Home போதையடி நீ எனக்குபோதையடி நீ எனக்கு CH 28

போதையடி நீ எனக்கு CH 28

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 28 

ரிஷி கேட்டுக் கொண்டதற்காக கௌதம் அவனது ஹாஸ்பிடலில் வேலை செய்யும் பெண் டாக்டர் ஒருத்தியை வரவழைத்து நித்திலாவிற்கு வெர்ஜினிட்டி டெஸ்ட் எடுக்கச் சொன்னான். 

அந்தப் பெண்ணும் அது தொடர்பான வேலைகள் அனைத்தையும் செய்ய முயற்சி செய்ய, தலையில் அடிபட்டு மூளை குழம்பியா நிலையில் இருக்கும் நித்திலா,

“ஓய் நீ என்ன டி பண்ற? நீ போ அந்த பக்கம். எனக்கு உன்ன பிடிக்கவே இல்லை.” என்று சொல்லி நிரஞ்சனாவை பயத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டாள். 

“ஒன்னும் இல்ல நித்திலா பயப்படாத. அவங்க டாக்டர் தான். உன்ன செக் பண்ண வந்துருக்காங்க.” என்று ஏதேதோ சொல்லி அவளை சமாதானப்படுத்திய நிரஞ்சனா டாக்டரை அவளது வேலையை பார்க்க உதவினாள். 

அவளது உதவியோடு ஒரு வழியாக அனைத்து பரிசோதனைகளையும் செய்து முடித்த அந்த டாக்டர் பெண்மணி நித்திலாவின் டெஸ்ட் ரிப்போர்ட்  தயார் செய்து கௌதமின் கையில் அதை கொடுத்துவிட்டு வெளியில் சென்று விட்டாள். 

தனது ரூமில் ரிஷி என்ன நடக்குமோ என்று யோசித்தபடி பதட்டத்துடன் வீல்சாரில் அமர்ந்திருக்க, கௌதம் அவனிடம் சென்று நித்திலாவின் டெஸ்ட் ரிப்போர்ட் கொடுத்தான். 

கொஞ்சம் கூட பொறுமை இன்றி வெடுக்கென்று அதை அவனிடம் இருந்து வாங்கிய ரிஷி உடனே திறந்து அதில் இருந்தவற்றை படித்து பார்த்தான். 

நல்லவேளையாக அவன் நினைத்து பயந்ததைப் போல நித்திலாவிற்கு இதுவரை தவறாக எதுவும் நடந்திருக்கவில்லை. அப்படி சொல்வதற்கு பதிலாக, ஏதேனும் நடப்பதற்கு முன்பாகவே தெய்வா தினமாக அவள் ரிஷி போன்றவனின் கண்களில் பட்டிருக்கிறாள். 

அந்த விஷயத்தில் கடவுள் நித்திலாவை காப்பாற்றி இருக்கிறார் என்று சொல்லலாம்.‌ தன் நண்பன் கௌதமை கட்டிப்பிடித்து தேங்க்ஸ் சொன்ன ரிஷி, 

“நீ இன்னைக்கு பண்ண ஹெல்ப் எதையுமே நான் லாஸ்ட் வரைக்கும் மறக்க மாட்டேன் கெளதம். 

நித்திலா இந்த கண்டிஷன்ல இருக்கறதுனால அவளுக்கு தப்பா ஏதாவது நடந்திருந்தா என்ன பண்றதுன்னு எனக்கு கொஞ்சம் பயமாவே இருந்துச்சு. 

இந்த ரிப்போர்ட்டை பார்த்ததுக்கு அப்புறம் தான் நிம்மதியா இருக்கு. இனிமே அவளுக்கு எதுவும் ஆகாம கண்டிப்பா நான் அவள பத்திரமா பாத்துக்குவேன்.” என்று உணர்ச்சி வசப்பட்டு பேசினான்.

தானும் பதிலுக்கு அவனை கட்டிப்பிடித்த டாக்டர் கௌதம் “அவங்களுக்கு சீக்கிரம் சரியாயிடும். நீ அவங்களுக்காக இந்த அளவுக்கு யோசிக்கிறதை பார்த்தா, உனக்கும் அவங்கள புடிச்சிருக்கிற மாதிரி தான் தெரியுது. 

இனியும் அந்த தனுவை பத்தி யோசிச்சுக்கிட்டு இவங்கள ஏத்துக்கிறதுக்கு தயங்கிக்கிட்டே இருக்காத ரிஷி. 

இந்த கண்டிஷன்ல நித்திலாவுக்கு உன்னோட லவ் அண்ட் சப்போர்ட் ரொம்ப முக்கியம். 

நீ அவங்கள பக்கத்துல இருந்து குழந்தை மாதிரி பாத்துக்கணும். அப்படி பார்த்துகிட்டா, கண்டிப்பா அவளோட கண்டிஷன்ல ஏதாவது இம்ப்ரூவ்மெண்ட் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. 

எல்லாமே நல்லபடியா நடந்து சீக்கிரமா உனக்கும், நித்திலாவுக்கும் மேரேஜ் ஆகணும்னு நான் மனசார ஆசைப்படுறேன்.

சீக்கிரமா அந்த குட் நியூஸை சொல்லு மேன். I am waiting! 

ஏதாவது எமர்ஜென்சினா கூப்பிடு. ஆல்ரெடி அந்த பொண்ண பாத்துக்கிட்ட டாக்டர் இங்கேயே இருக்கட்டும். 

நித்திலாவோட கண்டிஷன் ஸ்டேபிள் ஆயிடுச்சின்னா, அதுக்கப்புறம் நர்ஸ் கூட இருந்தா போதும்.”  என்று சொல்லிவிட்டு அங்கே இருந்து கிளம்பினான். 

தொடரும்.. 

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

1 comment

Leave a Reply to போதையடி நீ எனக்கு [ON GOING NOVEL] – Thenaruvi Tamil Novels Cancel Reply

About Me

Featured