அத்தியாயம் 150: இது திருமண மாதம்
நாராயணன் பேலஸில்…
ஜோசியர் விஷ்வாவின் ஜாதகத்தையும், ராகவியின் ஜாதகத்தையும், ஒப்பிட்டு பார்த்து அவர்களுடைய குடும்ப ஜோசியர்; “இவங்க ரெண்டு பேருக்குமே ஜாதக பொருத்தம் ரொம்ப அமோகமா இருக்கு மா. இவங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்தவங்கன்னு இவங்க ஜாதகம் சொல்லுது. பக்கத்திலேயே இருக்கிற மாதிரி இவங்க நட்சத்திரத்துக்கு ஏத்த ஒரு நல்ல முகூர்த்தத்தை பாத்து சொல்லட்டுமா மா…???” என்று அவர் செண்பகத்திடம் கேட்க, “ஆமா ஜோசியரே…!!! நாங்க கல்யாணத்தை சீக்கிரமா பண்ணலாம்னு தான் இருக்கோம். அதனால அடுத்த நல்ல முகூர்த்தம் எப்ப இருக்குன்னு பார்த்து சொல்லுங்க. அப்ப நிச்சயத்தை வச்சுக்கிட்டு அதுக்கு அடுத்து வரும் முகூர்த்தத்தில் உடனே கல்யாணத்தை வைத்துவிடலாம்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள். 😁 😁 😁
பஞ்சாங்கத்தை புரட்டிப் பார்த்த ஜோசியர், “இந்த மாசமே வளர்பிறையில நல்ல முகூர்த்தம் இருக்கு மா. வர மே 22 ஆம் தேதியும், 24 ஆவது தேதியும், நாள் நல்லா இருக்கு. தமிழ் மாசத்துல வைகாசி எட்டாம் தேதியும், பத்தாம் தேதியும், வருது. உங்களுக்கு இந்த நாடே போதுப்படும் நா பேச அன்னைக்கே கல்யாணத்தையும், நிச்சயதார்த்தத்தையும், வச்சுக்கலாம். என்ன கொஞ்சம் ஏற்பாடு பண்றதுக்கு தான் சிரமமா இருக்கும்னு நினைக்கிறேன். கல்யாணத்துக்கும், நிச்சயதார்த்தத்துக்கும், நடுவுல ரெண்டு நாள் தான் கேப் இருக்கு.” என்று சொன்னார்.
செண்பகத்திற்கு எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் விஷ்வாவிற்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று தான் தோன்றியது. சீத்தாவிடமும், ராகவியின் பெற்றோர்களிடமும், ஒரு வார்த்தை சம்மதமா என்று கேட்டுவிட்டு இறுதி முடிவை எடுக்கலாம் என்று நினைத்தவள்; தர்ஷினியை அழைத்து போய் அவருடைய அம்மா சீதாவை அழைத்துக் கொண்டு வரும் படி சொல்லி அனுப்பினாள். சீதாவிற்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதால், இந்த திருமணம் சார்ந்த எந்த ஒரு விஷயத்திலும் அவள் பங்கு கொள்ள விரும்பவில்லை. அதனால் தனக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லி தன்னுடைய மகளை திருப்பி அனுப்பி வைத்து விட்டாள்.
“அத்தை அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்ல. அதனால அவங்க இங்க வர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. எதுவா இருந்தாலும், நீங்களே பாத்து பண்ணுவீங்களாம். நீங்க என்ன செஞ்சாலும் அது அவங்களுக்கு சம்மதம் தான்னு உங்ககிட்ட சொல்ல சொன்னாங்க.” என்று தர்ஷினி சொல்ல, அதைக்கேட்ட செண்பகம் சீதாவை பற்றி யோசிப்பதை விட்டுவிட்டு, ராகவியின் பெற்றோர்களிடம் இந்த தேதிகளில் ஃபங்ஷனை நடத்த அவர்களுக்கு சம்மதமா என்று கேட்டாள்.
“எங்களுக்கு சம்மதம் தான் சம்மந்தி அம்மா.” என்று சுதாகரும், ரேவதியும், செண்பகத்திடம் சொல்ல; “அப்ப ரொம்ப சந்தோஷம் சம்பந்தி. நாள் ரொம்ப கம்மியா இருக்கு. சீக்கிரமா கல்யாண வேலையை ஆரம்பிக்கணும். எல்லாமே நம்ம புள்ளைங்களுக்கு புடிச்ச மாதிரி பாத்து பாத்து பண்ணனும்னு ஆசைப்படுறேன்.
நான் இன்னைக்கு உங்கள ராகவியை கூட்டிட்டு தானே வர சொன்னேன்..!!! நீங்க அவளை வேலைக்கு அனுப்பி விட்டுட்டீங்க. நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் ராகவிய கூட்டிக்கிட்டு இங்கக வாங்க. பங்க்ஷன் எப்படியும் நம்ம நாராயணன் மஹால்ல தான் நடக்கும். அத தவிர மத்த எல்லாத்தையுமே நம்ம நாளைக்கு சுஸ் பண்ணிடுவோம். நாளைக்கு ஃபுல் டே நம்ம ஷாப்பிங் தான் பண்றோம். என் மருமகளுக்காக நான் நிறைய யோசிச்சு வச்சிருக்கேன்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள்.
ரேவதி: “நீங்க ராகவியையும் கூட்டிட்டு தான் மா வர சொன்னிங்க. ஆனா, கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ண எப்படி புகுந்த வீட்டுக்கு கூட்டிட்டு வர்றதுன்னு தயக்கத்தில் தான் நாங்க அவளை கூட்டிட்டு வரல.” என்று அமைதியான குரலில் சொன்னாள்.
செண்பகம்: “அட ஏன் அண்ணி நீங்க அப்படி எல்லாம் நினைக்கிறீங்க…??? இது என்ன அந்த காலமா…??? இப்ப தான் எல்லாமே மாறிடுச்சே… காலத்துக்கு தகுந்த மாதிரி நாங்களும் மாறிக்க வேண்டியது தான். இப்ப எங்க தர்ஷினியயே எடுத்துக்கோங்க, அவளும் நாளைக்கு இந்த வீட்டுக்கு மருமகளாக போறவ தான். ஆனா அவ எங்க வீட்டு பொண்ணு என்றதுனால அடிக்கடி இங்கே வந்துட்டு போயிட்டு தானே இருக்கா. இப்ப நம்ம ராகவி இங்க வர்றதுனால மட்டும் என்ன ஆயிட போகுது..??? நாளைக்கு நீங்க அவளை கண்டிப்பா இங்க கூட்டிட்டு வரணும். எனக்கு விஷ்வாவோட டேஸ்ட்ட பத்தி தெரியும். ஆனா ராகவிக்கு என்ன பிடிக்கும்னு நான் அப்புறம் எப்படி தான் தெரிஞ்சுகிறது…???” என்று பாசமாக கேட்டாள்.
செண்பகத்தின் பேச்சை மறுக்க முடியாததால், ராகவியின் பெற்றோர்கள் நாளை ராகவியுடன் இங்கே வருவதாக ஒப்புக்கொண்டனர். பின் செண்பகம் ஏற்கனவே அவர்களிடம் சொன்னது போல அவர்களுக்காக அவள் ஒரு விருந்தையே தயார் செய்து வைத்து இருக்க, ராகவியின் பெற்றோர்களும் மன நிறைவுடன் அங்கே இருந்து சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.
சித்தார்த்தின் பள்ளியில்…
விஷ்வாவின் அலுவலகத்தை போலவே இங்கும் ஆசிரியர்கள் விஷ்வாவின் திருமணத்தை பற்றி தான் பேசிக் கொண்டு இருந்தனர். விஷ்ணு தான் விஷ்வாவின் தம்பி என்று அறிந்து இருந்த சிலர் விஷ்ணுவிடம், விஷ்வாவின் மனைவியாகப் போகும் அந்த அதிர்ஷ்டசாலி பெண் யார் என்று கேட்டு நற்செய்தி கொண்டு இருந்தனர். “அதெல்லாம் சீக்ரெட். எங்க அண்ணாவா எப்ப வெளியில சொல்லணும்னு நினைக்கிறாரோ, அப்ப தான் அவரு சொல்லுவாரு. ப்ளீஸ் அதுவரைக்கும் என்கிட்ட அத பத்தி கேட்டு என்ன டிஸ்டர்ப்ப் பண்ணாதீங்க.” என்று அனைவரிடமும் ஒரே மாதிரியான பதிலை சொல்லி சொல்லி சலித்து போய் இருந்தான் விஷ்ணு.
அந்த பெண்டென்ட்டை வைத்து தன்னை யாரும் அடையாளம் கண்டு விட கூடாது என்று நினைத்த ராகவி, இன்று ஒரு காலர் வைத்த குர்தா அணிந்து வத்து இருந்தாள். இருப்பினும் அவள் இங்கே நடன ஆசிரியராக வேலை பார்ப்பதால், அவள் டான்ஸ் ஆடும் போது அந்த செயின் வெளியே வந்து யாராவது பார்த்துவிட்டால் என்ன செய்வது என்ற பயத்துடனே அவள் சுற்றிக் கொண்டு இருந்தாள்.
பிரின்சிபலின் அறையின் அருகே சென்று கொண்டு இருந்த விஷ்ணுவை தடுத்து நிறுத்திய சாரதா, “சார் நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்.” என்றாள். சாரதா சொன்னதைக் கேட்டு கடுப்பான விஷ்ணு, “என்ன மேடம் நீங்களும் எங்க அண்ணாவோட ஃபியூச்சர் வைஃப் யாருன்னு என்ன கேட்க போறீங்களா…??? ப்ளீஸ் மேடம் நீங்க கேட்டாலும் என்னால அத வெளியில சொல்ல முடியாது.” என்று சலிப்பான குரலில் சொன்னான்.
சாரதா: “இல்ல இல்ல சார் இது வேற விஷயம்.” என்று அவசரமான குரலில் சொன்னாள்.
விஷ்ணு: “அப்ப அத வேற யாரையாவது கேட்டுர போறாங்க. சரி வாங்க உங்க ரூம்ல போய் பேசலாம்.” என்றவன் சாரதாவின் அறைக்குள்ளே வந்தான்.
உள்ளே வந்த சாரதா தன்னுடைய சீட்டில் அமர அவளுக்கு முன்னே இருந்த சேரில் அமர்ந்த விஷ்ணு, “வாட் ஹப்பெண்ட் மேம்…??? ஏதாவது ப்ராப்ளமா..???” என்று கேட்டான்.
சாரதா: “ப்ராப்ளம் எல்லாம் எதுவும் இல்ல சார். உங்க கிட்ட பர்சனலா ஒரு விஷயம் கேக்கணும். அத தான் எப்படி கேட்கிறதுன்னு எனக்கு தெரியல.” என்று தயங்கி தயங்கி சொன்னாள்.
விஷ்ணு: “பரவால்ல மேம். எதுவா இருந்தாலும் சொல்லுங்க என்னால முடியும்ன்ன, அத கண்டிப்பா பண்றேன்.” என்று உறுதியான குரலில் சொன்னான்.
சாரதா: “எனக்கு ஒரு பையன் இருக்கான் சார். அவன் நேம் சந்தோஷ். சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிச்சு இருக்கான். காலேஜ் டாப்பர் சார் அவன்… கோல்ட் மெடலிஸ்ட். அவனும் நிறைய இன்டர்வியூக்கு போயிட்டு வந்துட்டான். ஆனாலும் அவன் எதிர்பார்க்கிற மாதிரி அவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கல. உங்க கம்பெனியில ஏதாவது நல்ல ஜாப் இருந்துச்சுன்னா, அவனுக்கு கொஞ்சம் ரெஃபர் பண்ணுங்க சார்.” என்று தாழ்மையான குரலில் சிறு தயக்கத்துடன் கேட்டாள்.
விஷ்ணு: “இத கேக்குறதுக்கு எதுக்கு மேம் இவ்ளோ தயங்குறீங்க..?? ஆல்ரெடி கம்ப்யூட்டர் எக்ஸ்போர்ட்ஸ் நிறைய பேர் வேணும்னு அண்ணா கூட வீட்ல பேசிட்டு தான் இருந்தாங்க. எப்படியும் யாரோ ஒருத்தருக்கு நாங்க வேலை குடுக்க தானே போறோம். அது ஏன் நம்ம சந்தோஷா இருக்க கூடாது…??? நான் விஷ்வா அண்ணாவோட மேனேஜர் சிவாவோட நம்பர உங்களுக்கு whatsapp பண்றேன்.
நான் அவர்கிட்டயும் ஒரு வார்த்த கால் பண்ணி சொல்லிடுறேன். நீங்க உங்க பையன ரெஸ்யூம் ஐ எடுத்துக்கிட்டு டைரக்டா ஆபீஸ்க்கு போக சொல்லுங்க. மத்தது எல்லாத்தையும் சிவா பாத்துப்பாரு. சந்தோஷுக்கு இருக்கிற குவாலிபிகேஷன் -க்கு கண்டிப்பா அவனுக்கு ஜாப் கிடைக்கும். யூ டோன்ட் வரி.” என்று நம்பிக்கையாக சொன்னான்.
விஷ்ணு சொன்னதைக் மகிழ்ந்த சாரதா அவனுக்கு நன்றி சொல்ல, “இட்ஸ் ஓகே மேம்.” என்று சொன்ன விஷ்ணு சாரதாவின் அறையில் இருந்து வெளியே வந்து சிவாவிற்கு கால் செய்து சந்தோஷை பற்றி அவனிடம் சொன்னான். “ஓகே விஷ்ணு, அவன் வரட்டும் நான் பாத்துக்குறேன்.” என்று சொல்லிவிட்டு அந்த காலை கட் செய்த சிவா தன்னுடைய மொபைல் போனையே விரித்து பார்த்துக் கொண்டு இருந்தான். அவனுடைய மனம் முழுவதும் திவ்யாவை பற்றிய சிந்தனைகள் தான் ஓடி கொண்டு இந்தது.
திவ்யா இங்கு இருந்து அவளுடைய சொந்த ஊருக்கு கிளம்பி போனாலும் எப்படியும், தன்னுடைய காதலை அவளிடம் மொபைல் போனின் வழியாக ஒரு கால் செய்தாவது சொல்லி விடலாம் என்று நினைத்த சிவா; நேற்றில் இருந்து அவளுக்கு கால் செய்ய முயற்சித்துக் கொண்டு இருக்கிறான். முதலில் திவ்யாவின் போன் நெட்வொர்க் கவரேஜ் ஏரியாவிற்கு வெளியே இருக்கிறது என்று வர, பின் சில மணி நேரங்களில் அது ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டது.
அதனால் இப்போது திவ்யா எங்கே இருக்கிறாள்..?? என்ன செய்து கொண்டிருக்கிறாள்..??? என்று சிவாவால் அறிய முடியவில்லை. எதுவும் தன்னுடைய கையை மீறி நடந்து விடாது என்ற தைரியத்தில் சிவா அவளை அப்படியே விட்டுவிட்டு வந்துு விட்டான். ஆனால் இப்போது அவள் இங்கு இருந்து கிளம்பி முழுதாக ஒரு நாள் முடிந்து இருந்தும், அவளை தன்னால் தொடர்பு கொள்ள முடியாதுதால், தான் ஏதேனும் தவறு செய்து விட்டோமோ என்று நினைத்து வேதனையில் இருந்தான் சிவா. 💔
“அவ என் கிட்ட பேசும்போது நாளைக்கு என்கேஜ்மென்ட் -ன்னு வேற சொன்னாளே…!!! அப்ப இந்நேரம் அவளுக்கும் அந்த பன்னாடைக்கும் என்கேஜ்மென்ட் ஆகி இருக்குமா…??? நான் வேற அவகிட்ட எதுவுமே பதில் சொல்லாம கிளம்பி வந்துடனே…!!! ஒரு வேளை அவளுக்கு அவ மேல எனக்கு எந்த ஃபீலிங்ஸ் இல்லாததுனால தான் நான் கிளம்பிட்டேன்னு தோனி இருந்துச்சுன்னா என்ன பண்றது..??
ஐயோ, சிவா தப்பு பண்ணிட்டியே டா…!!! அவ என்ன மைன்ட் செட்ல இருக்கான்னு தெரியலயே…??? அந்த முட்ட கண்ணி வேற சரியான கோவக்காரி. நம்ம மேல இருக்கிற கோவத்துல அந்த பன்னாடைய கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு ஓகே சொல்லிட்டானா என்ன பண்றது..???” என்று பலவாறாக யோசித்து குழம்பியவன் பின் ஆராதனாவிற்கு அவளைப் பற்றி ஏதேனும் தெரியுமா என்று அவளிடம் விசாரித்து பார்க்கலாம் என்று நினைத்து, அவளுக்கு கால் செய்து திவ்யாவை பற்றி கேட்டான்.
ஆராதனா: “நானே அவளை பத்தி உன்கிட்ட பேசலாம்னு தான் சிவா இருந்தேன். நீ எதுக்கு சிவா அவள இப்படி கஷ்டப்படுத்துற..?? ஒரு பொண்ணு அவளா அவளோட லவ்வ ஒரு பையன் கிட்ட சொன்னா, உங்களுக்கு எல்லாம் என்ன அவ ரொம்ப சீப்பா தெரியுறாளா..??
அவள மதிச்சு நீ ஒரு பதில் கூட சொல்லாம கிளம்பி வந்துடுவியா..??? எனக்கு புரியுது என்னோட பிராப்ளம் -காக தான் நீ அங்க இருந்து கிளம்பி வந்து இருக்கேன்னு. ஆனா அவளும் நமக்கு இம்பார்ட்டண்ட் தானே..!!! இது லைஃப் மேட்டர். பிரவீன் வந்து இங்க பிரச்சனை பண்றத விட, நீ அப்போ திவ்யாவுக்கு தான் இம்பார்ட்டன்ஸ் குடுத்து இருக்கணும். என்ன தான் இருந்தாலும், அவன் என்னோட அண்ணன் என்னால அவனை சமாளிக்க முடியாதா..???
இப்போ திவ்யா கிளம்பி போயிட்டாளே நீ எப்படி அவளை இங்க கூட்டிட்டு வர போற..??? பிரவீன் இங்க இருந்து போன கொஞ்ச நேரத்துலயே அவ எனக்கு கால் பண்ணா. பஸ்ல அவளோட சொந்த ஊருக்கு போயிட்டு இருக்கேன்னு சொன்னா. ரொம்ப அழுதுகிட்டே பேசினா. நீ அப்படியே அவளை விட்டுட்டு வந்தத அவளால தாங்கிக்கவே முடியல. நானும் அவகிட்ட பேசி, அவளை சமாதானம் பண்ண ட்ரை பண்ணேன். ஆனா, அவ அவ்ளோ தான் எல்லாம் முடிஞ்சிருச்சு ஆராதனான்னு சொல்லிட்டு கால அப்ப கட் பண்ணவ தான். அதுக்கப்புறம் என்னால அவளை காண்டாக்ட் பண்ணவே முடியல.
நீ என்ன பண்ணுவ, ஏது பண்ணுவன்னு -லாம் எனக்கு தெரியாது சிவா. அவளுக்கு விருப்பம் இல்லாத இந்த கல்யாணம் நடக்க கூடாது. அவ உன் மேல ரொம்ப கோவமா தான் இங்க இருந்து கிளம்பி போய் இருக்கா. நீதான் அந்த கல்யாணத்தை நிறுத்தி எப்படியாவது அவளை பேசி சமாதானப்படுத்தி திரும்ப இங்க கூட்டிட்டு வரணும். உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளு. நானும், ஹரியும், பண்றோம்.” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
ஏற்கனவே மனம் உடைந்து போயிருந்த சிவாவிற்கு இப்போது ஆராதனா பேசியதை கேட்டவுடன் இன்னும் மன உளைச்சல் அதிகமாயிற்று. அதனால் சோகமான குரலில், “கண்டிப்பா நான் அவளை இங்கு கூட்டிட்டு வருவேன் ஆராதனா. அவ என்னோட திவ்யா. நான் அவள வேற யாருக்கும் விட்டுக் குடுக்க மாட்டேன். நீ திவ்யாவோட வீட்டோட அட்ரஸ், மத்த டீடெயில்ஸ் ஏதாவது உனக்கு தெரிஞ்சதுன்னா அத மட்டும் எனக்கு சென்ட் பண்ணு. எனக்கு அது போதும்.” என்று சொல்லிவிட்டு அந்த கால் ஐ கட் செய்தான்.
நாராயணன் பேலஸில்…
ராகவியின் பெற்றோர்கள் அவர்களுடைய வீட்டிற்கு சென்றவுடன், திருமணத்திற்கு பின் ராகவி விஷ்வாவின் அறையில் தானே தங்க வேண்டும் என்று நினைத்த செண்பகம், விஷ்வாவிடம் இது பற்றி பேச வேண்டும் என்று நினைத்தவள், அவனுக்கு கால் செய்தாள். விஷ்வா தங்களுடைய புது கம்பெனி தொடர்பான விஷயங்களில் பிசியாக இருக்க, அவனுக்கு வந்த காலை திவ்யாவின் போட்டோவை தன்னுடைய மொபைல் போனில் பார்த்து பீல் செய்து கொண்டு இருந்த சிவா தான் அட்டென்ட் செய்தான்.
சிவா: “சொல்லுங்க மேடம்.. ஏதாவது எமர்ஜென்சியா…?? சார் கொஞ்சம் பிஸியா இருக்காரு. நான் சார் கிட்ட போய் போன குடுக்கட்டுமா..???” என்று அவசரமான குரலில் கேட்டான்.
செண்பகம்: எமர்ஜென்சி எல்லாம் எதுவும் இல்ல டா. எதுக்கு இப்ப இப்படி பதற்ற..??? எனக்கு விஷ்வா ரூமோட கீ வேணும். நீ ஃப்ரீயா இருந்தா, கொண்டுட்டு வா. அத கேக்குறதுக்கு தான் கால் பண்ணேன்.
சிவா: ஓகே மேடம். பட் சார் எதுக்குன்னு கேட்பாரே..??
செண்பகம்: இன்னைக்கு தான் ஜோசியரை வரவச்சு விஷ்வா, ராகவி, கல்யாணத்துக்கும் நிச்சயதார்த்தத்திற்கும் நாள் குறிச்சிருக்கேன். வர 22 ஆம் தேதி நிச்சயதார்த்தம், 24 ஆம் தேதி கல்யாணம். இத பத்தி அவன் கிட்ட சொல்லிரு.
அவங்களுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம் ராகவி, விஷ்வா ரூம்ல தானே தங்க போற. அதனால அங்க இருக்கிற ஜான்வியோட எல்லா திங்ஸையும் நான் வேற ரூமுக்கு ஷிப்ட் பண்ணி அத பர்மனன்ட்டா க்ளோஸ் பண்ணலாம்னு இருக்கேன். விஷ்வா டெய்லியும் அத பாத்து பீல் பண்ணிக்கிட்டே இருந்தா, எப்பயும் ராகவியோட சேர்ந்து வாழ மாட்டான். சோ அவன்கிட்ட எப்படியாவது பேசி, அந்த ரூம் கீய வாங்கிட்டு வந்துரு.
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம், விஷ்வா ஓட கல்யாண டேட் ஐ அஃபீஸியல்லா அன்னவுன்ஸ் பண்ணிடுங்க. ஏற்கனவே ஹரி வேற அவனுக்கு ஒரு காதலி இருக்கான்னு கண்ட கதை எல்லாம் சொல்லி வச்சிருக்கான். அந்த ஆராதனா தான் அவனோட லவ்வர்னு அனௌன்ஸ் பண்ணிடுவானோன்னு என்னால பயந்துக்கிட்ட எல்லாம் இருக்க முடியாது.
நான் உனக்கு நம்ம தர்ஷினியோட போட்டோவ அனுப்பி விடுறேன். அவ தான் ஹரியோட லவ்வர்னு சொல்லி அதையும் அனௌன்ஸ் பண்ணிருங்க. விஷ்வா கல்யாணம் முடிஞ்ச உடனே அடுத்து வர நல்ல முகூர்த்தத்தில அவங்களுக்கும் கல்யாணம் நடக்கணும். இத விஷ்வா கிட்டயும் ஹரி கிட்டையும் தெளிவா சொல்லிரு. இப்ப எல்லாம் நான் இந்த விஷயத்தை பத்தி பேசிட்டா என்ன பண்றதுன்னு நான் பேச வந்தாலே அவனுங்க ரெண்டு பேரும் என்கிட்ட பேசாம என்ன அவாய்ட் பண்ணிகிட்டே இருக்காங்க.
அதனால என்னோட சார்பா நீ தான் அவங்க கிட்ட பேசி, அவங்கள சம்மதிக்க வைக்கணும். சீக்கிரம் அவங்க கிட்ட பேசிட்டு விஷ்வா கிட்ட கேட்டு சாவிய வாங்கிட்டு இங்க வா. கல்யாண வேலை நிறைய இருக்கும்” என்று சொல்லிவிட்டு அந்த கால் ஐ கட் செய்தாள்.
– நேசம் தொடரும் ❤️
என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)