Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 170

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 170

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 170: பிரவீனை வெறுக்கும் லக்சனா (பார்ட் 1)

வருண் மிதமான வேகத்தில் அந்த பாதையில் சிறிதும் குலுங்காமல்  அந்த கார் ஐ சரியாக ஓட்டிக் கொண்டு இருந்தான். அதை கவனித்த ரித்திகா, “பார்றா… இவர் மட்டும் எப்படி கொஞ்சம் கூட ஷேக் ஆகாம ட்ரைவ் பண்றாரு..??? ஒரு வேளை விஷ்ணு தான் வேணும்னே ஷேக் பண்ணி ஓட்டியிருப்பானோ..???” என்று யோசித்துப் பார்த்தவளுக்கு அப்போது தான் அவன் எதை நினைத்து இதை செய்து இருப்பான் என்று புரிய, “அடப்பாவி விஷ்ணு…!!! கொஞ்ச நேரத்துல அவர்கிட்ட என்ன கோர்த்துவிட்டு வேடிக்கை பார்த்துட்டில்ல நீ…!!! அவர் உன்னை கீழே இறக்கி விட்டதுல தப்பே இல்ல டா. உனக்கு இதெல்லாம் தேவை தான்.” என்று தன் மனதில் நினைத்துக் கொண்டாள்.

இருப்பினும் வருண் சற்று கடுமை தன்மையுடன் இருப்பதாக தான் அவளுக்கு தோன்றியது. அதனால் அவனைப் பற்றி யோசித்துக் கொண்டு இருந்தவள், தன்னை அறியாமல் வெகு நேரமாக தனக்கு முன்னே அமர்ந்து இருப்பவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள். அதை திடீரென்று ரீயர் வியூ மிரர் வழியாக எதைச்சையாக கவனித்த வருண், “எதுக்கு என்னையே பார்த்துட்டு இருக்க..??”  என்று கேட்டான்.

அவனுடைய குரலில் அதிர்ந்து போன ரித்திகா, “என்ன ஆச்சு…??”  என்று அவசரமான குரலில் கேட்டாள். “ஒன்னும் ஆகல. நீ தான் என்னையவே பாத்துட்டு இருந்த, அதான் என்னான்னு கேட்டேன்.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான். அவன் இப்படி திடீர் திடீரென்று தன்னிடம் கேள்வி கேட்பதால் பதட்டப்பட்ட ரித்திகா, “நத்திங். எனக்கு நேரா நீங்க தானே இருக்கீங்க..!! அதான் சும்மா பார்த்தேன்.” என்று தன் வாய்க்கு வந்ததை அவனிடம் சொல்லி சமாளித்தாள். அதற்கு மேல் அவளிடம் வருண் ஒரு வார்த்தையும் பேசவில்லை. 

அதனால் நிம்மதி அடைந்த ரித்திகா, “சப்பா…!!! இவர் கூட இருந்தாலே.. எப்ப எத சொல்வாரோன்னு திக்கு… திக்குன்னு.. இருக்கு. சும்மா பாத்ததுக்கே இத்தனை கேள்வி கேக்குறாரு. இவர் கூட லாம் பார்த்து தான் பேசணும் போல. நீ தெரியாம ஏதாச்சு ஒரு வார்த்தைய விட்டுட்டாலும், அவ்ளோ தான் உன்னோட கதை முடிஞ்சு போயிரும் ரித்திகா. ஒழுங்கா இருந்துக்கோ, அதான் உனக்கு நல்லது.” என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

சில நிமிடங்களுக்கு பின்பு வருணின் கார் அவனுடைய பெரிய ரெசார்ட் கேட்டின் முன்னே வந்து நின்றது. அவனுடைய கார் ஐ கவனித்தவுடன், செக்யூரிட்டிகள் வந்து வேகமாக கதவைத் திறந்து அவனுக்கு வழி விட்டனர். நேராக உள்ளே சென்று பார்க்கிங்கில் தன்னுடைய காரை நிறுத்திய வருண், அவன் பாட்டிற்கு அதில் இருந்து இறங்கி உள்ளே சென்று விட்டான். தன்னுடன் வந்தவளை அவன் ஒரு மனுசியாக கூட மதிக்கவில்லை. அதனால் உள்ளே காரில் அமர்ந்து இருந்த ரித்திகாவிற்கு இப்போது தான் காரில் இருந்து இறங்கலாமா, வேண்டாமா, என்று கூட தெரியவில்லை. 

அவளுக்கு காரின் கதவை திறக்கவும் தெரியாமல், அதில் இருந்து வெளியே எட்டிப் பார்த்து யாரையாவது அழைக்கலாம் என்றால் ஜன்னல் மூடி இருப்பதால் அதற்கும் வழி இல்லாமல், தான் என்ன செய்வது என்று தெரியாமல் பதட்டத்தில் இருந்தாள் ரித்திகா. அப்போது அவளுக்கு நிஜமாகவே வருணின் மீது கோபம் கோபமாக வந்தது. அதனால், “என்ன இவரு நம்மள விட்டுட்டு இவர் பாட்டுக்கு உள்ள போயிட்டாரு..!!! கார் ஐ எனக்கு ஒழுங்கா க்ளோஸ் பண்ணவே தெரியல. அப்புறம் ஓபன் பண்ண மட்டும் எனக்கு எப்படி தெரியும்..??? அட ச்சை..!!! இப்ப நான் என்ன பண்றது..???” என்று புலம்பியவள் அந்த காரின் டோரை தனக்கு தெரிந்த படி திறக்க முயன்றாள். ஆனால் அவள் சொல்லும் பேச்சை அந்த கதவு கேட்க மாட்டேன் என்றது.  😒

அதனால் கடுப்பான ரித்திகா, “நம்மள தேடி யாராவது வந்தா தான் உண்டு.” என்று நினைத்தவள், தன்னுடைய முயற்சியை கைவிட்டு விட்டு சோகமாக தனக்கு முன்னே இருந்த சீட்டில் சாய்ந்து படுத்தாள். அப்போது திடீரென்று அந்த காரின் கதவு திறக்க, அதன் வழியாக மிதமான சூரிய வெளிச்சமும், குளுமையான காற்றும் ரித்திகாவின் மேனியை வந்து தொட்டது. அதனால் எழுந்து பார்த்த ரித்திகா, அதிர்ச்சி அடைந்தாள். 😱 ஏனென்றால், சென்ற வருண் தான் மீண்டும் வந்து அந்தக் கதவை திறந்து இருந்தான். 

வருண் நேராக சென்று ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து விட்டான். அப்போது அங்கு இருந்த சில ரித்திகாவை பற்றி விசாரிக்க, அப்போது தான் ரித்திகா இன்னும் காரிலேயே இருப்பதை உணர்ந்த வருண், “ச்சே…!! கார் டோர் ஐ ஓப்பன் பண்ண தெரியாம அவ இன்னும் உள்ளேயே இருக்கா போல.” என்று நினைத்த வருண், மீண்டும் அங்கே வந்து இருந்தான். வருண் மீண்டும் அங்கே வருவான் என்று எதிர்பார்த்து இருக்காத ரித்திகா, எங்கே அவன் தனக்கு ஒரு காரைக் கூட திறக்கத் தெரியவில்லை என்று சொல்லி விட்டு மீண்டும் தன்னை திட்டி விடுவானோ என்று நினைத்து பயத்துடன் அவனைப் பார்த்தாள். 😔

ஆனால் தான் காரின் கதவை திறந்தும் இவள் ஏன் இன்னும் இறங்காமல் இருக்கிறார் என்று அவளை குழப்பமான முகத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தான் வருண். 🙄 வருண் தன்னை எப்படி பார்த்தாலும் அது ரித்திகாவிற்கு பயமாக தான் இருந்தது. “உன் முன்னாடி யாராவது ரெட் கார்பெட் ஐ விரிச்சு உன்ன வெல்கம் பண்ணா தான் நீ கீழே இறங்கி வருவியா..???” என்று அவளைப் பார்த்து உணர்ச்சி அற்ற குரலில் கேட்டான் வருண். அதனால் பதட்டப்பட்ட ரித்திகா, “சாரி….!! இதோ வரேன். நான் சும்மா ஏதோ யோசிச்சிட்டு இருந்துட்டேன் அதான்…” என்று சொல்லி கொண்டே திக் திக் இதயத்துடன் அந்த காரில் இருந்து கீழே இறங்க முயற்சித்தாள் ரித்திகா. ❤️

அப்போது அவள் கட்டி இருந்த காட்டன் புடவை அவளுடைய கால் ஐ கால நேரம் பார்க்காமல் வாறிவிட,  அதனால் தடுக்கி வருண்  மீது விழப்போனாள் ரித்திகா. அதனால் வேகமாக அவளை இடுப்போடு சேர்த்து அணைத்த வருண், அவளை அப்படியே தாங்கி பிடித்தான். 🤗 இந்த சீனில் நியாயமாக ஒரு ரொமான்ஸ் நடந்து இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினான் என்றாவது அமைந்து இருக்க வேண்டும். ஆனால் அங்கு எதிர் மாறாக இதற்கும் தன் மீது தான் இவன் குற்றம் சொல்லிக் கொண்டு இருப்பான் என்று நினைத்து பயந்த ரித்திகா, “சாரி சார்… சாரி சார்…” என்று அவசரமான குரலில் சொன்ன ரித்திகா அவனிடம் இருந்து வேகமாக பிரிந்தாள். 

அவளை சாதாரணமாக பார்த்த வருண், “சரி எதுக்கு இப்போ இவ்ளோ பயப்படுற..??? தூரத்தில இருந்து யாராவது பார்த்தா நான் உன்னை ஏதோ பெருசா சொல்லி திட்டிக்கிட்டு இருக்கேன்னு நினைப்பாங்க. வா உள்ள போலாம்.” என்றவன், மீண்டும் அவன் பாட்டிற்கு முன்னே நடந்து செல்ல ரித்திகா அவனை அமைதியாக பின் தொடர்ந்தாள். தன்னுடைய ரூமிற்கு சென்ற வருண் அவன் பாட்டிற்கு தன்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கி விட, அங்கு வந்த ரித்திகாவை பார்த்த தாரா, “மேம் நீங்க சிம்பிளா இருந்தாலும், ரொம்ப க்யூட்டா இருக்கீங்க. செண்பகம் மேடம் ஃபர்ஸ்ட் பேனர் அப்புறம் மேரேஜ் இன்விடேஷன் ல போடுறதுக்கான போட்டோ எல்லாத்தையும், எடுக்க சொன்னாங்க. நீங்க வாங்க… நீங்க ரெடியாகறதுக்கு நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன்.” என்று ரித்திகாவிடம்  சொன்னவள், அவளை அழைத்து கொண்டு சென்றாள்.

வருண் வந்த சில நிமிடங்களிலேயே செண்பகமும் மற்றவர்களும் அங்கே வந்து சேர்ந்தனர். வருண் எப்படியும் தான் அவனை மிரட்டி உருட்டாமல் எதையும் அவனாகவே செய்ய மாட்டான் என்று ஏற்கனவே அறிந்து வைத்து இருந்த செண்பகம் நேராக சென்று அவனுடைய அறையில் அவனுக்கு அருகே அமர்ந்து கொண்டு, தன்னுடைய ஆசைகள் அனைத்தையும் தன்னுடைய மகனை நிறைவேற்றி தரும் படி வற்புறுத்திக் கொண்டு இருந்தாள்.

தாரா சொன்னதைப் போல் முதலில் பார்மலாக அவர்கள் இருவரும் மூன்று, நான்கு, போட்டோக்கள் எடுக்க வேண்டியது இருந்தது. அதனால் ரித்திகாவிற்கு முதலில் ஒரு சிவப்பு நிற பட்டுப்புடவையை அணிவித்து அதற்கு பொருத்தமான மேக்கப் மற்றும் ஆபரணங்கள் மற்றும் தேர்வு செய்து ரித்திகாவை ஐவர் கொண்ட குழு தயார் செய்து கொண்டு இருந்தனர். ரித்திகாவின் புடவைக்கு மேட்ச் ஆக ஏற்கனவே தான் ஏற்பாடு செய்து வைத்திருந்த காஸ்ட்யூம் ஐ வருனிடம் கொடுத்த செண்பகம், “சீக்கிரம் போய் இத சேஞ்ச் பண்ணிட்டு வா.” என்று சொல்லி அவனை விரட்டினாள்.

சில நிமிடங்களில் ஒரு சாம்பல் நிற கோட் சூட்டை அணிந்து டிப்டாப்பாக வெளியே வந்த வருணிக்கு, ஹேர் ஸ்டைல் மற்றும் மேக்கப் என அனைத்தையும் செய்து அவனை தயார்படுத்த தொடங்கினர். விஷ்ணு, வருண் உடனே சுற்றிக் கொண்டு இருந்தான். சில நிமிடங்களுக்கு பின்பு, வருண் மற்றும் ரித்திகா இருவருமே தயாராகி விட ஒரு ப்ளூ நிற ஸ்கிரீன் இன் முன்னே அவர்களை நிற்க வைத்த போட்டோகிராபர், “சே சீஸ்.” என்று அவர்களைப் பார்த்து சொல்ல, ரித்திகா வரவழைக்க பட்ட புன்னகையுடன் கேமராவை பார்த்தாள். 😁 😁 😁

நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured