Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 146

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 146

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 146: குடிபோதையில் சி. இ. ஓ. (பார்ட் 1)

அவன் ஆராதனாவை வைத்து போட்ட திட்ட மொக்கையாக முடிந்து விட்டதால், அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தான் பிரவீன். தன்னால் விஷ்வாவை எதுவும் செய்ய முடியவில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஆராதனாவையாவது அந்த வீட்டில் இருந்து வெளியே வர வைத்துவிடலாம் என்று அவன் நினைத்துக் கொண்டு இருக்க; அதுவும் நடக்காததால், தான் உடனே அவனுக்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்று கோபத்தில் தோன்றியது. அதைப் பற்றி தன்னுடைய மேனேஜர் சங்கரிடம் சொல்லி புலம்பி கொண்டு இருந்தான் பிரவீன். 

 சங்கர்: “சார் உங்களுக்கு அந்த வீடியோ ஞாபகம் இருக்கா… அத வச்சு நம்ம ஏதாவது பண்ணலாம்ல்ல..??? நான் அன்னைக்கே ஏதாவது பண்ணலாம்னு சொன்னேன். நீங்க தான் டைம் வரட்டும்னு வெயிட் பண்ணலாம்னு சொன்னீங்க. இப்பவாவது அத யூஸ் பண்ணலாம் சார்.” என்று மொட்டையாக சொன்னான்.

பிரவீன்: அவன் பேசியதை கேட்டு கடுப்பானவன், “எந்த வீடியோ டா…??? எதுவா இருந்தாலும் உனக்கு தெளிவாகவே பேச தெரியாதா…???” என்று எரிச்சலான குரலில் கேட்டான். 😒

சங்கர்: “அதான் சார் நம்ம ஆராதனா மேடம் ஹாஸ்பிடல்ல இருக்கும்போது, ஹரி குடிச்சிட்டு மாடி நின்னு நான் சாகுறேன்… சாகுறேன்னு.. சீன் போட்டுட்டு இருந்தானே…!!! அந்த வீடியோ.” என்று அவனுக்கு ஞாபகப்படுத்தினான். 

பிரவீன்: “அட ஆமா டா…!!! நான் அந்த வீடியோவ பத்தி மறந்தே போயிட்டேன். இன்னைக்கு காலையில தான் விஷ்வாவை பத்தி ஒரு நியூஸ் ஸ்பிரெட் ஆகி இருக்கு. இப்போ ஹரிய பத்தி ஒரு நெகட்டிவ்வான நியூஸ் வந்தா, அதுவும் நல்லதுக்கு தான். நீ அத பிரெஸ்ல ரிலீஸ் பண்ணிரு.” என்று சந்தோஷமாக சொன்னான். இப்போது தான் அவன் சற்று நிம்மதியாக உணர்ந்தான்.

அடுத்த சில நிமிடங்களிலேயே, பிரவீன் பரப்பிவிட்ட செய்தி காட்டுத்தீயாக   வலைத்தளங்களிலும், செய்தி தொலைக்காட்சிகளிலும், பரவியது. அதை உடனே கவனித்த நாராயணன் குரூப்ஸ் இன் பப்ளிக் ரிலேஷன்ஷிப் டீம், அந்த செய்திகளை தங்களால் முடிந்தவரை நீக்க முயன்றனர். அந்தச் செய்திகளை வெளியிட்ட தொலைக்காட்சிகளை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு அந்த செய்தியை நீக்கும் படி கேட்டுக் கொண்டனர்.

அந்த நிறுவனங்கள் நாராயணன் குரூப்ஸ் ஐ பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனால், உடனே அந்த செய்திகளை நீக்கி விட்டனர். இருப்பினும் அவர்களால் வலைத்தளங்களில் இருந்து அந்தச் செய்தியை நீக்க முடியவில்லை. இவர்கள் ஒரு பக்கத்தில் இருந்து ஒரு செய்தியை அழித்தால், வேறொரு பக்கத்தில் இருந்து   அந்த செய்தி மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. அதனால் பி. ஆர். டிம் உடன் அவசர மீட்டிங்கை கூட்டிய விஷ்வா, ஹரியுடன் மீட்டிங் ஹாலில் அமர்ந்து இருந்தான். 

தன் தப்பு செய்துவிட்டு அம்மாவிடம் மாட்டிக் கொண்ட சிறு குழந்தைகளை போல் தன்னுடைய தலையை கீழே குனிந்து கொண்டு விஷ்வாவின் முன் அமர்ந்து இருந்தான் ஹரி. விஷ்வா அவனைப் பார்த்து முறைத்தானே தவிர, அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. அது வேறு ஹரியின் குற்ற உணர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தி கொண்ரு இருந்தது. 

சில நிமிடங்களிலேயே நெட்டிசன்களின் பேசும் பொருள் ஆகிவிட்டான் ஹரி. தொடர்ந்து ஆராதனா முதல் அவனுடைய நண்பர்கள் வரை அவனுக்கு கால் செய்து என்ன நடந்தது என்று விசாரிக்க தொடங்கி விட்டனர். அதனால் கடுப்பான ஹரி தன்னுடைய மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டான். சல நிமிடங்களுக்கு கூகுள் -லில் கூட, “காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த பிரபல நிறுவனத்தின் சி. இ. ஓ.” என்ற இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டில் இருந்தது. 

நாராயணன் குடும்பத்தினரை பற்றி தொடர்ந்து வந்து கொண்டு இருந்த செய்திகளால் பங்கு சந்தையில் கூட அவர்களுடைய பங்குகள் சற்று சரிவை சந்தித்தன. அதனால் உடனே இந்த பிரச்சனைகளை சரி செய்யும் மாறு பங்குதாரர்கள், விஷ்வாவை தொடர்புகொண்டு நச்சரித்து கொண்டு இருந்தனர். இந்தச் செய்தியை அமெரிக்காவில் இருந்த க்ரிஷாவும் கவனிக்க தவறவில்லை. 

அதனால் விஷ்வாவிற்கு உடனே கால் செய்த க்ரிஷா, தான் இந்தப் பிரச்சினையை உடனே சரி செய்வதாகவும், ஏற்கனவே இணையத்தில் இதை நிறைய பேர் பார்த்து விட்டதால் இதற்கு நாம் பதில் சொல்லவில்லை என்றால் நம் மீது தவறு இருப்பதாகிவிடும் அதனால் அரியையே இதற்கு சரியான பதிலை சொல்ல சொல்லிவிட்டு தன்னுடைய வேலையை பார்க்கத் தொடங்கினாள் க்ரிஷா.

க்ரிஷா சொன்னதைப் போல் அடுத்த அரை மணி நேரத்தில் ஹரி சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் அவள் நீக்கி விட்டாள். க்ரிஷா சொன்னதை போல் தானும் செய்துவிட்ட ஹரி, தன்னுடைய மொபைல் போன் ஐ ஆன் செய்து அவனுடைய பர்சனல் ட்விட்டர் அக்கவுண்டில் ஒரு ட்வீட் செய்தான். 

அந்த ட்வீட்டில்…

“இந்த நவீன உலகத்தில் யாருடைய தனி உரிமையும் காக்கப்படுவதில்லை. எது எப்படி இருந்தாலும் பொதுவெளியில் இந்த விஷயம் மந்தத்துக்கு பின்பு நான் இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். அந்த வீடியோ சில நாட்களுக்கு முன்பு எங்களுடைய மருத்துவமனையில் யாரோ ஒரு முகம் தெரியாத நபரால் எடுக்கப்பட்டு இருக்கிறது. அன்று நான் குடிபோதையில் எல்லாம் இருக்கவில்லை. அன்றைய நாளில் என்னுடைய காதலி உடல் நல குறைபாட்டால் எங்களுடைய மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்தாள். 

அப்போது எனக்கு சில முக்கியமான வேலைகள் இருந்ததால், என்னால் அவள் அருகே இருந்து அவளை சரியாக கவனித்துக் கொள்ள முடியவில்லை. இதனால் எனக்கும் என்னுடைய காதலிக்கும் அப்போது ஒரு சிறிய சண்டை வந்துவிட்டது. அப்போது கோபமாக இருந்த என்னுடைய காதலியை சமாதானப்படுத்துவதற்காகவும், அவளுக்கு என்னுடைய காதலை புரிய வைப்பதற்காகவும், நான் அவள் முன்னே விளையாட்டாக செய்த விஷயம் தான் அது. 

இதுபோன்று நீங்களும் கூட உங்களுடைய காதலிடம் விளையாடி இருக்க கூடும். ஆனால் நான் உங்கள் அனைவருக்கும் பரீட்சையமான ஒருவராக இருப்பதாலும், என்னுடைய குடும்பப் பின்னணியின் காரணமாகவும், அதே விஷயத்தை நான் செய்யும்போது, அது பேசும் பொருளாகிவிட்டது. எங்களுடைய குடும்பத்தை  அழித்தே தீர வேண்டும் என்று யாரோ சிலர் துடித்துக் கொண்டு இருக்கிறார்கள் போல என்று நினைக்கிறேன். 

இன்று காலை என்னுடைய அண்ணனின் மீது ஒரு பொய் புகார் வந்தது. இப்போது என்னுடைய தனிப்பட்ட விஷயத்தை அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி எங்களுடைய  நற்பெயரை கெடுக்க நினைக்கின்றனர். என்ன நடந்தாலும், அது ஒருபோதும் நாராயணன் குரூப்ஸ் இன் வளர்ச்சியை தடுக்காது. இந்த பதிவில் நான் உங்களிடம் இரண்டு நல்ல செய்திகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 

1) என்னுடைய சகோதரர் விஷ்வா நாராயணன், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். அவருடைய நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தவுடன், அவர் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் யார் என்று நாங்கள் அனைவருக்கும் தெரிவிப்போம்.

2) அவருடைய திருமணம் நடந்து முடிந்த சில நாட்களிலேயே, நானும், என்னுடைய காதலியும், திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். என்னுடைய காதலி யார் என்று இப்போது என்னிடம் கேட்காதீர்கள். எங்களுடைய திருமணத்தின்போது அவளை என்னுடைய மனைவியாக பார்த்து நீங்களே அவள் யார் என்று தெரிந்துு கொள்ளுங்கள்.” என்று ஆங்கிலத்தில் ட்விட் செய்து இருந்தான்.

இப்போது ஹரியின் இந்த பதிவு தான் நம்பர் ஒன்றாக ட்ரெண்டில் இருந்தது. இது தான் கார்ப்பரேட் தியரி. மக்களிடம் ஏற்கனவே பரவிய ஒரு விஷயத்தை மறைக்க வேண்டும் என்றால், அதை விட இன்னும் ஒரு பெரிய விஷயத்தை அவர்களிடையே பரப்பி விடட வேண்டும். அதையே தான் இப்போது ஹரியும் செய்தான். இதுவரை ஹரியின் செயலை பற்றி விமர்சித்துக் கொண்டு இருந்தவர்கள் அனைவரும் இப்போது, ஹரியின் அந்த ரகசிய காதலி யார் என்றும், நாராயணன் குடும்பத்தின் மூத்த மருமகள் யார் என்றும், விவாதிக்க தொடங்கி விட்டனர். 

அந்த விவாதத்தை இன்னும் சூடாக்க நினைத்த ஹரி, ராகவியின் வீட்டில் விஷ்வாவையும், ராகவியும், ஒன்றாக வைத்து விஷ்ணு எடுத்த புகைப்படங்களை தங்களுடைய ஆபீஸியல் அக்கவுண்டில் இருந்து பதிவிட்டு, “அவர் லேடி பாஸ் கம்மிங் சூன்.” என்று ஒரு டேக் லைனையும் எழுதி இருந்தான். ஆனால் அந்த புகைப்படத்தில் ராகவியின் முகம் மறைக்கப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த அனைத்து பெண்களும் பொறாமை பட்டு, “ஹூ இஸ் தட் லக்கி கேர்ள்..??, நான் இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் விஷ்வா சாரோட போட்டோவ பாக்கிறேன். ப்பா..!! 😍 மனுஷன் எவ்ளோ ஹாண்ட்ஸாமா இருக்காரு எவளுக்கு கொடுத்து வச்சிருக்கோ..!!!, இருக்கிறவன் இரண்டாவது கல்யாணம் என்ன 3, 4, 5 -ன்னு எத்தனை தடவ வேணும்னாலும் கல்யாணம் பண்ணுவான்.” என்று அனைவரும் பலவாறாக தங்களுடைய கருத்துக்களை கமெண்ட் செக்ஷனின் குவித்து கொண்டு இருந்தனர்.

இதில் ராகவியின் கழுத்தில் இருந்த அந்த பென்டன்ட் ஐயும் யாரும் கவனிக்க  மறக்கவில்லை. இந்த செய்திகள் அனைத்தையும் ராகவியும் அவளுடைய பெற்றோர்களும் கூட தங்களுடைய வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். தாங்கள் எவ்வளவு பெரிய இடத்தில் சம்பந்தம் செய்து இருக்கிறோம் என்று ஏற்கனவே அவர்கள் அறிந்து இருந்தாலும், இப்போது தான் உண்மையாக அதில் இருக்கும் சீரியஸ்னஸை அவர்கள் உணர்ந்தனர். அதனால் இதற்க்கு மேல் தாங்கள் எது செய்தாலும் கவனமாக செய்ய வேண்டும் என்று நினைத்தவர்கள், தெரியாமல் தங்கள் செய்யும் ஏதேனும் ஒரு தவறு கூட அடுத்து சில மணி நேரங்களில் அது நியூசில் ஹெட் லைன்ஸ் ஆக வந்து விட கூடும் என்று நினைத்துக் பயந்தனர். 

தன்னுடைய அறைக்கு வந்த ராகவி சோசியல் மீடியாக்களில் விஷ்வாவின் வருங்கால மனைவி பற்றி வந்து கொண்டு இருக்கும் செய்திகளை படிக்க தொடங்கினாள். நாளை தான் தான் விஷ்வாவின் மனைவிபோகிறவள் என்று அனைவருக்கும் தெரிய வந்துவிட்டால், தானும் இதே போல் அனைவருக்கும் தெரிந்த பரிச்சயமான முகம் ஆகிவிடுவோம் என்று நினைத்துப் பார்க்கும்போது, அவளுக்குள் ஒரு பரவசம் தோன்றி மறைந்தது. இதில் சில பெண்கள் தாங்கள் விஷ்வாவை மிஸ் செய்து விட்டதாக போட்டு இருந்த கமெண்ட்களை படித்து ராகவிக்கு ஒரு பக்கம் அந்த இடம் தனக்குத் தான் கிடைக்க போகிறது என்று நினைக்கும் போது பெருமையாகவும், இன்னொரு பக்கம் மற்ற அனைத்து பெண்களும் அவனைப் பார்த்து ரசிப்பதால் அவளுக்கு பொறாமையாகவும், இருந்தது. 😒

அதனால் விஷ்வாவை பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தவள், அவன் தன்னுடைய கழுத்தில் அணிவித்து சென்றுவிட்ட அந்த பென்டன் தொட்டுப் பார்த்தாள். அப்போது அவளுக்கு அந்த தருணங்கள் அனைத்தும் ஞாபகம் வர தன்னை அறியாமல் அதை நினைத்து பூரித்துப்போன ராகவி, சிறு வெட்கத்துடன் தனக்குள் புன்னகைத்துக் கொண்டாள். 😌 😁 😁 அந்த செய்திகளை பார்த்துவிட்டு ராகவியின் வீட்டிற்கு வந்த ஷாலினி, “ அக்கா..!! லேடி பாஸ் ஆ நீங்க…??? சூப்பர் அக்கா. கொஞ்ச நேரத்துல நீங்களும் ட்ரெண்டிங் ஆயிட்டீங்க. உங்களுக்கும் மாமாவுக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்புறம், செலிப்ரிட்டி மாதிரி உங்க கூட போட்டோ எடுத்துக்கறதுக்கு உங்க ஃபேன்ஸ் எல்லாரும் உங்களை தொல்லை பண்ண போறாங்க. ஆனா நான் தான் உங்க கூட ஃபர்ஸ்ட் செல்பி எடுப்பேன்.” என்றவள் ராகவியுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்துக் கொண்டாள். 

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured