Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 8

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 8

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 8: அவரை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சூசைட் பண்ணிக்கலாம்

ரித்திகா அனைத்தையும் திட்டமிட்டுதான் செய்திருக்கிறாளா என்பதை கண்டுபிடிப்பதற்காக, ஏதேனும் ஆதாரம் கிடைக்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக வருண் தன்னுடைய மேனேஜர் சிவாவிடம், ரித்திகாவைப் பற்றி அனைத்து தகவல்களையும் மீட்டிங் முடிந்து தான் வருவதற்குள் அவனிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டான்.

இவ்வாறாக சிவாவிடம் பேசியபடியே தன்னுடைய ஆபீசுக்கு வந்து சேர்ந்தான் வருண். கம்பீரமாக தான் எப்போதும் அணிவது போல் உடை அணிந்துகொண்டு தன்னுடைய ஆபீஸ் ரூம் இருக்கும் தளத்தை வந்தடைந்தான் வருண். லிஃப்டில் இருந்து வெளியே வந்த வருணை அங்கிருந்த இளம் வயதுப் பெண்கள் ரசித்து பார்த்தனர்.

இருபதுகளின் தொடக்கத்தில் இருந்த ஒரு பெண் ஒருத்தி, அதே வயதுடைய இன்னொரு பெண்ணிடம், “ஓய்.. சோனியா..!!!! அங்க பாரு நம்ம பிக் பாஸ் வராரு.. எந்திரிச்சு விஷ் பண்ணனும்ல..” அதை கேட்ட சோனியா, அவசரமாக எழுந்து நிற்க, அங்கே வந்த வருணைப் பார்த்து இருவரும், “குட் மார்னிங் சார்!” என்றனர்.

அதை எதையும் கண்டுக் கொள்ளாத வருண், நேராக அவனுடைய ஆஃபிஸ் ரூம்க்கு சென்றுவிட்டான்.

வருண் அங்கிருந்து சென்றதும் தன்னுடைய இருக்கையில் அமர்ந்த காயத்ரியும், சோனியாவும், வருணைப் பற்றி தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.

சோனியா: “காயத்ரி.. நம்ம பிக் பாஸ் இன்னைக்கும் செம்ம ஹாட் ஆ இருக்காருல.. 😍”

காயத்ரி: தன்னுடைய சிஸ்டம் இல் ஏதோ டைப் செய்த படி, “ஆமா..!! ஹாட் ஆ தான் இருக்காரு. அதுக்கு என்ன..?” என்றாள்.

சோனியா: “அதுக்கு என்னாவா? அட போடி.. இவ்வளோ சிம்பிளா சொல்ற.. நம்ம பிக் பாஸ்க்கு ஏஜ் 30+ பிளஸ் ஆகுது. ஆனா அவரோட ஃப்பிசிக்கை பாரேன்… இவரை விட சின்ன வயசுப் பசங்க எல்லாம் இவர் கிட்ட தோத்துருவாங்க. அந்த அளவுக்கு body-ய மெயிண்டெய்ன் பண்ணி வச்சிருக்காரு.” என்று வருணை‌ கன் வாங்காமல் பார்த்தபடி சொன்னாள்.

காயத்ரி: “எஸ் ட்ரூ.”

சோனியா: “இந்த fitness freak-அ எவ வந்து கொத்திட்டு போகப் போறாளோ.. தெரியல..” என்று ஏக்கத்துடன் சொன்னாள். 

காயத்ரி: “அது கண்டிப்பா நீயும் இல்ல, நானும் இல்ல. இப்படி நம்ம தேவை இல்லாம பேசி.. டைம் வேஸ்ட் பண்றதுக்கு ஒழுங்கா வேலை பாத்தா புரமோஷன் ஆச்சு கிடைக்கும்.”

சோனியா: “இப்ப எதுக்கு என்னையும் சேர்த்து சொல்ற.. ஏன் நான் அழகா இல்லையா? 🤨 எங்க நம்ம பிக் பாஸ் அ நான் கரெக்ட் பண்ணி.. உனக்கே லேடி பாஸ் ஆ வந்துருவனோன்னு உனக்கு பொறாமை…”

காயத்ரி: “அப்படிலாம் எனக்கு ஒரு ஆமையும் இல்ல டி. உனக்கு அவ்ளோ guts இருந்தா.. நம்ம பிக் பாஸை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணு.. அப்படி நடந்தா அதுக்கு ஃபர்ஸ்ட் சந்தோஷ படுற ஆள் நானா தான் இருப்பேன்.”

சோனியா: “நீ சந்தோஷப்படுவ டி. பட் அத பாக்க தான் நான் உயிரோட இருக்க மாட்டேனே… நம்ம பிக் பாஸ் தான் handsome devil’ ஆச்சே… அவரைப் பத்தி தெரிஞ்சும் அவரை யாராவது கல்யாணம் பண்ணி பாங்களா? அவரை கல்யாணம் பண்ணிக்கிறதும், சூசைட் பண்ணிக்கிறதும் ஒன்னு. எனக்கு இந்த சின்ன வயசுலேயே சாகுற ஆசை எல்லாம் இல்லை.”

காயத்ரி: “நீதானே டி நம்ம big பாஸை கல்யாணம் பண்ணிக்கிட்டு எனக்கு லேடி பாஸ் ஆகணும்ன்னு சொன்ன..” என்று சொல்லி விட்டு நக்கலாக சிரித்தாள். 😁😁😁

சோனியா: “சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னா… அத எல்லாம் அப்படியே நம்பிருரதா.. 🤪 நம்ம பாஸு அழகா இருக்காரா…. பாத்து சைட் அடிக்கிறதோட ஸ்டாப் பண்ணிக்கனும். வில்லங்கத்தை விலை குடுத்து வாங்க கூடாது.” என்று சொல்ல, “ஆமா..!!!” 😂😂 என்று சொல்லிவிட்டு இருவரும் சேர்ந்து சிரித்தார்கள்.

காயத்ரி: “ஆனா.. செண்பகம் மேடம் வருண் சார்க்கு பொண்ணு பாக்குறாங்கன்னு கேள்வி பட்டேன். பாத்துட்டாங்களா இல்லையான்னு தெரியல.”

சோனியா: “ஆமா..!! ஆமா..!! நானும் கேள்வி பட்டேன். அவங்களும் எல்லா பிக் ஷாட்ஸ் ஓட பொண்ணுங்களையும் பொண்ணு கேட்டு பாத்துட்டாங்லாம். ஆனா எதுவும் செட் ஆகல போல..”

காயத்ரி: “அது எப்படி செட் ஆகும்..? நம்ம பாஸை பத்தி தெரிஞ்சும் யாரு பொண்ணு குடுப்பாங்க? அப்படியே அவங்க சரின்னு சொன்னாலும்.. வருண் சார் ஒத்துக்கணும்ல..?”

சோனியா: “அதுவும் கரெக்டு தான். அவருடைய வைஃப் ஜான்வி மேடம் இறந்ததுல இருந்தே.. இவரு வேற எந்த பொண்ணையும் திரும்பி கூட பாக்கிறது இல்லையே…”

காயத்ரி: “ஆமா..!! அதான் சில பேரு அவரு… அவரோட வைஃப் மேல இருந்த லவ் ஆள தான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிக்காம இருக்காருன்னு சொல்றாங்க. சிலர் இவருக்கு அந்த ஆக்சிடென்ட்க்கு அப்புறம் ஃபிசிகல் ப்ராப்ளம் ஏதாவது இருக்கும்ன்னு ஒவ்வொருத்தர்… ஒவ்வொரு மாதிரி பேசிக்கிறாங்க.”

சோனியா: “எது உண்மைன்னு யாருக்கு தெரியும். இந்த ரிச் பீப்பிள்ளோட லைஃப்ல என்ன நடக்குதுன்னு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும்.” 

காயத்ரி: “ஆமா..!! மத்தவங்களை பத்தி நமக்கு எதுக்கு.. இன்னும் கொஞ்ச நேரத்துல மீட்டிங் ஸ்டார்ட் ஆயிரும். வா மீட்டிங் ஹாலுக்கு போலாம். லேட்டா போனா திட்டுவாங்க.”

காயத்ரி சொன்னதைக் கேட்ட சோனியா, காயத்ரியுடன் சேர்ந்து மீட்டிங் நடக்கும் ஹாலுக்கு சென்றாள்.

வருணின் ஆஃபீஸ் ரூமில்…

வருண் அடுத்து அவன் கலந்துக் கொள்ளப் போகும் மீட்டிங்க்கு சம்பந்தப்பட்ட ஃபைல்களை எல்லாம் புரட்டிக் கொண்டு இருந்தான். அப்போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்த சிவா, “சார் மீட்டிங் ஹால்ல எல்லாம் ரெடியா இருக்கு. கொஞ்ச நேரத்தில மீட்டிங் ஸ்டார்ட் ஆயிடும். நீங்க இப்ப வந்தீங்கன்னா கரெக்டா இருக்கும்.” என்றான்.

சிவா சொன்னதைக் கேட்ட வருண், அவனுக்கு தேவையான ஃபைல்களையும், அவனுடைய லேப் டாப் ஐயும் எடுத்துச் சென்றான். மீட்டிங் ஹாலுக்கு சிவாவுடன் சென்றான்.

இங்கே வேகமாக கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வெயிட்டிங்கில் இருந்த ஆட்டோவில் ஏறி ஸ்கூலுக்கு வந்தாள் ரித்திகா. 

ஆட்டோகாரருக்கு பணம் கொடுத்துவிட்டு அவள் ஸ்கூல் கேட்டின் முன் வந்து நிற்கும் போது சரியாக மணி 9 ஆகிவிட்டது.

ரித்திகா: தன்னுடைய கை கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவள், “போச்சு.. ரித்திகா… ஃபர்ஸ்ட் டேவே லேட்டா போற.. யார் யார் கிட்டலாம் திட்டு வாங்க போறியோ.. துர்கா மா உங்களோட இந்த குட்டி பொண்ணை நீங்க தான் காப்பாத்தணும்.” என்று தன் மனதிற்குள் கடவுளிடம் வேண்டிக்கொண்டே உள்ளே வந்தாள்.

அந்த பிரம்மாண்டமான கேட்டின் வழியாக செக்யூரிட்டி ஆபீசுக்குள் சென்ற ரித்திகா, தன்னுடைய ஐடென்டிட்டி கார்டை அங்கிருந்த மிஷினில் ஸ்கேன் செய்தாள். தன்னுடைய என்ட்ரியை செக்யூரிட்டி ஆபீஸில் உறுதி செய்துவிட்டு நேராக ஆபீஸ் ரூமிற்கு சென்றாள் ரித்திகா.

ஆபீஸ் ரூம் இல் தன்னுடைய அறையில் இருந்தாள் மானசா.

அப்போது அவளுடைய பர்சனல் மொபைலுக்கு… வருணின் மேனேஜர் சிவாவிடம் இருந்து கால் வந்தது.

மானசா காலர் ஐடியில் சிவாவின் பெயரை பார்த்து அதிர்ச்சி அடைந்தவள், “இவர் எதுக்கு நமக்கு கால் பண்றாரு? இம்பார்ட்டன்ட் ஆ எதுவும் இல்லன்னா கால் பண்ற ஆள் இல்லையே… ஏதாவது ப்ராப்ளமா இருக்குமோ?” என்று தன் மனதிற்குள் நினைத்தபடியே கால் லை அட்டென்ட் செய்தாள். 

சிவா: “மிஸ். மானசா.. ஐ நீட் யுவர் ஹெல்ப்.”

மானசா: “டெல் மீ சார், க்ளாட் டு ஹெல்ப் யூ.”

சிவா: “மானசா இட்ஸ் அபௌட் சித்தார்த். சோ கீப் இட் கான்பிடென்ஷியல்” என்று அவளை எச்சரிக்கும் தோரணையில் சொன்னான். 

மானசா: “ஷூர் சார். எனி ப்ராப்ளம்?” என்று என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் கேட்டாள். 

சிவா: “நத்திங் சீரியஸ். பட் வருண் சார்.. ஸ்கூல் ரிலேட்டட் ஆ சம் இன்ஃபர்மேஷன்ஸ் வேணும்னு கேட்டு இருக்காரு.” என்று மட்டும் சொன்னான்.‌ வருணிற்கு ரித்திகாவின் மீது இருக்கும் சந்தேகம் பற்றி வெளிப்படையாக அவன் மனசைவிடம் தெரிவிக்க விரும்பவில்லை. 

மானசா: “சொல்லுங்க சார் என்ன இன்ஃபர்மேஷன் வேணும்.”

சிவா: “எஸ்டர்டே மார்னிங் சித்தார்த்த-அ ஸ்கூல்ல யாரோ நியூ ஆ ஜாயின் பண்ண டீச்சர் மீட் பண்ணி பேசி இருக்காங்க. அந்த டீச்சர் பேரு… ‘ரித்திகா’, அந்த பொண்ணு ஸ்கூல் குள்ள என்டர் ஆனது ல இருந்து எக்ஸிட் ஆகுற வரைக்கும் இருக்கிற வீடியோ ஃபுட்டேஜ்ம், அவங்களைப் பத்தின ஃபுல் டீடைல்ஸும் எனக்கு மெயில் பண்ணுங்க. வருண் சார்க்கு கொஞ்ச நேரத்துல ஒரு மீட்டிங் இருக்கு. அது முடிஞ்சி அவருடன் வர்ரதுக்குள்ள இந்த டீடைல்ஸ் எல்லாமே வேணும்னு சொல்லி இருக்காரு. சோ சென்ட் மீ எவ்ரிதிங் அஸ் சூன் அஸ் பாசிபிள்.” என்று அவன் அவளுக்கு ஆடர் போட,

நாராயணன் குடும்பத்தில் அவர்களுடைய வாரிசுகளுக்கு இணையான மதிப்பு இந்த சிவாவுக்கும் இருக்கிறது என்று மானசாவிற்க்கு நன்றாக தெரியும் என்பதால் சிவா கேட்டதற்கு எந்தக் கேள்வியும் கேட்காமல்.. “சரி” என்று சொல்லிவிட்டு காலை கட் செய்தாள். ஆனால் அவள் தன் மனதிற்குள் ரித்திகாவை பற்றி சிவா விசாரிப்பதற்கு ‌ ஏதோ ஒரு காரணம் இருக்கும். அதை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என குறித்து வைத்துக் கொண்டாள். 

பின் நேராக பிரின்சிபல் ரூமிற்கு சென்ற மானசா, சிவா தன்னிடம் சொன்னதை பற்றி எல்லாம் சொல்லிவிட்டு, பின் சிவா கேட்டதை எல்லாம் தயார் செய்ய தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள். 

தன்னுடைய ரூமிற்கு வந்து சிவா கேட்டவை அனைத்தையும் செக் செய்துக் கொண்டு இருந்தாள் மானசா. அப்போது சரியாக அங்கே வந்தாள் ரித்திகா.

ரித்திகா கதவைத் தட்டிவிட்டு வெளியே நின்று கொண்டு உள்ளே வருவதற்காக பர்மிசன் கேட்டுவிட்டு நின்று கொண்டு இருக்க, ரித்திகாவை ஒரு மார்க்கமாக பார்த்த மானசா.. “கம் இன்!” என்றாள்.

உள்ளே வந்த ரித்திகா தான் சைன் பண்ண வேண்டிய ரிஜிஸ்டர் எங்கே இருக்கிறது என்று சுற்றும் முற்றும் தேடினாள்.

ரித்திகா எதை தேடிக் கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்த மானசா, ரிஜிஸ்டரை எடுத்து அவள் கையில் கொடுத்து அதில் அவளை சைன் செய்ய சொன்னாள். 

ரித்திகா அந்த ரிஜிஸ்டரில் சைன் செய்துவிட்டு, அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்ய அவளைத் தடுத்த மானசா, ரித்திகாவின் டைம் டேபிளை அவளிடம் கொடுத்துவிட்டு.. அவளைப் பிரின்சிபால் வந்து தன்னை பார்க்க சொன்னதாக சொன்னாள்.

ரித்திகா: “ஓகே..!! மேம். நான் போயி அவங்களை பார்க்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அங்கே கிளம்பினாள்.

ரித்திகாவைப் பற்றி ஏன் நாராயணன் குடும்பத்தினர் விசாரிக்கிறார்கள் என்று மானசாவுக்கு இப்போதும் எப்படி யோசித்துப் பார்த்தாலும் புரியவில்லை. ஒருவேளை அவள் சித்தார்த்தை சந்தித்தது காரணமாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்ட மானசா இந்த ரித்திகாவிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைத்துக் கொண்டாள்.

அட்மின் ஆபீஸில் இருந்து வெளியே வந்த ரித்திகா, நேராக பிரின்சிபல் ரூமிற்கு சென்றாள். அங்கே இருந்த கதவைத் திறந்த ரித்திகா, “மே ஐ கம் இன்..?” என்று கேட்டாள்.

– நேசம் தொடரும்..

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured