Home FREE NOVELSதீயாய் தித்திக்கிறாய் CH-6

தீயாய் தித்திக்கிறாய் CH-6

by oviyablessy

அந்த‌ இருண்ட‌ அறையில் அவ‌ன் ஏற்றி வைத்த‌ மெழுகுவ‌ர்த்திக‌ள் ம‌ட்டுமே பிர‌காச‌மாய் எரிந்த‌து.

அவ‌ன் மெத்தையில் கொடுத்த‌ முத்த‌ங்க‌ள், கிச்ச‌னில் கொடுத்த‌ முத்த‌ங்க‌ள், குளிய‌ல‌றையில் கொடுத்த‌ முத்த‌ங்க‌ள் என்று அனைத்தையும் சேர்த்தால் இங்கிருக்கும் மெழுகு ஒளிக‌ள் குறைவுதான்.

அதில் அவ‌ள் மெதுவாய் அதை நோக்கி குனிய‌, “ஐ ல‌வ் யூ மூனா” என்ற‌ அவ‌னின் வார்த்தைக‌ளும் க‌ண்முன் வ‌ர‌, மெதுவாய் இத‌ழ் குவித்து முத‌ல் மெழுகு தீயை ஊதினாள்.

அதில் அது க‌ப்பென்று அணைந்த‌ நொடி இங்கே அலுவ‌ல‌க‌த்தில் ச‌ட்டென்று த‌ன் க‌ன்ன‌த்தில் கை வைத்தான் அக‌ன். அவ‌ன் க‌ன்ன‌த்தில் பெண்ண‌வ‌ளின் இத‌ழ் ஈர‌ம் ப‌திந்திருப்ப‌து போல‌ ஒரு உண‌ர்வு. அதில் அழ‌காய் இத‌ழ் வ‌ளைத்த‌வ‌ன், அந்த‌ க‌ம்பியூட்ட‌ரை ஆஃப் செய்துவிட்டு எழுந்தான்.

இது அவ‌ன் காஃபி குடிக்கும் நேர‌ம். அக‌ன் ஒரு ஐ.டி ஊழிய‌ன். எப்போதும் இந்த‌ நேர‌த்தில் சூடாய் காஃபி உள்ளே இற‌ங்கினால்தான் அவ‌ன் விழிக‌ளும் விர‌ல்க‌ளும் வேக‌மாய் வேலை செய்யும். ஏனோ இன்றுதான் வேறு ஒரு விஷ‌ய‌த்திற்காக‌ காத்திருந்தான். அந்த‌ சுவை கிடைக்காத‌ வ‌ரையில் எந்த‌ சுவையும் நாவில் இற‌ங்காது என்ப‌துப்போல் வேலையில் மூழ்கியிருந்தான்.

இப்போது அதுவும் ச‌ரியான‌ நேர‌த்திற்கு கிடைத்திருக்க‌, சிறு புத்துண‌ர்ச்சியுட‌ன் எழுந்து காஃபி மிஷினிட‌ம் சென்றான்.

இங்கே மௌனாவோ அடுத்த‌ மெழுகுவ‌ர்த்தியை ஊத‌, இங்கே இவ‌னின் நெற்றியில் ஜில்லென்று ஒரு காற்று வீசிய‌து. ஏனோ பெண்ண‌வ‌ளின் இத‌ழ் ப‌ட‌ர்ந்த‌ சுக‌ம் அதில் கிடைக்க‌, அதில் அப்ப‌டியே த‌ன் கையிலிருந்து காஃபி நிறைந்த‌தும் எடுத்து இத‌ழில் வைத்தான். அப்ப‌டியே அவ‌ன் இத‌ழ்க‌ள் அந்த‌ காஃபியை அழுத்தி சுவைக்க‌, இங்கே இவ‌ளின் இத‌ழ்க‌ளும் அடுத்த‌ மெழுகு ஒளியை அணைத்த‌து.

அதில் இங்கே சுக‌மாய் விழி மூடிய‌வ‌னின் இத‌ழில் தெரிந்த‌து ஒரு தேன் சுவை. அது த‌ன்ன‌வ‌ளின் இத‌ழ் அமுத‌த்தின் சுவை. அதில் அமுத‌மாய் அந்த‌ காஃபி அவ‌ன் தொண்டையில் இற‌ங்க‌, அவ‌ன் விர‌ல்க‌ள் அந்த‌ காஃபியை அழுத்தி பிடித்த‌து.

அது ஏனோ இங்கு இவ‌ளி  இடையிலிருந்த ஹிப் செயின் ச‌ற்று இறுகுவ‌துப்போல் தோன்ற‌, குனிந்து த‌ன் இடையை தொட்டு பார்த்தாள். அதுவோ அவ‌ன் செய்த‌ லீலைக‌ளில் ச‌ற்று இற‌ங்கி இறுகியிருந்த‌து. அதில் அவ‌ளுக்கு உராய்வ‌துப்போல‌ உண‌ர்வு வ‌ர‌, வேக‌மாய் போர்வையை வில‌க்கி பார்த்தாள்.

அந்த‌ இட‌ம் ச‌ற்று உராய்வு அடையாள‌ம் தெரிந்த‌து. அதில் அந்த‌ செயினை அவ‌ள் க‌ழ‌ற்ற‌ ஆர‌ம்பிக்க‌, இங்கே அந்த‌ காஃபி க‌ப்பில் அழுத்த‌மாய் ஒரு முத்த‌மிட்டான் அக‌ன். அடுத்த‌ நொடி அவ‌ள் க‌ர‌ம் செயினை விட்டிருக்க‌, அதுவோ பொத்தென்று த‌ரையில் விழுந்த‌து. அவ‌ள் இடையில் அவ‌ன் இத‌ழ் ப‌ட்ட‌துப்போல‌ ஒரு உண‌ர்வு. அதில் நிமிர்ந்து அந்த‌ க‌ண்ணாடியை பார்த்த‌வ‌ள், அவ‌ன் எழுதிய‌ வ‌ரிக‌ளைதான் விய‌ப்பாய் ஆராய்ந்தாள்.

இங்கே அழ‌காய் இத‌ழ் வ‌ளைத்த‌ அக‌ன், அந்த‌ காஃபியோடு அப்ப‌டியே திரும்ப‌ போக‌, ச‌டாரென்று ஒருவ‌ளின் மீது மோதியிருந்தான்.

அவ‌ள் மீதே காஃபி கொட்டியிருக்க‌, “ஐய‌ம் சோ சாரி.” என்ற‌ப‌டி வில‌கிய‌வ‌ன், அப்போதே அவ‌ள் முக‌ம் க‌ண்டு அப்ப‌டியே நிறுத்தினான்.

அவ‌ள் மேகா. மார்ட‌ன் பெண்தான். ஆனால் நீட்டாக‌வே ஆடைக‌ளை அணிப‌வ‌ள். இப்போதும் சிவ‌ப்பு நிற‌ நீட்டான‌ மார்ட‌ன் உடையில், வெள்ளை தேக‌ம் த‌க‌த‌க‌க்க‌ தேவ‌தையென‌ நின்றிருந்த‌வ‌ளின் மீது காஃபிய‌ கொட்டியிருக்க‌, த‌ன் திரை மூடிய‌ மார்பு மேடுக‌ளில் சிந்திய‌ காஃபியை வேக‌மாய் துடைத்தாள் மேகா.

இவ‌னோ த‌ன் க‌ர்சீப்பை எடுத்து நீட்ட‌, அவ‌ளும் அதை வாங்கிக்கொண்டு அதை வைத்து துடைக்க‌ ஆர‌ம்பிக்க‌, “ஐய‌ம் சோ சாரி.” என்றான் மீண்டும். அதில் புன்ன‌கைத்த‌ப‌டி நிமிர்ந்த‌வ‌ள், “இது ஒன்னும் புதுசில்ல‌யே அக‌ன். அதா ஏற்க‌ன‌வே என் நெஞ்சுல‌ நெருப்ப‌ கொட்டிட்டியே. இது வெறும் காஃபிதான‌?” என்றாள்.

“வாட்?” என்று அவ‌ன் குழ‌ம்பி கேட்க‌, அவ‌ன் க‌ர்சீப்பை அவ‌ன் கையிலேயே திணித்த‌வ‌ள், மெல்ல‌ அவ‌னை நெருங்கி நின்று, “என்கிட்ட‌ என்ன‌ இல்ல‌ன்னு ஒரு வில்லேஜ் கேர்ள‌ க‌ல்யாண‌ம் ப‌ண்ண‌?” என்று கேட்டாள்.

அதில் எரிச்ச‌லாய் முக‌த்தை சுழித்து அவ‌ளை வில‌க்கிவிட்ட‌வ‌ன், “ஸ்டே யுவ‌ர் லிமிட்ஸ்.” என்றான்.

அதில் த‌டுமாறி வில‌கிய‌வ‌ள், த‌ள்ளிவிட்ட‌ அவ‌ன் க‌ர‌த்தை பார்க்க‌, அவ‌ள் விழியில் வ‌லி நிறைந்த‌து. அப்ப‌டியே நிமிர்ந்து அவ‌னை பார்த்தவ‌ள் “என்ன‌ லிமிட்? ந‌ம‌க்குள்ள‌ ந‌ட‌ந்த‌ எதுக்காவ‌து லிமிட் இருக்கா?” என்று அத்த‌னை வ‌லியுட‌ன்  கேட்டாள். அவ‌னுக்கோ அதையெல்லாம் நினைத்தாலே கோவ‌மாய் வ‌ர‌, அவ‌ள் தொட்ட‌ க‌ர்சீப்பை க‌ச‌க்கி ட‌ஸ்பின்னில் போட்டான்.

“இப்பிடித்தான‌ என்னையும் தூக்கி போட்ட‌. நாளைக்கு அவ‌ளையும் தூக்கி போட்டிருவ‌ அப்ப‌வாவ‌து…” என்று அவ‌ள் கூற‌ வ‌ர‌, “ஏய்!” என்று விர‌ல் நீட்டிய‌வ‌னின் க‌ண்ணில் அப்ப‌டியொரு அன‌ல்.

அதில் அவ‌ள் அப்ப‌டியே நிறுத்து வ‌லியுட‌ன் அவ‌ன் விழிக‌ளை பார்க்க‌, “உன‌க்கும் என‌க்கும் ந‌ட‌ந்த‌து, முடிஞ்சு போன‌ க‌த‌. அத‌ திரும்ப‌  என் வாழ்க்கைக்குள்ள‌ கொண்டு வ‌ரணும்னு நெனைக்காத‌. இனி என் லைஃப்ல‌ உன்னோட‌ நெழ‌லுக்கு கூட‌ எட‌ம்  கெடையாது.” என்றான் அழுத்த‌மாக‌.

அதில் அவ‌ளின் க‌ண்ணில் நீர் துளிர்க்க‌, “ப‌ட் என் லைஃப்ல‌ உன்ன‌ த‌வ‌ர‌ வேற‌ யாருக்கும் எட‌ம் கெடையாது.” என்றாள் மேகா.

அதில் அவ‌ன் கோவ‌மாய் ந‌க‌ர‌ போக‌, வேக‌மாய் அவ‌ன் க‌ர‌ம் ப‌ற்றினாள் மேகா. அதில் திடுக்கிட்டு திரும்பிய‌வ‌ன், அவ‌ள் பிடித்த‌ த‌ன் க‌ரத்தை எரிக்கும் அள‌விற்கு பார்க்க‌, “இப்ப‌வும் ஐ லவ் யூ.” என்றாள் க‌ண்ணீருட‌ன்.

அதில் வேக‌மாய் அவ‌ள் க‌ர‌த்தை உத‌றிவிட்ட‌வ‌ன், “எப்ப‌வுமே ஐ.. ஹேட்.. யூ..” என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி கூறிவிட்டு ந‌க‌ர்ந்தான் அக‌ன்.

அதில் அப்ப‌டியே நின்றுவிட்ட‌வ‌ளின் க‌ண்ணீர் விழியில் த‌ழும்ப, அந்த‌ விழியில் தெரிந்த‌து உண்மையான‌ வ‌லி ம‌ட்டுமே.

இங்கே த‌ன் டேபிளிற்கு வ‌ந்து அம‌ர்ந்த‌ அக‌னுக்கோ அத்த‌னை கோவ‌ம். ச‌ற்று முன்பு வ‌ரை ம‌ன‌ம் எவ்வ‌ள‌வு இத‌த்தை உண‌ர்ந்த‌து, ஆனால் அது கொஞ்ச‌ நேர‌ம் கூட‌ நிலைக்க‌வில்லை என்ற‌ எரிச்ச‌ல். எல்லாம் த‌ன் க‌ட‌ந்த‌ கால‌ம். அந்த‌ ந‌ட்க‌ளை நினைத்தாலே இப்போது ப‌ற்றிக் கொண்டு வ‌ந்த‌து. அந்த‌ எரிச்ச‌லுட‌னே க‌ம்பியூட்ட‌ரை ஆன் செய்த‌வ‌ன், வேக‌மாய் வேலையை பார்க்க‌ ஆர‌ம்பித்தான். ஏனோ அது ம‌ட்டும்தான் அனைத்தையும் ம‌றக்க‌ வைக்கும் என்று தோன்றிய‌து.

இங்கே தூர‌த்தில் நின்று அவ‌னையே பார்த்த‌ப‌டி நின்றிருந்த‌ மேகாவுக்கோ க‌ண்ணீர் பெருகிய‌து. ஒரு கால‌த்தில் த‌ன்னுட‌ன் எப்ப‌டி இருந்த‌வ‌ன், இன்று த‌ன்னை பார்த்தாலே எரிந்து விழுகிறான். அனைத்திற்கும் கார‌ண‌ம் அந்த‌ கிராம‌த்துக்காரி தான். அவ‌ளால்தான் அக‌ன் இப்ப‌டியாகிவிட்டான் என்று தோன்றிய‌து. ஆனால் அவ‌ள் மீது வ‌ரும் கோவ‌த்தைவிட‌, இவ‌னை பார்க்கும்போதெல்லாம் வ‌ரும் ஏக்க‌மே அதிக‌ம். த‌ன்னுடைய‌ பழைய‌ அக‌ன் திரும்ப‌ வேண்டும் என்று தோன்றிய‌து.

அப்ப‌டியே நேர‌ம் ந‌க‌ர‌, சாய‌ங்கால‌ நேர‌ம் அந்த‌ சிவ‌ந்த‌ சூரிய‌ன், அந்த‌ உய‌ர்ந்த‌ அப்பார்ட்ம‌ண்ட் பில்டிங்கிற்கு பின்னால் ம‌றைய‌ துவ‌ங்கியிருந்த‌து. அதே நேர‌ம் அந்த‌ அபார்ட்ம‌ண்டின் ஐந்தாவ‌து த‌ள‌த்தில் வ‌ந்து நின்ற‌து ஒரு லிஃப்ட்.

அத‌ன் க‌த‌வுக‌ள் மெல்ல‌ திற‌க்க‌ப்ப‌ட்ட‌, வேக‌மாய் வெளியில் வ‌ந்தான் அக‌ன். அவ‌ன் முக‌த்தில் அப்ப‌டியொரு எரிச்ச‌ல் இன்னுமே குறையாதிருக்க‌, வேக‌மாய் ந‌ட‌ந்து சென்று ஒரு அப்பார்ட்ம‌ண்டின் முன் நின்று காலிங் பெல்லை அழுத்தினான்.

அதுவோ வெகு நேர‌மாகியும் திற‌க்க‌ப்ப‌டாதிருக்க‌, இவ‌னோ கோவ‌மாய் மீண்டும் மீண்டும் அழுத்தினான். அடுத்த‌ நொடி க‌த‌வு திற‌க்க‌ப்ப‌ட‌, க‌த‌வை திற‌ந்தாள் அவ‌னின் ம‌னைவி மௌனா.

ஆம் அவ‌னின் அப்பார்ட்ம‌ண்டேதான். அவ‌னுக்கு சொந்த‌மாக‌ இருக்கும் ஒரே வீடு இது ம‌ட்டும்தான்.

“க‌த‌வ‌ தெற‌க்க‌ இவ்ளோ நேர‌மா?” என்று கோப‌மாய் க‌த்தினான் அக‌ன்.

அதில் ஒரு நொடி அர‌ண்டு நின்ற‌வ‌ள், “அ..அது நா உள்ள‌ சுத்த‌ம் ப‌ண்ணிட்டிருந்தேன்.” என்று அவ‌ள் கூற‌ வ‌ர‌, அதைக்கூட‌ காதில் வாங்காம‌ல் விறுவிறுவென்று உள்ளே நுழைந்தான் அக‌ன்.

அதில் திடுக்கிட்டு வில‌கி நின்ற‌வ‌ள், அவ‌ன் க‌ட‌ந்த‌தும் க‌த‌வை மூடி தாழிட்டுவிட்டு திரும்பி அவ‌னை பார்த்தாள்.

அவ‌னோ சோஃபாவில் அம‌ர்ந்து த‌ன் ஷூ சாக்ஸ் அனைத்தையும் க‌ழ‌ற்றி க‌ண்ட‌மேனிக்கு வீசிக்கொண்டிருந்தான். இப்போதுதான் அவ‌ள் அனைத்தையும் சுத்த‌ம் செய்தாள். அத‌ற்குள் இவ‌ன் அனைத்தையும் அல‌ங்கோலமாக்கிக் கொண்டிருக்க‌, அவ‌ள் ம‌ன‌ம் ப‌த‌றி முன்னெட்டு வைத்த‌து.

ஆனால் அவ‌ன் முக‌த்திலிருந்து உட‌ல் மொழி வ‌ரை தெரியும் அந்த‌ உச்ச‌க்க‌ட்ட‌ கோவ‌த்தில், அவ‌னிட‌ம் நெருங்க‌வே ப‌ய‌மாக‌ இருக்க‌, அப்ப‌டியே த‌ய‌ங்கி நின்றுவிட்டாள்.

அவ‌ளை நிமிர்ந்துக்கூட‌ பார்க்க‌ம‌ல் வேக‌மாய் எழுந்து த‌ன் அறைக்குள் நுழைந்தான் அவ‌ன்.

அதில் அவ‌ள் ப‌த‌ற்ற‌மாய் என்ன‌ செய்ய‌ என்று புரியாம‌ல் அப்ப‌டியே நின்றிருக்க‌, “என் ட‌வ‌ள் எங்க‌?” என்று உள்ளிருந்து க‌த்தினான் அக‌ன்.

அதில் திடுக்கிட்டு அர‌ண்ட‌வ‌ள், நிமிர்ந்து அறையை பார்த்தாள். அறையை சுத்த‌ம் செய்து ட‌வ‌ள் ம‌ட்டும‌ல்லாது அனைத்தையும்  இவ‌ள்தான் ம‌டித்து வேறு இட‌த்தில் வைத்திருந்தாள். என‌வே ப‌த‌றி உள்ளே ஓடிய‌வ‌ள், அவ‌னை பார்த்த‌தும் அப்ப‌டியே நின்றுவிட்டாள்.

அதில் அவ‌ளை முறைத்த‌வ‌ன், “என் திங்ஸெல்லா எட‌ம் மாத்துனா என‌க்கு புடிக்காதுன்னு உன‌க்கு தெரியாதா?” என்று கேட்டான்.

அதில் அவ‌ளோ பார்வையை தாழ்த்தி ப‌த‌ற்ற‌மாய் நிற்க‌, “இன்னும் அஞ்சு நிமிஷ‌த்துல‌ எல்லா, இருந்த‌ மாதிரி மாறிருக்க‌ணும்.” என்று அழுத்தி கூறினான் அக‌ன்.

அதில் அவ‌ளும் ப‌ய‌த்துட‌ன் ச‌ரியென்று த‌லைய‌சைக்க‌, அவ‌னோ ட‌வ‌ளைக்கூட‌ எடுக்காம‌ல் குளிய‌ல‌றைக்குள் புகுந்தான்.

அதில் அப்ப‌டியே நின்றுவிட்ட‌வ‌ளுக்கோ விழியில் க‌ண்ணீர் தேங்க‌, ம‌ன‌ம் வேக‌த்தை கூட்டிய‌து.

காலை வ‌ரை த‌ன்னிட‌ம் அவ்வ‌ள‌வு அன்பாய் ந‌ட‌ந்துக்கொண்ட‌வ‌ன், இப்போது கார‌ண‌மே இல்லாம‌ல் இப்ப‌டி எரிந்து விழுவ‌து ப‌ய‌த்தை கொடுத்த‌து. திரும‌ண‌ வாழ்வென்றால் இப்ப‌டித்தான் இருக்குமா என்று ப‌ய‌மாய் இருக்க‌, இப்போதே த‌ன் வீட்டிற்கு ஓடிவிட‌லாம் என்றுக்கூட‌ தோன்றிய‌து.

“இன்னும் அஞ்சு நிமிஷ‌த்துல‌ எல்லா இருந்த‌ மாதிரி மாறிருக்க‌ணும்” என்ற‌ அவ‌னின் வார்த்தைக‌ள் மீண்டும் காதில் ஒலிக்க‌, அவ‌ளின் ப‌ய‌மும் அதிக‌ரித்த‌து.

அதில் வேக‌மாய் சென்று அந்த‌ வேலைக‌ளை பார்க்க‌ போக‌, ச‌ட்டென்று அவ‌ளை பின்னிருந்து  அணைத்துக் கொண்டான் அக‌ன்.

அதில் அவ‌ள் திடுக்கிட்டு அப்ப‌டியே நிற்க‌, அவ‌னோ அவ‌ளை இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

        – திடீர் தீ தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured