அத்தியாயம் 118
தூங்கிக் கொண்டு இருந்த சௌபர்ணிகாவின் மீது குளிர்ந்த நீரை ஊற்றி அவளை எழுப்பினான் சேரன். அதனால் பதறிப் போய் நடுங்கிக்கொண்டு எழுந்து அமர்ந்தாள் அவள்.
அவனைப் பார்த்தவுடன் இன்னும் அவளுக்கு பயமாக இருக்க, அவள் உடல் எக்ஸ்ட்ராவாக நடுங்கியது. அவளை அப்படி கண்டு ரசித்த சேரன், “மணி என்னவாகுது.. இன்னும் தூங்கிட்டு இருக்க..?? உனக்கு மேரேஜ் ஆயிடுச்சு. ஞாபகம் இருக்கா..?? கொஞ்சமாவது responsibleஆ இரு. போய் சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்புடி. நம்ம உடனே வெளிய போகணும்.” என்று சொல்ல, “எங்க.. எங்க போகணும்..??” திக்கி திணறி கேட்டாள் அவள்.
“ஏன் நம்ம எங்க போக போறோம்னு சொன்னாதான் வருவியா நீ..?? ஏ.. ச்சீ.. போய் கிளம்பு போ. நான் பத்து நிமிஷத்துல திரும்பி வருவேன். நான் வரும்போது நீ கிளம்பி ரெடியா இருக்க… Just 10 minutes தான் time. mind it.” என்று அதிகார தோரணையில் சொல்லி அவனை மிரட்டிவிட்டு சேரன் அங்கிருந்து வெளியேற,
பீறிட்டு வந்த அழுகையை சிரமப்பட்டு விழுங்கிய சௌபர்ணிகா “நான் பத்து நிமிடத்துல கிளம்பி வெளிய போகலைன்னா வந்து அதுக்கும் ஏதாவது சொல்லுவானே…” என்று நினைத்து பயந்து வேகமாக குளிக்கச் சென்றாள்.
மேகா இன்னும் அவள் அறையில் தூங்கிக் கொண்டிருக்க, அவள் phone சிணுங்கியது. விஷ்வாதான் அவளுக்கு கால் செய்திருந்தான். தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்த மேகா ஸ்கிரீனில் தெரிந்த “METAL MANDAYAN” என்ற பெயரை பார்த்து கடுப்பாகி callஐ கட் செய்துவிட்டாள்.
அவன் மீண்டும் அவளுக்கு கால் செய்ய, அதையும் கட் செய்தாள். அதனால் “I am going to India now. உனக்கு இங்க இருக்கணும்னு தோணுச்சுன்னா, எத்தனை நாள் வேணும்னாலும் இங்க stay பண்ணி எல்லா இடத்தையும் சுத்தி பாத்துட்டு பொறுமையா வா. அணுவும், சாராவும் உன் கூட இருப்பாங்க. அக்கா என்ன ஐடியாவுல இருக்காங்கன்னு தெரியல. அத பத்தி நீ அவங்ககிட்ட பேசிக்கோ. Bye. Take care.” என்று அவளுக்கு message செய்தான் விஷ்வா.
அவனிடமிருந்து அவளுக்கு மெசேஜ் வந்திருப்பதாக notification வர, உடனே open செய்து பார்த்தாள் மேகா.
நேற்று நடந்த சம்பவம் தொடர்பாக அவன் ஏதாவது விளக்க உரையை எழுதி அனுப்பி இருப்பான் என்று அவள் எதிர்பார்த்து இருக்க, அதில் இருந்த மெசேஜை பார்த்தவுடன் இன்னும் அவள் முகம் கோபத்திலும் சோகத்திலும் சுருங்கியது.
“என்ன இந்த ஆளு ஓவரா பண்றான்.. என்ன பத்தி என்னதான் நினைச்சுட்டு இருக்கான் இவன்..?? எவ்ளோ பெரிய விஷயம் நடந்திருக்கு.. என்ன இருந்தாலும் officially இவன் wife நான் தானே.. அதுக்கு ஒரு explanationகூட இவனால கொடுக்க முடியாதா..?? இப்ப யார் குடி முழுகி போயிடுச்சுன்னு இவன் என்னை இங்க விட்டுட்டு இந்தியாவுக்கு கிளம்பி போறான்..??” என்று நினைத்த மேகா அவனுக்கு “Get lost.” என்று reply அனுப்பிவிட்டு குளித்து கிளம்பி வெளியில் சென்றாள்.
அப்போது சௌபர்ணிக்காவும் சேரனுடன் கிளம்பி சரியாக ஹாலுக்கு வர, “அக்கா.. என்னாச்சுன்னு தெரியல உங்க தம்பி திடீர்னு இந்தியாவுக்கு கிளம்பி போயிட்டாரு. எல்லாரும் ஒன்னா தானே வந்தோம்.. அவர் இல்லாம நான் மட்டும் இங்க இருந்து என்ன பண்ண போறேன்..?? சோ நானும் next flightல ticket book பண்ணி இந்தியாவுக்கு போலாம்னு இருக்கேன்.” என்று அவர்களைப் பார்த்துச் சொன்னாள் மேகா.
“என்ன பிரச்சனைன்னு தெரியலையே.. இவன் எதுக்கு சொல்லாம கொள்ளாம இந்தியாவுக்கு இப்ப கிளம்பி போனான்..??” என்று ஒரு நொடி யோசித்த சௌபர்ணிகா தன் அருகில் நின்ற சேரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு “இவன்க்கூட வெளிய போறதுக்கு மேகா கூட இந்தியாவுக்கே போயிடலாம். வர வர எந்த டைம்ல இவன் எப்படி இருப்பான்னே தெரிய மாட்டேங்குது. இவன்க்கூட இருக்கிறது நமக்கு safety இல்ல.” என்று நினைத்து, “நீங்க ரெண்டு பேரும் இல்லாம நாங்க மட்டும் இங்க இருந்து என்ன பண்ணப் போறோம்..?? நானே நம்ம எல்லாருக்கும் next flightல இந்தியாவுக்கு ticket book பண்ணிடறேன்.” என்றாள்.
“ஓகே அக்கா தேங்க்ஸ். எனக்கு ரொம்ப பசிக்குது. நீங்க சாப்டீங்களா..??” என்று மேகா கேட்க, “இல்லமா இன்னும் சாப்பிடல. வா.. சேர்ந்தே சாப்பிடலாம்.” என்ற சௌபர்ணிகா மேகாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு சென்று dining tableலில் அமர்ந்தாள். சௌபர்ணிகாவின் அருகே அமர்ந்த சேரன் “என்னடி என்கிட்ட ஒரு வார்த்தைக்கூட கேட்காம எல்லாத்தையும் நீயா முடிவு பண்ணி செஞ்சுட்டு இருக்க.. அதுக்குள்ள பயம் போயிடுச்சா..??” என்று அவள் காதுகளில் கிசுகிசுக்க, பயத்தில் அவள் உடல் நடுங்கியது.
அவள் வாயை திறந்து ஏதாவது பேசினால் உள்ளுக்குள் இருக்கும் பயம் வார்த்தைகளில் தெரிந்துவிடும் என்று நினைத்த சௌபர்ணிகா அவனிடம் பேசவே இல்லை. மேகாவிடம் வேண்டுமென்றே தொடர்ந்து எதை எதையோ பேசியபடி சாப்பிட்டு முடித்தவள், packingகிற்க்கு தானும் அவளுக்கு help செய்வதாக சொல்லி அவளுடன் விஷ்வாவின் ரூமிற்கு சென்று விட்டாள்.
சில மணி நேரங்களுக்கு பிறகு இந்தியாவில் தரை இறங்கிய விஷ்வா “அவ எங்க இருக்கா..?? அவளை நான் என் கையாலதான் கொல்லணும்.” என்று சொல்ல, “பசங்க.. நம்ம ஆபீஸ் பக்கத்துல இருக்கிற secret spaceல தான் அவள அடைச்சு வச்சிருக்கானுங்க. நீங்க வர்ற வரைக்கும் அவள எதுவும் பண்ண கூடாதுன்னு நான் அவனுங்ககிட்ட சொல்லி வச்சிருக்கேன் பாஸ்.” என்றான் மகேஷ்.
“பாஸ்.. இந்த பொண்ணு famous model ஆச்சே.. திடீர்னு அவளை காணோம்னா உடனே பெரிய issue ஆகுமே.. அவளை கஷ்டப்பட்டு கொன்னு அவ பாடிய நம்ம dispose பண்றதுக்கு அவளை எங்கயாவது ஆறு குளம்னு தூக்கி போட்டு அவளே suicide பண்ணி செத்த மாதிரி set up பண்ணிடலாமே..!!” என்று தயாளன் சொல்ல, விஷ்வா அவனை எரித்துவிடும் பார்வை பார்த்தான்.
அதனால் தன் வாயை மூடிக்கொண்டு அமைதியாக அவனுடன் சென்றான் தயாளன். அவர்கள் அனைவரும் காரில் ஏறி இது மாதிரியான illegal வேலைகளை செய்வதற்காகவே அவர்கள் பிரத்யோகமாக வைத்திருக்கும் secret spaceக்கு சென்று சேர்ந்தார்கள். வேக எட்டுக்கள் வைத்து விஷ்வா சினம் கொண்ட சிங்கமாய் உள்ளே செல்ல, அங்கே அரைகுறை ஆடையில் இருந்த இளம் பெண் ஒருத்தி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் 10, 15 bodyguardsகளுக்கு நடுவில் தரையில் கிடந்தாள்.
அந்த அனைத்து ஆடவர்களின் காம கண்களும் அவளை துலைத்து எடுத்துக் கொண்டிருந்தாலும், விஷ்வா அவளை எதுவும் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டு இருந்ததால் அவர்கள் விரல் நுனிக்கூட அவள் மீது படாமல் அவளைப் பத்திரமாக வைத்திருந்தார்கள். பலி கொடுக்கப் போவதற்கு முன் ஆட்டைக்கூட அப்படித்தான் பராமரித்து பாதுகாத்து வைத்திருப்பார்கள். அதேபோலத் தான் இவளும்.
அதுவரை தரையில் கட்டுண்டு கிடந்த அந்த பெண் புழுவைப் போல தப்பிக்கும் எண்ணத்தில் அங்குமிங்கும் நகர்ந்தபடி இருந்தாள்.
ஆனால் எமன் ரூபத்தில் தன் முன்னே விஷ்வா வந்து நின்றவுடன் “அவ்வளவுதான் என் கதை முடிஞ்சிருச்சு. இனிமே என்னால தப்பிச்சு எங்கேயும் போக முடியாது. அட்லீஸ்ட் என் death ரொம்ப கொடூரமா இருந்திட கூடாதுன்னு மட்டும் தான் என்னால இப்போ கடவுள்கிட்ட வேண்டிக்க முடியும்.” என்று நினைத்து அசையாமல் அவனை பார்த்து பயந்து நடுங்கினாள்.
அவளது முகத்தை பார்க்க பார்க்க விஷ்வாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
“இந்த மூஞ்சியையும்.. அழகையும் வச்சுத்தானேடி என் தம்பியை நடிச்சு மயக்கி.. ஏமாத்தி கிடைக்கிற வரைக்கும் அவன் கிட்ட இருந்த காசு பணத்தை எல்லாம் புடுங்கிட்டு அவன் போர் அடிச்ச உடனே இன்னொருத்தன் கிட்ட போன.. இனிமே இந்த அழகு உனக்கு இருக்கக் கூடாது.” என்ற விஷ்வா இருந்த ஆத்திரத்தில் சரமாரியாக அவளை தனது ஷூ காலால் உதைத்தும், மிதித்தும் தாக்கினான்.
அவள் வலியில் “ஆஆஆ… ரொம்ப வலிக்குது சார். ப்ளீஸ் சார்.. இனிமே இப்படி பண்ண மாட்டேன். என்னை விட்டுருங்க..!!” என்று கெஞ்ச,
“என்னால எப்படிடி உன்னை விட முடியும்..?? நீ என் தம்பியை ஏமாத்தி விட்டுட்டு போனதுக்கு நான் உனக்கு punishment கொடுக்க வேண்டாமா..??” என்ற விஷ்வா “போய் acid எடுத்துட்டு வந்து இவ மேல ஊத்துங்கடா. இவ நல்லா அதுல வெந்து எரிஞ்சு சாகட்டும்.” என்று உச்ச ஸ்ருதியில் கத்தி சொன்னான்.
நகர்ந்து நகர்ந்து அவன் காலுக்கு அருகே சென்ற விஜயின் காதலி லயா “ப்ளீஸ் சார்.. நீங்க என்னை கொல்லணும்னு முடிவு பண்ணிருந்தா.. எனக்கு poison கொடுத்து என்னை உடனே கொன்னுடுங்க. நானே கூட குடிச்சிட்டு செத்துடுறேன். இந்த மாதிரி எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா torture பண்ணி என்னை கொல்லாதீங்க.. உங்களை கெஞ்சி கேட்டுக்குறேன்..!!” என்று கெஞ்சினாள்.
தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️ இந்த நாவலை இலவசமாக நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் படிக்கலாம் ✅)