அத்தியாயம் 111
சில நாட்களுக்கு பின்..
இன்று சேரன் மற்றும் சௌபர்ணிகாவின் engagement. விஷ்வா குடும்பத்திற்கு சொந்தமான சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு Beach resortல் சாதாரணமாக சௌபர்ணிகாவின் விருப்பத்தின் பெயரில் அனைத்தும் arrange செய்யப்பட்டிருந்தது. அதில் அவளது Friends, business circleல் உள்ளவர்கள், குறிப்பாக மேகாவின் குடும்பத்தினரும் கலந்து கொண்டார்கள்.
Evening timeல் beach ஓரமாக போடப்பட்டிருந்த stageல் lite pista colour long gown அணிந்திருந்த சௌபர்ணிகா விரிந்த புன்னகையுடன் சுற்றி எரிந்த லைட்டுகளில் ஜொலிக்க, அவள் அருகில் அதே கலரில் coat suit அணிந்திருந்த சேரன் அவள் விரலில் engagement ringஐ போட்டான். பின் அவளும் அவன் கையில் மோதிரத்தை போட, அனைவரும் கைத்தட்டி அவர்களை வாழ்த்தினார்கள். பின் அவர்கள் இருவரும் ஜோடியாக மேடையில் நிற்க, கீழே red carpetல் அழகான சிவப்பு நிற lehenga அணிந்திருந்த மேகா மாலை டம் டம் என்ற பாடலுக்கு சந்தோஷமாக dance ஆடினாள். அவளைப் பார்த்து ரசித்தான் விஷ்வா.
ஆடி முடித்தவுடன் “வாங்க நம்ம அவங்களுக்கு வாங்கி வைத்திருந்த giftஐ எல்லாம் stageல கொண்டு போய் குடுத்துட்டு வந்துடலாம்.” என்று மேகா அவனை அழைக்க, அவர்களது திருமணத்தின்போது சௌபர்ணிகா அவர்களுக்கு செய்ததை விடவே ஏராளமான விலை உயர்ந்த தங்க வைர நகைகளை அவர்களுக்கு பரிசளிதான் விஷ்வா. அவன் தனக்காக ஏதாவது செய்வான் என்று சௌபர்ணிகா எதிர்பார்த்து இருந்தது தான். ஆனால் அவன் சாதாரண engagementக்கே நிறைய செய்து விட்டதால், “என்னடா அன்னைக்கு உன் கல்யாணத்துக்கு நான் செஞ்சதுக்கு எல்லாம் interest போட்டு return பண்றியா நீ..??” என்று கேட்டாள் சௌபர்ணிகா.
“நோ நோ.. நான் அப்படியெல்லாம் நினைக்கல.” என்று விஷ்வா சொல்ல, “இது எங்க வீட்டு பொண்ணு கல்யாணம். நாங்க இவ்வளவு கூட செய்யலன்னா எப்படி..?? மேரேஜ் அப்போ பாருங்க. இன்னும் உங்களுக்கு நிறைய surprise plan பண்ணிருக்கோம்.” சிரித்த முகமாக சொன்னாள் மேகா. விஜய் இறந்த பிறகு உண்மையில் தனக்கென யாரும் இல்லையா? என்று நினைத்து சௌபர்ணிகா எத்தனையோ நாட்கள் ஏங்கி தவித்து இருக்கிறாள்.
இப்போது இத்தனை வருடங்கள் கழித்து விஷ்வா அவளை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் ஒரு தம்பி ஸ்தானத்தில் இருந்து அவளுக்கு செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் சரியாக செய்வதால், நெகிழ்ந்து போனாள் சௌபர்ணிகா.
“இவங்க பெரிய பணக்காரங்கன்னு prove பண்றதுக்காகவே ஓவரா scene create பண்றாங்க. இத்தனை வருஷமா அக்கா தம்பி ரெண்டு பேரும் பிரிஞ்சி இருக்கிற மாதிரி வெளியில build up பண்ணிட்டு அப்படியே கல்யாணத்துல நடிப்பை போட்டு சேர்ந்துட்டாங்க. Wow… இவங்க ரெண்டு பேருக்குமே Acting சூப்பரா வருது.” என்று நினைத்த சேரன் விஷ்வா கொண்டு வந்து வைத்த சீர்வரிசைகளை எல்லாம் பார்த்து முகம் சுழித்தான். ஆனால் யாரும் அவனை கவனிக்கவில்லை.
அந்த engagementக்கு வந்திருந்த கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்த முத்து சௌபர்ணிகாவின் அருகே சேரன் நிற்பதை பார்க்க முடியாமல் கனத்த இதயத்துடன் அங்கிருந்து சென்று கடற்கரையின் மணலில் அமர்ந்து விட்டான். பின் மேலே தெரிந்த வானத்தைப் பார்த்து அதில் ஒளிந்து மறைந்து விளையாடிக் கொண்டிருந்த நிலவு மகளிடம் “என்னால அவக்கூட எப்பவும் சேரவே முடியாதுன்னா அப்புறம் எதுக்கு எனக்கு அவ மேல feelings வரணும்..?? நான் அன்னைக்கு ரோட்ல அவளை பார்க்காம இருந்திருந்தா, விஷ்வாவோட அக்காவா அவள பாத்து பழகி இருந்திருப்பேன். எனக்கு அவ மேல லவ் வந்திருக்காது. ஆனா இப்போ லவ் வந்துருச்சே.. நான் என்ன பண்றது..??” என்று தனியாக புலம்பிக் கொண்டிருந்தான்.
அன்றிலிருந்து சரியாக ஒரு வாரத்தில் திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலில் சேரன் மற்றும் சௌபரணிகாவிற்கு திருமணம் நடந்தது. விஷ்வா அவளிடம் எத்தனையோ முறை “உங்களுக்கு வெளிநாட்டில போய் கல்யாணம் பண்றதுல விருப்பம் இல்லைனாக்கூட பரவால்ல. இங்கயே எங்கேயாவது நல்ல மண்டபமா பார்த்து வைக்கலாமே..!!” என்று சொல்லிப் பார்த்தும்,
“இல்லடா விஷ்வா. நான் ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நீ என்னை ஏத்துக்கிட்டு எல்லாம் நார்மலாகி உனக்கு கல்யாணம் ஆன, நானும் இவரும் திருப்பதியில கல்யாணம் பண்ணிக்கிறதா நான் வேண்டி இருந்தேன். நான் வேண்டுனத அந்த சாமி நிறைவேத்திட்டாரு. சோ நானும் என் வேண்டுதல நிறைவேத்தனும்.” என்று strictஆக சொல்லிவிட்டாள் சௌபர்ணிகா. அதனால் அவளது மேரேஜ் கோவிலில் சிம்பிளாக நடந்து முடிந்தபின் அனைவரும் உடனே கிளம்பி அவர்களுக்கு சொந்தமான private jetல் சென்னை வந்து சேர்ந்தார்கள்.
அவர்களது first nightகாக விஷ்வாவுடன் சேர்ந்து சௌபரணிகாவின் அறையை decorate செய்து கொண்டு இருந்தாள் மேகா. வெகு நேரமாக bedன் நடுவே ரோஜாப்பூ இதழ்களை வைத்து heart design போட போராடிக் கொண்டிருந்தான் விஷ்வா. பழங்கள், Sweet box என அனைத்தையும் கொண்டு வந்து ஓரமாக இருந்த tableலில் அடுக்கிய மேகா “இதவே எவ்வளவு நேரம் பண்ணிட்டு இருப்பீங்க..?? இன்னும் அரை மணி நேரத்துல அவங்க ரெண்டு பேரும் இங்க வந்துருவாங்க. ஒரு ஹார்ட் போடுவதற்கு இவ்வளவு நேரமா..??” என்று கேட்க, “வாய் பேசுறது எல்லாம் ஈசி தாண்டி. வந்து செஞ்சு பாரு அப்பதான் தெரியும்.” என்றான் அவன்.
“உங்களைவிட அதெல்லாம் நான் நல்லாவே செய்வேன்.” என்ற மேகா வேகமாக சென்று பத்து நொடியில் அழகாக heart டிசைனில் ரோஜாப்பூ இதழ்களை அடுக்கி வைத்தாள்.
“நாம போடும்போது மட்டும் ஏன் இது ஒழுங்காவே வரல..??” என்று யோசித்தபடி விஷ்வா அந்த டிசைனையும் அவளையும் மாறி மாறி பார்க்க, “சும்மா என்ன பார்த்து டைம் waste பண்ணாதீங்க. போய் வேற வேலை இருந்தா பாருங்க.” என்றாள் மேகா.
“ச்சீ.. போ.. இதெல்லாம் நீயே பண்ணு. அதுக்கு தான் உன்ன இந்த வீட்ல வச்சிருக்கேன்.” என்ற விஷ்வா அவள் தலையில் நங்கென்று கொட்டிவிட்டு அந்த ரூமை விட்டு வேகமாக வெளியேறினான். “ஆஆ.. வலிக்குது விஷ்வா.
இன்னைக்கு நான் உங்களை சும்மாவே விடமாட்டேன்.” என்ற மேகா தன் தலையைப் பிடித்துக் கொண்டு அவனை பின் தொடர்ந்து ஓடினாள்.
“நானும் சேரனும் இந்த நாளுக்காகத்தான் இத்தனை வருஷமா wait பண்ணிட்டு இருந்தோம். Finally இன்னைக்கு நான் Mrs. சௌபர்ணிகா சேரலாதன் ஆகிட்டேன். இப்போ என் தம்பிக்கூட நாங்க எல்லாரும் ஒரே வீட்ல ஹாப்பியா வாழப் போறோம். அதையெல்லாம் நினைத்து பார்த்தாலே எனக்கு ரொம்ப excitingஆ இருக்கு.” என்று நினைத்த சௌபர்ணிகா பட்டுப்புடவை உடுத்தி அழகாக தயாராகி மல்லிகைப்பூ மணம்கமல கையில் பால் சொம்புடன் அவளது ரூமுக்கு சென்றாள். வாசல் வரை அவளுடன் வந்த மேகா, “All the best அக்கா.” என்று சொல்லிவிட்டு சிரித்தபடி சென்றாள்.
“ஏய் போடி கம்முனு. எனக்கே கொஞ்சம் nervousஆ தான் இருக்கு.” என்ற சௌபர்ணிகா சிறு வெட்கத்துடன் உள்ளே சென்று பார்க்க, அங்கே சேரன் இல்லை. அதனால் அவளுக்கு புஷ் என்று போய்விட, தன் கையில் இருந்த பால் சொம்பை டேபிளில் வைத்துவிட்டு அவளது mobile phoneஐ எடுத்துக்கொண்டு போய் கட்டிலில் கொத்தென அமர்ந்தாள். அவள் நெட்டை on செய்தவுடன், WhatsAppல் 500க்கும் மேற்பட்ட மெசேஜ்கள் தொடர்ந்து வந்ததால் ஒரு நொடி அவளது mobile phone hangஏ ஆகிவிட்டது.
“எப்பா.. யாரது எனக்கு இத்தனை மெசேஜ் பண்ணி வச்சிருக்காங்க..??” என்று நினைத்த சௌபர்ணிகா உள்ளே சென்று பார்க்க, பல வருடங்களாக செத்துப் போய்க் கிடந்த அவளது close college friends உள்ள WhatsApp group இப்போது சௌபர்ணிகாவிற்கு திருமணமானதால் உயிர் பெற்றிருந்தது. அங்கே அவளைப் பற்றித்தான் அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த மெசேஜ்களை எல்லாம் பார்த்து சிரித்த சௌபர்ணிகா அவர்களுக்கு reply செய்ய, அவள் friend சுவாதி, “ஓய்.. இப்போ உனக்கு first night தானே.. நீ இந்நேரம் busyஆ இருப்பன்னு நாங்க எல்லாம் இவ்ளோ நேரமா பேசிட்டு இருக்கோம்…. நீ என்னனா இங்க குரூப் பக்கம் வந்து கடலை போட்டுட்டு இருக்க..??” சௌபர்ணிகா அவளுக்கு ரிப்ளை அனுப்புவதற்குள் சுவாதியின் husband கிருஷ்ணா என்கின்ற க்ரிஷ், “இது அவங்களுக்கு break timeஆ இருக்கும்டி. நீ வேணா பாரு இன்னும் அஞ்சு நிமிஷத்துல offline போய்டுவா அவ.” என்று கிண்டலாக அதே groupல் சொன்னான்.
கிருஷ்ணாவும் சௌபர்ணிகாவுடன் படித்தவன்தான்.
அவனும் சுவாதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். College timeல் இருந்து இப்போது வரை அனைவரும் close friends என்பதால் அவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு வெட்கம் மானம் இல்லாமல் சௌபர்ணிகாவை போட்டு கலாய்த்தார்கள்.
அதனால் Phoneஐ பார்த்து வெட்கத்துடன் சிரித்த சௌபர்ணிகா, “என்ன இப்படி எல்லாம் பேசுறாங்க.. இவங்களுக்கு என்ன reply பண்றதுன்னே தெரியலையே..!!” என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போது கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, அவளது இதயம் வேகமாக துடிக்க தொடங்கியது.
“இப்படியே விட்டா இவங்க விடிய விடிய மெசேஜ் பண்ணிட்டே இருப்பாங்க.” என்று நினைத்து ஃபோனை switch off செய்துவிட்டு கதவு பக்கம் திரும்பினாள். மார்புக்கு குறுக்காக தன் கைகளை கட்டிக்கொண்டு சேரன் தான் அங்கே நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்தவுடன் அவள் முகம் மலர்ந்தது. “phoneல யார் கூடையோ chat பண்ணிட்டு இருந்த மாதிரி தெரிஞ்சது..!! நான் வந்த உடனே அப்படியே phoneஐ ஓரமா வச்சுட்ட..!!” என்று சேரன் சந்தேகமாக கேட்க, “அது சும்மா என் friendsகூட பேசிட்டு இருந்தேன்.” என்றாள் அவள்.
“உன் face 100 watts bulb மாதிரி பிரகாசமா எரியிற அளவுக்கு அப்படி என்ன நீ அவங்ககிட்ட பேசிட்டு இருந்த..?? எங்க அந்த chatஐ எடுத்துக்காமி.” என்று அவன் கேட்க, ஏதோ அவன் விளையாடுகிறான் என்று சாதாரணமாக நினைத்த சௌபர்ணிகா “இப்போ அது எதுக்கு..?? அவங்க ஏதோ சும்மா விளையாட்டுக்கு தேவையில்லாம பேசிட்டு இருக்காங்க.” என்றாள்.
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் இப்ப அதை பார்த்தே ஆகணும். நீ காட்டுவியா மாட்டியா..??” என்று கோபமாக அவளை மிரட்டும் தோரணையில் சேரன் கேட்க, “என்ன இவன் புதுசா என்கிட்ட voice rise பண்ணி இப்படி எல்லாம் பேசுறான்..??” என்று நினைத்து குழம்பிய சௌபர்ணிகா அவன் கேட்டதை போலவே தன் mobile phoneஐ on செய்து அவனிடம் கொடுத்தாள்.
தொடரும்..
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)