அத்தியாயம் 144: என்னை கொஞ்சம் வாழ விடு (பார்ட் 1)
நாராயணன் பேலஸுல்…
ஜான்வியின் கல்லறைக்கு வந்த விஷ்வா, வழக்கம்போல் அங்கு இருந்த ஒரு மெழுகுவர்த்தியை எடுத்து அதற்கான ஸ்டாண்டில் ஏற்றி வைத்தான் விஷ்வா. ஆனால் அது அவன் ஏற்றி வைத்த அடுத்த கனமே அணைந்து விட்டது. அதனால் மீண்டும் அந்த மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தான் விஷ்வா. மீண்டும் அது அணைந்துவிட, மீண்டும் அதை பற்ற வைத்தான். 🕯️
இதற்கு முன் இரவு நேரங்களில் அவன் எத்தனையோ முறை இப்படி பலமாக காற்று அடிக்கும் போது கூட, இங்கு வந்து மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்து இருக்கிறான். 🕯️ ஆனால் அப்போது எல்லாம், ஒருபோதும் அது இப்படி அணைந்து போனதே இல்லை. 🕯️ இப்போது மட்டும் ஏன் தான் எத்தனை முறை ஏற்றி வைத்தாலும், அது அணைந்து கொண்டே இருக்கிறது என்று அவனுக்கு புரியவில்லை. 🕯️ அதனால் குழப்பமாக தன் முன்னே இருந்த ஜான்வியின் கல்லறையும், ஓரமாக மாட்டப்பட்டு இருந்த அவளுடைய பெரிய புகைப்படத்தையும், பார்த்தான். 🙄
ஒரு வேளை தான் இன்னொரு திருமணம் செய்து கொள்ள போவதால் தான் ஜான்வி தன் மீது கோபப்பட்டு தான் ஏற்றும் இந்த மெழுகுவர்த்தியை ஏற்று கொள்ளவில்லை என்று நினைத்த விஷ்வா, மனம் உடைந்து அவளுடைய கல்லறையின் முன்னே மண்டியிட்டு அழத் தொடங்கி விட்டான். 😭 😭 😭 இப்போதும் அவனுடைய கைகளில் மெழுகுவர்த்தியும், ஒரு தீப்பெட்டியும் இருந்தன. எத்தனை தான் அவனும் தன்னுடைய ஆழ்மன வேதனைகளை தனக்குள்ளேயே வைத்து குமுரிக் கொண்டு இருப்பான், அதனால் அது அனைத்தையும் இன்று தன்னுடைய ஜான்வி இடமே இறக்கி வைத்து விடலாம் என்று நினைத்த விஷ்வா அவளிடம் பேச தொடங்கினான்.
விஷ்வா: “நீ என் மேல கோவமா இருக்கியா ஜானு..??? அப்போ இங்க நடக்குற எல்லாத்தையும் நீ பாத்துட்டு இருக்கேன்னு தானே அர்த்தம்..??? தப்பு தான், நான் உன் இடத்த இன்னொருத்திக்கு தூக்கி குடுக்கிறது தப்பு தான். ஆனா, இந்த தப்ப நான் ஏன் செய்யுறேன்னு உன்னால புரிஞ்சுகிட்டு என்ன மன்னிக்க முடியலையா…???
ஐ அம் சாரி.. ப்ளீஸ் ஜானு ஃபார் கிவ் மீ. எனக்கும் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல தான். ஆனா நம்ம பையன் அவனுக்கு அம்மா வேணும்னு ஆசைப்படுறானே.. அதுக்கு நான் என்ன பண்றது..??? முன்ன மாதிரி அவன் என்கிட்ட க்ளோசா இருந்தா கூட, நானே அவனை நல்லா பாத்துப்பேன். ஆனா, அவன் என்ன பாத்தாலே பயப்படுறான் டி. அத பாக்கும்போது எனக்கு எவ்ளோ வேதனையா இருக்கு தெரியுமா..??? எதுக்குகு டி என்னையும், என் பையனையும், தனியா விட்டுட்டு போன..???
நீ இல்லாம நாங்க எவ்ளோ கஷ்டப்படுறோம்ன்னு.. நீ பாத்துட்டேடே இருக்க தானே…!!!! ப்ளீஸ் உன்னால முடிஞ்சா திருப்பியும் என்கிட்ட வந்துடு. நீ வந்தா, இந்த தடவ உன்னை கண்ணுக்குள்ள வச்சு பத்திரமா பாத்துக்கறேன். நீயும் நானும் ரிஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டோம். கடைசி வரைக்கும் நீ என் பொண்டாட்டின்னு, நான் உன் கழுத்துல தாலி கட்டவே இல்ல டி. ஆனா இப்போ இன்னும் கொஞ்ச நாள்ல எவளோ ஒருத்தி கழுத்துல தாலி கட்ட போறேன். அத நினைக்கும் போது எனக்கு எவ்ளோ வலிக்குதுு தெரியுமா..???
இப்ப கூட நான் தூங்கிக்கிட்டு இருந்து, யாராவது என்னை வந்து எழுப்பி இதெல்லாம் கனவுன்னு சொல்ல மாட்டாங்களான்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு. நான் இப்ப சொல்றேன் அது நல்லா கேட்டுக்கோ. இந்த ஜென்மத்துல என்னோட பொண்டாட்டின்னா அது நீ மட்டும் தான். என் லைஃப்ல ராகவி தேவகின்னு எவ வந்தாலும் சரி, உன்னோட இடத்தை நான் யாருக்கும் குடுக்க மாட்டேன். இந்நேரம் நீயும், நம்ம குழந்தையும், உயிரோட இருந்து இருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும்.
வருஷத்துக்கு ஒன்னு பெத்து தரேன்னு சொன்னியே டி…!!!என்ன கடைசியில நம்ம குழந்தை முகத்தை கூட பாக்க முடியாத பாவியாகிட்டு போயிட்டியே டி. ஆனா என் மனசுல தோனிக்கிட்டே இருக்கு செத்துப்போன நம்ம குழந்தை, நான் ஆசைப்பட்ட மாதிரி ஒரு பொண்ணா தான் இருக்கும்னு. நீ அவகிட்ட சொல்லு.. அவ அப்பா அவளை ரொம்ப மிஸ் பண்றேன்னு..!!! இப்ப கூட அவளை புதைச்சு இடத்த போய் பாக்கணும்னு தோணும். ஆனா அத போய் பாக்கிற தைரியம் எனக்கு இல்ல டி. நான் என்ன பண்றதுன்னு நீயே சொல்லு..??? நீ இல்லாத இந்த வாழ்க்கையை வாழ்றது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுக்காக நானும் செத்துப் போயிட்டா, நம்ம பையன் அனாதை ஆயிட மாட்டானா…???
இந்த உடம்புல இன்னும் உசுரு ஒட்டிக்கிட்டு இருக்கிறதே என்னோட பையனை வளர்க்கறதுக்காக தான்னு நான் நினைக்கிறேன். ஒன்னு நீ என்கிட்ட வா. இல்லனா நம்ம பையன் வளர்ந்து பெரியவனானோனே அவன செட்டில் பண்ணிட்டு நானே உன்கிட்ட வந்துருவேன். சத்தியமா நீ இல்லாம என்னால வாழ முடியல டி. ஐ லவ் யூ ஜானு. ஐ லவ் யூ சோ மச். அண்ட் ஐ மிஸ் யூ அ லாட்.” என்று அழுது கொண்டே மூச்சு வாங்க சிறு விசும்பல்களுடன் அவளிடம் பேசியவன் அவளுடைய சமாதியை கட்டிப்பிடித்துக் கொண்டு, அதன் மேல் படித்துக் கொண்டான். 🤗 😭 😭 😭
நாட்கள் மாதங்கள் ஆகின, மாதங்கள் இப்போது வருடங்கள் ஆகிவிட்டன.
இத்தனை வருடங்களை கடந்து வந்து விட்டேன். இருப்பினும் என் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில், இருந்து கொண்டு இன்னும் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது உன் பெயரும், நம் நினைவுகளும்.
எங்கோ இருந்து நீயும் என்னை நினைத்துக் கொண்டிருப்பாய், என்றெல்லாம் நான் நம்பிக் கொண்டு இருக்க வில்லை.
நீ என்னுள் இருக்கிறாய். 🥰
என் இதயம் உனக்காக துடிக்கிறது. 🖤
உன்னை பற்றி நினைக்கும் போது கூட, இப்போதும் என் இதழ்கள் என்னை அறியாமல் உன்னை.. நீ என்னுடையது என்கிறது. ஆனால் உன்னை என்னுடனே வைத்துக் கொண்டு சுற்றுவதற்கு, நீ என்னுடைய உடைமைகளுள் ஒன்றா என்ன..???
என் ஒட்டுமொத்த உணர்ச்சிகளின் குவியலும் நீயேதான். 😍
காலத்தின் கோர பிடியில் சிக்கிக்கொண்டு நாம் பிரிந்து விட்டோம், பரவாயில்லை.
நான் உன்னிடம் கொடுத்துவிட்டு வந்த என்னுடைய இதயம் இன்னும் உன்னிடத்தில் பத்திரமாக இருந்தால், நீயாக மனமிரங்கி மீண்டும் என்னுடன் சேர்ந்து விடு.
என்னை கொஞ்சம் வாழ விடு…!!!
✒️நர்மதா சண்முகம் 🖤💫🌟✨
விஷ்வாவிற்கு சற்று தொலைவில் நின்றிருந்த ஒரு வெள்ளை கவுன் அணிந்து இருந்த இளம் பெண், அவனைப் பார்த்து கண்ணீர் நிறைந்த கண்களுடன் ஒரு விரக்தி புன்னகை சிந்தினாள். 🥺 😁 அவளுடைய கண்கள் விஷ்வாவை விட்டு சற்றும் அகலவில்லை. அவளுடைய கண்களில் ஏக்கமும், தவிப்பும், கொட்டிக் கிடந்தன. 😟 😖
பின் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் அந்த மெழுகுவர்த்தியை எடுத்து விஷ்வா பற்ற வைக்க, இம்முறை அந்த மெழுகுவர்த்தி அணையாமல் நின்று எறிந்தது. 🕯️அதனால் நிம்மதியாக அங்கு இருந்து தன்னுடைய அறைக்கு எழுந்து சென்றான் விஷ்வா.
அடுத்த நாள் காலை..
சித்தார்த்தன் பள்ளியில்….
ராகவியின் வருகைக்காக டான்ஸ் பிராக்டிஸ் ஹாலில் காத்திருந்தான் கௌத்தம். வழக்கம்போல் தன்னுடைய சலங்கைகளை கையில் எடுத்துக்கொண்டு அங்கே வந்தாள் ராகவி. அவளைக் கண்டவுடன் வேகமாக அவள் அருகே சென்ற கௌத்தம், அவளுடைய இரு கைகளையும் வலுக்கட்டாயமாக பிடித்துக் கொண்டான். அவனுடைய இந்த தொடுகை ராகவிக்கு மிகவும் அருவருப்பாக இருந்தது அதனால், “ச்சீ.. கைய எடு.” என்றவள், தன் மீது இருந்த அவனுடைய கையை சற்றென்று எடுத்து விட்டாள். இதனை நாள் தன்னுடைய காதலை ராகவிக்கு புரிய வைப்பதற்காக கௌத்தமமும் பொறுமையாக இருந்து பார்த்து விட்டான்.
ஆனால் ராகவிய இடமும் எந்த முன்னேற்றமும் இல்லை, விஷ்வாவிடமும் பேசி பிரயோஜனம் இல்லை என்பதால், இதற்கு மேலும் அவனால் அமைதியாக இருக்க முடியவில்லை. அதனால் மீண்டும் ராகவியின் இரு கைகளை அழுத்தி பிடித்தவன் அவளை சுவற்றோடு சேர்த்து நிற்க வைத்தான். அதனால் பயந்து போன ராகவி தன் கைகளில் இருந்த சலங்கையை நழுவ விட, அது அந்த அமைதியான பெரிய ஹாலில் பலத்த சத்தத்துடன் கீழே விழுந்தது. ராகவி அவனை தன்னிடம் இருந்து விளக்க முயற்சித்துக் கொண்டு இருந்தாள்.
ஆனால் பாவம் கௌத்தமின் பிடி மிகவும் இருக்கமாக இருந்ததால், ராகவியால் அவனிடம் இருந்து விடுபட முடியவில்லை. அதனால் அவனை எரித்து விடும் பார்வை பார்த்தவள், “மரியாதையா விட போறியா இல்லையா…??? என்ன விடுடா.” என்று மீண்டும் அவனைப் பார்த்து கோபமாக சொன்னாள். 😡 🔥 அவள் எவ்வளவு கெஞ்சினாலும் கோபப்பட்டாலும் அவளை கௌத்தம் விடுவதாகஇல்லை. அப்போது ராகவியின் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்த கௌத்தமின் கண்களில் விஷ்வா அவளுக்கு போட்டுவிட்டு பென்டன்ட் பட்டது.
அதைப் பார்த்த உடனேயே கௌத்தம் அதன் மதிப்பை புரிந்து கொண்டவன், கண்டிப்பாக இதை அவளுக்கு யார் கொடுத்திருப்பார்கள் என்பதையும் புரிந்து கொண்டான். அதை நினைத்துப் பார்க்கும்போதே அவனுடைய மனம் வலித்தது. 💔 அதனால், அவன் ஒரு நொடி தன்னுடைய பிடியை தளர்த்த அந்த கேப்பை பயன்படுத்தி கொண்ட ராகவி; தன் மீது இருந்து அவனை தள்ளிவிட்டவள், பளார் என்று அவனுடைய கன்னத்தில் அறைந்தாள். தன்னுடைய கன்னத்தில் ஒரு கையை வைத்துக்கொண்டு அவளை அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டு இருந்தான் கௌத்தம்.
ராகவி: அவனை பார்த்து முறைத்தவள், “என்ன டா பாக்குற..??? உனக்கு அவ்ளோ தான் மரியாதை பாத்துக்கோ. இது தான் நான் உனக்கு குடுக்கிற லாஸ்ட் வார்னிங். இதுக்கு மேல இன்னொரு தடவை நீ என்கிட்ட தேவை இல்லாம சும்மா பேச ட்ரை பண்ணா கூட, பிரின்சிபல் மேடம் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணி, உன்ன ஃபயர் பண்ண வெச்சிடுவேன்.
நான் போய் பிரின்சிபல் மேடம் கிட்ட இத சொல்லணும்னு கூட அவசியம் இல்ல. விஷ்ணு கிட்டையோ, இல்ல என்னோட ஹஸ்பண்ட் கிட்டயோ, கூட ஒரு வார்த்தை சொன்னா போதும். உன்ன இந்த ஊரிலயே இல்லாம பண்ணிடுவாங்க. ச்சி…!!! உன் கூட போய் பிரெண்டா பழகினேன்னு நினைச்சாலே, எனக்கு அசிங்கமா இருக்கு.” என்று கோபமாக சொன்னாள். 😒 🤨 😡
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)