அத்தியாயம் 89: எனக்கு விஷ்ணுவ பிடிக்கும் !பார்ட் 1)
சித்தார்த்தின் பள்ளியில்…
உணவு இடைவேளை…
ஷாலினியோடு ஸ்டாப் ரூமிற்குள் நுழைந்தாள் ராகவி. அவர்களை பார்த்தவுடன் தன்னுடைய லஞ்ச் பாக்ஸை கையில் எடுத்து கொண்டு அவர்களின் அருகே வந்த லாவண்யா, “சீக்கிரம் வாங்க. போய் சாப்பிடலாம். நான் காலையில சாப்பிடாமயே வந்துட்டேன். அதனால ரொம்ப பசிக்குது.” என்றாள். அதைக் கேட்ட ரித்திகாவும், ஷாலினியும், அவளிடம் தாங்களும் தங்களுடைய லஞ்ச் பாக்ஸை எடுத்து வருவதாக சொன்னவர்கள், அவர்களுடைய டேபிளின் அருகே சென்று அதை எடுத்துக் கொண்டு இருந்தனர்.
அவர்கள் அதை எடுத்துவிட்டு லாவண்யாவுடன் வெளியே செல்லவிற்கும் தருணம், அப்போது சரியாக தன் கையில் உணவு பொட்டலங்களுடன் விஷ்ணு உள்ளே வந்தான். அவனை அங்கே கண்ட மூவரும், ஷாலினிக்காக தான் அவன் ஏதோ வாங்கி வந்திருக்கிறான் போல, என்று நினைத்துக் கொண்டனர். இன்று காலை விஷ்ணுவை வேறொரு பெண்ணுடன் பார்த்ததால், அவன் மேல் கடுப்பில் இருந்த ஷாலினிக்கு, இப்போது அவன் தனக்காக யோசித்து எதையோ வாங்கி இருப்பது; சற்று ஆறுதலாக இருந்தது. அதனால், அவனிடம் தன்னுடைய கோபத்தை விட்டுவிட்டு பேசலாம் என்று நினைத்தவள், எதையோ பேச வாயைை திறந்தாள்.
ஷாலினி பேசுவதற்குள், “லஞ்ச் வாங்கிட்டு வந்துட்டியா மாமா..???” என்று ஒரு இளம் பெண்ணின் இனிமையான குரல் அவர்களுக்கு பின்னே இருந்து கேட்டது. அந்த குரலால் தொந்தரவு அடைந்த ஷாலினியும், மற்றவர்களும், விஷ்ணுவிடம் பேசாமல்; அந்த குரல் வந்த திசையை நோக்கி திரும்பி பார்த்தனர். அவர்களின் அருகே வந்த வைஷாலி, அவர்களை சிறிதும் பொருட்படுத்தாமல், அவர்களை கடந்து, விஷ்ணுவின் அருகே சென்று நின்றாள். வைஷாலியை பார்த்தவுடனே ஷாலினிக்கு, விஷ்ணுவுடன் அவளை காலையில் அவர்கள் பைக்கில் செல்லும் போது பார்த்தது ஞாபகம் வந்தது.
அதை நினைத்து எரிச்சல் அடைந்தவள் தனக்கு அருகே இருந்த ரித்திகாவின் காதுகளில், “அக்கா காலையில விஷ்ணு இவ கூட தான் பைக்ல போனான். இவனுக்கு திமிர பாருங்க..!! இப்ப அவள ஸ்கூலுக்கே கூட்டிட்டு வந்துட்டான். இவன் மட்டும் இன்னைக்கு என் கிட்ட பேசட்டும்… புடிச்சு நல்லா வாங்கி விட்டுருவேன். ரொம்ப ஓவரா பண்றான்க்கா இவன். எனக்கு அப்படியே… இவங்கள பாக்க பாக்க ஆத்துராத்தரமா வருது.” என்று தன்னுடைய ஆத்தங்கத்தை கொட்டிக் கொண்டு இருந்தாள். 😒 😡
உண்மையில்… வைஷாலியை கண்டு மிகவும் கோபமும், ஆச்சரியமும், பட்டது லாவண்யா தான். 😡 🤬 ஷாலினி விஷ்ணுவின் மீது இருந்த கோபத்தால், வைஷாலி அவனை மாமா என்று அழைத்ததை அவள் கவனிக்கவில்லை. ஆனால், வைசாலியையே கூர்மையாக கவனித்து கொண்டு இருந்த லாவண்யா, அதை சரியாக கவனித்தாள். வைஷாலி இங்கே பீ.ட்.டி. டீச்சர் ஆக வந்திருப்பதால், அவள் ஸ்போர்ட்ஸ் டிரஸ் வேறு அணிந்து இருந்தாள். தன்னுடைய நீண்ட கூந்தல் அவள் விளையாடும் போது காற்றில் பறந்து சேதாரம் ஆவதை தடுப்பதற்காக, அதை இறுக்கமாக பிரெஞ்ச் ப்ரைடில் பின்னி இருந்தாள்.
அவள் ஒரு விளையாட்டு வீராங்கனை என்பதால், தினமும் ஜிம் சென்று தன்னுடைய பாடியை பிட்டாக சைஸ் ஜீரோவில் வைத்து இருந்தாள். அவள் ஸ்போர்ட்ஸ் வியர் அணிந்து இருந்ததால், அது இன்னும் அவளுடைய உடல் அமைப்பை கச்சிதமாக எடுத்துக்காட்டியது. அவள் தினந்தோறும் வெயிலில் விளையாடுபவள் தான் என்றாலும், வைஷாலி தன்னுடைய சரும பொலிவை பாதுகாத்து வைத்து இருந்தாள். அதனால், அவளை யாராவது எந்த ஆங்கிலில் பார்த்தாலும், சிம்பிளி சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு நேர்த்தியாக இருந்தாள். 🥰
இதை அனைத்தையும் அவளை தன்னுடைய கண்களால் ஒரே நொடியில் ஸ்கேன் செய்து கண்டுபிடித்த லாவண்யா, பொறாமையில் பொங்கினாள். 😡 🔥 தன்னுடைய உயிர் தோழி ஷாலினியையே ஏற்கனவே தானக்கு போட்டியாக நினைத்தவள் அவள், அந்த லிஸ்டில் இப்போது புதிதாக இன்னொருத்தியும் வந்து சேர்ந்திருப்பதால், அவளுக்கு மிகவும் எரிச்சலாக இருந்தது. 😒 வைஷாலி இடம் அனைத்தையும் தெளிவாக சொல்லிக் கூட்டி வந்து இருந்த விஷ்ணு, அனைவரின் முன்னிலையிலும் தன்னை “மாமா” என்று அழைக்க வேண்டாம் என்று சொல்ல மறந்து விட்டான்.
இப்போது அவள் ஷாலினியின் முன்பே தன்னை மாமா என்று அழைத்து விட்டதால், இதை கேட்ட ஷாலினி இதை எவ்வாறு எடுத்துக் கொள்வாளோ..?? என்று நினைத்த விஷ்ணு தனக்குள் பயந்தான். ஷாலினியாக எதையாவது கற்பனை செய்து கொள்வதற்கு முன்; தானே ஷாலினிக்கும், ராகவிக்கும், இவளை அறிமுகப்படுத்தி வைத்துவிடலாம் என்று நினைத்தவன், அவர்களிடம் பேசத் தொடங்கினான். கண்டிப்பாக இப்போது அவனுக்கு ஷாலினியிடம் பேச தைரியம் இல்லை அதனால் ரித்திகாவை அழைத்தவன்,
“அக்கா…!!! இவ வைஷாலி, என்னோட அத்தை பொண்ணு. நம்ம ஸ்கூல்ல பீ.ட்.டி. டீச்சரா ஜாயின் பண்ணி இருக்கா.” என்றவன் வைஷாலியை பார்த்து, “இவங்க ராகவி அக்கா.” என்று ராகவியை கை காட்டி சொன்னவன் பின், “இது ஷாலினி, இது லாவண்யா.” என்று அவர்கள் இருவரையும் கை காட்டி, இவங்க என்னோட ஃப்ரெண்ட்ஸ் என்றான். விஷ்ணுவிற்கு ஏற்கனவே நிறைய பெண் நண்பர்கள் இருப்பது வைஷாலிக்கு நன்றாக தெரியும். அதனால், இவர்களை அவள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஃபார்மாலிட்டிக்காக அவர்களைப் பார்த்து புன்னகைத்தவள், “ஹாய்..!!” என்றாள். 🙋♀️
பதிலுக்கு வைஷாலியை பார்த்து “ஹாய்” சொல்லும் மன நிலையில்; லாவண்யாவும் ஷாலினியும் இல்லை. அதனால், அவர்கள் இருவரும் அமைதியாகவே அவளை பார்த்துக் கொண்டு இருந்தனர். இவள் விஷ்ணுவின் சொந்தக்கார வீட்டு பெண் என்றால், இவளும் கண்டிப்பாக பணக்கார வீட்டு பெண்ணாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்த ராகவி, பரவாயில்லை விஷ்னுவின் குடும்பத்தில் உள்ள அனைவரும் பொதுவெளியில் தங்களை சாதாரணமாக தான் காட்டிக் கொள்வார்கள் போல, என்று நினைத்து மகிழ்ந்து சந்தோஷமாக வைஷாலிக்கு, “ஹாய்” சொன்னாள். 😁 😁 😁
இன்னொரு புறம் அவளுடைய மனதில், விஷ்ணு இப்போது ஷாலினிக்காக இங்கே சாதாரணமாக வேலை செய்வது போல, ஒரு வேளை இந்த வைஷாலி, விஷ்ணுவைக்காக இங்கே வேலை செய்ய வந்திருக்கிறாளோ..?? என்றும் தோன்றியது. அதனால் கூடிய விரைவில் விஷ்ணுவையும், ஷாலினியையும், சேர்த்து வைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்தாள். இப்போது எல்லாம் ராகவியோடு சேர்ந்து ஷாலினியும் சித்தார்த்துடன் சாப்பிட தொடங்கி விட்டதால், லாவண்யாவும், வேறு வழி இன்றி அவர்களோடு சேர்ந்து கொண்டாள்.
விஷ்ணு: தான் கொண்டு வந்த உணவு பார்சல்களை வைஷாலியின் கையில் கொடுத்தவன், “நீ இவங்க கூட சேந்து சாப்பிடு வைஷு. நான் கிளம்புறேன்.” என்றான்.
வைஷாலி: ஏன் டா நீ எங்க கூட சேந்து சாப்பிட மாட்டியா..???
(விஷ்ணுவையே முறைத்து பார்த்துக் கொண்டு இருந்தாள் ஷாலினி.) 😒 🤨
விஷ்ணு: முதலில் ஷாலினியிடம் இருந்து தப்பித்து சென்றால் போதும் என்றுன்று நினைத்தவன், “இல்ல…இல்ல…!!! டெய்லியும் நான் என் பிரெண்ட்ஸ் கூட, எங்க ஸ்டாப் ரூம்ல தான் சாப்பிடுவேன். நீ இவங்க கூட சாப்பிடு. பாய்.” என்றவன் அங்கு இருந்து வேகமாக சென்றுவிட்டான்.
வைஷாலி: அப்ப நீங்க எங்க சாப்பிடுவீங்க..???
ஷாலினி: “எங்களுக்கு இங்க சாப்பிடுறதுக்கு எல்லாம் பிடிக்காது. நாங்க மரத்தடியில தான் போய் உட்கார்ந்து சாப்பிடுவோம்.” என்று அவசரமான குரலில் சொன்னவள், ரித்திகாவின் கையை பிடித்துக் கொண்டு வைஷாலியை பார்த்து, “நீங்களும், லாவண்யாவும், இங்கயே உட்கார்ந்து சாப்பிடுங்க. நாங்க அங்க கிளம்புறோம். பாய்.” என்றவள், வைஷாலியின் பதிலுக்கு கூட காத்திருக்காமல்; ராகவியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவர்கள் எப்போதும் சித்தார்த்துடன் அமர்ந்து சாப்பிடும் இடத்திற்கு சென்று விட்டாள்.
வேறு வழி என்று லாவண்யா, வைஷாலியுடன் அமர்ந்து உணவு உண்டாள். ராகவி மற்றும் சித்தார்த்துடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்த ஷாலினியின் நினைவு முழுவதும் விஷ்ணுவும், வைஷாலியும்,, தான் இருந்தனர். அவளுக்கு உடனே அவர்களைப் பற்றி ரித்திகா உடன் பேச வேண்டும் என்று தான் இருந்தது. இருந்தாலும், அவர்களின் அருகில் அங்கே சுகந்தியும் இருந்ததால், அதைப் பற்றி பேசாமல் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள். இப்படியே உணவு இடைவேளை முடிந்தது.
ஷலினிக்கும், லாவண்யாவிற்கும், அந்த நாள் முழுவதும் விஷ்ணுவையும், வைஷாலியையும், பார்த்து பொறாமைப்படுவதே தான் வேலையாக இருந்தது. இன்னொரு பக்கம் வைஷாலியோ மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள். 😍 இப்படி விஷ்ணுவோடு ஒரே பள்ளியில் வேலை பார்ப்பது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. இன்று இங்கே சாதரான ஆசிரியர்களாக வேலை பார்க்கும் அவர்கள், பின்பு ஒரு நாளில்; விஷ்ணுவிற்கும், அவளுக்கும், திருமணம் நடந்த பின்பு, அபிசியல் ஆக இங்கே இந்த பள்ளியின் ஜெர்மனின் மனைவியாக இங்கே வந்து நின்றால், எப்படி இருக்கும் என்று யோசித்து அவள் கனவு கண்டு கொண்டு இருந்தாள். 😍 🥰
இது தான் விதியின் விளையாட்டு போல. ஒரு பக்கம் வைஷாலி, விஷ்ணுவோடு தான் வாழப்போகும் வாழ்க்கையை நினைத்து கனவு கண்டு கொண்டு இருக்கிறாள். இன்னொரு பக்கம் தான் ஷாலினியோடு வாழ நினைக்கும் வாழ்க்கையை நினைத்து விஷ்ணு கனவு கண்டு கொண்டு இருக்கிறான். இதில் யாருடைய கனவு வெறும் பகல் கனவாகவே முடிந்து விடப்போகிறது என்று கடவுளுக்கு தான் வெளிச்சம்.
சில மணி நேரத்திற்கு பின்…
ஷாலினி, நாராயணன் பேலஸ்சை நோக்கி.. ராகவவியோடு அவளுடைய ஸ்கூட்டியில் சென்று கொண்டு இருந்தாள். எப்போதும் படப்பட வென்று ரித்திகாவோடு எதையாவது பேசி கொண்டே இருக்கும் ஷாலினி, இன்று மிகவும் அமைதியாகவே இருந்தாள். அவளுடைய முகம் சோகத்தை தத்தெடுத்து இருந்தது. 😞 😣 அதை கவனித்த ராகவி, “ஏன் டி அமைதியா இருக்க…??” என்று கேட்டாள். அதற்கு, “ஒன்னும் இல்ல அக்கா. சும்மா தான்.” என்று சொல்லி சமாளிக்க முயன்றாள் ஷாலினி.
ரித்திகா: “பொய் சொல்லாத. விஷ்ணுவையும், அந்த பொண்ணையும், பத்தி தானே இப்ப யோசிச்சிட்டு இருக்க..???” என்று அவளுடைய மனதில் இருப்பதை அப்படியே படித்தவள் போல சரியாக கேட்டாள்.
ஷாலினி: “அதான் உங்களுக்கே எல்லாமே தெரியுதே…!! அப்புறம் ஏன் என் கிட்ட கேக்குறீங்க..???” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள்.
ரித்திகா: நான் அப்படி தான் கேட்பேன் ஷாலு. எனக்கு உன் மேல அக்கறை இருக்கு.
ஷாலினி: “இப்ப நான் என்னக்கா பண்றது..???” என்று அப்பாவியாக கேட்டாள். 😕
ரித்திகா: “இப்ப நீ எத பத்தி கேக்குற..??” என்று எதுவும் தெரியாதவள் போல், அவளிடமே பதில் கேள்வி கேட்டாள்.
ஷாலினி: “அக்கா” என்று இழுத்தவள், “ப்ளீஸ்…!! அக்கா நீங்களும் என்ன படுத்தாதீங்க. எனக்கு ஒரே கண்டிஷன் ஆ இருக்கு. இப்ப புதுசா வந்திருக்காளே.. விஷ்ணுவோட அத்தை பொண்ணு…. எனக்கு என்னமோ அவ விஷ்ணுக்காக தான் நம்ம ஸ்கூல்ல ஜாயின் பண்ணி இருக்கான்னு தோணுது. அவ விஷ்ணுவ பாக்குற பார்வையே சரி இல்ல அக்கா. அவ அவன லவ் பண்றான்னுு நினைக்கிறேன்.” என்று சோகமான குரலில் சொன்னாள். 😒 😣
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)