Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 147

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 147

by Thenaruvi Tamil Novels
73 views

அத்தியாயம் 147: குடிபோதையில் சி. இ. ஓ. (பார்ட் 2)

ஏற்கனவே வெட்கத்தில் இருந்த ராகவிக்கு ஷாலினி தன்னை புகழ்ந்து கொண்டே இருப்பது இன்னும் வெட்கத்தை வரவழைத்தது. ☺️ அதனால், “போதும் போதும் சும்மா இரு டி. நீயும் அதே வீட்டுக்கு தானே மருமகளா வரப்போற..??? உனக்கும், விஷ்ணுவுக்கும், மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் உனக்கும் இப்படி தான் நடக்கும். நான் அப்ப பாத்துக்குறேன் டி உன்னை. அப்ப நானும் உன்ன இப்படி தான் கலாய்ச்சே சாவடிப்பேன் பாத்துக்கோ.” என்று அவளும் சிரித்து கொண்டே சொல்ல ராகவியும், ஷாலினியும், வெகு நேரம் தூங்காமல் இருவரும் பேசி சிரித்து கொண்டு இருந்தனர். 😂 😂 😂 அதனால் தன்னுடைய வீட்டிற்கு செல்லாத ஷாலினி, ராகவி உடனே அவளுடைய வீட்டிலேயே இரவு தங்கி விட்டாள். 

பிரவீனின் வீட்டில்…

தான் ஒன்று நினைக்க, தன்னுடைய திட்டம் வேறு மாதிரியாக நடந்து இறுதியில் விஷ்வா மற்றும் ஹரியின் திருமணத்தை பற்றி அனைவரும் பேசி கொண்டு இருப்பதால் கடுப்பான பிரவீன், தன்னுடைய வீட்டில் இருந்த பார் செட்டப் இல் அமர்ந்து குடித்துக் கொண்டு இருந்தான். அவனுடைய கிரிமனலான மூளைக்குள் எப்படியாவது விஷ்வாவின் திருமணத்தை நிறுத்த வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே ஓடி கொண்டு இருந்தது. அதனால் அந்த போதையிலும் தன்னுடைய ஆட்களுக்கு கால் செய்தவன் விஷ்வா திருமணம் செய்து கொள்ள போகும் பெண் யார் என்று கண்டு பிடிக்கும் படி அவர்களுக்கு உத்தரவிட்டான். 

பின் தன் கையில் ஒரு கிளாஸ் உடன் குடிபோதையில் தள்ளாடிக் கொண்டு இருந்த பிரவீன், “டேய் விஷ்வா, நான் உன்ன சும்மா விடமாட்டேன் டா. நீ அப்படியே கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழலாம்னு கனவு காணாத. எப்படியாவது நான் உன் கல்யாணத்தை நிறுத்துவேன். அதுக்கு முன்னாடி நான் நச்சுனு ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்றேன்.” என்று சொல்லி புலம்பிக் கொண்டு இருந்தான். 

அடுத்த நாள் காலை… 

பிரவீனின் மனதில் ஏற்கனவே அவன் யாரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டான். அதனால் தன்னுடைய அம்மாவிடம் அந்த பெண்ணின் புகைப்படத்தை காட்டியவன் அவளுடைய குடும்பத்தை பற்றி சொல்லி, இன்று தன்னுடன் தன்னுடைய அம்மாவை பெண் பார்க்க வருமாறு அழைத்தான். “இன்னைக்கு நாள் நல்லா தான் பா இருக்கு உடனே போய் பொண்ணு பாத்துட்டு வந்துடலாம்.” என்று மகிழ்ச்சியாக அவனிடம் சொன்ன அவனுடைய அம்மா தன்னுடைய மனதிற்குள், திருமணத்திற்கு பின்பாவது அவனுக்கு நல்ல புத்தியை கொடுத்து நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடு கடவுளே என்று தன்னுடைய மனதிற்குள் பிரார்த்தித்தாள்.

எந்த முன் அறிவிப்பும் இன்றி கையில் சில தட்டுகளுடனும், இன்னும் சில பரிசு பொருட்களுடனும், லக்ஷனாவின் வீட்டிற்கு வந்தான் பிரவீன். இதை முற்றிலும் எதிர்பார்த்திடாத லக்ஷனாவின் தாய் அதிர்ச்சி அடைந்தாள். 🙄 விஷ்வா உடனான லக்ஷனாவின் திருமணம் நின்று போனதை நினைத்து ஏற்கனவே வருத்தத்தில் இருந்த அவளுடைய அம்மாவிற்கு இப்போது ஒரு பெரிய இடத்தில் இருந்து தன்னுடைய பெண்ணை கேட்டு வந்திருப்பதனால் சந்தோஷப்படுவதா, இல்லை இவன் விஷ்வா அளவிற்கு நல்லவன் இல்லையே இவனுக்கு எப்படி தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து தருவது என்று வேதனைப்படுவதா, என்ற குழப்பத்தில் இருந்தாள். 

தன் முன் இருக்கும் பிரவீனை அமைதியாகவே பார்த்துக் கொண்டு இருந்தாள் லக்ஷனாவின் அம்மா. அவளுடைய தயக்கத்தை புரிந்து கொண்ட பிரவீன், “இங்கே பாருங்க ஆன்ட்டி நீங்க என்ன யோசிக்கிறீங்கன்னு எனக்கு புரியுது. என்னோட பிசினஸ் -ஏ லாஸ் -ல போயிட்டு இருக்கும்போது, ஏற்கனவே உங்க பிசினஸ் லாஸ் -ல இருக்கு என்ன கல்யாணம் பண்ணா, உங்களுக்கு என்ன பிராஃபிட்னு யோசிக்காதீங்க.

என்னோட டோடல் பிசினஸும் லாஸ் ஆகி, என்னோட எல்லா கம்பெனியையும் நான் இழுத்து மூடுனா கூட; இன்னும் பத்து பதினைந்து தலை முறைக்கு உட்கார்ந்து சாப்பிடுற அளவுக்கு என்கிட்ட ப்ராப்பர்ட்டீஸ் இருக்கு. என்ன ஆனாலும் அவ்வளவு ஈஸியா எல்லாம் இந்த பிரவீன் ஒன்னும் இல்லாம போயிட மாட்டான். என்னோட சொத்து மதிப்பை பத்தி நான் சொல்லி தான் நீங்க தெரிஞ்சுக்கணும்னு அவசியம் இல்ல. இப்போ இருக்கிற பிரச்சனை எல்லாத்தையும் நான் சீக்கிரமே சரி பண்ணிடுவேன். சோ, நீங்க என்ன நம்பி உங்க பொண்ண கல்யாணம் பண்ணிகுடுங்க. நான் அவளை ராணி மாதிரி நல்லா பாத்துப்பேன். உங்க கம்பெனியை நான் இப்பவே பிரசாத் குரூப்ஸ் கூட டைப் பண்றேன். 

அது மட்டும் இல்லாம என்னோட வெட்டிங் கிஃப்டா என்னோட ஃபியூச்சர் வைஃப்க்கு பெங்களூர்ல இருக்குற என்னோட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்ச கிஃப்ட்டா குடுக்குறேன். ஆல்ரெடி நான் இதை உங்க பொண்ணு பேருல எழுதிட்டேன். ஏன்னா நான் கேட்டு நீங்க எனக்கு பொண்ணு தராம போயிடுவீங்களா என்ன..???” என்று ஒரு  ஒரு வஞ்சகமான புன்னகையுடன் கேட்டான். 😁 😁 😁

அவனுடைய கேள்வியில் இருந்து நீ எனக்கு நான் கேட்டு பொண்ணு தராம போயிடுவியா…?? என்று பிரவீன் சொல்ல வருவதை புரிந்து கொண்ட லக்ஷனாவின் அம்மா வெளிப்படையாக இவன் தன்னை இப்படி மிரட்டும் போது தான் என்ன செய்யக்கூடும் என்று நினைத்தவள் தன்னுடைய மகளை இப்போதும் ஒரு வார்த்தை கூட கேட்காமல், இந்த சம்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டவள் பிரவீன் கொண்டு வந்து கொடுத்த சொத்து பத்திரத்தையும்,  மற்ற தங்க, வைர ஆபரணங்களையும் பெற்றுக் கொண்டாள். 

பிரவீனின் அம்மாவிற்கு அவனுடைய இது போன்ற செய்கைகள் சுத்தமாக பிடிக்கவில்லை என்றாலும், இப்படியாவது அவன் ஒரு திருமணத்தை செய்து கொண்டு விட்டால் பிற்காலத்தில் அவனுக்கு மனைவியாக வரப்போகிறவள் அவளுடைய அன்பால் இவனை திருத்தி விடுவாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அதனால் மகிழ்ச்சியுடன், “எங்க சம்பந்தி லக்ஷனா வீட்ல இல்லையா..??”  என்று அன்பாக கேட்டாள். 

லக்ஷனாவின் அம்மா: இல்லமா அவ பிரெண்ட்ஸ் கூட வெளியில தியேட்டருக்கு படம் பாக்க இருக்கா. 

பிரவீனின் அம்மா: “ஓ அப்படியா சரிங்கமா. இன்னொரு தடவ வரும்போது நான் இருந்து என் மருமகளை கண்டிப்பா பாத்துட்டு தான் போவேன்.  உங்க பொண்ணு அவ பேருக்கு தகுந்த மாதிரியே ரொம்ப லட்சணமா அழகா  இருக்கா. எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று சொல்ல, 

“நான் என் பொண்ண யாருக்கு பிடிக்கும்னு ஆசைப்பட்டேனோ, அவனுக்கு அவளை பிடிக்கல. இப்ப இவனுக்கு அவளை பிடிக்கவே கூடாதுன்னு நினைக்கிறேன், ஆனா இவன் என் வீட்டுக்குள்ள வந்து உட்கார்ந்துகிட்டு இப்படி பொண்ணு கேட்கும் போது நான் என்ன பண்றது…??” என்று நினைத்துக் கொண்ட லக்ஷனாவின் அம்மா வேறு வழி இன்றி வந்தவர்களை நன்றாக உபசரித்து அனுப்பினாள். 

இரண்டு மணி நேரத்திற்கு பின்…

படம் பார்த்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு வந்த லக்ஷனாவிடம் அவளுடைய அம்மா பிரவீன் உடனான அவளுடைய திருமணம் பற்றி சொல்ல அதைக் கேட்டு கடுப்பான லக்ஷனா, “நீங்க என்ன தான் அம்மா நினைச்சுட்டு இருக்கீங்க..???? வர வர நீங்க பண்றத பாத்தா நான் உங்களுக்கு தான் பொறந்தனான்னு எனக்கு டவுட் வருது. உங்களுக்கு என் மேல கொஞ்சம் கூட பாசமே இல்லையா..?? எதுக்காக என்னோட லைஃப்ல இப்படி விளையாடுறீங்க..??? முதல்ல ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிறவன கல்யாணம் பண்ணிக்க சொன்னீங்க சரி எப்படி இருந்தாலும், அவனுக்கு சொசைட்டில இருக்கிற நல்ல பெயர்னால அதுக்கு ஓகே சொன்னேன். 

இப்ப போயும் போயும் அந்த பிரவீன என்ன கல்யாணம் பண்ணிக்க சொல்றீங்க..?? இதெல்லாம் உங்களுக்கே நியாயமா இருக்கா..?? அவன் சரியான பொம்பள பொறுக்கி. அவனுக்கு இல்லாத பேட் ஹாபிட்னு ஒன்னு இல்லவே இல்ல. இதெல்லாம் நம்ம சர்க்கிள் இல்ல இருக்கிற எல்லாருக்குமே தெரியும். ஏன் நீங்க அதை மறந்துட்டீங்களா..??? என்னால அவனை கல்யாணம் பண்ணிக்க முடியாது மா. ஐ அம் சாரி.” என்று கோபமாக சொன்னாள். 

“இதை விட்டா நமக்கு வேற ஆப்ஷன் இல்ல லக்ஷு. ப்ளீஸ் டிரை டு அக்சப்ட் தி ரியாலிட்டி. அவன் பொண்ணு கேக்குற சாக்குல, வந்து எனக்கு நீங்க அவளை கல்யாணம் பண்ணி கொடுத்து தான் ஆகணும்னு மிரட்டிட்டு போறான். இப்போ நம்ம குடும்பம் அவனை எதிர்க்கிற நிலைமையிலயா இருக்கோம்…??? 

நம்ப இந்த கல்யாணம் வேணாம்னு சொன்னா, அவன் நம்மளை இருக்கிற இடம் தெரியாம அழிச்சிடுவான். உன் ஒருத்திக்காக எல்லாரும் சாகறத என்னால வேடிக்கை பாக்க முடியாது. இந்தக் கல்யாணம் நடக்கும். நடந்தே ஆகணும். இதுக்கு கோ ஆப்பரேட் பண்றது தவிர உனக்கு வேற வழி இல்ல. மெண்டலி இந்த கல்யாணத்துக்கு உன்னை நீதான் பிரிப்பேர் பண்ணிக்கணும். திடீர் திடீர்னு பணக்காரங்க ஆனவங்களே இப்ப எல்லாம் அப்படித்தான் திரியுராங்க. 

அவங்களும் நம்மள மாதிரி பரம்பரை பணக்காரங்க. பணக்காரங்க வீட்டில இதெல்லாம் ரொம்ப சாதாரணம். அவன் எப்படி இருந்தாலும் நீ அவன அட்ஜஸ்ட் பண்ணி இந்த லைஃபை வாழ்ந்து தான் ஆகணும். இங்க பாரு இன்னும் உங்களுக்கு கல்யாணமே ஆகல அதுக்குள்ள அவன் உன் பேர்ல ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்சவே எழுதி வச்சிருக்கான். இன்னைக்கு டேட்ல அதோட மார்க்கெட் வேல்யூ எத்தனை கோடின்னு உனக்கு தெரியுமா…?? மணி மேக்ஸ் மெனி திங்ஸ் லக்ஷனா. பட் வித்தவுட் மணி, யூ காண்ட் டு எனிதிங். மைண்ட் இட்.” என்றவள் அந்த சொத்து பத்திரத்தை அவளுடைய கைகளில் கொடுத்துவிட்டு அங்கு இருந்து சென்று விட்டாள்.

– நேசம் தொடரும் ❤️

என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured