Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 164

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 164

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 164: உனக்கு கொஞ்சம் எனக்கு கொஞ்சம் ஓகேவா? (பார்ட் 1)

சித்தார்த்தின் பள்ளியில்…

பள்ளி வேலை நேரம் முடிந்தவுடன், ஆபீஸ் ரூமிற்கு சென்று சையின் போட்டுவிட்டு வெளியே வந்தாள் ஷாலினி. அப்போது பார்க்கிங் ஏரியாவில் நின்று கொண்டு இருந்த விஷ்ணுவை கண்டவள், அவன் அருகே சென்றாள். ஷாலியை பார்த்த விஷ்ணு, “ஓய்..!!! நீ இன்னும் வீட்டுக்கு போலையா..??? நான் இந்நேரம் நீ கிளம்பி இருப்பேன்னு நெனச்சேன்.” என்று எதுவும் தெரியாதவனை போல் கேட்டான். 

ஷாலினி: மார்பிற்கு குறுக்காக தன்னுடைய கைகளை கட்டியவள், “நான் கிளம்புறதெல்லாம் இருக்கட்டும். சேர்மன் சார் இன்னும் கிளம்பாம யாருக்காக இப்படி பார்க்கிங்ல வெயிட் பண்ணிட்டு இருக்கீங்கங்க..??? ஓ… ஒரு வேளை உங்க அத்தை பொண்ணு வந்தா அவ கூட ஜாலியா அப்படியே பைக்ல போலாம்னு வெயிட் பண்றீங்களா…!!!!” என்று அவனைப் பார்த்து நக்கலாக கேட்டு சிரித்தாள். 😂 😂 😂

விஷ்ணு: ச்சீ… வாய மூடு டி. அவளைப் பத்தி என்கிட்ட பேசாத. இன்னைக்கு மார்னிங் நீ ஸ்கூலுக்கு ஆட்டோல வர்றத பார்த்தேன். அப்புறம் அண்ணிக்கு கால் பண்ணி கேட்டா, அவங்க இன்னைக்கு லீவுன்னு சொன்னாங்க. அதான் நீயும் நானும் இன்னைக்காவது ஒன்னா பைக்ல போலாம்னு உனக்காக இவ்ளோ நேரமா நான் இங்க வெயிட் பண்ணிட்டு இருந்தா, நீ நான் அவ கூட போறதுக்கு வெயிட் பண்றேனான்னு கேட்கிற..!!! நீ ஆட்டோ புடிச்சே போ. நான் தனியாவே போய்கிறேன்.” என்று எரிசலான குரலில் சொன்னவன் தன்னுடைய பைக்கை ஸ்டார்ட் செய்து அங்கு இருந்து கிளம்ப முயன்றான். 😒 

ஷாலினி: வேகமாக சென்று அவனுடைய வழியை மரித்தவள், “போதும் டா ஓவரா சீன் போடாத. நீ என்ன பாத்துட்டு கம்முனு இருந்து இருந்தா, நானே உன்கிட்ட என்ன டிராப் பண்றியான்னு கேட்டு இருப்பேன். நீ தான் இன்னும் கிளம்பலையான்னு என்னை பாத்து நக்கலா கேட்ட. இன்னும் இங்க இருக்கேன்னா, நான் கிளம்பலன்னு தானே அர்த்தம். லூசு மாதிரி கேள்வி கேட்கிற. உன்னை எல்லாம் வச்சிக்கிட்டு… கல்யாணம் பண்ணி.. நான் என்னத்த பண்ண போறேன்னு தெரியல.” என்ற சலிப்பான குரலில் சொன்னாள். 😔

விஷ்ணு: அவள் சொன்னதைக் கேட்டு ஆர்வமான குரலில், “என்ன கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம்.. என்ன வெச்சு நீ என்ன பண்ண போற..???” என்று குறும்பாக கேட்டான். 😂 😂 😂

 ஷாலினி: அவன் என்ன அர்த்தத்தில் அதைக் கேட்கிறான் என்று நன்கு புரிந்து கொண்டவள்… வேண்டுமென்றே விட்டத்தை பார்த்து தான் எதையோ சீரியஸாக யோசிப்பதை போல் சில நொடிகள் பாவலா செய்துவிட்டு, “உன்னை என்னோட டிரைவரா யூஸ் பண்ணிப்பேன், டெய்லியும் சமைக்காம உன்னை சமைச்சு தர சொல்லி டார்ச்சர் பண்ணி உக்காந்து சாப்பிடுவேன், எனக்கு ஏதாவது வேணும்னா டேய் விஷ்ணு… இங்க வா.. அதை எடு. டேய் விஷ்ணு.. இத கொண்டு போய் அங்க வைன்னு சொல்லி உன்ன வேலை வாங்குவேன், என்னோட டிரஸ் எல்லாத்தையும் உன்ன அயன் பண்ணி தர சொல்லுவேன்,  ஸ்கூல்ல எனக்கு ஏதாவது கரெக்ஷன் வொர்க் குடுத்தா.. அந்த பேப்பர் எல்லாத்தையும் வீட்டுக்கு தூக்கிட்டு வந்து உன்ன கரெக்ஷன் பண்ண சொல்லுவேன்…. என்று தன்னுடைய ஒவ்வொரு விரலையும் தொட்டுப் எண்ணிய படியே சொல்லிக் கொண்டு இருந்தவள், “அப்புறம் உனக்கு வேற என்ன எல்லாம் பண்ண தெரியும்..??? தலை பின்ன தெரியுமா..??? எனக்கு டிஃபரண்ட் டிஃபரெண்டா நிறைய ஹேர் ஸ்டைல் போட்டுக்கனும்னு ரொம்ப ஆசை. நீ பின்னி விடுறியா..???” என்று தன்னுடைய முகத்தை அப்பாவியாக வைத்து கொண்டு அவனிடம் கேட்டாள். இதில் தன்னுடைய கண்கள் இரண்டையும் இரண்டு முறை அவனைப் பார்த்து சிமிட்டி சிமிட்டி காட்டினாள். 😂 😂 😂

விஷ்ணு: அவளைப் பார்த்து கையடித்து கும்பிட்டவன், “தெய்வமே ஆல்ரெடி லிஸ்ட் ரொம்ப பெருசா போய்க்கிட்டு இருக்கு. உன் புருஷன் இத்தனை வேலை செய்யறதுக்கு எல்லாம் வொர்த் இல்ல டி. இந்த ஆடி மாச ஆஃபர் மாதிரி, எனக்கு ஒரு லைஃப் டைம் ஆஃபர் குடுத்து 50% வேலையில இருந்து என்ன ஃப்ரீ பண்ணி விடு உனக்கு புண்ணியமா போகும்.” என்று கெஞ்சும் தோணியில் சொன்னான். 😢 🙏

 ஷாலினி: “அதெல்லாம் நீ என்கிட்ட பிஹேவ் பண்றத பொறுத்து. நான் அத பத்தி கொஞ்சம் யோசிச்சு பாக்கணும். நான் பெரிய மனசு பண்ணி உன்ன வேலை வாங்காம இருக்கணும்னா, நீ என்கிட்ட குட் பாயா இருக்கணும். ஓகேவா..??” என்று சிரித்துக் கொண்டே கேட்டாள். 😂 😂 😂

 விஷ்ணு: மார்பிற்கு குறுக்காக தன்னுடைய கையை கட்டிக் கொண்டவன், “சரிங்க டீச்சர். நான் இனிமே குட் பாயா இருக்கேன்.” என்று சிறு புன்னகையுடன் சொன்னான். 😁 😁 😁

ஷாலினி: “அந்த பயம் இருக்கட்டும்.” என்றவள் விஷ்ணுவின் மூக்கை பிடித்து ஆட்டி விளையாடினாள். 😂 😂 😂

அதுவரை இவர்கள் இருவரின் சம்பாசனைகளை தூரத்தில் இருந்து கேட்டுக் கொண்டு இருந்த வைஷாலி, அதற்கு மேலும் இவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் விஷ்ணுவின் அருகே வந்தாள். அவளைப் பார்த்தவுடன் கடுப்பான விஷ்ணு, “நீ பைக்ல ஏறு ஷாலு நம்ம கிளம்பலாம்.” று எரிச்சலான குரலில் சொன்னான். 😒 ஷாலினியும் அமைதியாக அவனுடைய பைக்கில் ஏறி அமர்ந்தாள். 

விஷ்ணு தன்னுடைய பைக்கை ஸ்டார் செய்து கொண்டு கிளம்ப முயற்சிக்க… அவனை வழி மறித்த வைஷாலி, “வர வர உனக்கு என் முகத்தை பாத்து பேசக்கூட பிடிக்கலையா மாமா..??? உன் லைஃப்ல இப்போ வந்த இவ கூட இவ்ளோ நேரம் சிரிச்சு சிரிச்சு ஜாலியா பேசிட்டு இருந்த. ஆனா ஒரு ஃபார்மாலிட்டிக்காக கூட என் கூட பேசணும்னு உனக்கு தோணலல்ல… அந்த அளவுக்கு நான் உனக்கு வேண்டாதவளா ‌.. விஷ்ணு..???” என்று கலங்கிய கண்களுடன் கேட்டாள். 🥺

விஷ்ணு: அப்படிலாம் ஒன்னும் இல்ல வைஷாலி. என் கூட இப்ப ஷாலினியும் இருக்கா. நீ ஏதாவது தேவை இல்லாம பேசி.. மறுபடியும் உங்களுக்குள்ளே ஏதாவது சண்டை வந்துச்சுனா, நம்ப ரிலேஷன்ஷிப் இன்னும் டேமேஜ் ஆயிடும். அதான் நான் உன்னை அவாய்ட் பண்ணேன். 

வைஷாலி: ஓ..!!! அப்ப இவளுக்காக நீ என்ன அவாய்ட் பண்ணுவியா..??? 

விஷ்ணு: “நீ இவகிட்ட ஏதாவது அன்வாண்டடா பேசி பிரச்சனை பண்ணா.. கண்டிப்பா உன்ன அவாய்ட் பண்ணுவேன்.” என்று சிறிதும் யோசிக்காமல் பதில் சொன்னான். 

 வைஷாலி: அவன் வார்த்தைகளை கேட்ட வைஷாலி மிகவும் வருத்தப்பட்டாள். ஆனால் வெளியில் அதை காட்டிக் கொள்ள விரும்பாதவள், “ஓகே பைன் விஷ்ணு. என்னோட கார் என்னன்னு தெரியல திடீர்னு ஸ்டார்ட் ஆகல. அதான் நீ என்ன வீட்ல டிராப் பண்றியான்னு கேட்கலாம்னு வந்தேன். இட்ஸ் ஓகே நான் பாத்துக்குறேன். நீ உன் வேலையை பாரு.” என்று சொல்லிவிட்டு அங்கு இருந்து நகர முயற்சித்தாள். 

விஷ்ணு: வைஷு ஒன் மினிட்…

வைஷாலி: விஷ்ணு தன்னை தடுத்ததால் எங்கே அவன் ஷாலினியை இறக்கிவிட்டு தன்னை வீட்டில் டிராப் செய்ய தான் தன்னை அழைக்கிறான் போல என்று நினைத்து அவனை மகிழ்ச்சியான முகத்துடன் திரும்பி பார்த்தவள், “வாட்..???” என்று சாதாரண குரலில் கேட்டாள். 

இவர்கள் இருவரின் இந்த பேச்சுவார்த்தையை கவனித்துக் கொண்டு இருந்தான் மகேஷ். அவர்கள் இருவரும் பேசிக் கொள்வதை வைத்து அங்கு என்ன கதை ஓடிக் கொண்டு இருக்கிறது என்று அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் அவர்களை கூர்ந்து கவனித்தான். 

விஷ்ணு: “நான் வேணா கேப் புக் பண்ணி தரட்டா..??? இல்லன்னா, மதன் ஐ வர சொல்லி.. அவனை உன்னை விட்டுல ட்ராப் பண்ண சொல்லட்டா..???” என்று அக்கறை நிறைந்த குரலில் கேட்டான். 

வைஷாலி: அவன் இப்போதும் தனக்காக அந்த ஷாலினியை விட்டுத்தர தயாராக இல்லை என்று உணர்ந்தவள் ஒரு விரக்தி புன்னகையுடன், “நோ தேங்க்ஸ். ஐ கேன் டேக் கேர் ஆஃப் மை செல்ஃப்.” என்று சொல்லிவிட்டு திரும்பி பார்க்காமல் சென்று விட்டாள். 

அவளே இப்படி சொல்லும் போது..  தனக்கு என்ன..?? என்று நினைத்த விஷ்ணு, ஷாலினியுடன் செலவிட கிடைத்து இருக்கும் இந்த பொன்னான நேரத்தை வேஸ்ட் செய்துவிடக் கூடாது என்று நினைத்தவன்; தன்னுடைய காதல் வாகனத்தை ஸ்டார்ட் செய்து பறக்க தொடங்கினான். 😍 ❤️

பார்க்கிங் ஏரியாவில் ஒரு மரத்தின் அடியில் போடப்பட்டு இருந்த ஒரு ஸ்டோன் பெஞ்சில் வந்து தனியாக அமர்ந்த வைஷாலி, சோகமான முகத்துடன் மேலே தெரியும் வானத்தை பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் அருகே வந்து அமர்ந்தான் மகேஷ். அவனை ஓர கண்ணால் பார்த்த வைஷாலி அவனை கண்டு கொள்ளாமல் மீண்டும் அந்த வானத்தையே பார்க்கத் தொடங்கினாள். 

அவள் தன்னிடம் பேசவில்லை என்றாலும் தன் மனதில் இருப்பவற்றை அவளிடம் மகேஷால் கேட்காமல் இருக்க முடியவில்லை. அதனால், “நீ விஷ்ணுவ லவ் பண்றியா வைஷு..??” என்று அவளிடம் தயங்கி தயங்கி கேட்டான். 

வைஷாலி: அவனைப் பார்த்து விரக்தி புன்னகைத்தவள், ஆமாம் என்பது போல தன்னுடைய தலையை மேலும்.. கீழும்.. ஆட்டினாள்.

மகேஷ்: “ஆனா அவரு ஷாலினிய லவ் பண்றாரு போல..!!!” என்று அமைதியான குரலில் கேட்டான்.

வைஷாலி: “ஆமா. அதுக்கு என்னால இப்ப என்ன பண்ண முடியும் சொல்லு..???” என்று சோகமான குரலில் கேட்டாள். 😕 😖

மகேஷ்: நம்ப லவ் பண்றவங்க.. திருப்பி நம்மளைய லவ்  பண்ணனும்ன்னு எந்த அவசியமும் இல்ல வைஷு. இன் கேஸ் நம்ம எதிர்பார்க்கிற லவ் அவங்க கிட்ட இருந்து கிடைக்கலைன்னா, நம்மளோடது ஒன் சைட் ஃபீலிங்ஸ்ன்னு புரிஞ்சுகிட்டு நம்ப தான் விலகி வந்துடனும். 

வைஷாலி: “சும்மா உன்னோட பூமர் அட்வைஸ் எல்லாத்தையும் தூக்கிக்கிட்டு என்கிட்ட வராத மஹி. நீ முதல்ல யாரையாவது லவ் பண்ணி இருக்கியா..??? நீ யாரையாவது லவ் பண்ணி பார்த்து இருந்தா தான் என்னோட பீலிங்ஸ் என்னான்னு உனக்கு புரியும். அதுவும் நீ சொல்றியே அந்த ஒன் சைடு லவ்.. அது எவ்ளோ கொடுமையான விஷயம்ன்னு அத அனுபவிச்சு பாத்தா தான் தெரியும். சும்மா வாய் இருக்குன்னு நீ பாட்டு எதையாவது பேசாத.” என்று கடுப்பான குரலில் சொன்னாள். 😒

மகேஷ்: “நானும் ஒரு பொண்ணை லவ் பண்றேன் வைஷு. அதுவும் ஒன் சைடு லவ் தான். ஏன் நான் அவளை லவ் பண்றது அவளுக்கே கூட தெரியாது. அத சொல்றதுக்கும் எனக்கு தைரியமும் இல்ல. கிட்டத்தட்ட உனக்கும் எனக்கும் பெருசா எந்த வித்தியாசமும் இல்லை. சோ என்னால உன்னோட பீலிங்ஸ் ஐ புரிஞ்சுக்க  முடியும்.” என்று அவளுடைய கண்களைப் பார்த்து சொன்னான். 

வைஷாலி: “நீ நெஜமா சொல்றியா இல்ல சும்மா என்ன கன்வின்ஸ் பண்றதுக்காக அடிச்சு விடுறியா…???” என்று அவனை சந்தேக கண்களுடன் பார்த்து கேட்டாள். 

மகேஷ்: நெஜமா தான் சொல்றேன். உன்கிட்ட பொய் சொல்லி எனக்கு என்ன ஆகப் போகுது சொல்லு..!!! 

வைஷாலி: “ம்ம்ம்.. அதுவும் கரெக்ட் தான்.” என்று சலிப்பான குரலில் சொன்னவள், “நீ உன்னோட லவ்வ அந்த பொண்ணு கிட்ட சொல்லி, அவ உன்னை ரிஜெக்ட் பண்ணிட்டா நீ என்ன பண்ணுவ..???” என்று அவனிடம் கேட்டாள்.

  • நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured