அத்தியாயம் 167: Pre wedding photoshoot (part 2)
தான் கொண்டு வந்தவற்றை அவன் க்ரிஷாவிடம் நீட்ட, அவனை பார்த்து முறைத்த க்ரிஷா, “இத எதுக்கு என்கிட்ட குடுக்குற..??? நீ தான் இத அங்க சேர் போட்டு ஏறி மாட்டணும். நான் சொல்ற பொசிஷன்ல ஒழுங்காக மாட்ற. போட்டோவ கீது தெரியாம கீழே போட்ட, கொன்றுவேன் உன்ன.” என்று தன்னுடைய கண்களை உருட்டி அவனை மிரட்டினாள். அவள் சொன்னதைக் கேட்டு தனக்குள் “இதெல்லாம் என் நேரம்.” என்று நினைத்து புலம்பிய சந்தோஷ், ஒரு சேரை எடுத்துப் போட்டு அவள் சொன்ன இடத்தில் அந்த போட்டோவை மாட்ட முயற்சித்தான். அவன் ஆணி அடித்து முடித்த உடன், சாரில் நின்று கொண்டு அந்த போட்டோவை அதில் மாட்டிவிட்டு “இப்ப கரெக்டா இருக்கா மேடம்.” என்று கேட்டான்.
“இல்ல இந்த பக்கம் கொஞ்சம் ரைட்ல திருப்பி. அவ்ளோ ரைட் இல்ல கொஞ்சம் லெஃப்ட் வா.” என்று க்ரிஷா அவன் அருகே நின்று சொல்லிக் கொண்டு இருக்க, அவன் இருந்த கடுப்பில் தான் நின்று கொண்டு இருக்கும் சேர் ஆடி கொண்டு இருப்பதை கூட கவனிக்காத சந்தோஷ், எரிச்சலுடன் அந்த போட்டோவை சரியாக வைக்க போராடிக் கொண்டு இருந்தான். 😒
அப்போது கால் நழுவி சந்தோஷ் “அம்மா” என்று கத்திய படியே கீழே விழப் போக; அவனைப் பார்த்து “இடியட்” என்று கத்திய க்ரிஷா, அவனை கீழே விழாமல் பிடிக்க முயற்சித்து தோற்றுப் போக, பிடிமானம் இல்லாததால் அவளையும் சேர்த்து கீழே தள்ளிய சந்தோஷ்; க்ரிஷாவின் மீது விழ, க்ரிஷா தரையில் விழுந்தாள். அப்போது தெரியாமல் சந்தோஷின் இதழ்கள் க்ரிஷாவின் இதழ்களை ஒட்டிக்கொண்டு விட்டன. 🤗 😚 😘 அதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் விரிந்த கண்களுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு இருந்தனர். 😍
போற போக்கில் ஒரு லுக்க உட்டு… 😍
என்ன செஞ்சிட்டாளே என்ன செஞ்சிட்டாளே.. 🥰
பாரபட்சம் பாக்காம கூட வச்சி செஞ்சிட்டாளே.. 🥰
ஃபர்ஸ்ட்டு லுக்க வச்சி பொக்குன்னுதான் 😍
ஒன்னு வச்சிட்டாளே ஒன்னு வச்சிட்டாளே ..
என்ற பாடலை சந்தோஷின் மனசாட்சி டக் என்று பிளே செய்துவிட, அதை ரசித்து கொண்டு இருந்த சந்தோஷ், க்ரிஷாவின் முக பாவனைகளை கவனிக்கவில்லை. சந்தோஷின் ஈர்க்கும் பார்வையை பொறுத்துக் கொள்ள முடியாத க்ரிஷா, அவனை தன் மீது இருந்து தள்ளி விட்டாள். அதனால் பயந்து போய் பதட்டத்துடன் எழுந்து நின்ற சந்தோஷ், “ஐயையோ சாரி… மேடம்.. சாரி… மேடம். நான் வேணும்னே எதுவும் பண்ணல. இட்ஸ் ஜஸ்ட் அன் ஆக்சிடென்ட்.” என்று அவசரமான குரலில் அவளிடம் சொன்னான்.
க்ரிஷாவின் இதயம் இன்னும் வேகமாக தான் துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ அவளுக்கும் அவனிடம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. அதனால், “ஐ நோ. இட்ஸ் ஓகே.” என்று சொன்னவள், தன்னுடைய தலையை குனிந்து கொண்டு வெளியே சென்று விட்டாள். அவளுடைய முகத்தில் தெரிந்த சிறிது வெட்கத்திற்கான சாயலை கவனித்த சந்தோஷ், “பாற்ரா..!!! இவங்களுக்கு வெட்கப்படலாம் தெரியுமா..???” என்று தனக்குள் நினைத்து சிரித்துக் கொண்டான். ☺️ 😅 😅 😅
சில மணி நேரத்திற்கு பின்…
ரித்திகாவின் வீட்டில்…
ரித்திகாவின் அறையில் அவளுடன் இருந்த ஷாலினி ரித்திகாவிற்கு நாளை நடக்க இருக்கும் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்டை நினைத்து அவளை விட இவள் தான் மிகவும் ஆர்வமாக இருந்தாள். 😍 அதனால், “அக்கா, எனக்கு நாளைக்கு உங்க கூட வந்து அங்க என்ன எல்லாம் நடக்கும்ன்னு பாக்கிறதுக்கு ரொம்ப ஆசையா இருக்கு அக்கா.” என்று ஆர்வமான குரலில் அவளிடம் சொன்னாள் ஷாலினி. 😃
ரித்திகா: “நீயும் அங்க வந்தா எனக்கு கம்பர்ட்டபிளா தான் இருக்கும். ஆனா என்ன பண்றது..??? என்னால இப்ப போய் செண்பகம் அம்மாகிட்ட உன்னை பத்தி சொல்லி நீயும் என் கூட வரனும்னு கேட்க கூட முடியாது டி. ஸ்கூல்ல எக்ஸாம் நடந்துட்டு இருக்கு. ஆனிவல் டே வேற வர போது. சோ லீவ் தர மாட்டாங்க. சாரதா மேம் -க்கு நான் இவர தான் கல்யாணம் பண்ணிக்கபோறேன்னு தெரிஞ்சதுனால தான் எனக்கு இவ்ளோ லீவு யோசிக்காம குடுக்கிறாங்க . ஆனா உனக்கும் லீவு குடுங்கன்னு என்னால சொல்ல முடியல ஷாலு சாரி.” என்று வருத்தமான குரலில் சொன்னாள்.
ஷாலினி: “பரவால்ல விடுங்க அக்கா. நான் விஷ்ணு கிட்ட பேசி எப்படியாவது உங்க மேரேஜ் அப்போ மட்டும் எல்லா பங்க்ஷன் நடக்கும் போதும் லீவு போட்டுக்கிறேன். அப்போ நம்ப எல்லாம் சேந்து ஃபன் பண்ணலாம். நாளைக்கு எத்தனை மணிக்கு கிளம்புறீங்க..?? சூட் எங்கே நடக்க போகுது..???” என்று ஆர்வமான குரலில் கேட்டாள்.
ரித்திகா: எங்க போய் ஷூட் பண்ண போறாங்கன்னு எல்லாம் எனக்கு தெரியாது டி. ஆனா மார்னிங் லைட்டில போட்டோ எடுத்தா நல்லா இருக்கும்னு இயர்லி மார்னிங் சீக்கிரமா கிளம்பி நாராயணன் பேலசுக்கு என்ன வர சொல்லி இருக்காங்க.
ஷாலினி: சூப்பர் கா. நீங்க மட்டும் தான் போறீங்களா..??? இல்ல அம்மாவும் அப்பாவும் உங்க கூட வராங்களா…???
ரித்திகா: “முதல்ல நான் மட்டும் தான் போற மாதிரி இருந்துச்சு. இப்போ செண்பகம் அம்மாவும் எங்க கூட வராங்க. அதனால எங்க அம்மாவும் வரேன்னு சொல்லி இருக்காங்க.” என்றாள்.
ஷாலினி: ஓகே அக்கா. அப்ப எல்லாரும் ஜாலியா போயிட்டு வாங்க. இது உங்களுக்கு அவர் கூட கொஞ்சம் பேசி பழகு கிடைச்சிருக்க நல்ல சான்ஸ். சோ மேரேஜ்க்கு முன்னாடியே அவர் கூட உங்களால முடிஞ்ச அளவுக்கு டைம் ஸ்பென்ட் பண்ணுங்க. அப்ப தான் உங்களுக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் வரும்.
ரித்திகா: “சரி டி. பெரிய மனுஷி ட்ரை பண்றேன்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். 😂 😂 😂
நாராயணன் பேலஸுல்…
வருணை பார்ப்பதற்காக அவனுடைய அறைக்கு வந்தான் ஹரி. அப்போது தான் சாப்பிட்டுவிட்டு மேலே வந்த வருண், தன்னுடைய லேப் டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டு இருந்தான். அவன் அருகே தயக்கத்துடன் சென்ற ஹரி, “நீ எனக்காக ஆராதனா கிட்ட பேசுறியா வருண்..???” என்று சோகமான குரலில் கேட்டான். 😔
வருண்: “இன்னைக்கு அவளோட பர்த்டேல… நானே அவகிட்ட பேசலாம்னு தான் நினைச்சேன். ஒரு பர்த்டே விஷ் கூட என்னால சொல்ல முடியல டா. எந்த மூஞ்சிய வச்சுக்கிட்டு நான் அவ முகத்தை பார்த்து பேசறது..??? அவள பத்தி யோசிச்சாலே, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா. இதுல அம்மா வேற ப்ரீ வெட்டிங் போட்டோ சூட்னு ஒன்ன ஸ்டார்ட் பண்ணிட்டாங்க. என் கல்யாணத்திலயே இவ்ளோ பண்றாங்க. இன்னும் உன்னோட கல்யாணத்துல என்னெல்லாம் கூத்து பண்ண காத்திருக்காங்களோ தெரியல. என் விஷயத்தை கூட விடுடா. ஆனா அம்மா உன்னோட விஷயத்துல பண்றது எனக்கு சுத்தமா பிடிக்கல. ஆனா என்னால எதையும் பண்ண முடியாத நிலைமையில நான் இருக்கேன். ஏற்கனவே அப்பா, அப்புறம் ஜான்வி, என் குழந்தை… இதுக்கப்புறம் என்னால வேற யாரையும் இழக்க முடியாது. அதான் நான் அம்மா என்ன பண்ணாலும் அமைதியாவே இருக்கேன். ஐ அம் சாரி டா ஹரி.” என்று சோகமான குரலில் சொன்னான். 😟
ஹரி: “ஐயோ அது பரவால்லடா. அப்புறம் என்னமோ நடந்துட்டு போகுது. இப்ப நடக்கிறத முதல்ல பாப்போம். ஆராதனா ரொம்ப வீக்கா இருக்கா. காலைல கோயிலுக்கு போயிட்டு வந்து ரூம்குள்ள போய் டோர லாக் பண்ணவ தான். இன்னும் வெளியில வரவே இல்ல. காலையில இருந்து அவ சாப்பிட கூட இல்ல டா. எனக்கு அவளை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு வருண்.
நான் கதவ தட்டினாலும் திறக்க மாட்டேங்குற. போன் பண்ணாலும் எடுக்க மாட்டேங்கற. ப்ளீஸ் நீ கொஞ்சம் வந்து அவகிட்ட பேசு. நீ சொன்னா, அவ கண்டிப்பா கேட்பா.” என்று பதட்டமான குரலில் விட்டால் அழுதுவிடுவேன் என்பது போல அவனிடம்் பேசினான். 🥺
“சரி வா போய் பாக்கலாம்.” என்ற வருண், ஹரியை அழைத்துக் கொண்டு ஆராதனாவின் அறைக்கு சென்றான். அவளுடைய அறையின் கதவு இப்போதும் பூட்டப்பட்டு தான் இருந்தது. அதனால் அதை வேகமாக தட்டிய வருண், “ப்ளீஸ் கதவ தொர மா ஆராதனா.” என்று மீண்டும் மீண்டும் சொல்லிய படி அந்த கதவை வேகமாக தட்டினான்.
என்ன தான் அவளுக்கு வருணின் மீது வருத்தம் இருந்தாலும், அவன் மீது இருந்த மரியாதையின் காரணமாக வேறு வழியின்றி அந்த கதவை வந்து திறந்தாள் ஆராதனா. அழுது அழுது வீங்கி போயிருந்த முகத்துடனும், கலைந்த கூந்தலுடனும், பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் இருந்தாள் ஆராதனா. ஹரியால் அவளை அப்படி பார்க்க முடியவில்லை. அதனால் அவனை அறியாமல் அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் வடிந்த வண்ணம் இருந்தது. 😭 😭 😭
ஆராதனாவின் முன் அழுக விரும்பாத ஹரி வருணே அவளிடம் பேசி கொள்ளட்டும் என்று நினைத்து அங்கு இருந்து சென்றுவிட்டான். “நான் உள்ள வரலாமா..???” என்று ஆராதனாவிடம் கேட்டான் வருண். “வாங்க அண்ணா.” என்று சொன்ன ஆராதனா தன்னுடைய தலைமுடியை தூக்கிக் கொண்டே போட்டபடியே தன்னுடைய அறைக்குள் சென்றாள்.
வருண்: அவளை தீர்க்கமான பார்வை பார்த்தவன், “எனக்கு யாருக்கும் ஃபால்ஸ் ஹோப் குடுக்க பிடிக்காது மா. சோ, நான் உன்கிட்டயும் பொய் சொல்ல மாட்டேன். இப்ப என்ன சுச்சுவேஷன் இருக்குன்னு உனக்கே தெரியும். இது எல்லாத்தையும் என்னால மாத்திட முடியுமான்னு நீ கேட்டா அதுக்கு என்கிட்ட ஆன்சர் இல்ல.
அதான் உன்கிட்ட என்ன பேசுறதுன்னு தெரியாம உனக்கு பர்த்டே விஷ் கூட பண்ணாம இருந்துட்டேன். ஐ அம் சாரி ஆராதனா. பட் ப்ளீஸ், நீ இப்படி இருக்காத. நான் உன்னையும் என்னையும் கம்பேர் பண்ண விரும்பல தான். இருந்தாலும் சொல்றேன், இப்ப உனக்கு எவ்ளோ கஷ்டமா இருக்கோ அதை விட அதிகமான கஷ்டத்தை என் மனசுக்குள்ள போட்டு பொதச்சிகிட்டு தான் நான் வாழ்ந்துட்டு இருக்கேன்.
நீயும் அப்படி தான் இருக்கணும்னு என்னால உன்னை போர்ஸ் பண்ண முடியாது. ஆனா நீ அப்படி இருந்தா, நான் சந்தோஷப்படுவேன். நீ இப்படி உன்னையும் ஹர்ட் பண்ணிக்கிட்டு, மத்தவங்களையும் ஹர்ட் பண்றதுனால, யாருக்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை. என்னால இப்ப எதுவும் பண்ண முடியலன்றதுனால, கடைசி வரைக்கும் நான் எதுவுமே பண்ணாம இருந்திட மாட்டேன்.
இன்னும் அவங்க கல்யாணத்துக்கு டைம் இருக்கு ஆராதனா. அதுக்குள்ள ஏதாவது நல்லது நடக்கும்ன்னு நம்புவோம். அப்படி நம்பரத தவிர நமக்கு வேற வழியில்லை. ப்ளீஸ் எல்லா சூழ்ச்சுவேஷனையும் கொஞ்சம் மெச்சூர்டா ஹேண்டில் பண்ண கத்துக்கோ. நீ காலையில இருந்து சாப்பிடாம இருக்கேன்னு ஹரி சொன்னான். உனக்கு என் மேல கொஞ்சமாவது மரியாதை இருந்துச்சுன்னா, கொஞ்சமாவது நார்மலா இருக்க ட்ரை பண்ணு. போய் முதல்ல சாப்பிடு.” என்று மூச்சு விடாமல் தன் மனதில் இருந்தவற்றை அப்படியே அவளிடம் சொன்னான்.
வருணின் மீது அவளுக்கு அதீத மரியாதை இருந்தது. அதனால் வேறு வழி இன்றி, “உங்கள டென்ஷன் பண்ணதுக்கு சாரி. எனக்கு எல்லாமே புரியுது. ஆனா அத அக்சப்ட் பண்ண தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு. யூ டோன்ட் வரி. ஐ வில் பி ஓகே சூன். எனக்கே ரொம்ப பசிக்குது. நான் போய் சாப்பிடுறேன்.” என்ற ஆராதனா சாப்பிடுவதற்காக கீழே சென்றாள். அவள் சாப்பிடுவதை தூரத்தில் இருந்து பார்த்து உறுதி செய்த ஹரி அவள் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து சென்ற பின் அவன் அதே சேரில் உட்கார்ந்து சாப்பிட்டான்.
- நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)