அத்தியாயம் 149: திருமண தேதி (பார்ட் 2)
விஷ்வா: யா ஐ ரிமெம்பர் ஹிம். ஹி இஸ் சச் எ நைஸ் கை. நீ இந்தியா வரும்போது அவரையும் இங்க கூட்டிட்டு வந்துரு. அவர் அந்த கம்பெனியை இங்க இருந்துபாத்துக்கட்டும். நீ இங்கே கம்ப்யூட்டர் எக்ஸ்போர்ட்டா ஜாயின் பண்ணிடு.
க்ரிஷா: “ஓகே ப்ரோ, நானே ஆல்ரெடி இத பத்தி உன்கிட்ட்ட பேசலாம்னு இருந்தேன். பிராங்க் -க்கு இந்தியான்னா ரொம்ப பிடிக்கும். அவனே உங்ககிட்ட ஏதாவது இந்தியாவுல ஜாப் வேக்கன்சி இருக்கான்னு என் கிட்ட கேட்டு சொல்ல சொன்னான். அவனுக்கு இந்தியா வந்து இங்க செட்டில் ஆகி, நாம ஊர் பொண்ண கல்யாணம் பண்ணனுமாம்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். 😁 😁 😁
விஷ்வா: “ஓகே மா. அதுக்கு என்ன… அவரு இங்க வரட்டும். நாராயணன் பேலஸ் -லையே தங்கிக்கட்டும். அவர் கேட்கிற சேலரிய போட்டு குடுத்திடலாம்.” என்று சொல்ல சிறிது நேரம் விஷ்வாவும், க்ரிஷாவும், மகிழ்ச்சியாக பேசிக் கொண்டு இருந்தனர்.
இதற்கிடையில் விஷ்வா தனக்கு சொன்ன வேலைகளை செய்து முடிப்பதற்காக சிவா வெளியே சென்று இருந்தான். அனைத்தும் அவர்கள் எதிர்பார்த்தது போலவே சுமூகமாக சென்று கொண்டு இருந்தது.
சில நிமிடங்களுக்கு பின்..
ஒரு செய்தி தொலைக்காட்சியில்…
“ஒரு முக்கிய செய்தி நமக்கு கிடைத்திருக்கிறது. அதை நாம் அண்மை செய்கிறாக இப்போது பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரபல முன்னாள் தொழிலதிபர் கிருஷ்ணன் சக்ரவர்த்தியின் மகள் க்ரிஷா, google நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பில் வேலை செய்து கொண்டு இருப்பது நாம் அறிந்ததே.
இப்போது அவர் மீண்டும் இந்தியாவிற்கு வரப் போவதாகவும், நாராயணன் குரூப்ஸ் உடன் இணைந்து பணியாற்ற போவதாவும், க்ரிஷாவால் தொடங்கப்பட்ட தி சைனிங் ஸ்டார் என்ற வெளிநாட்டு நிறுவனத்தை அவர் நாராயணன் குரூப்ஸ் உடன் டைய் யப் செய்து விட்டதாகவும், இப்போது பிரசாத் குரூப்ஸ் இன் பெரும்பாலான பங்குகள் க்ரிஷாவின் தி சைனிங் ஸ்டார் கம்பெனி மூலமாக வாங்கப்பட்டு இப்போது நாராயணன் குரூப்ஸ் உடன் இணைக்கப்பட்டு விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
கூடுதல் தகவலாக, இனி க்ரிஷா நாராயணன் குரூப்ஸ் இன் அதிகாரப்பூர்வமான கம்ப்யூட்டர் எக்ஸ்போர்ட் ஆகவும், அவர் தொடங்கிய இந்த கம்பெனியை இந்தியாவில் இருந்து அவருடைய நண்பர் பிராங்கிளின் என்பவர் சி. இ. ஓ. வாக இருந்து கவனித்துக் கொள்ளப் போவதாகவும் நமக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. இது குறித்து நாம் நம்முடைய நிபுணர் குழுவிடம் விசாரித்தபோது, இது நாராயணன் குரூப்ஸ் இன் அசுர வளர்ச்சிக்கான தொடக்கமாக இருக்கும் என்று அவர்கள் கருத்து தெரிவித்து இருபப்தாகவும், அவர்களுடைய இந்த திடீர் செயல் பங்குச்சந்தைகளில் பெரிய மாற்றங்களை உண்டாக்கும் எனவும், இது பிரசாத் குரூப்சிற்கு பெரிய பின்னடைவாகவும் இருக்கலாம் என்றும் கருத்து தெரிவித்திருப்பதாக ஒரு பெண் செய்தி வாசிப்பாளர் வாசித்துக் கொண்டு இருந்தார்.
அந்த செய்தியை தன்னுடைய அலுவலகத்தில் இருந்து பார்த்த பிரவீன் தன்னுடைய டேபிளிலில் இருந்த அனைத்தையும் வெறிப்பிடித்தவனை போல் கீழே தள்ளிவிட்டு விடடு, “டேய் விஷ்வா நான் உன்ன சும்மாவே விட மாட்டேன் டா. உன் சாவு என் கையில தான். எனக்கே தெரியாம ப்ளான் பண்ணி என்னோட ஷேர்ச வாங்கிட்டல்ல நீ…!!! இதுக்கு நீ அனுபவிப்ப டா.” என்று பைத்தியம் பிடித்தவனை போல சத்தமாக கத்திக் கொண்டு இருந்தான்.
நாராயணன் பேலஸில்…
இன்று நல்ல நாளாக இருப்பதால் இன்றே ராகவிக்கும், விஷ்வாவிற்கும், நடக்கவிருக்கும் திருமணத்திற்கும் நிச்சயதார்த்தத்திற்கும் நாள் குறித்து விடலாம் என்று நினைத்த செண்பகம் தங்களுடைய குடும்ப ஜோசியரை வீட்டிற்கு வர சொல்லி இருந்தவள், ராகவியின் பெற்றோர்களையும் அந்த சமயத்தில் தங்களுடைய வீட்டிற்கு வரும்படி அழைத்து இருந்தாள்.
செண்பகம் தங்களிடம் சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அங்கு செல்ல வேண்டும் என்று நினைத்த ராகவியின் பெற்றோர்கள் அவசர அவசரமாக கிளம்பி நாராயணன் பேலஸிற்கு வந்தனர். பல தளங்கள் கொண்ட அந்த நாராயணன் பலசை வெளியில் இருந்து இதுவரை பார்த்து பிரம்மித்து இருந்தவர்கள் உள்ளே வந்து பார்த்தவுடன், மேலும் அசந்து போய் விட்டனர். நாராயணனின் இறப்பிற்கு பின்பு தங்களுடைய வீட்டிற்கு முன்னேயும், பின்னேயும், இருந்த அனைத்து இடங்களையும் வாங்கி தன்னுடைய வசதிக்கு ஏற்ப பார்த்து பார்த்து இதை கட்டியது விஷ்வா தான்.
தரைத்தளத்தில் கிச்சனும், லிவிங் ரூம் -ம், பூஜை அறையும், அவர்களுடைய முக்கியமான கெஸ்ட்ஸ் தங்குவதற்கான அறைகளும் இருந்தது. முதல் தளத்தில் விஷ்வா, செண்பகம், மற்றும் சித்தார்த்தின் அறையும், இரண்டாவது தளத்தில் ஹரி, விஷ்ணு, ஆராதனா மற்றும் பிராத்தனாவின் அறையும், மூன்றாவது, மற்றும் நான்காவது, தளத்தில் நாராயணன் குடும்பத்தினர்கள் தங்குவதற்கும் அவர்களுக்கு முக்கியமானவர்கள் தங்குவதற்கான அறைகளும் இருந்தது. ஆறாவது தளத்தில் சிவாவும் அவனுடைய குடும்பத்தினரும் தங்கி இருந்தனர். அதற்கு மேலே இருக்கும் தலங்களில் ஸ்டடி ரூம், மினி தியேட்டர், ஸ்விம்மிங் பூல், மினி பார்ட்டி ஹால், ப்ளே கிரவுண்ட், கேமிங் ரூம், ஷோகேஸ் ரூம், ஜிம் என அனைத்தும் இருந்தது. அந்த அனைத்து இடங்களுக்கும் தினமும் படியில் ஏறி இறங்குவது சாத்தியமற்றது என்பதால் அனைத்து இடங்களுக்கும் சென்று வருவதற்காக லிப்ட் வசதி செய்யப்பட்டு இருந்தது.
தங்களுடைய வீட்டிற்கு முதன் முறையாக வந்திருக்கும் ராகவியின் பெற்றோர்களை நன்கு உபசரித்த செண்பகம் தன்னால் அவர்களுடன் இருந்து தங்களுடைய வீட்டை சுற்றி காமிக்க முடியாது என்பதால் தர்ஷினியை அழைத்து, தன் சார்பாக அவர்களுக்கு தங்களுடைய வீட்டை சுற்றி காமிக்க சொன்னாள். தங்களுடைய மகள் வாழப்போகும் வீடு எப்படி தான் இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்ற ஆசை அவர்களுக்கும் இருந்ததால், தர்ஷினியுடன் அமைதியாக சென்றவர்கள் அவள் காட்டிய ஒவ்வொரு இடத்தையும் ஆச்சரியமாகவும், மகிழ்ச்சியுடனும், பார்த்து ரசித்தனர். 😍
அனைத்து அறைகளையும் திறந்து காட்டிய தர்ஷினி விஷ்வாவின் அறையை மட்டும் திறந்து காட்டவில்லை. அதனால் குழப்பத்துடன் அவளைப் பார்த்த ரேவதி, “ஏன் மா முழு வீட்டையும் பாத்தாச்சு. எங்க மாப்பிள்ளையும், பொண்ணும், எங்க வாழ போறான்னு நாங்க பாக்க வேண்டாமா..??? அவரோட ரூமை மட்டும் ஏன் நீ திறந்து காட்டவே இல்லை..???” எனது தன் மனதில் இருந்தவற்றை அப்படியே கேட்டு விட்டாள்.
தர்ஷினி: “சாரி மா. நான் காமிக்க கூடாதுன்னு எல்லாம் நெனச்சு காமிக்காம இல்ல. விஷ்வா மாமா எங்க வெளியில போனாலும், அவரோட ரூம்ம க்ளோஸ் பண்ணி அவர் கூடவே சாவியை எடுத்துட்டு போயிருவாரு. இந்த ரூம் கூட அவரே தான் கிளீன் பண்ணிப்பாரு. அவருக்கு அவரைத் தவிர இந்த ரூம்குள்ள வேற யாரும் வர்றது பிடிக்காது.
அவர் இங்கே இருக்கும்போது அவரை பாக்குறதுக்காக வேணா போலாம் அப்போ எதுவும் சொல்ல மாட்டாரு. இத்தனை வருஷமா நான் இங்கே வரேன். நானே ஒரு தடவ தான் அந்த ரூம்குள்ள போயிருக்கேன். அதுவும் சித்தார்த் பொறந்தப்ப அவனை பாக்குறதுக்காகக்காக போனேன்.” என்று சிறு தயக்கத்துடன் சொன்னாள்.
ரேவதி: “ஓ அப்படியா மா.. பரவால்ல. அப்போ நம்ம கீழ போலாம்.” என்று சொல்ல சுதாகரும் தர்ஷினியும் அவளுடன் கீழே வந்தனர்.
பின் விஷ்வாவின் ஜாதகத்தையும், ராகவியின் ஜாதகத்தையும், ஒப்பிட்டு பார்த்து அவர்களுடைய குடும்ப ஜோசியர்; “இவங்க ரெண்டு பேருக்குமே ஜாதக பொருத்தம் ரொம்ப அமோகமா இருக்கு மா. இவங்க ரெண்டு பேருமே ஒருத்தருக்காக ஒருத்தர் பிறந்தவங்கன்னு இவங்க ஜாதகம் சொல்லுது. பக்கத்திலேயே இருக்கிற மாதிரி இவங்க நட்சத்திரத்துக்கு ஏத்த ஒரு நல்ல முகூர்த்தத்தை பாத்து சொல்லட்டுமா மா…???” என்று அவர் செண்பகத்திடம் கேட்க, “ஆமா ஜோசியரே…!!! நாங்க கல்யாணத்தை சீக்கிரமா பண்ணலாம்னு தான் இருக்கோம். அதனால அடுத்த நல்ல முகூர்த்தம் எப்ப இருக்குன்னு பார்த்து சொல்லுங்க. அப்ப நிச்சயத்தை வச்சுக்கிட்டு அதுக்கு அடுத்து வரும் முகூர்த்தத்தில் உடனே கல்யாணத்தை வைத்துவிடலாம்.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள். 😁 😁 😁
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)