அத்தியாயம் 7: ரித்திகாவை தவறாக நினைக்கும் வருண் நாராயணன்
செண்பகமும், சுகந்தியும், விஷ்ணுவும் ரித்திகாவைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது செண்பகம் வருணைப் பற்றிக் கேட்க, வருண் அங்கே வர மறுத்து விட்டதைப் பற்றி விஷ்ணு சொன்னவுடன், அனைவரும் விரைவாகச் சாமி கும்பிட்டுவிட்டு வருண் இருந்த காரை நோக்கிச் சென்றனர்.
அனைவரும் கோவிலுக்கு வெளியே வந்து பார்க்க, அவர்களின் விலை உயர்ந்த கருப்பு காரின் அருகே ஸ்டைலாக நின்றுக் கொண்டு கூலிங் கிளாஸ் அணிந்தபடி சரளமான ஆங்கிலத்தில் யாரிடமும் ஃபோனில் பேசிக் கொண்டு இந்தான் வருண்.
அவர்கள் மூவரும் தன் அருகில் வருவதைப் பார்த்த வருண், “ஐ வில் கால் யூ பேக்” என்று சொல்லிவிட்டு அந்த காலை கட் செய்தான்.
வருண்: “விஷ்ணு, நான் உன்னைச் சீக்கிரமா சாமி கும்பிட்டு, அம்மாவைக் கூட்டிட்டு வரத்தானே சொன்னேன்? இவ்ளோ நேரம் என்ன டா பண்ணிட்டு இருந்த? அவங்க ஒரு பக்கம் சாமி கும்பிடட்டும். நம்ம ஒரு பக்கம் ஜாலியா சைட் அடிச்சிட்டு இருக்கலாம்னு பொண்ணுங்கள பாக்க கிளம்பி போயிட்டியா?” என்று விஷ்ணுவை முறைத்து பார்த்தபடி கேட்டான்.
வருண் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் செண்பகத்தின் அருகில் சென்று நின்று அவள் காதில் மெல்லிய குரலில்,”அம்மா, நான் தான் சொன்னேன்ல, அவரு உங்களை எதுவும் கேட்க மாட்டாரு. என்னைத் தான் வச்சு செய்வாருன்னு. பார்த்தீங்களா, இப்போ தொக்கா மாட்டிக்கிட்டேன். நீங்க தான் தாயே, உன்னோட இந்த பாவப்பட்ட மகனை இந்த சிங்க மகன் கிட்ட இருந்து காப்பாத்தணும்.” கிசுகிசுத்தான் விஷ்ணு.
வருண்: “என்ன டா, நான் கேட்ட கொஸ்டினுக்கு ஆன்சர் பண்ணாம அங்க அம்மா கிட்ட பேசிட்டு இருக்க? இங்க என் கிட்ட பேசு.” என்று தனது கடுமையான குரலில் சொல்ல,
விஷ்ணு மைண்ட் வாய்ஸில் “உங்க கிட்டலாம் பேச முடியுமா தெய்வமே?” என்று வருணிடம் பேசியவன், பின் வருண் கேட்ட கேள்விக்கு “அது ஒன்னும் இல்ல அண்ணா, அம்மாவுக்கு சின்னதா ஒரு ஃபயர் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு. அதனால தான் நாங்க சாமி கும்பிட்டு வரதுக்கு லேட் ஆயிடுச்சு.” என்ன உண்மையாக பதில் சொன்னான்.
வருண்: “என்னது, ஃபயர் ஆக்சிடென்டா?” என்று பதட்டத்துடன் கேட்டவன், செண்பகத்தின் அருகே சென்று, அவளின் கையைப் பிடித்துக்கொண்டு, “அம்மா, உங்களுக்கு எதுவும் ஆகலையே?” என்றவன், பின் “ஏன் என் கிட்ட யாரும் இன்ஃபார்ம் பண்ணல?” என்று விஷ்ணுவைப் பார்த்து கோபமாக முறைத்தபடி கேட்டான்.
வருண் தன்னை முறைத்துப் பார்க்கவும், பயந்துபோன விஷ்ணு எங்கே தன் அண்ணன் தனக்கு ஏதாச்சும் பனிஷ்மென்ட் கொடுத்துவிடுவாரோ என்று நினைத்து பயந்தவன், தன் அம்மாவின் பின் சென்று மறைந்து நின்று கொண்டான்.
செண்பகம்: வருணின் கோபத்தைக் குறைக்க நினைத்தவள், “என்ன நடந்ததுச்சுன்னு நானே எல்லாத்தையும் டீட்டெய்லா சொல்றேன். நீ போய் காரை ஸ்டார்ட் பண்ணு வருண். உனக்கு தான் லேட் ஆகுதுன்னு சொல்லிட்டு இருந்தல நம்ம முதல்ல கிளம்பலாம்.” என்று சொல்லிவிட்டு காரில் ஏறி டிரைவர் சீட்டுக்கு அருகில் இருந்த சீட்டில் அமர்ந்துக் கொண்டாள்.
இருண்ட முகத்துடன் வந்து டிரைவர் சீட்டில் அமர்ந்த வருண், அனைவரும் காரில் ஏறியவுடன், காரை ஸ்டார்ட் செய்து அங்கே இருந்து கிளம்பினான். வருண் இவ்வளவு பதட்டமும், கோபமும் படுவதற்கான காரணம் செண்பகத்திற்கு புரிந்ததால்; தானே அனைத்தையும் விளக்கமாக சொல்லிவிடலாம் என்று நினைத்த செண்பகம், வருணிடம் பேசத் தொடங்கினாள்.
செண்பகம்: “எனக்கு ஒன்னும் ஆகலப்பா வருண். இந்த கிறுக்குப் பையன் விஷ்ணு தான் ஃபயர் ஆக்சிடென்ட்ன்னு பில்டப் பண்ணி உன் கிட்ட சொல்லிட்டான்.” என்று சொல்லிவிட்டு ஒரு நிமிடம் வருண் ஏதாவது பேசுகிறானா என்று பார்த்தாள்.
ஆனால் அவன் எந்த பதிலும் சொல்லாததால் மீண்டும் தானே பேசத் தொடங்கினாள்.
செண்பகம்: அவள் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கும் போது, அவளை அறியாமல் அவளுடைய புடவையில் நெருப்பு பற்றியதையும், அதை ரித்திகா அணைத்து, அவளைக் காப்பாற்றியதையும்; பின் சுகந்தி வந்து ரித்திகாவைப் பற்றியும் சித்தார்த்தைப் பற்றியும் சொன்னதையும், விளக்கமாக வருணிடம் சொன்னாள்.
செண்பகமும், விஷ்ணுவும், இப்போது வருண் பெரியதாக ஒரு லெக்சர் தரப் போகிறான் என்று நினைத்து அதற்காகக் காத்திருந்தவர்கள், வருண் அமைதியாக இருப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
வருண் ஒரு இரண்டு நிமிட அமைதிக்குப் பின், “சரிங்க அம்மா. இனிமே இப்படி கேர்லெஸ்ஸா இருக்காதீங்க. அண்ட் இனிமே இந்த மாதிரி எது நடந்தாலும் எனக்கு அடுத்த செகண்ட்டே இன்ஃபார்ம் பண்ணுங்க.” என்று சொல்லிவிட்டான். அதற்கு மேல்
அவர்களிடம் அவன் அந்த விஷயத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதவன் போல் எதுவும் பேசவில்லை.
ஆனால் அவனுடைய மனதிற்குள்ளே இந்த விஷயத்தைப் பற்றி பலவாறு யோசித்தான். இதுவரை அவனுடைய வாழ்க்கையில் அவன் கற்றுக் கொண்ட முக்கிய பாடங்களில் ஒன்று, “யாரையும் நம்பக் கூடாது” என்பதே. நேற்று ரித்திகா சித்தார்த்துடன் நட்பாகப் பேசியது மட்டும் நடந்திருந்தால், இது எதேச்சையாக நடந்தது தான் போல என்று எதையும் கவனிக்காமல் விட்டு இருப்பான்.
ஆனால் நேற்று ரித்திகா, வருணின் மகனிடம் நெருங்கிப் பழகியிருக்கிறாள்; இன்று அவனுடைய அம்மாவைக் காப்பாற்றியிருக்கிறாள். இவை அனைத்தையும் தற்செயலாக நடந்தது தான் என்று அவனுடைய மனம் ஏற்க மறுத்தது. எப்போதும் அலெர்ட்டாகவே இருக்கும் அவனுடைய மூளை, இது அனைத்தும் ரித்திகாவின் திட்டமாகத்தான் இருக்கும்.
தன்னுடைய குடும்பத்துடன் நன்றாகப் பழகி பின் ஏதோ ஒரு சதி செய்யப் போகிறாள் என்று அடித்துச் சொல்லியது.
அதனால் அவளின் மேல் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்த வருண், அவளின் பெயர் “ரித்திகா” என்பதை தன்னுடைய மனதில் ஆழமாகப் பதிய வைத்துக் கொண்டான்.
கண்டிப்பாக அவன் ரித்திகாவை அப்படியே விட்டுவிடப் போவதில்லை என்று தெளிவாக இருந்தான்.
இப்படி ஒரு பக்கம் வருண் ரித்திகாவைப் பற்றி தன்னுடைய மனதிற்குள் தவறாக நினைத்துக் கொண்டு இருக்க; அங்கே செண்பகமும், விஷ்ணுவும், சுகந்தியும், ரித்திகாவைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்தனர்.
அதை அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த வருண், மனதிற்குள்ளேயே “ச்சே! இந்த சுகந்தி அக்காவுக்கும், அம்மாவுக்கும் தான் வயசாயிடுச்சு. பார்க்குறது எல்லாம் உண்மைன்னு நம்பிக்கிட்டு இருக்காங்க. இந்த விஷ்ணு ஏன் தான் இப்படி பொறுப்பு இல்லாம இருக்கானோ. எப்ப தான் இவனுக்கு ஆள் வளர்ந்த அளவுக்கு அறிவு வளரப் போகுதோ தெரியல.” என்று நினைத்தவன் விஷ்ணுவை கழுவி ஊற்றிக் கொண்டிருந்தான்.
விஷ்ணுவை வருண் தன் மனதிற்குள் கழுவி ஊற்றியது எல்லாம் வேலை செய்துவிட்டது போல அதுவரை சந்தோஷமாக சிரித்து செண்பகத்துடன் பேசிக் கொண்டிருந்த விஷ்ணுவிற்கு திடீரென்று பொறை ஏறியது.
அதனால் இருமிக் கொண்டே “அம்மா, என்னை யாரோ மனசுக்குள்ள நல்லா திட்றாங்க போல. அதான் எனக்கு பொறை ஏறுது.” என்று ஓர கண்ணால் கார் ஓட்டிக் கொண்டிருந்த வருணை பார்த்தபடி சொன்னான் விஷ்ணு.
வருண் காரை டிரைவ் செய்த படியே யாரையும் திரும்பிப் பார்க்காமல், தன் அருகில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து செண்பகத்திடம் கொடுத்தவன், “அவனை குடிக்க சொல்லுங்கமா” என்றான்.
வருண் இவை அனைத்தையும் உணர்ச்சியற்ற குரலில் சொல்லி இருந்தாலும், விஷ்ணுவிற்கு ஏனோ அவன் தன்னை முறைத்துக் கொண்டே இதை சொல்வதை போலவே இருந்தது.
விஷ்ணு: “நீ தானடா அண்ணா, என்னை திட்டி இருப்ப. இப்ப நீயே தண்ணி கொடுத்து குடிக்க சொல்ற. இது தான் பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுறதாடா? ஆனாலும் நீ ரொம்ப நல்லவன்டா அண்ணா.” என்று தன் மனதுக்குள்ளேயே பேசியவன், பின் வருணிடம் மிகவும் பவ்வியமாக, “தேங்க் யூ அண்ணா” என்றான்.
பின் வருண் அவனிடம் கொடுத்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடித்தான் விஷ்ணு. வருண் இவர்கள் யாரையும் கண்டுகொள்ளாமல் அவன் பாட்டுக்கு டிரைவ் செய்து காரை நாராயணன் பேலஸுற்க்குள் கொண்டு சென்று நிறுத்தினான்.
மற்ற மூவரையும் அங்கே இறக்கி விட்டவன், தனது காரை எடுத்துக் கொண்டு நாராயணன் குரூப்ஸ் அலுவலகத்தை நோக்கி செல்ல தொடங்கினான்.
வருண் தன்னுடைய ஆபீசுக்கு சென்று கொண்டிருக்க, அவன் செல்லும் வழியில் அவனுக்கு ஃபோன் செய்தான் அவனது மேனேஜர் சிவா. ப்ளூடூத்தில் கனெக்ட் செய்து அந்த காலை அட்டென்ட் செய்து பேசினான் வருண்.
சிவா: “பாஸ், உங்களுக்கு 11’ஓ கிளாக் ஒரு கிளைன்ட் மீட்டிங் இருக்குல்ல. அதான் உங்களுக்கு ரிமைன்ட் பண்ணலாம்னு கால் பண்ணேன்.” என்று சொல்ல,
“எஸ், ஐ நோ. ஐ வில் பீ தேர் இன் 10 மினிட்ஸ்.” என்றான் வருண்.
சிவா: “ஓகே சார். ஐ’ம் வெய்ட்டிங்.”
வருண் ஏதோ நினைவு வந்தவனாக காலை கட் செய்யப் போன சிவாவை தடுத்து நிறுத்தினான், “வெயிட் எ மினிட் சிவா.” என்றான்.
அதனால் ஆர்வமான குரலில் சிவா “எஸ் சார்.” என்று சொல்ல, “சித்தார்த் படிக்கிற ஸ்கூல்ல நியூவா ஒரு டீச்சர் ரித்திகான்னு ஜாயின் பண்ணி இருக்காங்களாம். அவங்களோட ஃபுல் பயோ டேட்டா நான் மீட்டிங் முடிச்சுட்டு வரதுக்குள்ள என்னோட டேபிள்ல இருக்கணும். அண்ட் எஸ்டர்டே மார்னிங் அவங்க சித்தார்த்தை மீட் பண்ணி பேசி இருக்காங்க. ஸ்கூல்ல தான் இது நடந்து இருக்கு. சோ, கண்டிப்பா சிசிடிவியில் ரெக்கார்டு ஆகி இருக்கும். அந்த ரெக்கார்டிங்கும் எனக்கு வேணும். அந்த பொண்ணு ஸ்கூலுக்குள்ள என்டர் ஆனதுல இருந்து எக்ஸிட் ஆகுற வரைக்கும் இருக்கிற எல்லா கேமரா புட்டேஜும் எனக்கு வேணும். காட் இட்?” என்று அதிகார தோரணையில் கேட்டான் வருண்.
“இப்ப இவர் எதுக்காக சம்பந்தமே இல்லாம சித்தார்த் படிக்கிற ஸ்கூல்ல ஒர்க் பண்ற டீச்சரை பத்தி எல்லாம் பாஸ் டீடைல்ஸ் கலெக்ட் பண்ண சொல்றாரு?” என்று யோசித்து குழம்பிய சிவா அவன் நேரடியாக அதை வருனிடம் கேட்க முடியாது என்பதால், “ஓகே சார். நீங்க மீட்டிங் முடிச்சுட்டு வர்றதுக்குள்ள அந்தப் பொண்ணோட ஜாதகமே உங்க டேபிள்ல இருக்கும்.” என்றான்.
வருண்: “ஓகே!” என்றவன் காலை கட் செய்துவிட்டு வேகமாக ஆபீசை நோக்கிச் சென்றான். தன்னுடைய பிரம்மாண்டமான ஆபீசை வந்தடைந்த வருண், நேராக பார்க்கிங்கில் சென்று தனது காரை பார்க் செய்துவிட்டு லிப்ட் வழியாக அவனுடைய ஆஃபிஸ் ரூம் இருக்கும் தலத்திற்கு சென்று சேர்ந்தான்.
ஸ்கூலுக்கு செல்லும் குழந்தைகள் தினமும் ஒரே மாதிரி யூனிபார்ம் அணிந்து செல்வதை போல வழக்கம் போல் தான் அணியும் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட், ஷூட்டை இன்றும் அணிந்து கொண்டு வந்திருந்தான் ஆபீஸ்க்கு வந்திருந்தான் வருண்.
தேசம் தொடரும்…
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)