அத்தியாயம் 1
“பிரேக்கிங் நியூஸ்..!! Mv tech-ன் சேர்மன், பெரிய பிசினஸ்மேனான நம்ம மிஸ்டர் விஷ்வா ஒரு (Gay)-ன்னு சொல்லப்படுது. அதாவது, அவரு ஆம்பளைத்தனம் இல்லாதவருன்னும், பொம்பளைங்க மேல அவருக்கு இன்ட்ரஸ்ட் இல்லாததாலதான், ஆபீஸ்ல வெறும் ஆம்பளைங்களை மட்டும் வேலைக்கு வெச்சிருக்காருன்னும் செய்திகள் நேத்துல இருந்தே சோஷியல் மீடியால பரவிக்கிட்டு இருக்கு. இதோட எதிரொலியா, அவரோட கம்பெனி பங்குகள் எல்லாம் தொடர்ந்து குறைஞ்சுகிட்டே வருது. ஆனா, இதுவரைக்கும் MV Tech கம்பெனி சார்பாவோ இல்ல விஷ்வா சாரோ, இந்த வதந்திகளுக்கு எந்த ஒரு மறுப்பும் சொல்லாததால, ‘இது உண்மைதான் போல’ன்னு நெட்டிசன்கள் எல்லாரும் கருத்து சொல்லிக்கிட்டு இருக்காங்க” – இந்த நியூஸ் டி.வி-ல ஓடிக்கிட்டு இருந்தது.
ஏற்கெனவே செம போதையில இருந்த விஷ்வா, தன் கையில இருந்த பீர் பாட்டிலைத் திறந்து, அந்த நியூஸைப் பார்த்தபடியே மடமடன்னு தொண்டைக்குள்ள பீரை ஊத்திக் குடிச்சுத் தீர்த்தான். அவனோட சிவந்த கண்ணுங்க, சில நாளா அவன் சரியாத் தூங்கலன்னு சொல்லாம சொல்ல, இந்த நியூஸ் வேற மண்டைய போட்டு குடைஞ்சதால வந்த கோபத்துல, கையில இருந்த பீர் பாட்டிலைத் தூக்கிப் போட்டு ஹால்ல இருந்த அவனோட 152 இன்ச் ஸ்மார்ட் டி.வி-யை விஷ்வா உடைக்க, ‘டமால்’னு சத்தத்தோட அது நொறுங்கிச்சு.
பயந்துபோன முகத்தோட ஓரமா நின்னு அவனையே கவனிச்சுக்கிட்டு இருந்த மகேஷ், அவனோட போனுக்கு கால் வந்ததால, விஷ்வா கவனிக்கிறதுக்குள்ள வேகமா அத அட்டென்ட் பண்ணி, “சொல்லுங்க பாட்டி..!!”ன்னபடி பால்கனி பக்கம் போனான். “நான் இப்பதான் டி.வி-ல வந்த நியூஸப் பார்த்தேன். ரெண்டு, மூணு நாளா இந்தப் பிரச்சனை நடக்குதாம். நர்ஸ் பொண்ணு சொல்லுச்சு. ஏன்டா, நீகூட என்கிட்ட இதப்பத்தி சொல்லல? நீங்க யாரும் எதுவும் சொல்லலைன்னா, இந்தக் கிழவிக்கு எதுவும் தெரியாதுன்னு நெனைச்சுட்டீங்களாடா?”ன்னு மீனாள் பாட்டி கேட்டாங்க.
“உங்ககிட்ட இருந்து எதையாவது மறைக்க முடியுமா பாட்டி? பாஸ் கண்ணுலயே விரலை விட்டு ஆட்டுற ஒரே ஆள் நீங்கதான்”ன்னான் மகேஷ்.
“போதும்டா, வாய மூடு. என் பேரன் என்ன பண்றான்? சாப்பிட்டானா இல்லையா?”ன்னு பாட்டி அக்கறையா கேட்டாங்க.
“சாப்பிட்டாராவா? ஏன் பாட்டி நீங்க வேற! நேத்துல இருந்து குடிச்சிக் குடிச்சு மனுஷன் ஆல்கஹால்லயே மிதக்குறாரு. இப்பதான் ஃப்ரெஷ்ஷா… இருக்கிற டென்ஷன்ல டி.வி-யைப் போட்டு உடைச்சிருக்காரு. அடுத்தது உடையப்போறது என் மண்டையாக்கூட இருக்கலாம். நானே அவர்கிட்ட இருந்து எப்படித் தப்பிச்சு வெளிய ஓடிப்போகலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்”ன்னான் மகேஷ்.
“ஓஹோ… அப்ப நீ அவனைப் பார்த்துக்க மாட்டியா? அவனைக் குறை சொல்றதுக்குத்தான் அங்க இருக்கியா நீ?”ன்னு பாட்டி கொஞ்சம் கோபமா கேட்க, “உங்களுக்கு என்ன? நீங்க அங்க இருந்துட்டு ஈஸியா சொல்லுவீங்க. இங்க அவர்கிட்ட மாட்டிட்டு முழிக்கிறது நான்தானே! அவரப் பார்த்தாலே ‘அள்ளு’ விடுது பாட்டி”ன்னு பயந்த குரல்ல சொன்னான் மகேஷ்.
“சும்மா அப்படியே நடிக்காதடா. நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸ்னு எனக்குத் தெரியும். போ, அவன்கிட்ட பேசு. அவனைத் தனியா விடாத”ன்னு மீனாள் பாட்டி சொல்ல, “நான் அப்புறமா அவர்கிட்ட போய்ப் பேசுறேன் பாட்டி. நீங்க அத விடுங்க. எனக்கு ரொம்ப நாளா ஒரு டவுட். அத முதல்ல கிளியர் பண்ணி விடுங்க”ன்னான் மகேஷ்.
“அப்படி என்னடா உனக்கு டவுட்?”ன்னு பாட்டி கேட்க, “அது ஒண்ணும் இல்ல பாட்டி. விஷ்வா சாருக்குப் பொண்ணுங்களப் பிடிக்காதுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும். ஆனா, அவரு சுத்தமா எந்தப் பொண்ணுகிட்டயும் பேசாம இருக்குறதுக்கு அதுதான் காரணமா? இல்ல நியூஸ்ல வர்றது எல்லாம் உண்மையா இருக்குமா? உங்களுக்கு என்ன தோணுது?”ன்னு சந்தேகமா கேட்டான் மகேஷ்.
“டேய், உனக்கு அவ்வளவுதான்டா மரியாதை. நீ இப்படியே பேசிட்டு இருந்தேன்னா, ‘நான் உன்னையும் என் பேரன் மாதிரிதான் வளர்த்தேன்னு’ மறக்க வேண்டியது இருக்கும். நான் மட்டும் இப்ப நல்லா இருந்திருந்தா, இப்படி விஷ்வாவைப் பத்திப் பேசுற அந்த வாய, என்னோட தடியாலயே நல்லா அடிச்சு உடைச்சு விட்டுருப்பேன்”னு பாட்டி கோபமா சொல்ல, “அச்சோ பாட்டி, கூல் கூல். கோபப்படாதீங்க. நான் அவர ‘சார்’னு கூப்பிட்டாலும், அவரு எனக்கு அண்ணாதான். அவரைப் பத்தி எனக்குத் தெரியாதா? நீங்கதான் டி.வி-ல வந்ததப் பார்த்துட்டு சோகமா இருந்தீங்க. அதான் உங்க மைண்ட்ட மாத்த சும்மா விளையாடினேன். நீங்க இதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க. விஷ்வா சாரோட PR டீம் இந்தப் பிராப்ளத்தை எப்படி சால்வ் பண்றதுன்னு ராப்பகலா யோசிச்சுட்டு இருக்காங்க. எப்படியும் நாளைக்கு எல்லாம் சரியாயிடும்னு நெனைக்கிறேன்”ன்னான் மகேஷ்.
“சரி, அதெல்லாம் இருக்கட்டும். இனிமே விளையாட்டுக்குச் சொல்றேன்னு கூட நீ இப்படி எல்லாம் என்கிட்டயோ, அவன்கிட்டயோ போய்ப் பேசிட்டு இருக்காத. என் விஷ்வா ரொம்பப் பாவம் மகேஷ். அவன்கிட்ட எல்லாமே இருக்கு. ஆனா, இந்த நிமிஷம் வரைக்கும் சந்தோஷம், நிம்மதின்னா எப்படி இருக்கும்னு கூட அவன் ஒரு நாளும் அனுபவிச்சுப் பார்த்ததில்லை. அவன் வாழ்க்கையை நெனச்சாலே எனக்குக் கவலையா இருக்குடா…”ன்னு பாட்டி ஃபீல் பண்ணிச் சொல்ல, “நீங்க விடுங்க பாட்டி. அவரப் பார்த்துக்க நாங்க எல்லாரும் இருக்கோம். நீங்க உங்க உடம்பைப் பார்த்துக்கோங்க. நீங்க சரியாகி வந்தீங்கன்னாலே அவரு பாதி சரியாயிடுவாரு”ன்னான் மகேஷ்.
“சரிடா, நீ போய் அவன் என்ன பண்றான்னு பாரு. அவனைத் தனியா விடாத. நான் ஃபோனை வெக்கிறேன்”ன்ன மீனாள் பாட்டி அந்த அழைப்பைத் துண்டிச்சுட்டாங்க.
விஷ்வாவைத் தேடிக்கிட்டு ஹாலுக்குப் போனான் மகேஷ். ஆனா, அங்க அவன் இல்ல. “ஐயையோ… இப்ப இவரு எங்க போனாருன்னு தெரியலையே!”ன்னு நெனைச்ச மகேஷ், பாடிகார்டுகளோட சேர்ந்து அந்தப் பெரிய பங்களா முழுக்க விஷ்வாவைத் தேடிப் பார்த்தான். அப்போ, கையில லேப்டாப்போட அவனருகில் ஓடிப் போன ஒருத்தன், “சார்… விஷ்வா சார் யாருக்கும் தெரியாம காரை எடுத்துக்கிட்டுப் பின்வாசல் வழியா வெளிய போயிருக்காரு. இங்க பாருங்க, சி.சி.டி.வி கேமராவுல ரெக்கார்ட் ஆகி இருக்கு”ன்னு அவனுக்கு கேமரா ஃபுட்டேஜ்ஜைப் போட்டுக் காட்டினான்.
“ஷீட்…!! இந்த நைட் டைம்ல போதை தலைக்கு ஏறுற அளவுக்குக் குடிச்சுட்டு இப்ப இவரு எங்க போனாருன்னு தெரியலையே! எல்லாரும் ஆளுக்கு ஒரு காரை எடுத்துட்டுப் போய் அவரைத் தேடுங்கடா”ன்ன மகேஷ், தானும் தன்னோட கார்ல விஷ்வாவைத் தேடிப் புறப்பட்டான்.
ஒரு ஆள் அரவமற்ற தார் ரோட்ல தன்னோட கார்ல போய்க்கிட்டு இருந்த விஷ்வா, அப்போதும் டிரைவிங் செஞ்சபடியே, கையில ஒரு விஸ்கி பாட்டில வெச்சுக்கிட்டு அப்பப்போ குடிச்சபடியே, “என்னடா… சும்மா நான் ஆம்பளை இல்ல, ஆம்பளை இல்லன்னு எவனப் பார்த்தாலும் அதையே சொல்லிட்டு இருக்கீங்க! முதல்ல அதைச் சொல்ற நீங்க எல்லாரும் ஆம்பளையாடா? ஆம்பளைன்னா நீங்க என்னன்னுடா நெனச்சுட்டு இருக்கீங்க? பொண்ணுங்க பின்னால சுத்தி, அவங்களால சீரழிஞ்சு சாகுறவன்தான் ஆம்பளையா? என்ன மாதிரி சிங்கிளா, கெத்தா இருக்குறவன்தான்டா ஒரிஜினல் ஆம்பளை. நான் என்ன பெரிய ஆம்பளன்னு ப்ரூவ் பண்றதுக்கு எவ கூடயும் இருக்கணும்னு எனக்கு அவசியமில்லை. இவளுங்க எல்லாம் முதல்ல பொண்ணுங்களாடா? எல்லாம் சரியான ராட்சசிங்க. ஆம்பளைங்க உயிரை எடுக்குறதுக்குன்னே பொறந்திருக்காளுங்க. அவளுங்க எல்லாம் ஒரு ஆளு மசுருன்னு இந்த விஷ்வா அவளுங்க பின்னால சுத்திட்டு இருக்கணுமா? நடக்காதுடா! என்னைக்கும் அப்படி ஒரு சம்பவம் நடக்காது. என் லைஃப்குள்ள எவளும் வரமாட்டாள். நான் வரவும் விடமாட்டேன்”னு போதையில வார்த்தைகள் தடுமாற உளறிக்கிட்டு இருந்தான் விஷ்வா.
தொடர்ந்து குடிச்சுக்கிட்டே இருந்ததால அவனுக்குத் தலை ‘விண் விண்’னு வலிக்க, தூரத்துல தெரிஞ்ச ஒரு ரோட்டோர டீக்கடையைக் கவனிச்ச விஷ்வா, தன் காரை ஓரங்கட்டினான். அவன் டீ குடிக்கலாம்னு நெனச்சு காரை நிறுத்தி இருக்க, அந்தக் கடையில உள்ள டி.வி-லயும் நியூஸ்ல “விஷ்வா ஆம்பளைத்தனம் இல்லாதவரா?”ன்னு நியூஸ் ஓடிக்கிட்டு இருந்துச்சு. அதனால எரிச்சலான விஷ்வா, “அடச்சீ… இவனுங்க யாருக்குமே அடுத்தவங்க பர்சனல் லைஃபைத் தோண்டுறத விட்டா வேற வேலையே இருக்காது போல! அப்படியே நான் ‘கே’-யா இருந்தாக்கூட உங்களுக்கு என்னடா வலிக்குது?”ன்னு புலம்பிவிட்டு, தன் கையில இருந்த விஸ்கி பாட்டிலைக் காலி செஞ்சபடியே காரை ஸ்டார்ட் செஞ்சு போனான்.
போதை தலைக்கு ஏறிய நிலையில தொடர்ந்து கார்ல போய்க்கிட்டு இருந்த விஷ்வாவுக்கு வாந்தி வர்றது போல இருந்ததால, காரை ஓரங்கட்டிட்டு வெளிய போனவன், ஓரமா இருந்த குட்டிச்சுவர்ல உக்கார்ந்தான்.
அவனுக்கு ஒரே மெண்டல் டார்ச்சரா இருக்க, என்ன செஞ்சு தன்னை ஆசுவாசப்படுத்திக்கிறதுன்னு தெரியாம சிகரெட்டை எடுத்துப் பத்தவெச்சுப் புகைக்கத் தொடங்கினான்.
அப்போ, தன்னோட முன்னழகும், சிற்றிடையும் மத்தவங்களோட கண்ணுக்கு விருந்தா இருக்கட்டும்ன்ற எண்ணத்துல, தன்னோட புடவையைத் தாராளமாத் தளர்த்திக் கட்டியிருந்த இளம் பொண்ணு ஒருத்தி, விஷ்வாவைத் தூரத்துல இருந்து பார்த்துட்டு, “யப்பா… வந்து இவ்வளவு நேரமாகுது. இன்னமும் எவனும் சிக்கலையேன்னு நெனச்சேன். எவனோ புண்ணியவான் கரெக்டா எனக்குன்னு வந்திருக்கான். ஆளு வேற பார்த்தா நல்லா ‘கின்னு’ன்னு ஜிம் பாடியா இருக்கான். இன்னைக்கு விடிய விடிய ம்ம்ம்ஹிஹிம்ம்…!!”னு நெனச்சபடியே குஷியா அவனருகில் போனாள்.
இருட்டுல விஷ்வாவோட முகம் சரியாத் தெரியாததால, “என்ன சாரே… இந்த நேரத்துல இருட்டுக்குள்ள வந்து தனியா உக்காந்திருக்க? நீ வேற பார்க்க நல்லா சோக்கா இருக்குற. உனக்கெல்லாம் வாழ்க்கையில என்ன பிரச்சனை இருக்கப்போகுது? அப்படியே மண்ணாலா பிரச்சனை, பொண்ணாலப் பிரச்சனைன்னு… எதுவா இருந்தாலும், இந்தப் மல்லிகா கை பட்டா இனிமே அப்படியே உன் வாழ்க்கை மணம் மணமா வீசும். வரியா? பக்கத்துலதான் என் வீடு இருக்கு. பொதுவா எல்லாருக்கும் நான் ஐயாயிரம் ரூபாய் சார்ஜ் பண்ணுவேன். ஆனா, எனக்கு என்னமோ உன்னைப் பார்த்த உடனே ரொம்பப் புடிச்சிருச்சுயா. அதனால நீ ஒரு நைட்டுக்கு வெறும் மூவாயிரத்து ஐந்நூறு மட்டும் கொடு போதும். உனக்கு ஓகேவா?”ன்னு தன்னோட தேன் குரல்ல தாராள மனசோட சொன்னாள்.
அவளோட நெருக்கத்தால டிஸ்டர்ப் ஆன விஷ்வா, தன் தலையைப் பிடிச்சபடியே எழுந்து நின்னு அவளைப் பார்க்க, அவன் முகத்தைப் பார்த்துட்டு முதல்ல ஷாக் ஆன மல்லிகா, பின் ‘குபீர்’னு சிரிச்சாள். அவன் அவளை எரிச்சுடுற மாதிரிப் பார்க்க, “என்னையா அப்படிப் பார்க்குற? நீ அந்த டி.வி நியூஸ்ல வந்த பணக்காரன்தானே! உனக்குத்தான் பொண்ணுங்களையே பிடிக்காதாம். ஆம்பளைங்க மேலதான் ஆசையாமே. உன் மூஞ்சியச் சரியாப் பார்க்காம நான் வேற கூறுகெட்ட சிறுக்கி உன் மேல ஆசைப்பட்டு இவ்வளவு நேரமாப் பேசிட்டு இருக்கேன். நீ போயா. இப்படியே ஓரமா நடந்து போனீன்னா, எங்கயாவது எவனாவது குடிகாரன் குடிச்சுட்டு விழுந்து கிடப்பான். போ, அவனை ட்ரை பண்ணு. உனக்கு அவன்தான் கரெக்டா இருப்பான்”னு சொல்லிட்டு, நக்கலா அவனைப் பார்த்துச் சிரிச்சா மல்லிகா.
அவள் தன் பெயருக்கேத்த மாதிரி சரம் சரமா பேசி, விஷ்வாவைக் கடுப்பேத்தி விட்டதால, அவனுக்கு ‘சுள்ளு’ன்னு கோபம் தலைக்கேறிட, தன்னோட பிஸ்டலை எடுத்து அவள் நெத்தியில சுட்டு, அவளைப் போட்டுத் தள்ளிவிட்டான். செத்துப்போய் பிணமா ரோட்டோரத்துல கிடந்தாள் மல்லிகா.
தொடரும்..