆட்களை பார்க்க, அனைவரும் சற்று பின்னே விலகி சென்று நின்றார்கள். கையில் பெரிய கேனில் acid உடன் வந்த ஒருவன் அதை லயாவின் மீது சிறிதும் இரக்கமில்லாமல் ஊற்றினான்.
“ஆஆஆ.. எரியுதே.. ஆஆஆ.. எரியுதே.. ஐயோ அம்மா எரியுதே..!!” என்று அந்தக் கடுமையான வலியை தாங்க முடியாமல் லயா தனது அடி தொண்டையில் இருந்து சத்தமாக அலற, ஆசிட் பட்டதில் அவள் கை கால்களில் இருந்த கயிறுகள் எல்லாம் அறுந்து விழுந்துவிட்டதால் “ஆஆஆ… வலிக்குது.. எரியுது.. ப்ளீஸ் என்ன சீக்கிரம் சொல்லுங்க விஷ்வா..!! என்னால இந்த வலிய தாங்க முடியல.” என்று கத்தியபடி வலியை பொறுக்க முடியாமல் அங்குமிங்கும் ஓடினாள் லயா. அவள் ஆடைகள் எரிந்து அவள் உடல் மேல் ஒட்டிக் கொண்டிருந்தது. பார்க்கவே பாதி எரிந்த பிணம் எழுந்து நடமாடுவதை போல இப்போது கொடூரமாக இருந்தாள் அவள்.
ஒரு ஐந்து நிமிடம் அவளை அப்படியே சுற்றவிட்ட விஷ்வா அதற்கு மேல் அவளது அலரலையும் கதறலையும் கேட்க முடியாமல், அவள் நெற்றி பொட்டில் சரியாக குறி பார்த்து தன் துப்பாக்கியால் சுட்டு அவளை கொன்றான். இறந்து போய் லயா தரையில் கிடக்க, “Rest in peace Vijay. உன்ன கொன்னவளையும் நான் மேல அனுப்பி வச்சிட்டேன்.
Chance கிடைச்சா உன் பங்குக்கு நீயும் இவளை பழிவாங்கு. இவ அங்கயும் வந்து அழுது நடிப்பா. நம்பி போனா போகுதுன்னு விட்றாத. She deserve this. இவள உனக்கு எந்த அளவுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியும். இவளை கொல்ல மனசு வராம தானே நீ செத்துப்போன.. உனக்கு பதிலா நான் இவளை நான் கொன்னுட்டேன். உன்னை Hurt பண்ணதுக்கு really I am sorry.” என்று தன் மனதிற்குள் விஜயிடம் சொன்ன விஷ்வா அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு சென்றான்.
பாட்டியை பார்த்தான். அவருடன் சிறிது நேரம் பேசினான். “அவளை அங்க விட்டுட்டு நீ மட்டும் எதுக்குடா கிளம்பி வந்த..?? என்ன.. ஏதாவது சண்டை போட்டீங்களா ரெண்டு பேரும்..??”’ பாட்டி கேட்க, “அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி. எனக்கு திடீர்னு ஒரு important work வந்துருச்சு. என்னால அத avoid பண்ண முடியல. அதான் கிளம்பி வந்துட்டேன். அவளும் உடனே கிளம்பிட்டா. இந்நேரம் அக்காக்கூட flight ஏறிருப்பா. நாளைக்கு வந்துருவாங்க எல்லாரும்.” என்றான் விஷ்வா.
“அட போடா.. ஹனிமூன் போறேன்னு எல்லாரும் ஆசையா கிளம்பி போயிட்டு இப்படி ரெண்டு மூணு நாள்க்கூட அங்க தங்கமே உடனே கிளம்பி வந்துட்டீங்க..!!” என்று பாட்டி சலித்துக்கொள்ள, “விடுங்க பாட்டி.. Switzerland தானே.. போகணும்னு நினைச்சா எப்ப வேணாலும் போகலாம்.” என்ற விஷ்வா கொஞ்ச நேரம் பாட்டியிடம் பேசிவிட்டு அவர் அறையைவிட்டு வெளியே வந்தான்.
அவனுக்காக வெளியில் காத்திருந்த மகேஷ் வேகமாக அவன் அருகில் சென்று “நான் இப்பதான் சாரா கிட்ட பேசினேன் பாஸ். இன்னும் மேகா mood upsetல தான் இருக்கா. அவள என்ன சொல்லி சமாளிக்க போறீங்க நீங்க..?? பாவம் பாஸ் அவ. ஏற்கனவே ஆதித்யானால நிறைய கஷ்டப்பட்டுட்டா.
இப்போ நீங்களும் இப்படி பண்ணிட்டீங்கன்னு நினைச்சு இன்னும் உடைஞ்சு போயிருப்பா.” என்று சொல்ல, “தெரியும்டா. நான் அவளுக்கு பல தடவை கால் பண்ணி பாத்துட்டேன். முதல்ல எடுக்கல. அப்புறம் என் நம்பரை block பண்ணிட்டா. என்ன சொல்லி அவளை convince பண்ண போறேன்னு தெரியல.” என்று சொல்லிவிட்டு பெரு மூச்சுவிட்டான் விஷ்வா.
“நீங்க என்ன சொன்னாலும் அவ convince ஆக மாட்டான்னு தான் நினைக்கிறேன் பாஸ். Because correctஆ அவ உங்களுக்கு love propose பண்ண வரும்போது இப்படி நடந்தது அவள ரொம்ப hurt பண்ணியிருக்கும்.” மகேஷ் சொல்ல, “அவ என்ன லவ் பண்ணுவான்னு நான் நெனச்சு கூட பாக்கலடா. ஆனா அது இப்படி ஒரு situationல எனக்கு தெரியவந்திருக்கு. என்ன பண்ணி தொலையுறது..?? எல்லாம் என் நேரம். சரி அத விடு. அந்த லயாவோட தங்கச்சி யாரு என்னன்னு விசாரிச்சு யாருக்கும் சந்தேகம் வராம அவள நம்ம trustக்கு கீழ இருக்கிற ஏதாவது ஒரு homeல சேர்த்துவிட்டு அவளோட education and other expensesக்கு sponsor பண்ண arrange பண்ணிடு.” என்றான் விஷ்வா.
“ஓகே பாஸ்.” என்ற மகேஷ் அவன் சொன்ன வேலையை செய்வதற்காக சென்றுவிட்டான்.
தனது ரூமிற்கு சென்ற விஷ்வா அங்கே மேகா இல்லாததால் feelஆகி சோகமாக bathroomமிற்குள் சென்று ஷவரை திறந்து கொட்டும் தண்ணீருக்கு அடியில் நின்றான். அவன் எவ்வளவு நேரம் அப்படி நின்றான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் கண்கள் மூடி இருக்க, விழித்திரையில் மேகாவின் முகம்தான் அவனுக்கு தெரிந்தது.
அதனால் சட்டென கண்களை திறந்த விஷ்வா “இந்நேரம் அவ இங்க இருந்திருந்தா நான் இப்படி ரொம்ப நேரமா bathroomல இருக்கனேன்னு என்ன வந்து திட்டிருப்பா.
இனிமே அவ இங்க வந்தாலும் அப்படியெல்லாம் பாசமா என் கிட்ட பேசுவாளான்னே தெரியல..!!” என்று நினைத்து விரக்தி புன்னகை சிந்தியவன் குளித்துவிட்டு சாப்பிடாமல் சென்று கட்டிலில் விழுந்தான். தூக்கம் வரவில்லை. பல நாட்களாக அவன் யூஸ் பண்ணாமல் வைத்திருந்த தூக்க மாத்திரைகளை தேடி கண்டுபிடித்து எடுத்து போட்டுக் கொண்டு படுத்தான்.
மறுநாள் மதிய வேளையில் Switzerlandல் இருந்து கிளம்பிய அனைவரும் வீடு திரும்பினார்கள். வரும் வழி எல்லாம் “கொஞ்ச நாளைக்கு நான் சேரனைவிட்டு பிரிஞ்சி இருக்கிறது தான் நல்லது. அதுக்கு என்ன பண்றது..??” என்று யோசித்துக் கொண்டே வந்த சௌபர்ணிகா ஒரு காரணத்தை தயாரித்தாள்.
வெளியில் செல்ல பிடிக்காமல் வீட்டிலேயே இருந்த விஷ்வா அவர்கள் வீடு திரும்பியதால் கீழே ஹாலிற்க்கு செல்ல, மேகா அவனைப் பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அவள் தனது trolley உடன் liftஐ நோக்கி செல்ல, “மேகா.. ஒரு நிமிஷம் இரு. அதான் lunch time ஆயிடுச்சில்ல.. ஒரேடியா சாப்பிட்டு மேலே போ. அண்ட் நான் உங்க எல்லார் கிட்டயும் ஒரு முக்கியமான விஷயத்தை பத்தி பேசணும்.” என்று சௌபர்ணிகா சொல்ல,
“நம்மள பத்தி ஒருவேளை எல்லார்கிட்டயும் போட்டு கொடுத்திருவாளோ.. சேச்சே.. எத்தனை வருஷ லவ். அவ்ளோ ஈஸியா எல்லாம் என்ன யார்கிட்டயும் இவ விட்டுக் கொடுக்க மாட்டா.
அதுவும் இல்லாம ஆல்ரெடி அவ செல்ல தம்பி வாழ்க்கையில புயல் வீசிட்டு இருக்கு. இந்த டைம்ல போய் இவ சோக கதையையும் அவன் கிட்ட சொல்ல மாட்டா.” என்று நினைத்த சேரன் தைரியமாக சென்று dining tableல் அமர்ந்தான்.
சௌபர்ணிகா கூப்பிடுவதால் வேறு வழியில்லாமல் மேகாவும் சென்று சாப்பிட அமர, அவள் அருகில் சென்று அமர்ந்த விஷ்வா அவளை பாவமாக பார்த்தான்.
அவள் அவனைக் கண்டுக் கொள்ளவே இல்லை. அனைவரும் சாப்பிட துவங்கிவிட, “என்னமோ சொல்லணும்னு சொன்னீங்களே அக்கா..!!” என்று மேகா கேட்க, “ம்ம்.. பெருசா ஒன்னும் இல்லமா. மும்பைல 1 monthல ஒரு fashion event நடக்கப்போகுது. நம்ம கம்பெனி தான் அத sponsor பண்ணி organise பண்றோம். சோ நான் அங்கயே போய் செய்ய வேண்டிய வேலை நிறைய இருக்கு. ஏதாவது ஒன்னு சொதப்பினாலும் நம்ம company reputation affectஆகும். சோ நாளைக்கே நான் மும்பை கிளம்பலாம்னு இருக்கேன்.” என்றாள் சௌபர்ணிகா.
“ஓஹோ என்கிட்ட இருந்து தப்பிச்சு போக புது planஆ..?? நல்லாதான் இருக்கு. பட் எவ்வளவு தூரம் ஓடுவடி பொண்டாட்டி..?? நீ எங்க சுத்தினாலும் கடைசியில என் கால்ல தான் வந்து விழுந்து கிடக்கணும்.” என்று நினைத்த சேரன் ஏளனமாக சௌபரணிகாவை பார்க்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் “அக்கா.. நானும் உங்கக் கூட வரேன். ப்றீஸ் no சொல்லாம என்னையும் உங்கக்கூட கூட்டிட்டு போங்க.” என்றாள் மேகா.
அதனால் விஷ்வா ஷாக்காகி அவளை பார்க்க, “Bye.. Bye.. Mr. Vishwa..!!” என்று நினைத்த மேகா லேசாக அவனைப் பார்த்து புன்னகைத்தாள். அவனுக்கு அந்த புன்னகையில் தெரிந்ததெல்லாம் வெறும் விரக்தி மட்டுமே.
தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)