Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 151

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 151

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 151: நான் நாலு பொண்டாட்டி கட்டுவேன் (பார்ட் 1)

விஷ்வாவின் அலுவலக அறை..

விஷ்வா சற்று ஃப்ரீயாகும் வரை காத்திருந்த சிவா, அவன் அருகே சென்று செண்பகம் தன்னிடம் சொன்னவற்றை அனைத்தையும் அவளிடம் தெளிவாக சொன்னான். சிவா பேசியதை கேட்ட விஷ்வா அமைதியாகவே எதையோ யோசித்துக் கொண்டு இருந்தான். அதனால், “சார் நான் இப்போ என்ன பண்றது…???” என்று சிறு தைக்கத்துடன் கேட்டான். 

விஷ்வா: “உண்மைய சொல்லனும்னா, எனக்கே என்ன பண்றதுன்னு தெரியல டா. அம்மாவுக்காக என்னோட லைஃப நான் சாக்ரிஃபைஸ் பண்ணி ஏதாவது ஒரு டிசிஷன் எடுக்கலாம். இப்போ நான் ஆராதனாவ விட்டுட்டு தர்ஷினிய கல்யாணம் பண்ணிக்கோன்னு ஹரி கிட்ட எப்படி சொல்ல முடியும்…??? 

நான் தானே டா அவளை இங்க கூட்டிட்டு வந்தேன். இப்ப நானே அவனுக்கும் தர்ஷினிக்கும் மேரேஜ் அநோன்ஸ் பண்ணா, ஆராதனா அத பாத்துட்டு என்ன பத்தி என்ன நினைப்பா..??? நானும் அவளை ஏமாத்திட்டேன்னு அவளுக்கு தோணாதா..???” என்று சொன்னவன் ஒரு பெரும் மூச்சு ஒன்றை விட்டு விட்டு தன்னுடைய சாரீஸ் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்து கொண்டான். 

சிவா: தன்னுடைய மனதில் இருக்கும் வேதனையை தாண்டி அவன் விஷ்வாவை நினைத்து வருத்தப்பட்டான். அதனால் விஷ்வாவை பாவமாக பார்த்தவன், “நீங்க இத பத்தி அவர்கிட்ட பேச வேண்டாம் சார். நானே ஹரி சார் கிட்ட பேசுறேன். ஆனா செண்பகம் மேடம் உங்க ரூம் கீ கேட்டாங்களே…!!! அதுக்கு என்ன பண்றது..??? நீங்க குடுத்தீங்கன்னா அத நான் வாங்கிட்டு வீட்டுக்கு போவேன். அப்டியே ஹரி சார் என்ன சொல்றாருன்னு கேட்டுட்டு, பி. ஆர். டிம் கிட்ட செண்பகம் மேடம் சொன்ன மாதிரி எல்லாத்தையும் அனௌன்ஸ் பண்ண சொல்லிடுவேன்.

விஷ்வா: சிவா மீண்டும் அதைப்பற்றி அவனுக்கு ஞாபகப்படுத்தியதால் தன்னுடைய முகத்தை வருத்தமாகக வைத்துக் கொண்டவன், “என் கூட என் ரூம்ல… என் ஜான்வி இருந்த இடத்துல, அந்த ராகவிய நான் இப்ப கொண்டுட்டு வந்து   வைக்கணுமா டா…??? ஆனா இப்ப என்னால என்ன பண்ணிட முடியும் சொல்லு..??? ஒரு பக்கம் என் அம்மா, இன்னொரு பக்கம் என் ஜான்வி. 

செத்துப்போன ஜான்விக்காக உயிரோட இருக்கிற என் அம்மா கிட்ட நான் ஏதாவது ஆர்கியூ பண்ணி, அவங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இப்பலாம் அம்மா எடுக்கிற டெசிஷன் தான் பைனல் ஆயிடுச்சே…!!! அதே மாதிரியே பண்ணு. ஆனா ஜான்வி ஓட திங்ஸ் நீ எந்த ரூம்ல ஷிப்ட் பண்ணாலும், அந்த ரூமோட ஸ்பேர் கீய கையோட கொண்டுட்டு வந்து என்கிட்ட குடுத்துடு. இல்லனா அம்மா ஆண்டுக்கேயும் எடுத்து வச்சுக்கிட்டு, கடைசி வரைக்கும் என்ன அந்த ரூமே ஓப்பன் பண்ண விட மாட்டாங்க.” என்று அவனை கேள்வி கேட்டு அவனை பதிலையும் ஒரு விளக்கி புன்னகையுடன் சொன்னவன், தன்னுடைய கோட் பாக்கட்டில் இருந்த அவனுடைய அறையின் டிஜிட்டல் சாவியை எடுத்து சிவாவிடம் கொடுத்தான். 😁 😁😁

இந்த கணமே ஆபீஸில் பர்மிஷன் கேட்டு விட்டு திவ்யாவை பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்த சிவாவிற்கு, விஷ்வா இப்போது இருக்கும் மன நிலையில், அவனிடம் தன்னுடைய கஷ்டத்தையும் சொல்லி அவனை இன்னும் காயப்படுத்த அவன் விரும்பவில்லை. அதனால் அவனிடம் அதிகம் பேசாமல், “ஓகே சார். அப்போ, நான் ஹரி சார் கிட்ட பேசிட்டு, அந்த அனௌன்ஸ்மென்ட் ஐ பண்ண சொல்கிறேன்.” என்றவன், அவனுடைய அறையில் இருந்து வெளியே வந்தான். 

விஷ்வாவிடம் பேசிவிட்டு ஹரியின் அறைக்கு வந்த சிவா, செண்பகம் தன்னிடம் சொன்னவற்றை அவனிடமும் சொன்னான். அதைக் கேட்ட ஹரி, தன்னுடைய தலையில் ஒரு பெரிய இடி வந்து விழுந்தது போல் உணர்ந்தான். செண்பகம் என்ன தான் பிடிவாதமாக தனக்கு தர்ஷனியை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தாலும், இறுதியில் விஷ்வா எதையாவது செய்து தனக்கும் ஆராதனாவிற்கும் திருமணம் செய்து வைத்து விடுவான் என்று நம்பிக்கை சிவா இங்கே உள்ளே வருவதற்கு ஒரு நொடி முன்பு வரை அவனுக்கு இருந்தது. 

 இப்போது செண்பகம் இருக்கும் உடல் நிலையை கருத்தில் கொண்டு விஷ்வாவும் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று கையை விரித்து விட்டதால், மனம் உடைந்த ஹரி கலங்கிய கண்களுடன்; “இந்த விஷயம் ஆராதனாவுக்கு தெரிஞ்சா அவ தாங்க மாட்டா டா. இப்போ இந்த அனௌன்ஸ்மென்ட் வந்தா கண்டிப்பா இது எனக்கு தெரியாம நடந்திருக்காதுன்னு அவளுக்கு தெரியும். அப்ப அவ என்ன பத்தி என்ன நினைப்பா..??? மறுபடியும் நான் அவளை விட்டுக் குடுத்துட்டேன்னு நெனச்சு திரும்பவும் அவ சூசைட் அட்டென்ட் பண்ணிட்டான்னா என்ன பண்றது..?? 

இல்ல இந்த கல்யாணம் வேணான்னு நான் அம்மா கிட்ட சண்டை போட்டு அவங்களுக்கு தப்பா ஏதாவது ஆயிட்டா என்ன பண்றது….???? ஐயோ…!!! எனக்கு பைத்தியமே பிடிக்கிற மாதிரி இருக்கு டா. இப்ப நான் யார் பக்கம் தான் நிற்கிறது…???” என்று தன்னுடைய தலையைப் பிடித்துக் கொண்டு கோபமாக உச்சரிதியில் கத்திய ஹரி, தன்னுடைய டேபிளில் இருந்த அவனுடைய பொருட்கள் அனைத்தையும் டேபிள் க்ளாத்தை பிடித்து கீழே இழுத்து தள்ளியவன்; “ஐ அம் சாரி ஆராதனா. ஐ அம் சாரி. ப்ளீஸ் பார்கிவ் மீ.” என்று அழுது கொண்டே சொன்னவன், தரையில் அமர்ந்து கொண்டான். 😭 😭 😭 😭

அவனை அந்த நிலையில் பார்த்து மனம் உடைந்த சிவா வேகமாக அவன் அருகே சென்று அவனை கட்டிப்பிடித்துக் கொண்டவன், “இன்னும் கல்யாணம் நடக்கிறதுக்கு டைம் இருக்கு சார். எல்லாமே நல்லதா நடக்கும்னு நம்புங்க. ஒரு நிமிஷத்துக்குள்ளேயே எத்தனையோ விஷயங்கள் மாறுது. அந்த மாதிரி இதுவும் உங்களுக்கு பிடிச்ச மாதிரி மாறும்ன்னு நம்புங்க. அதுவா மாறலினாலும், நம்ப கண்டிப்பா அத மாத்துவோம்.” என்று ஹரிக்கு ஆறுதல் சொல்லும் சாக்கில் தனக்கும் அந்த சொல்லிக் கொண்டவன், “கடவுளே…!!! எல்லாருக்கும் அவங்களுக்கு புடிச்ச மாதிரியான வாழ்க்கை அமையனும். நீதான் இந்தப் பிரச்சனை எல்லாத்தையும் சால்வ் பண்ணி எங்களை சேத்து வைக்கணும். எல்லாருக்கும் நிம்மதியையும் சந்தோஷத்தையும் குடு.” என்று வேண்டிக் கொண்டான். 

சிவாவை கட்டி பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் அழுத ஹரி, “வேற வழி இல்ல சிவா. இப்போதைக்கு இந்த அனௌன்ஸ்மென்ட்ட பண்ணிடு. நான் ஆராதனா கிட்ட ஏதாவது சொல்லி அவளை கொஞ்ச நாள் சமாளிக்கிறேன். அதுக்குள்ள ஏதாவது நல்லது நடக்கும்ன்னு நம்புவோம். நீ போகும்போது தர்ஷின் ஐ இங்கே வரர சொல்லிட்டு போ.” என்று தன்னுடைய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டு சொன்னவன், எழுந்து தன்னுடைய சாரில் அமர்ந்தான். 

கனத்த இதயத்துடன் ஹரியின் அறையில் இருந்து வெளியே வந்த சிவா, தர்ஷனுக்கு கால் செய்து அவனை சென்று ஹரியை சமாதானப்படுத்த சொன்னவன், தன்னுடைய மனதில் இருக்கும் வேதனையை சமாதானப்படுத்த முடியாமல் மன வேதனையுடன் செண்பகம் சொன்ன வேலையை செய்து முடித்துவிட்டு நாராயணன் பேலஸிற்கு சென்றான். 

பிராத்தனாவின் கல்லூரியில்…

பங்க்ஷன் முடிந்தவுடன் கிரவுண்டிற்கு வந்த பிராத்தனா, அங்கே பிரேம் இருக்கிறானா என்று தேடிக் கொண்டு இருந்தாள். ஆனால் எங்கு தேடியும் அவளால் அவனைக் காண முடியவில்லை. தன்னுடைய நண்பன் நவீனின் மூலம் பிரவீன் பி. எஸ். சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டு இருக்கிறான் என்று ஏற்கனவே அறிந்து இருந்த பிராத்தனா, அவனுடைய வகுப்பறைக்கு சென்று அவனைத் தேடினாள். 

இத்தனை நாளாய் தன்னுடைய கனவில் வந்து தன்னை தொல்லை செய்து கொண்டு இருப்பவனை, இன்று நேரில் பார்த்து எப்படியாவது ஒரு ஹாய் ஆவது சொல்லி விட வேண்டும் என்ற தவிப்பு அவளுக்குள் இருந்தது. பிரேம் அவனுடைய வகுப்பறையிலும் இல்லை. அதனால் அவனுடைய வகுப்பறையில் இருந்த இன்னொரு மாணவனை அழைத்த பிராத்தனா, “எக்ஸ்கியூஸ் மீ பிரேம் சீனியர் கிளாஸ்ல இல்லையே…!!! எங்க இருக்காருன்னு உங்களுக்கு தெரியுமா…???” இன்று தன்னுடைய தேன் குரலில் தன்மையாக அவனிடம் கேட்டாள்.

காலேஜின் பியூட்டி குயின் தன்னை மதித்து தன்னிடம் பேசுவதிலேயே சப்ரைஸ் ஆனவன் அவள் இதில் தன்னுடைய நண்பன் பிரேமை பற்றி விசாரிப்பதால் இன்னும் அதிர்ச்சி அடைந்தவன், “வாவ் காலேஜ் ஓட பியூட்டி குயின் உங்க பின்னாடி எத்தன பேர் சுத்துறாங்க… நீங்க அவனை பத்தி என்கிட்ட விசாரிக்கிறீர்களா..??? வாட்ட எ லக்கி மேன் ஹீ இஸ்…!!!” என்று ஆர்வமான குரலில் சொன்னான்.

பிராத்தனா: “இப்போ எதுக்கு சீனியர் நீங்க இவ்ளோ எக்சைட் ஆகுறீங்க..??? அவர் தானே ஸ்டுடென்ட்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் ஹெட். எனக்கு அந்த கிளப்ல சேரனும். அதான் அவர பாத்து பேசலாம்னு வந்தேன். வேற ஒன்னும் இல்ல. நீங்க ஓவரா எதையும் இமாஜின் பண்ணாதீங்க.” என்று சாதாரணமான குரலில் சொன்னாள்.

அந்த மாணவன்: “ச்சே…!!! அவ்ளோ தானா..?? நான் கூட உங்களுக்கு அவன் மேல இன்ட்ரஸ்ட் இருக்குன்னு நினைச்சேன். அப்ப நீங்க சிங்கிளா..??? நீங்க சிங்கிளா சொல்லுங்க. நானும் ஒரு அப்ளிகேஷன் போட்டு வைக்கிறேன்.” என்று வெட்கமின்றி சொல்லிவிட்டு சிரித்தான். 😁 😁 😁

பிராத்தனா: அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தவள், “இந்த பிராத்தனாவ சும்மா பார்த்து சைட் அடிக்கணும்னா கூட, அதுக்கு ஒரு குவாலிபிகேஷன் வேணும். அது உங்களுக்கு இருக்கிற மாதிரி எனக்கு தெரியல. சோ, பெட்டர் டோன்ட் வேஸ்ட் யுவர் டைம். உங்களால முடிஞ்சா அவர் எங்க இருக்காருன்னு சொல்லுங்க. இல்லனா தேவை இல்லாம பேசி என்னோட டைம் ஐ வேஸ்ட் பண்ணாதீங்க.” என்று காட்டமான குரலில் சொன்னாள். 😒

அந்த மாணவன்: “ஐயோ பாரு டா எவ்ளோ திமிரு…!!! ஆனா இவ்ளோ அழகா இருக்குற பொண்ணுக்கு அவ்ளோ திமிரு இருக்கிறதுல ஒன்னும் தப்பில்ல. உனக்காக என்னோட டோர்ஸ் எப்பயுமே ஓபன்ல தான் இருக்கும் பேபி. அண்ட் பை த வே, அவன் பார்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ் ஐ ஸ்போர்ட்ஸ் கிளப்ல ஜாயின் பண்ண இன்ட்ரஸ்ட் இருக்கிறவங்க யாருன்னு பாத்து அவங்க நேம் லிஸ்ட் ஐ எடுக்கிறதுக்காக எல்லா கிளாஸுக்கும் போயிருக்கான். போய் ஃபர்ஸ்ட் இயர் கிளாஸ் எல்லாத்துலயும் தேடி பாரு. ஏதாவது ஒரு கிளாஸ்ல இருப்பான் உன் ஹீரோ.” என்று சிரித்துக் கொண்டே நக்கலாக சொன்னவன், தன்னுடைய வகுப்பறைக்குள் சென்று விட்டான். 😂 😂 😂 

– நேசம் தொடரும் ❤️

என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured