Home FREE NOVELSமூர்கனின் காதலி CH 4

மூர்கனின் காதலி CH 4

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 4

விஷ்வாவோட காரை ரோட்டோரமாக நின்னு ஒரு இளம் பெண் பார்த்துகிட்டு இருந்ததை கவனிச்ச மகேஷ், “பாஸ்.. சௌபர்ணிகா மேடம் அங்க நின்னு நம்ம காரையே பார்த்துட்டு இருக்காங்க. உங்கள பார்க்கத்தானே ஆசையா இவ்ளோ தூரம் வந்திருக்காங்க.. ரொம்ப நேரம் பேசலைன்னாலும் அட்லீஸ்ட் நின்னு ஒரு ஹையாவது சொல்லிட்டு வாங்களேன்..!!”ன்னு சொல்ல, அவனைப் பார்த்து ஒரு முறை முறைச்சான் விஷ்வா. அதுக்கு மேல பேச தைரியம் இல்லாம அமைதியா இருந்துட்டான் மகேஷ்.

“இத்தனை வருஷமாகியும்.. உனக்கு என்ன ஏத்துக்கிற மனசு வரலையில்ல விஷ்வா..!! இன்னும் எத்தனை வருஷம் நான் வெயிட் பண்ணனும்னாலும் பரவால்ல. நான் வெயிட் பண்ண ரெடியா இருக்கேன். பட் நீ என்ன அக்செப்ட் பண்ண ரெடியா இருப்பியா..??”ன்னு நினைச்சு கலங்கின கண்ணோட அந்த கார் தன் கண்ணுல இருந்து மறையும் வரை பார்த்துக்கிட்டு நின்னிருந்த சௌபர்ணிகா தன் பாரத்தை கடவுள்கிட்ட இறக்கி வைக்கிறதுக்காக பக்கத்துல இருக்கிற கோவிலுக்கு போயிட்டா.

மூணு தளபதிகளோட கெத்தாகத் தன்னோட ஆபிஸ்க்குள்ள நுழைஞ்சான் விஷ்வா. என்ட்ரன்ஸ்ல இருந்த male receptionist முதல் ground floorல ஸ்டாஃப்ஸ் வரைக்கும் ‌அனைவரும் அவங்களைப் பார்த்தவுடனே மரியாதை நிமித்தமாக எழுந்து நிக்க, அவங்களை துளியும் கண்டுக்காம இவங்க நாலு பேரும் நேரா போய் chair man officeக்கு போற பிரத்யேகமான லிஃப்ட்ல ஏறினாங்க. அவங்க தலைகள் தங்கள் கண்ணைவிட்டு மறைஞ்சவுடனே உஉஉஷ்ஷ்ஷ்..ன்னு பெருமூச்சுவிட்ட எல்லாரும் அவரவர் சீட்ல உட்கார்ந்தாங்க.

“ஒருவேளை நிஜமாவே நம்ம பாஸ் அப்படித்தானோ..!!”ன்னு ஒருத்தன் தன் பக்கத்துல உள்ள சிஸ்டம்ல உட்கார்ந்திருந்தவன்கிட்ட கேட்க, “எப்படித்தானோ..!!”ன்னு அவன் சிஸ்டம்ல ஏதோ டைப் செஞ்சவாறு கேட்டான்.

“அதான் டா அப்படி.. ஏற்கனவே அவரைப் பத்தின நியூஸ் எங்க பார்த்தாலும் spread ஆயிட்டு இருக்கு. இதுல இவர் செல்போனும் சிம்கார்டும் மாதிரி கூட அந்தத் தடி பசங்க மூணு பேரையும் எப்பவுமே கூட்டிக்கிட்டு சுத்துறாரு. சோ பார்க்கும்போது நமக்கே டவுட் வருதுல்ல.. இன்னைக்கு நான் ஆஃபீஸ்க்கு கிளம்பி வரும்போது எங்க வீட்லக் கூட பார்த்து போயிட்டு வான்னு அத்தனை தடவை சொல்லி அனுப்பினாங்க. இந்த காலத்துல பசங்களைப் பார்த்து பசங்களே பயப்பட வேண்டியதா இருக்குடா..!!”ன்னு சொல்லிட்டு சிரிச்சான்.

“அவர் எப்படி இருந்தா உனக்கு என்ன..?? உன்னையா வான்னு கூப்பிடுறாரு..?? அவ்வளவுதான் மந்த் எண்ட் ஆயிடுச்சு. இன்னும் நாலு நாள்ல கரெக்டா சேலரி வந்திரும். சோ வந்தோமா வேலையைப் பார்த்தோமா குடுக்குற சம்பளத்தை வாங்கிட்டு வீட்டுக்குப் போனோமான்னு இருந்துட்டுப் போயிடணும். எவன் எவன வச்சுக்கிட்டா நமக்கு என்ன..??”ன்னு இன்னொருத்தன் சொல்ல, “அதுவும் கரெக்டு தான். என்ன.. மத்த ஆபீஸ்ல எல்லாம் கலர் கலரா பொண்ணுங்க இருக்கு. அவன் அவன் ஐ.டி fieldக்கு சம்பளம் நிறைய வரும்னு நெனச்சு வர்றானோ இல்லையோ.. நல்ல செம்ம ஃபிகரா பார்த்து கரெக்ட் பண்ணி செட்டில் ஆகணும்னு தான் எல்லாரும் வர்றானுங்க. நமக்கு அந்த chance இல்லாம போச்சேன்னு தான் வயித்தெரிச்சலா இருக்குடா. எங்க பார்த்தாலும் பசங்க மூஞ்சியா இருக்கிறது ஒரே இரிடேட்ங்கா இருக்கு.” என்றவன் வேண்டா வெறுப்பாகத் தன்னோட வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.

தன் அறைக்கு போய் சுழல் நாற்காலியில் கால் மேல் கால்போட்டு ஸ்டைலா உட்கார்ந்த விஷ்வா “அந்த நியூஸ் என்னாச்சு..?? லாஸ்ட்டா நான் PR team கிட்ட அது ஸ்பிரட் ஆகாம கண்ட்ரோல் பண்ண சொன்னே..!!”ன்னு கேட்டான்.

“அந்த நியூஸ் இன்னும் அப்படியேதான் பாஸ் இருக்கு.”ன்னு மகேஷ் சொல்ல, “ஆக்சுவலி முன்னாடி இருந்ததைவிட இப்பதான் நியூஸ் தீயா பரவிட்டு இருக்கு பாஸ். லாஸ்ட் டைம் நம்ம எல்லாரும் சேர்ந்து Switzerlandக்கு ஒரு trip போனோமே.. அங்க நம்ம பீச்ல அரைகுறையா டிரஸ் போட்டுட்டு விளையாடினதை எல்லாம் எவனோ போட்டோ எடுத்து சோசியல் மீடியால அடுத்து அடுத்து ஒவ்வொண்ணா ரிலீஸ் பண்ணிக்கிட்டே இருக்கான். அதனால அந்த நியூஸோட இத ரிலேட் பண்ணி எல்லாரும் threesome, foursomeன்னு கலாச்சிட்டு இருக்கானுங்க. இதனால என் கேர்ள் ஃபிரண்ட்ஐ அவ ஃபிரண்ட்ஸ் எல்லாம் கலாய்க்கிறாங்களாம். சண்டை போட்டுட்டு என் கிட்ட பேச மாட்டேங்கறா பாஸ்.”ன்னு நீட்டி முழக்கி தன் சோக கதையை சொல்லி புலம்பினான் தயாளன்.

விஷ்வா அவனை குறுகுறுன்னு பார்க்க, “நீ இன்னைக்கு செத்தடா டேய்.”ன்னு நினைச்ச அரவிந்தும் மகேஷும் விஷ்வாவோட ரியாக்சனுக்காகக் காத்திருந்தாங்க. கூலாகத் தன் chairல் சாய்ந்து உட்கார்ந்த விஷ்வா “நல்லதுதான். இந்த மாதிரி chance மறுபடியும் கிடைக்காது. இதையே ரீசனா சொல்லி அவளை கழட்டி விட்டுரு.”ன்னு தயாளனைப் பார்த்து சொல்லிட்டு, “இன்னையோட மூணு நாளா ஒரு நியூஸ் என்ன பத்தி ஸ்பிரெட் ஆயிட்டு இருக்கு. அத கண்ட்ரோல் பண்ண துப்பில்லாம பி.ஆர் டீம்ல என்ன புடுங்கிட்டு இருக்காங்க..??”ன்னு கடுமையான குரல்ல கேட்டான்.

“சார் அந்த டீம்ல இருக்கிற பசங்களையெல்லாம் வீட்டுக்கு கூட போகவிடாம இந்த issueஐ சீக்கிரம் solve பண்ணுங்கடான்னு நானும் எவ்வளவோ torture பண்ணி பார்த்துட்டேன். அவனுங்க எத்தனை தடவை எல்லா நியூஸையும் ரிமூவ் பண்ணாலும், ஏதாவது ஒரு சோசியல் மீடியாவுல வேற வேற ஐபி அட்ரஸ்ல இருந்து மறுபடியும் மறுபடியும் போட்டுக்கிட்டே இருக்கானுங்க. எவனோ நமக்கு வேண்டாத நாய்தான் அவன் influenceச வச்சு இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கான். அவனுங்களையும் கண்டுபிடிக்க ஒரு டீம் போட்டுருக்கேன். But no updates. சோ எல்லாரும் என்ன பண்றதுன்னு தெரியாம மண்டையைப் பிச்சுட்டு உட்கார்ந்திருக்கானுங்க.”ன்னு மகேஷ் சொல்ல, சில நொடிகள் அமைதியாக இருந்த விஷ்வா “அவங்க கூட உடனே எனக்கு ஒரு மீட்டிங் அரேஞ்ச் பண்ணு.”ன்னான்.

மருத்துவமனையில..

வி. ஐ. பி வார்ட்ல அட்மிட் செய்யப்பட்டிருந்த மீனாள் பாட்டியைப் பார்க்க போன சௌபர்ணிகா கண்ணீரோட அவரோட கையைப் பிடிச்சுக்கிட்டு “அவன்தான் என்ன ஹார்ட் பண்றான்னு பார்த்தா.. நீங்களும் ஏன் பாட்டி இப்படி பண்றீங்க..?? நீங்க ஒழுங்கா சீக்கிரம் சரியாயிடுங்க. இல்லைனா நான் உங்ககிட்ட பேச மாட்டேன். என்னால உங்களை இப்படி பார்க்க முடியல.”ன்னு சொல்ல, “அழாதமா. உனக்கும் விஷ்வாவுக்கும் கல்யாணம் பண்ணி பார்க்கிற வரைக்கும் இந்த கிழவி உங்களை விட்டுட்டுப் போய் சேர்ந்துற மாட்டேன்.”ன்னாங்க பாட்டி.

“உங்களுக்கு ஒன்னும் ஆகாதுன்னு சொல்லுங்க. அத்தென்ன எங்களுக்கு மேரேஜ் ஆகுற வரைக்கும் எதுவும் ஆகாதுன்னு சொல்றீங்க..!! நீங்க இப்படி எல்லாம் பேசினீங்கனாலே எனக்கு உங்க மேல கோபம் கோபமா வருது. ப்ளீஸ் இந்த பேச்சை இதோட விட்டுருங்க.”ன்ன சௌபர்ணிகா தன் முகத்தைச் சுளிக்க, “இப்படி எல்லாம் முகத்தை வச்சுக்காத. பார்க்கவே நல்லால்ல. என்ன அதிசயமா புடவை எல்லாம் கட்டியிருக்க..?? நெத்தியில குங்குமம் திருநீறு எல்லாம் பலமா வேற இருக்கு.. கோவிலுக்கு போனியா..??”ன்னு அவளை டைவர்ட் பண்றதுக்காகக் கேட்டாங்க பாட்டி.

“ஆமா.. உங்களுக்கு சரியாகணும்.. உங்க பேரனுக்கு என் மேல கொஞ்சமாவது soft corner வந்து முன்னாடி மாதிரி அவன் என்கிட்ட ஒரு தடவையாவது பேசணும்னு வேண்டிக்கிட்டு வந்தேன்.”ன்ன சௌபர்ணிகா பாட்டியோட நெத்தியில திருநீரை வச்சுட்டு கொஞ்ச நேரம் அவரோட பேசிட்டு ஹாஸ்பிடல்ல இருந்து கிளம்புனா.

ஆபிஸ்ல..

மீட்டிங் ஹால்ல பி.ஆர் டீமோட மீட்டிங்ல விஷ்வா நடுநாயகமாக உட்கார்ந்திருக்க, அவன் பின்னே அவனோட மூணு தூண்களும் நின்னுக்கிட்டு இருந்தாங்க. PR teamன் head வசந்த் “சார் நாங்க எங்களால முடிஞ்ச எல்லாத்தையும் பண்ணி பார்த்துட்டோம். நம்ம சைடுல இருந்து என்ன பண்ணாலும் ஆப்போசிட்ல அதுக்கு கரெக்டா backup ready பண்ணி வெச்சிருப்பாங்க போல. சும்மா ஏதாவது பண்ணி அந்த rumoursஐ ட்ரெண்டிங்லயே வெச்சிருக்காங்க. இப்போ எங்களுக்கு என்ன பண்றதுன்னே தெரியல.”ன்னான்.

“இப்படி என்ன பண்றதுன்னு தெரியலன்னு ரீசன் சொல்லிட்டு இருக்கத்தான் உங்க இத்தனை பேருக்கும் நான் மாசம் மாசம் சேலரி கொடுத்துட்டு இருக்கேனா…?? இனிமே என்ன புடுங்கிறதா இருந்தாலும் நானே புடுங்கிக்கிறேன். உங்க எவனுக்கும் இங்க வேலை இல்ல. ஒழுங்கா ஓடிப் போயிருங்க.”ன்னு விஷ்வா அவனைப் பார்த்து கோபமாகச் சொல்ல, “ஐயையோ இந்த வேலையை நம்பித்தானே எங்க வீட்ல பொண்ணு பார்க்குறாங்க..!! இப்போ இதுவும் போயிடுச்சுன்னா.. அடுத்து நான் எப்போ வேற வேலை தேடி.. எனக்கு கல்யாணம் ஆகுறது..??”ன்னு நினைச்ச வசந்தோட அசிஸ்டன்ட் சதீஷ் அவன் விஷ்வாவுக்குப் பதில் சொல்றதுக்கு முன்னால முந்திக்கிட்டு “பாஸ் எனக்கு ஒரு ஐடியா இருக்கு. நான் சொல்லவா..?? அது கண்டிப்பா வொர்க்அவுட் ஆகும். நானும் எங்க குட்டி பாஸ்கிட்ட இத சொல்லிக்கிட்டே இருக்கேன். அவர் கேட்கவே மாட்டேங்குறாரு.”ன்னு வேகமாகச் சொன்னான்.

“டேய் சும்மா இருடா. நம்ம எதுவும் செய்யாம இருந்தா வேலைதான் போகும். ஆனா நீ வாய தொறந்து ஏதாவது பேசி அவரை கடுப்பேத்தவிட்டா அவருக்கு ஆல்ரெடி இருக்கிற கோபத்துக்கு எல்லாரையும் போட்டுத் தள்ளிட்டு போயிடுவாருடா.”ன்னு வசந்த் சதீஷோட காதுகள்ல கிசுகிசுக்க, அத கவனிச்ச விஷ்வா “நீயும் உருப்படியா எதுவும் பண்ண மாட்ட.. பண்றேன்னு சொல்றவனையும் பண்ண விட மாட்டியா..?? நீ சொல்லுடா. நீ சொல்ற ஐடியா மட்டும் வொர்க்அவுட் ஆச்சுன்னா அடுத்து நீதான் டீம் ஹெட். இவன உனக்கு அசிஸ்டென்டா போடுறேன்.”ன்னான்.

“ஓ அப்படியா பாஸ்.. ரொம்ப தேங்க்ஸ்.”ன்னு உற்சாகமான குரல்ல சதீஷ் சொல்ல, “பிரமோசனுக்கு ஆசைப்பட்டு இந்த நாய் உசுர விட போறான்.”ன்னு நினைச்ச வசந்த் அமைதியா நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினான். “தேங்க்ஸ் எல்லாம் அப்புறம் சொல்லிக்கலாம். முதல்ல உங்க ஐடியா என்னன்னு சொல்லுங்க சதீஷ்.”ன்னு மகேஷ் சொல்ல, “இது ஒன்னும் பெரிய ஐடியா எல்லாம் இல்ல சார்.. பொதுவாவே கார்ப்பரேட் கம்பெனில பண்றது தான். நம்ம மக்களை கண்டிப்பா ஈஸியா ஏமாத்திடலாம். நம்ம நெனச்சா ஒரு விஷயத்தை ட்ரெண்ட் ஆக்கவும் முடியும். ட்ரெண்டிங்ல இருந்து எதையாவது தூக்கவும் முடியும். அதே இப்போ ட்ரெண்டிங்ல இருக்கிற ஏதாவது ஒரு விஷயத்தை மக்களுக்கு மறக்கடிக்கணும்னா அதவிட இன்னும் பெருசா ரொம்ப சீரியஸான இன்னொரு விஷயம் நடக்கணும். அப்படி நடந்தா, எல்லாரும் இத மறந்துடுவாங்க. சிம்பிள்.”ன்னான் சதீஷ்.

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured