Home FREE NOVELSதீயாய் தித்திக்கிறாய் CH-15

தீயாய் தித்திக்கிறாய் CH-15

by oviyablessy
3 views

“என்ன‌ வெளையாடிட்டு இருக்கியா? லாஸ்ட் மினிட்ல‌ வ‌ந்து முடியாதுன்னு சொல்லிட்டிருக்க‌? இத‌ ம‌ட்டும் சொன்ன‌ டேட்ல‌ முடிச்சு குடுக்க‌ல‌ன்னா உன் வேலையே..” என்று கூற‌ வ‌ர‌, “நா ரிசைன் ப‌ண்றேன் சார்.” என்றான் அக‌ன்.

அதில் மௌனா அதிர்ந்து அவ‌னை பார்க்க‌, “வாட்?” என்றார் டீம் ஹெட்.

“நானே இந்த‌ வேலைய‌ ரிசைன்  ப‌ண்றேன்.” என்றான் அக‌ன்.

அதில் மேலும் புருவத்தை இறுக்கியவர், “உன் அக்ரீமண்ட் பீரியட் இன்னும் முடியல. நியாபகம் இருக்குதான?” என்று கேட்க,

“எஸ் சார். பட் அத பத்தி எனக்கு கவல இல்ல. என்ன ப்ராப்ளம் ஃபேஸ் பண்ணனும்னாலும் நா ரெடியா இருக்கேன்.” என்றான் அகன்.

அதில் பொறுமையை இழுத்து பிடித்து நெற்றியை தேய்த்த‌வ‌ர், “அப்படி எதுக்குதான்டா உனக்கு லீவ் வேணும்?” என்று கேட்க‌, “என் வொய்ஃப் க்கு ஒட‌ம்பு ச‌ரியில்ல‌. அவ‌ள‌ பாத்துக்க‌ யாரும் இல்ல‌.” என்று பட்டென்று பதில் கொடுத்தான் அக‌ன்.

அதில் பின்ன‌ந்த‌லையை அழுத்தி கோதி உஃப் என்று ஊதிய‌வ‌ர், “செரியான‌ பைத்திய‌க்கார‌ன்.” என்று முனுமுனுத்த‌ப‌டி, “ச‌ரி வேணுன்னா வொர்க் ஃப்ர‌ம் ஹோம் எடுத்துக்கோ. லீவ் க‌ண்டிப்பா முடியாது.” என்றார் அவ‌ர்.

“ப‌ட் சார்..” என்று அக‌ன் கூற‌ வ‌ர‌, “திஸ் மை லாஸ்ட் டிசிஷ‌ன்.” என்றார் அழுத்தமாக‌.

அது அப்படியே யோசனையில் ஆழ்ந்தவன், வீட்டிலிருந்தும் வேலையில் மூழ்கியிருந்தால் இவ‌ளை எப்ப‌டி பார்த்துக்கொள்வ‌து என்று தான் த‌ய‌ங்கினான்.

“க‌ரைக்ட்டா நைனோ க்லாக் நீ லாகின் ஆயிருக்க‌ணும். புரியுதா?” என்றார் அவ‌ர்.

அதில் சில‌வ‌ற்றை யோசித்து முடித்த‌வ‌ன், “ச‌ரி ஓகே சார்.” என்றான் அக‌ன்.

“குட்.” என்ற‌ப‌டி இணைப்பை துண்டித்தார் அவ‌ர்.

அதில் மொபைலை இற‌க்கிய‌ அக‌ன் க‌டிகார‌த்தை பார்த்துவிட்டு புருவ‌த்தை சுருக்கி சில‌வ‌ற்றை க‌ண‌க்கு போட‌ ஆர‌ம்பிக்க‌, மெல்ல‌ அவ‌ன் க‌ர‌த்தை பிடித்தாள் மௌனா.

அதில் ச‌ட்டென்று அவ‌ன் அனைத்தையும் க‌லைத்துவிட்டு அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ க‌ண்ணீரோடு அவ‌ன் விழிக‌ளை பார்த்து, “ஏ இப்பிடியெல்லா ப‌ண்றீங்க‌?” என்றாள் க‌ம‌றிய‌ குர‌லில்.

அதில் ப‌த‌றி புருவ‌ம் விரித்த‌வ‌ன், “என்ன‌ ஆச்சு ம்மு?” என்று அவ‌ளின் க‌ன்ன‌ம் ப‌ற்ற, த‌ன் க‌ன்ன‌த்திலிருந்த‌ அவ‌ன் க‌ர‌த்தை அழுத்தி பிடித்த‌வ‌ள், “இந்த‌ சின்ன‌ விஷ‌ய‌த்துக்காக‌ வேலைய‌ விட‌ணுமா என்ன‌?” என்று க‌ண்ணீருட‌ன் கேட்டாள்.

அதில் அவ‌ளை மேலும் நெருங்கி அம‌ர்ந்து அவ‌ள் இரு க‌ன்ன‌ங்க‌ளையும் அழுத்தி பிடித்த‌வ‌ன், “என‌க்குன்னு வேற‌ யாருடி இருக்கா? உன்ன‌ த‌வ‌ற‌ வேற‌ எதையாவ‌து யோசிக்க‌ முடியுமா என்னால‌?” என்று கேட்க‌, அந்த வார்த்தைகளில் அவள் க‌ண்ணீர் பெருக‌, கண்ணீரோடு சில நொடி அவன் விழிகளை பார்த்தவன், அடுத்த நொடி வேக‌மாய் அவ‌ன் மார்புக்குள் புகுந்துக் கொண்டாள்.

அதில் மெல்லிய‌தாய் புன்ன‌கைத்து அவ‌ளை அணைத்துக் கொண்ட‌வ‌ன், அவ‌ள் உச்சியில் அழுத்தி முத்த‌மிட்டான்.

அப்படியே நேரம் நகர்ந்து, அடுத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் அவ‌ளுக்கு உண‌வு செய்து எடுத்து வ‌ந்த‌வ‌ன், அவ‌னே அவ‌ளுக்கு ஊட்டியும்விட்டான். அவ‌ள் சாப்பிட்டு முடித்த‌தும் அவ‌ளை ப‌டுக்க‌ வைத்த‌வ‌ன், அவ‌ள் நெற்றியில் முத்த‌மிட்டு, “ந‌ல்லா ரெஸ்ட் எடு. நா இங்க‌தா இருப்பேன்.” என்றான் மெல்லிய குர‌லில்.

அதில் அவ‌ளுக்கோ உற‌க்க‌ம் க‌ண்ணை சொருக‌, அவ‌ள் இமையிலும் மென்மையாய் முத்த‌மிட்ட‌வ‌ன், “தூங்கு.” என்று கூறிவிட்டு ந‌க‌ர‌ போக‌, வேக‌மாய் அவ‌ன் க‌ல‌ரை பிடித்த‌து அவ‌ள் விர‌ல்க‌ள்.

அதில் அவ‌ன் திடுக்கிட்டு திரும்ப, அவ‌ள் முக‌த்தை உர‌சி நின்ற‌து அவ‌ன் நாசி. அதில் சோர்வுட‌ன் மெல்ல‌ இமைய‌சைத்து அவ‌ன் விழிக‌ளை சந்தித்த‌வ‌ள், “வேலைய‌ விட்டுட்டீங்க‌ளா?” என்றாள் தவிப்புடன்.

அதில் மெல்லிய‌தாய் புன்ன‌கைத்து இல்லை என்று த‌லைய‌சைத்த‌வ‌ன், அவள் முகமெங்கும் முத்தமிட்டு, “நீ எதையும் யோசிக்காம நிம்மதியா தூங்கு.” என்றான்.

அதில் அவள் விழிகளும் அப்படியே சொருக, அவள் விரல்கள் அவன் சட்டையை மெல்ல விட்டது. அதில் மெல்லியதாய் புன்னகைத்து மெல்ல அவளைவிட்டு விலகி சென்றவன், அப்படியே குளியலறைக்குள் புகுந்தான். நேற்று காலையிலிருந்தே ஒரே சட்டையில் இருக்கிறான், அவனுக்கே கசகசவென்று இருக்க, வேகமாய் கழற்ற முயன்றான்.

அடுத்த‌ நொடி த‌சைக‌ள் இழுத்து பிடித்து க‌டும் வ‌லியை கொடுக்க‌, இறுக்கி விழி மூடி க‌ர‌த்தை இற‌க்கினான். இப்போதே தன் காயத்தை உணர்ந்தவன், உடலை இறுக்கி பிடித்தான். நேர‌ம் செல்ல‌ செல்ல‌ க‌ர‌ம் மொத்த‌மும் ம‌ர‌ண‌ வ‌லியை கொடுக்க‌ ஆர‌ம்பித்திருக்க‌, அவ‌னுக்கு என்ன‌வோ ச‌ரியாக‌வே ப‌ட‌வில்லை. க‌ர‌ம் மொத்த‌மும் பாற‌ங்க‌ல் அள‌விற்கு பார‌மாக‌ இருந்த‌து. அசைக்க‌வே இப்போது அத்த‌னை சிற‌மமாய் இருக்க‌, முத‌லில் ம‌ருத்துவ‌ருக்கு அழைக்க‌ வேண்டும் என்று குளிய‌ல‌றையைவிட்டு வெளியே வ‌ந்தான்.

த‌ன் மொபைலை எடுத்து த‌ன‌க்கு தெரிந்த‌ ம‌ருத்துவ‌ருக்கு அழைத்த‌வ‌ன், விஷ‌ய‌த்தை கூறி அவ‌ரை வீட்டிற்கே வ‌ரும்ப‌டி கூறிவிட்டு இணைப்பை துண்டித்தான்.

அத‌ன் பிற‌கு குளிக்க‌ சென்ற‌வ‌ன், முடிந்த‌ ம‌ட்டும் த‌ன் காய‌ம்ப‌ட்ட‌ க‌ர‌த்தை அசைக்காம‌ல், அத‌ன் மீது த‌ண்ணீர் ப‌டாம‌ல் குளித்து முடித்தான். அத‌ன் பிற‌கு துண்டை கட்டிக் கொண்டு வெளியே வ‌ந்தவன், வேறு ஆடைக‌ளை எடுத்து மாட்டிய‌படி, திரும்பி அவ‌ளை பார்க்க‌, அவ‌ளோ ஆழ்ந்த‌ உற‌க்க‌த்தில் இருந்தாள்.

அதில் ச‌ற்று நிம்ம‌திய‌டைந்த‌வ‌ன், மெல்ல‌ வெளியில் வ‌ந்து அறை க‌த‌வை ச‌த்த‌மில்லாம‌ல் மூடினான். அத‌ன் பிற‌கு ஹாலுக்கு வ‌ந்து மீண்டும் அந்த‌ ம‌ருத்துவ‌ருக்கு கால் செய்த‌வ‌ன், “டாக்ட‌ர் எங்க‌ இருக்கீங்க‌?” என்று கேட்டான்.

“ப‌க்க‌த்துல‌தா. வித் இன் டென் மினிட்ஸ்” என்றார்.

“ஓகே டாக்ட‌ர். வ‌ரும்போது காலிங் பெல் அழுத்திறாதீங்க‌. கால் ம‌ட்டும் ப‌ண்ணுங்க‌ நா வ‌ர்றேன்.” என்றான் அக‌ன்.

“ஏப்பா என்ன‌ ஆச்சு?” என்று அவ‌ர் கேட்க‌, “இல்ல‌ என் வைஃப் தூங்கிட்டிருக்கா அதான். நீங்க‌ வ‌ந்துட்டு கால் ப‌ண்ணுங்க‌.” என்றான்.

“ச‌ரி ஓகேப்பா அக‌ன்.” என்றார் அவ‌ர்.

அதில் இவ‌னும் காலை க‌ட் செய்துவிட்டு ஹாலில் அம‌ர்ந்து த‌ன் காய‌த்தின் க‌ட்டை பிரிக்க‌ முய‌ன்றான். அதுவோ அசைத்தாலே அதிக வ‌லியை கொடுக்க‌, தாங்க‌ முடியாது அப்ப‌டியே மூடிவிட்டான். அத‌ன் பிற‌கு ம‌ணியை பார்க்க‌ ஒன்ப‌தாக‌ இன்னும் நேர‌மிருந்த‌து.

அடுத்த‌ சில‌ நிமிட‌ங்க‌ளில் அவ‌ன் கைப்பேசி ஒலிக்க‌, ம‌ருத்துவ‌ர்தான் அழைத்தார். எடுத்து அட்ட‌ன் செய்த‌வ‌ன், வேக‌மாய் சென்று மெயின் டோரை திற‌ந்தான். அங்கே சிஷ்ரு புன்னகையோடு நின்றிருந்த மருத்துவ‌ர் த‌ன் ம‌ருத்துவ‌ க‌ருவிக‌ளுட‌ன் உள்ளே நுழைந்தார்.

அவருக்கு வழிவிட்டபடி கதவை அடைத்து உள்ளே வந்தவன், “டாக்ட‌ர் டைம் ரொம்ப‌ க‌ம்மியா இருக்கு. என்ன‌ ப‌ண்ண‌னுமோ சீக்கிர‌மா ப‌ண்ணிருங்க‌.” என்றான் அக‌ன்.

“டோன்ட் வ‌ரி. முடிஞ்சிரும்.” என்றார் ம‌ருத்துவ‌ர்.

அதில் அவ‌னும் ச‌ரியென்று வ‌ந்து சோஃபாவில் அம‌ர‌, அவ‌ருமே அவ‌னின் அருகே அம‌ர்ந்து அந்த‌ ம‌ருத்துவ‌ க‌ருவிக‌ளை முன்னிருந்த‌ டிபாட்டில் வைத்தார்.

அத‌ன் பிற‌கு அக‌ன் த‌ன் அசைக்க‌ முடியா க‌ர‌த்தை ம‌ற்றொரு க‌ர‌த்தால் கடினப்பட்டு தூக்கி முன்னால் வைக்க‌, அவ‌ரும் த‌ன் க‌ருவிக‌ளை கையில் எடுத்தார்.

முத‌லில் அவ‌ன் பேண்டேஜை க‌த்த‌ரியால் மெல்ல‌ க‌ட் செய்து எடுக்க‌, அத‌ன் உராய்வில் வ‌லியோடு இறுக்கி விழி மூடினான் அக‌ன்.

அப்ப‌டியே அந்த‌ மொத்த‌ க‌ட்டையும் க‌ட் செய்து திற‌ந்த‌ ம‌ருத்துவ‌ர், அடுத்த‌ நொடி அக‌ல‌ விழி விரித்தார்.

அவ‌ன் அனைத்தையும் தெளிவாக‌ கூறிதான் வ‌ர‌வ‌ழைத்திருந்தான். ஆனால் அவ‌ர் க‌ண்ட‌தோ இப்போது வேறு ஒன்றாக‌ இருக்க‌, “மை காட்!”  என்று நெற்றியில் கை வைத்தார்.

“என்ன‌ ஆச்சு?” என்று அவ‌ன் கேட்க‌, அவ‌ரோ அத்த‌னை ப‌த‌ற்ற‌மாய் அவ‌ன் க‌ர‌த்தில் பார்வையை குவித்து, “என்ன‌ த‌ம்பி இது? ச‌த‌ மொத்த‌மும் வெளிய‌ தெரியுது?” என்று கேட்க‌,

அவ‌னுக்கோ காய‌த்தில் காற்று ப‌ட‌வும் வ‌லியை கொடுக்க‌, இறுக்கி விழி மூடி க‌ர‌த்தை இறுக்கினான்.

“செரி செரி ஸ்ட்ரெயின் ப‌ண்ணாதீங்க‌.” என்று அவ‌ன் க‌ர‌த்தை மென்மையாய் பிடித்து இற‌க்கிய‌வ‌ர், அவ‌ச‌ர‌மாய் த‌ன் பெட்டியில் உள்ள‌ ஒரு இன்ச‌க்ஷ‌னை ஃபில் செய்தார்.

அதை பார்த்த‌ அக‌ன், “என்ன‌ ப‌ண்றீங்க‌?” என்று கேட்க‌, “காய‌ம் ரொம்ப‌ ஆழ‌மா இருக்கு. இத‌ போட்டாதா வ‌லி தெரியாம‌ ட்ரீட்ம‌ண்ட் ப‌ண்ண‌ முடியும்.” என்றார் ம‌ருத்துவ‌ர்.

“கைன்ட் ஆஃப் அனெஸ்தீஷியா?” என்று அவ‌ன் கேட்க‌, “எஸ் ப‌ட் இது கைய‌ ம‌ட்டும்தா கொஞ்ச‌ நேர‌ம் ம‌ரத்து போக‌ வைக்கும்.” என்றார்.

அது இவ‌னுக்கு தெரியாதா? த‌ன் தாயின் கொடிய‌ காய‌ங்க‌ளுக்கு சிகிச்சை செய்யும்போது அவ‌ன் தான் பார்த்திருக்கிறானே.

“இல்ல‌ அந்த‌ இஞ்ச‌க்ஷ‌ன் போடாதீங்க‌.” என்றான் அக‌ன்.

“வொய்?”என்று அவ‌ர் கேட்க‌, “பிக்காஸ் என‌க்கு ஒன்ப‌து ம‌ணிக்கு ஆஃபிஸ் வொர்க் ஸ்டார்ட் ப‌ண்ண‌னும். வொர்க் ஃப்ர‌ம் ஹோம். இந்த‌ இஞ்ச‌க்ஷ‌ன் எடுத்துகிட்டா நா தூங்கிருவேன்.” என்றான் அக‌ன்.

“வாட்?” என்று திகைத்த‌வ‌ர், “என்ன‌ பேசிட்டிருக்கீங்க‌? இந்த‌ காய‌த்துக்கு ஒன் வீக் கைய‌ அசைக்க‌வே கூடாது நீங்க‌.” என்றார் ம‌ருத்துவ‌ர்.

அதெல்லாம் அவன் மண்டைக்கு கூட எட்டவில்லை, “இல்ல‌ டாக்ட‌ர் நா பாத்துக்குறேன். நீங்க‌ ட்ரீட்ம‌ண்ட் ஸ்டார்ட் ப‌ண்ணுங்க‌.” என்றான் அக‌ன்.

அதில் அவ‌ன் க‌ர‌த்தை பார்த்துவிட்டு த‌ன் இஞ்ச‌க்ஷ‌னையும் பார்த்த‌வ‌ர், “ப‌ட் இந்த‌ காய‌த்துக்கு இஞ்ச‌க்ஷ‌ன் அவ‌சிய‌ம்.” என்றார்.

“ப்ளீஸ் டாக்ட‌ர். நாந்தா தாங்கிக்கிற‌ன்னு சொல்ற‌ல்ல‌? என‌க்கு டைம் இல்ல‌ கொஞ்ச‌ம் சீக்கிர‌ம்.” என்றான்.

அவ‌னை க‌ட்டாய‌ப்ப‌டுத்தி கொடுத்து அவ‌ருக்கு என்ன‌ கிடைக்க‌ போகிற‌து? என‌வே செரியென்று அந்த இஞ்ச‌க்ஷ‌னை உள்ளே வைத்த‌வ‌ர், கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க டிடி இன்சக்ஷன் மட்டும் அவனிடம் கூறிவிட்டே செலுத்தினார்.

ஏனோ அந்த சிறு நரம்பூசிக்கூட அவன் உடலை ஈட்டியாய் துளைப்பதுப்போல் வலிக்க, அந்தளவு அவன் கரம் பலவீனமாகியிருந்தது.

அதன் பிறகு மருத்துவர், அந்த காயத்தின் மீது இருக்கும் அழுக்கு மற்றும் மரத்தூள்களை அகற்ற  saline water கொண்டு சுத்த‌ம் செய்ய‌ துவ‌ங்க‌, காய‌த்தில் அந்த‌ திரவம் ப‌ட்ட‌துமே தீயாய் உருக்கிய‌து போல் வ‌லி. “ஸ்ஸ்” என்று அவ‌ன் முக‌த்தை இறுக்க‌, கொதிக்கக் கொதிக்க எண்ணெய்யை ஊற்றியது போல் அந்தத் திரவம் ஆழமாக இறங்கி அவனது எலும்பு வரை சுடுவது போல் ஒரு ம‌ர‌ண‌ வ‌லி.

அதில் அவ‌ன் பற்களை இறுக்கக் கடித்துக்கொண்டு த‌லையை பின்னால் சாய்த்து பொறுத்துக்கொள்ள‌, அவ‌ன் கைத் தசைகள் தான் அவ‌ன் கட்டுப்பாட்டை மீறி துடித்தன. அப்ப‌டியே மருத்துவர் அந்த‌ சிதைந்த‌ ச‌தையை பஞ்சால் துடைக்க‌ ஆர‌ம்பிக்க‌, க‌ர‌மெங்கும் மின்சாரம் பாய்ந்தது போல் அவ‌ன் தோள் வரை ஏறியது.

அந்த‌ வ‌லியில் அவனது விரல் நரம்புகள் விறைத்துப் போயிருக்க‌, அடுத்து மருத்துவர் காயத்திற்குள் சிக்கியிருந்த ஒரு சின்ன துகளை இடுக்கால் (Forceps) பிடித்து இழுத்தார். அதில் அவ‌ன் உட‌ல் திடுக்கிட்டு  அதிர்ந்து பின்னிழுக்க‌, அவ‌ன் நெற்றியில் நரம்புகள் வ‌லியில் புடைத்தன. வ‌லியில் ச‌த்த‌மாய் க‌த்த‌வே முய‌ன்றுக்கொண்டிருந்த‌ இத‌ழ்க‌ளை அழுத்தி மூடி தொண்டையில் விழுங்கினான்.  அவனது கை மொத்த‌மும் தீயாய் எரிந்து துடிக்க‌, அவ‌ன் இதயமும் அத்த‌னை ப‌ல‌மாய் துடித்த‌து.

எப்ப‌டியோ பெரும் போராட்ட‌த்திற்கு பிற‌கு அவ‌ன் சிகைச்சை முடிந்திருக்க‌, காய‌த்தில் க‌ட்டு போட்டு முடித்த‌ ம‌ருத்துவ‌ர் த‌ன் க‌ருவிக‌ளை எடுத்துக் கொண்டு எழுந்தார்.

அவ‌னோ இன்னுமே வ‌லியில் இறுக்கி விழி மூடி சோஃபாவில் சாய்ந்திருக்க‌, “ச‌ரி நா கெள‌ம்புறேன். முடிஞ்ச‌ள‌வு கைய‌ ஸ்ட்ரெயின் ப‌ண்ணாம‌ பாத்துக்கோங்க‌.” என்றார் அவ‌ர்.

அதில் மெல்லிய‌தாய் விழி திற‌ந்து, ச‌ரியென்று மெல்ல‌ த‌லைய‌சைத்த‌வ‌ன், “தேங்க் யூ டாக்ட‌ர்” என்றான் இறுகிய‌ குர‌லில்.

“ம்ம். காய‌ம் ஆற‌ எப்ப‌டியும் ஒரு வார‌ம் மேல‌ ஆகும். அது வ‌ரைக்கும் அத‌ ஸ்ட்ரெயின் ப‌ண்ணாம‌ இருந்தாதா ந‌ல்ல‌து. அவ்ளோதா நா சொல்லுவேன்” என்றார்.

ஆனால் அவ‌னுக்கோ இப்போது எழுந்த‌வுட‌னேயே வேலை இருக்க‌, நிமிர்ந்து க‌டிகார‌த்தை பார்த்தான். ம‌ணி ஒன்ப‌தை தொட்டுக்கொண்டிருக்க‌, க‌டின‌ப்ப‌ட்டு த‌ன் சோர்வை விர‌ட்டிய‌ப‌டி எழுந்து நின்றான்.

ம‌ருத்துவ‌ரும் அவ‌னிட‌ம் மேலும் சில‌வ‌ற்றை கூறிவிட்டு கிள‌ம்பிவிட‌, க‌த‌வை அடைத்துவிட்டு த‌ன் க‌ர‌த்தை அசையாது அழுத்தி பிடித்த‌ப‌டி திரும்பிய‌வ‌ன், அப்ப‌டியே த‌ன் அறைக்கு வ‌ந்தான்.

ச‌ற்று முன் அவ‌ன் உட‌ல் தாங்க‌ முடியாத‌ வ‌லிக‌ளை தாங்கியிருக்க‌, அவ‌ன் உட‌ல் ச‌க்திக‌ள் மொத்த‌மும் மொத்த‌மாய் வ‌டிந்திருந்த‌து. அவ‌ள் செலுத்திய‌ டிடி இஞ்ச‌க்ஷ‌ன் வேறு இப்போது வ‌லியை கொடுக்க‌, அவ‌ன் மூளையே இப்போது ம‌ந்த‌மாகிய‌து போல‌ இருந்த‌து.

அதில் த‌ட்டு த‌ள்ளாடி மெத்தைக்கு வ‌ந்த‌வ‌ன், ம‌ணியை பார்க்க‌ ச‌ரியாக‌ ஒன்ப‌து. உட‌னே லாகின் செய்ய‌ வேண்டும் என்று லேப்டாப்பை திற‌க்க‌, அவ‌ன் க‌ண்க‌ளெல்லாம் இருட்டிக்கொண்டு வ‌ந்த‌து.

அதில் த‌லையை உலுக்கிவிட்டு ஓப்ப‌ன் செய்த‌வ‌ன், த‌ன் க‌ம்ப‌னி வெப்சைட்டில் ஐடியை போட்டு அப்ப‌டியே கீழே லாகின் என்ப‌தை அழுத்த‌ போக‌, அத‌ற்குள் விழிக‌ள் சொருகி பொத்தென்று பின்னால் சாய்ந்தான். அடுத்த‌ நொடி அவ‌னை தாங்கி பிடித்திருந்த‌து பெண்ண‌வ‌ளின் பூ மார்பு.

அவன் முகம் அவள் மார்பு குழிக்குள் புதைய, அப்படியே அவன் தலையை அணைத்து பிடித்தது அவள் விரல்கள்.
     
            – காதல் தீ தொட‌ரும்…

You may also like

Leave a Comment

About Me

Featured