Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 155

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 155

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 155: என்னோடு நீ இருந்தால் (பார்ட் 1)

தர்ஷினியிடம் பேசிவிட்டு சோகமாக தன்னுடைய அறைக்கு வந்த ஹரி, சோபாவில் பொத்தென்று விழுந்தான். ஆராதனா தன்னுடைய வருகைக்காக காத்திருப்பாள் என்று அவன் அறிந்து இருந்தாலும், அவளை தான் என்ன சொல்லி சமாளிப்பது என்ற யோசனையில் ஆழ்ந்து இருந்த ஹரி, சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். அது இரவு 9: 00 மணி என்று காட்டியது. அதைப் பார்த்தவனுக்கு இன்று என்ன தேதி என்று ஞாபகம் வர, நாளை ஆராதனாவின் பிறந்த நாள் என்று உணர்ந்தவன்; ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டுவிட்டு அந்த சோபாவில் விட்டத்தை பார்த்து சாய்ந்து அமர்ந்தான். பின் அவனும், ஆராதனாவும்,   காதலிக்கும் போது ஒன்றாக அவளுடைய பிறந்தநாளை கொண்டாடிய தருணங்களை நினைத்துப் பார்த்தான் ஹரி. 

இத்தனை வருடங்களில் இரண்டு மூன்று முறை தான் அப்படி ஆராதனாவும், அவனும், மகிழ்ச்சியாக அவளுடைய பிறந்த நாளை கொண்டாடி இருக்கின்றனர். அதை எல்லாம் நினைத்து பார்த்தவனுக்கு தான் ஆராதனாகிற்க்கு சந்தோஷத்தை விட கஷ்டங்களையே அதிகமாக கொடுத்து இருப்பதாக நினைத்து, வேதனையில் ஆழ்ந்தான். 💔 எத்தனையோ முறை ஹரியின் பிறந்த நாளன்று கூட அவனுடன் தன்னுடைய நேரத்தை செலவிட வேண்டும் என்று ஆராதனாா ஆசைப்பட்டு இருக்கிறாள். ஆனால் எப்போதும் ஹரி தன்னுடைய பிறந்தநாளை அவனுடைய குடும்பத்துடனும், பிசினஸ் வட்டாரத்தில் இருப்பவர்களுடனும், கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருப்பதால் அவன் குறைந்த நேரத்தையே ஆராதனாவுடன் செலவிட்டு இருக்கிறான்.

அதையெல்லாம் நினைத்துப் பார்க்க பார்க்க.. அவனுடைய மனதை குற்ற உணர்ச்சி ஆட்கொண்டு, அவனை பலவீனம் ஆக்கியது. 💔 🥀 அதனால் கலங்கிய கண்களுடன் எழுந்து தன்னுடைய அறையில் இருந்த ஒரு பெயிண்டிங்கை கழற்றி கீழே வைத்த ஹரி, அதன் வழியாக ஒரு சீக்ரெட் டோரை தன்னுடைய கைரேகையை வைத்து திறந்து அதற்குள்ளே சென்றான். அவன் அந்த அறைக்குள் தன்னுடைய காலை எடுத்து வைத்தவுடன், அந்த அறையின் லைட்டுகள் அனைத்தும் தானாக ஆன் ஆகி அந்த அறை ஒளிமயமானது. 

இது போன்ற சீக்ரெட் அறைகள் நாராயணன் குடும்பத்தினர் தங்கும் அனைத்து அறைகளிலும் இருக்கும். அந்த ரூமின் சொந்தக்காரர் யாரோ, அவருடைய பிங்கர் பிரிண்ட் ஐ வைத்து மட்டும் தான் அந்த அறையை திறக்க முடியும். அதனால் இங்கே தாங்கள் எதை பொக்கிஷமாக மதிக்கிறோமோ அதை அவர்கள் இங்கே வைத்து பாதுகாப்பார்கள். தன்னுடைய சீக்ரெட் அறைக்குள்ளே வந்த ஹரி, அங்கு இருந்த நிறைய செல்வங்களில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த ஆடைகளையும், சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த போட்டோ கலெக்ஷன்களையும், சில மரப்பெட்டிகளையும் வேதனை நிறைந்த கண்களுடன் பார்த்தான். ஹரியின் இந்த அறைக்குள் அவனைத் தவிர வேறு யாரும் வந்ததில்லை என்பதால் இப்படி ஒரு அதை இருப்பது ஆராதனாவிற்கு கூட தெரியாது. 

அந்த அறையின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இருந்த அனைத்து பொருட்களையும் தன்னுடைய கண்களால் ஸ்கேன் செய்தான் ஹரி. அந்த அறை முழுவதும் ஆராதனாவின்  நினைவுகளே கொட்டி கிடந்தன. சிறு வயதில் அவள் இவர்களுடைய வீட்டில் அடிக்கடி வந்து தங்கியதால் அவளுடைய ஆடைகள் எப்போதும் இங்கே இருக்கும். ஆனால் அதை அனைத்தையும் ஆராதனா பெரிதாக கண்டு கொண்டதில்லை. ஆனால் ஆராதனா பயன்படுத்திவிட்டு, வேண்டாம் என்று தூக்கிப்போட்ட அனைத்தையும் சேகரித்து வைத்து இருந்தான் ஹரி. 

இப்படி அந்த அறை முழுவதும் ஆராதனாவின் புகைப்படங்கள், அவளுடைய ஆடைகள், அவள் பயன்படுத்திய பொருட்கள், திருமணத்திற்குப் பின்பு ஆராதனாவிற்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்து ஹரி வாங்கி வைத்திருந்த பொருட்கள், என அனைத்தும் அழகாக அடுக்கப்பட்டு இருந்தது.  அங்கே சுவற்றில் முதன் முதலில் ஆராதனாவும், அவனும், தங்களுடைய காதலை டீன் ஏஜ் பருவத்தில் வெளிப்படுத்திய போது எடுத்த புகைப்படத்தை பெரிதாக ஃப்ரேம் செய்து மாட்டி வைத்திருந்தான். அதன் அருகே இறுதியாக ஆராதனா இப்போது நாராயணன் பேலஸிற்கு வந்தவுடன், அவனுடைய அறையில் அவனும் அவளும் இருக்கும்போது எடுத்த செல்பியையும் ஃப்ரேம் செய்து மாட்டி வைத்திருந்தான். 

அவன் ஆராதனாவுடன் அதிகமாக தன்னுடைய நேரத்தை செலவிடவில்லை என்றாலும், இந்த அறைக்கு வந்து அவளுடைய ஞாபகங்களுடன் தன்னுடைய அதிக நேரத்தை செலவிட்டு இருக்கிறான். இந்த அறையில் இருக்கும் போதெல்லாம், அவளுடனே இருப்பதைப் போன்ற ஒரு உணர்வு அவனுக்கு கிடைக்கும். வரிசையாக இருக்கும் இந்த புகைப்படங்களுக்கு அருகே தங்களுடைய திருமண புகைப்படத்தையும்,  குழந்தைகளின் புகைப்படத்தையும் மாட்ட வேண்டும் என்று அவன் எத்தனையோ நாள் இந்த அறையில் அமர்ந்து கனவு கண்டிருக்கிறான். அதெல்லாம் இப்போது நடக்கப் போவதில்லை என்று அவனாலேயே ஏற்றுக் கொள்ள முடியாத போது, அதை எப்படி தான் ஆராதனாவிடம் சொல்வது என்று நினைத்து மனமுடைந்து போன ஹரி, “ஆராதனா…!!!” என்று சொல்லி சட்டமாக கதறி அழுதவன், அவளுக்காக அவன் வாங்கி வைத்திருந்த ஒரு பெரிய பிங்க் நிற டெடி பியர் பொம்மையை கட்டிப்பிடித்து கொண்டான். 😭 😭 😭 🤗 🐻

அந்த பொம்மையை ஆராதனாவாக நினைத்து எத்தனையோ நாள் அவன் இதே போல் கட்டிப்பிடித்து காதலில் திளைத்து இருக்கிறான். திருமணத்திற்கு பின்பு இந்த பொம்மையை அவளிடம் கொடுத்துவிட்டு தன்னுடைய பொம்மையை (ஆராதனாவை) கட்டிப்பிடித்துக்  கொண்டு நிம்மதியாக தூங்க வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறான். அதை எல்லாம் அவன் நினைத்துப் பார்க்க பார்க்க,  அவனுடைய மனம் வேதனையில் வாடியது. 💔 🥀 தனக்கே இப்படி இருக்கிறது என்றால் அந்த செய்தியை பார்த்துவிட்டு ஆராதனா எப்படி இருக்கிறாளோ என்று நினைத்தவனுக்கு, இப்போதே சென்று அவளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அதனால் தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை சிரமப்பட்டு துடைத்து கொண்டவன், ஆராதனாவின் அறைக்கு எழுந்து சென்றான். 

அவன் ஆராதனாவின் அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வர, அந்த அறை முழுதும் இருள் சூழ்ந்து இருந்தது. ஒரு வேளை ஆராதனா, தன்னிடம் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டாள் போல என்று நினைத்து பயந்த ஹரி, அவளுடைய சொல்லி அழைத்த படி உள்ளே வந்தவன், அனைத்து லைட்டுகளின் ஸ்விட்ச் -ஐயும் ஆன் செய்தான். அவனுடைய கண்கள் அந்த அறை முழுவதும் ஆராதனாவை தேட, ஒரு மூலையில் தரையில் அமர்ந்து இருந்த ஆராதனா, அவளுடைய கால்களுக்கு இடையே தன்னுடைய முகத்தை புதைத்து இருந்தாள். 

வேகமாக அவள் அருகே சென்ற ஹரி தரையில் அமர்ந்து, “இத்தன நாளா நான் உன்னை கஷ்டப்படுத்தினதுக்கு இப்படி எல்லாம் பண்ணி இப்போ நீ என்ன கஷ்டப்படுத்துறியா பார்பி…??? ப்ளீஸ் இப்படி எல்லாம் பண்ணாத. என்னால உன்னை இப்டி பாக்க முடியல டி. உனக்கு என் மேல ஏதாவது கோபம்னா அதை என்கிட்ட காட்டு. அத நீ உன் வேலையை காட்டிகாத.” என்று அவன் கரகரத்த குரலில் சொல்ல, அவனை நிமிர்ந்து பார்த்த ஆராதனா, “அப்போ நீ என்னை விட்டுட்டு போக மாட்டேன்னு சொல்லு.” என்று கண்ணீர் நிறைந்த கண்களுடன் சொன்னாள். 😭 😭 😭

ஹரி: அவளுடைய முகத்தை தன்னுடைய இரு கைகளால் ஏந்தியவன், “உன்ன விட்டுட்டு போனா நான் மட்டும் சந்தோஷமா இருப்பேன்னு நீ நினைக்கிறாயா..???” என்று வலி நிறைந்த குரலில் கேட்டான். 💔

ஆராதனா: தன் மீது இருந்த அவனுடைய கைகளை விளக்கி விட்டவள், “அப்போ, நீ என்ன விட்டுட்டு போக ரெடி ஆய்ட்டியா..???” என்று உணர்ச்சியற்ற குரலில் கேட்டாள். 

ஹரி: “நீ இல்லாம வாழ்ந்தா, நான் செத்த பிணத்திற்கு சமம் டி.” என்றவன், ஆராதனாவை கட்டிப்பிடித்துக் கொண்டு அதுதான். ஆராதனாவும் அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். 🤗 😭 😭 😭

உண்மைக் காதல் யாரென்றால்… ❤️

உன்னை என்னை சொல்வேனே… 👩‍❤️‍👨

நீயும் நானும் பொய் என்றால்…
காதலை தேடி கொல்வேனே… 😒

கூந்தல் மீசை ஒன்றாக…
ஊசி நூலில் தைப்பேனே…

தேங்காய்க்குள்ளே நீர் போல…
நெஞ்சில் தேக்கி வைப்பேனே… ❤️ 💫 🌟 ✨

என்னோடு நீ இருந்தால்…

உயிரோடு நான் இருப்பேன்…

உண்மையான காதலிப்பவர்களே பிரித்து வைத்து பார்ப்பதே ஏன் என்று தெரியவில்லை இந்த விதி தன்னுடை ஒரே வேலையாக செய்து கொண்டு இருக்கிறது. ம் இந்த காதல் உள்ளங்கள் விதியின் கோரப்பிடியில் மாட்டி கொண்டு நொந்து தவிக்கின்றன. 💔 🥀 ஹரியிடம் இருந்து பிரிந்த ஆராதனா, “இப்போ நீ என்ன டிசைட் பண்ணிருக்க்க ஹீரோ..??? இனிமே உன்னை இப்படி ஹீரோன்னு கூப்பிடுறதுக்கு எனக்கு உரிமை இருக்கா, இல்லையா..???” என்று கலங்கிய கண்களுடன் அவனைப் பார்த்து கேட்டாள். 🥺

ஹரி: “நான் உன்னோட லைஃப்ல உனக்கு ஹீரோவா வில்லனான்னு எனக்கே தெரியல டி. என்னால நீ அதிகமா சஃபர் ஆயிட்டு தான் இருக்க. எந்த ஹீரோ அவனோட கேர்ள் பிரண்டா இப்டி அளவெச்சிகிட்டே இருப்பாம்னு சொல்லு…!!!” என்று தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்டு சொன்னான்.

ஆராதனா: “நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே ஹரி…!!! எதா இருந்தாலும் கிளியரா சொல்லு. என்னால எப்பவுமே ஒரு ட்ரீம் வேர்ல்டுல இல்யூஷன்லயே வாழ முடியாது. உண்மைய சொல்லு. நீ தர்ஷினிய கல்யாணம் பண்ணிக்க போறியா…???” என்று அவனுடைய சட்டை கலரை பிடித்துக் கொண்டுு கேட்டாள். 

ஹரி: “ஐ அம் சாரி ஆராதனா. என்னால எதுவும் பண்ண முடியாத சூழ்நிலையில நான் இருக்கேன். நான் தர்ஷினி கிட்ட கூட இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி பேசி பாத்துட்டேன். அவளும் என்னால எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டா. அம்மாவோட ஹெல்த் கண்டிஷன்னால நானும், விஷ்வாவும், அவங்ககிட்ட எதுவும் பேச முடியாம இருக்கோம். 

அதனால இப்போதைக்கு நடக்கிற எதையும் என்னால தடுக்க முடியாது ஆரு. நமக்கு டைம் இருக்கு. அதுக்குள்ள ஏதாவது மேஜிக் நடந்து எல்லாமே மாறும்ன்னு நம்பர தவிர வேற வழியில்ல.” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னான்.

ஆராதனா: “அப்போ, அந்த மேஜிக் நடக்கவே இல்லனா என்ன பண்ணலாம்னு இருக்க ஹரி..???” என்று கூர்மையான கண்களுடன் கேட்டாள். 

ஹரி: “அப்படி எந்த மேஜிக்கும் நடக்கலைன்னா, ஐ அம் சாரி. வேற வழி இல்ல நான் அவ கழுத்துல தாலி கட்டி தான் ஆகணும்.” என்று உணர்ச்சியற்ற குரலில் சொன்னான்.

அவன் சொன்னதைக் கேட்டவுடன் ஆராதனாவின் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. 😭 😭 😭 அவளுடைய மூளையால் ஹரியின் சூழ்நிலையை புரிந்து கொள்ள முடிந்தாலும், அவளுடைய மனதால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் அவனை கோபமாக பார்த்தவள், “கேட் லாஸ்ட் ஹரி. ஸ்டே அவே ப்ரம் மீ. கெட் அவுட். ஐ டோன்ட் லைக் டு சி யுவர் ஃபேஸ்.” என்று அவனைப் பார்த்து ஆத்திரத்தில் கத்த தொடங்கி விட்டாள். 😡 🔥

அவளை அந்தக் கோலத்தில் பார்த்து மனம் உடைந்து போன ஹரி, நேராக ஆராதனாவின் அறையில் இருந்து வெளியே வந்தவன்; அவர்களுடைய மாளிகையின் மேல் தளத்தில் இருக்கும் பார் செட்டப்பிற்கு சென்று சரமாரியாக குடித்தவன், அங்கிருந்த சில பழமையான மது பாட்டல்களை கீழே போட்டு உடைத்து தன்னுடைய மன வேதனையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று தன்னுடைய உணர்ச்சிகளுடன் தானே போராடி கொண்டு இருந்தான். 💔 🥀

ஹரியின் செய்கைகளை தூரத்தில் இருந்து கவனித்த விஷ்வா, ஏற்கனவே அவன் போதையில் தற்கொலை முயற்சி செய்ய துணிந்ததால் மீண்டும் அவன் ஏதேனும் அப்படி செய்து விடுவானோ என்று நினைத்து பயந்தவன் தர்ஷனுக்கு கால் செய்து அவனை அங்கே வர சொல்லி ஹரியுடன் அவனை இருக்க வைத்துவிட்டு, கலங்கிய கண்களுடன் அங்கு இருந்து கீழே வந்தான். 🥺 ஒரு அண்ணனாகவும், ஆண் மகனாகவும், ஹரியின் வேதனையைவிஷ்வாவால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் பாவம் அவனால் தன்னுடைய தம்பியின் வேதனையை போக்க தான் முடியவில்லை. 

கனத்த இதயத்துடன் லிப்டில் கீழே வந்து கொண்டு இருந்த விஷ்வாவிற்கு, சித்தார்த்தை சந்தித்து அவனுடன் சிறிது நேரம் பேசினாள் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால் அவனுடைய அறைக்கு சென்றான். சாப்பிட்டு முடித்துவிட்டு தன்னுடைய அறைக்கு அப்போது தான் வந்து இருந்த சித்தார்த், கையில் ஒரு கேமிங் டாயை வைத்து விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது விஷ்வா அவனுடைய அறைக்குள் வர, அவனைக் கண்டு பயந்து போன சித்தார்த் தன் கையில் இருந்த கேமிங் டாயை கீழே போட்டு விட்டான். பின் பதட்டமாக அவனைப் பார்த்தவன், “இப்ப நீங்க என்ன திட்ட போறீங்களா..???” என்று கேட்டான். 😟

அவன் அருகே சென்று அவனுடைய உயரத்திற்கு மண்டியிட்டு தரையில் அமர்ந்த விஷ்வா, “இல்ல சித்து. அப்பா நான் ஏன் உன்ன திட்ட போறேன்..!!! உனக்கு தெரியுமா..??? யுவர் டேட் லவ்ஸ் யூ சோ மச். நீ ஏன் என்கிட்ட முன்ன மாதிரி நார்மலா பேச மாட்டேங்குற..??? உனக்கு என்ன பாத்தா பயமா இருக்கா..???” என்று வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டான். 😐

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured