அத்தியாயம் 142: வருணை சந்தித்த கௌதம் (பார்ட் 1)
ஆராதனா இதற்கு முன் அவள் தங்கி இருந்த ஹாஸ்டலில் இப்போது இல்லை என்று உறுதி செய்த பிரவீன், காவல் நிலையத்திற்கு சென்று என்னுடைய தங்கை காணவில்லை என்று முதலில் கம்ப்ளைன்ட் செய்தான். சில நிமிடங்களுக்கு பின் அவனே காவல் ஆய்வாளருக்கு கால் செய்து தன்னுடைய தங்கை நாராயணன் பேலஸில் தான் இருப்பதாக தனக்கு தகவல் கிடைத்ததாகவும், வருண் தான் அவளை கடத்தி விட்டதாகவும் இன்பார்ம் செய்தவன், தன்னுடன் நாராயணன் பேலஸிற்கு வந்து தன்னுடைய தங்கையை தனக்கு மீட்டுத் தருமாறு ரெக்வஸ்ட் செய்தான்.
அந்த் ஆய்வாளரும் அவனுடன் அங்கே வருவதற்காக சம்மதித்தார். பின் “சார் அப்புறம் ஒரு ரெக்வெஸ்ட்…!!!” என்று இழுதத்தான் பிரவீன். “என்ன சார் சொல்லுங்க.” என்றார் அந்த போலீஸ்காரர். “சார் இதை நீங்க கொஞ்சம் சீக்கரட் ஆ எனக்காக பண்ணனும். சோ இத பத்தி நீங்க யார்கிட்டயும் ஷேர் பண்ணாதீங்க. இந்த விஷயம் அவனோட காதுக்கு போச்சுன்னா, எப்படியாவது என் தங்கச்சியை இடம் மாத்திடுவான். நான் என் தங்கச்சிய பாத்தே பல வருஷமாச்சு சார். அவ என் கூட இல்லைன்னாலும் ஏதோ ஒரு இடத்துல அவ நல்லா இருக்கான்னு நினைச்சு தான், நான் இத்தனை நாளா நிம்மதியா இருந்தேன்.
ஆனா இப்போ இவ அந்த வீட்ல இருக்குறத நினைச்சாலே எனக்கு ரொம்ப பயமா இருக்கு. எங்க ஃபேமிலிக்கும் அவங்க பேமலிக்கும் கொஞ்சம் டேர்ம்ஸ் சரி இல்ல சார். அதனால அவங்க குடும்பத்துல இருக்குறவங்க என் தங்கச்சிய ஏதாவது பண்ணிருவாங்களான்னு எனக்கு ரொம்ப பயமா இருக்கு.” என்று நன்றாக நடித்து தள்ளினான். அவனுடைய நடிப்பை உண்மை என்று நம்பிய அந்த போலீஸ்காரரும் அவன் சொன்னதற்கு ஒப்பு கொண்டார்.
பிரவீன் எப்படியும் ஆராதனாவை தேடி நாராயணன் பேலஸிற்கு வர கூடும் என்று கணித்த சிவா, வருணிற்கு கால் செய்து அந்த விஷயத்தை பற்றி இன்பார்ம் செய்தவன்; அவனும் நாராயணன் பேலஸ் ஐ நோக்கி விரைந்தான். சிவாவும், வருனும், அங்கே வருவதற்கு முன்னே பிரவீன் போலீஸ்காரர்களுடன் அங்கே வந்துது சேர்ந்தான். வந்தது போலீஸ்காரர்களாகவே இருந்தாலும், வருணின் அனுமதி இன்றி யாரையும் நாங்கள் உள்ளே அனுப்ப மாட்டோம் என்று சொல்லி அவர்களை வழி மறித்தனர் அங்கு இருந்த செக்யூரிட்டி ஆபீசர்கள். நாராயணன் பேலஸின் வாசலின் நின்று கொண்டு பிரவீன் இத்தனை போலீஸ்காரர்களுடன் வந்து பிரச்சனை செய்து கொண்டு இருந்ததால், அந்த செய்தி உடனே காட்டுத் தீயாக அந்த ஊர் முழுவதும் பரவி செய்தியாளர்கள் கூட அங்கே படையெடுத்து வர தொடங்கி இருந்தனர். அந்தச் செய்தியை அறிந்த வருண் வேகமாக அங்கே வந்தான்.
வருண் வருவதற்குள் தான் ஸ்கோர் செய்ய வேண்டும் என்று நினைத்த பிரவீன், “ப்ளீஸ் சார் எப்படியாச்சு என் தங்கச்சி என் நீங்க தான் எனக்கு கண்டுபிடிச்சு குடுக்கணும். நான் இங்க தனியா வந்தாரு எப்படி என்னை விட மாட்டாங்கன்னு தான் நான் உங்களைய இங்க கூட்டிட்டு வந்தேன். ஆனா பாருங்க சார் போலீஸ் மேன் உங்களையே மதிக்க மாட்டேங்கிறாங்க.” என்று சொல்லி அந்த போலீஸ்க்காரரை சற்று ஏத்தி விட்டான். அதனால் அந்த போலீஸ்காரர் தன்னுடைய டீம் உடன் இணைந்து அங்கே இருந்து செக்யூரிட்டி ஆபீசர்களிடம் தங்களை உள்ளே விடும் படி பிரச்சனை செய்ய தொடங்கி விட்டார்.
இந்த காட்சிகள் அனைத்தும் அனைத்து பிரபல செய்தி தொலைக்காட்சிகளிலும் நேரலையில் டெடிகேஸ்ட் ஆகி கொண்டு இருந்தது. சிவா வருணிக்கு கால் செய்து இதைப்பற்றி அவனிடம் சொல்ல, “இந்த பைத்தியக்காரன் வர வர.. ரொம்ப ஓவரா டிராமா போடுறான் டா. நான் பக்கத்துல வந்துட்டேன் நீயும் சீக்கிரம் வா.” என்று சொல்லிவிட்டு அந்த கால் ஐ கட் செய்தவன், வேகமாக அங்கே வந்து சேர்ந்தான்.
அதுவரை அந்த பெரிய கேட்டின் அருகே இருந்து கத்தி கொண்டு இருந்த போலீஸ்காரர்கள், வருணின் கார் அங்கே வருவதை பார்த்தவுடன் நல்ல பிள்ளைகளாக அமைதியாக நின்று கொண்டனர். நாம் எவ்வளவு பெரிய புலியாக இருந்தாலும், காட்டுக்கு ராஜா சிங்கம் தான் அங்கே சிங்கம் வந்தவுடன் நாம் ஆடினால் நன்றாக இருக்காது என்று அந்த போலீஸ்காரன் நன்கு புரிந்து வைத்து இருந்தார். வருண் தன்னுடைய விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் காரில் இருந்து கம்பீரமாக கீழே இறங்கி வந்தான்.
சரியாக அப்போது அங்கே வந்த சிவா, தன்னுடைய காரை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து வருணின் அருகே நின்று கொண்டான். அவர்கள் இருவரும் அங்கிருந்த போலீஸ்காரரின் அருகே வர, “என்ன சார் இங்க வந்து எதுக்கு பிரச்சனை பண்ணிட்டு இருக்கீங்க..???” என்று கூலாக அந்த போலீஸ்காரரை பார்த்து கேட்டான் வருண். இந்த காட்சிகளும் நேரலையில் டெலிகாஸ்ட் ஆகி கொண்டு தான் இருந்தது. வருணின் கூர்மையான நாக்கில் இருந்து வெளிவந்த அம்பு தன் பக்கம் திரும்பியதால் பயந்து போன அந்த போலீஸ்காரர், “சார் உங்க கூட பிரச்சனை பண்ற எண்ணம் எல்லாம் எனக்கு இல்ல சார். என்கிட்ட உங்க மேல ஒரு கம்ப்ளைன்ட் வந்து இருக்கு. அத பத்தி விசாரிக்கிறதுக்கு தான் நான் இங்க வந்தேன். இங்கே இருக்கிற செக்யூரிட்டிஸ் தான் என்ன உள்ள போக விடாம பிரச்சனைன் பண்ணினாங்க. அவங்க அமைதியா இருந்து இருந்தா இவளோ பெரிய சீன் இங்க கிரியேட் ஆகி இருக்காது.” என்று அவசரமான குரலில் தன்னிலை விளக்கம் கொடுத்தான்.
“எதுவா இருந்தாலும், நம்ம உள்ள போய் பேசிக்கலாம்.” என்று அந்த போலீஸ்காரரிடம் சொன்ன வருண்; தன்னுடைய செக்யூரிட்டி ஆபீசர்களை பார்த்து கண்ணசைக்க அந்த பிரம்மாண்டமான அரண்மனையின் கதவை திறந்து விட்டவர்கள், அவர்கள் உள்ளே செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். ராஜாவை போல் முன்னே வருண் செல்ல அவனை பின் தொடர்ந்து அவனுடைய தளபதியாக சிவா வர, மற்றவர்கள் அனைவரும் அவர்களை பின் தொடர்ந்து வந்தனர்.
தன்னுடைய மாளிகைக்குள் அவர்களை அழைத்து வந்த வருண் லிவிங் ரூமில் இருந்த சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தவன், தன்னுடன் வந்த போலீஸ்காரரையும் தன்னருகே அமரச் சொன்னான். ஆனால் பிரவீன் என்ற ஒரு ஆள் அங்கே இருப்பதை கூட சுத்தமாக அவன் கண்டு கொள்ளவே இல்லை. அதனால், “திமிரு புடிச்சவன். உனக்கு -லாம் எவ்வளவு பட்டாலும் இந்த ஏத்ததுக்கு எல்லாம் ஒன்னும் குறைச்சலே இல்ல டா.” என்று நினைத்த பிரவீன் அந்த போலீஸ்காரரின் அருகே வந்த அமர்ந்தான்.
அந்த போலீஸ்காரரை அமைதியாக பார்த்த வருண், “சொல்லுங்க சார்..!! என் மேல என்ன கம்ப்ளைன்ட்..??” என்று கேட்டான். அவனைப் பார்த்து பவ்வியமாக தான் வந்த காரணத்தை பற்றி அவனிடம் சொன்ன அந்த போலீஸ்காரர், “சார் ஆராதனா மேடம் இங்க இருந்தாங்கன்னா, நீங்க அவங்கள கூப்பிடுங்க. அவங்க கிட்ட ஒரு தடவ நான் விசாரிச்சிட்டு இங்க இருந்து போயிடுறேன்.” என்று அமைதியான குரலில் சொல்ல, தர்ஷினியை அழைத்த வருண்; ஆராதனாவை இங்கே அழைத்து வரும் படி அவளிடம் சொன்னான்.
தயக்கத்துடன் ஆராதனாவின் அறைக்கு சென்ற தர்ஷினி அவளிடம் நிலைமையை சொல்லி, அவளை கீழே அழைத்து வந்தாள். ஆராதனாவை பார்த்தவுடன் எழுந்து நின்ற பிரவீனின் கண்கள் ஒரு நொடியில் கலங்கிவிட்டன. 🥺 என்ன தான் இருந்தாலும், அவள் இவனுடைய தங்கையாயிற்றே.. அதனால் பாசத்தில் அவள் அருகே சென்றான். பல ஆண்டுகளுக்குப் பின் தன்னுடைய அண்ணனை நேரில் பார்ப்பதற்கு ஆராதனாவிற்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தது ஆனாலும் அதை அவள் வெளியில் காட்டி கொள்ளவில்லை.
ஆராதனாவின் கையை பிடித்துக் கொண்ட பிரவீன், “இன்னும் உனக்கு என் மேல இருக்கிற கோபம் தீரலையா..??? ப்ளீஸ் ஆரு, நம்ம வீட்டுக்கு வா.” என்று பாசமாக அவளை பார்த்து கேட்டான். அவனுடைய கைகளை தன் மீது இருந்து தட்டிவிட்ட ஆராதனா, “உன் மூஞ்சிய எல்லாம் பாக்க பிடிக்காம தானே.. நான் அந்த வீட்டை விட்டு வெளியில வந்தேன். நான் எங்க போனாலும், நீ என்ன நிம்மதியாவே இருக்க விட மாட்டியா பிரவீன்..?? ப்ளீஸ் முதல்ல எந்த பிரச்சனையும் பண்ணாம இங்க இருந்து வெளியே போ.” என்று அவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டபடி சொன்னவள், பின் அவனுடன் வந்த போலீஸ்காரர்களை பார்த்து; “சார் இவன் எல்லாம் ஒரு ஆளுன்னு இவன் சொல்றத எல்லாம் நீங்க நம்பாதீங்க. நான் இங்க தங்கறது ஒன்னும் புதுசு இல்ல. நான் சின்ன வயசுல எல்லாம் எங்க வீட்ல இருந்ததை விட, இங்க இருந்தது தான் அதிகம். என்னை யாரும் இங்கே போர்ஸ் பண்ணி இருக்க வைக்கல சார். எங்க ரெண்டு பேமிலிக்கும் நடுவுல கொஞ்சம் ப்ராப்ளம்ஸ் இருக்கிறது உண்மை தான்.
அந்தப் பிரச்சினையே முதல்ல என்னோட குடும்பத்துல இருக்கிறவங்கனால தான் வந்துச்சு. சோ, அந்த வீட்ல எனக்கு இருக்க பிடிக்காம நான் வெளியிலில வந்துட்டேன். நான் மேஜர் சார். நான் எங்க இருக்கணும், யார் கூட இருக்கணும்னு, நான் தான் டிசைட் பண்ணுவேன். இதெல்லாம் இவனுக்கே நல்லா தெரியும். இருந்தாலும், வருண் அண்ணாவை பழி வாங்கணும்னு தான் அவர் என்ன கடத்திட்டாருன்னு இவன் பொய் சொல்றான். இவன் இப்படி எல்லாம் பண்ணி எங்கள டிஸ்டர்ப் பண்றதுக்கு.. நான் இவன் மேல கேஸ் கொடுக்கிறேன் சார், நீங்க இவன அரெஸ்ட் பண்ணுங்க.” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
கண்டிப்பாக வருணிற்கு சப்போர்ட் செய்து தன்னுடைய தங்கை தன்னை எதிர்த்து பேசுவாள் என்று ஏற்கனவே பிரவீன் அறிந்து இருந்தான் தான். இருந்தாலும், அவள் இப்போது பேசியவற்றை கேட்டவுடன் அவனுக்கு சற்று வருத்தமாக இருந்தது. ஆராதனாவே தன்னுடைய விருப்பத்தின் பெயரில் தான் தான் இங்கே இருப்பதாக சொல்லிவிட்டதால் இதற்கு மேல் தான் என்ன செய்ய முடியும் என்று நினைத்த போலீஸ்காரர், வருனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வெளியே வந்து அங்கே இருந்த மீடியாக்களிடமும் தன் மீது தான் தவறு இருப்பதாகவும், இது ஒரு பொய்யான கம்ப்ளைன்ட், என்றும் சொல்லி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
பிரவீன் போட்ட திட்டத்தின் படியே இங்கு நடந்த அனைத்து பிரச்சனைகளையும் மேல் மாடியில் இருந்து கவனித்த செண்பகம், அவர்கள் அனைவரும் வெளியே சென்ற பின் கீழே வந்து ஆராதனாவை தன்னுடைய வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி பிரச்சனை செய்தாள். வழக்கம்போல் நம் வருனும் ஆராதனாவிற்கு சப்போர்ட் செய்து செண்பகத்திடம் வாதாடினான். இப்படியே இவர்கள் இருவரும் மாறி மாறி பேசிக் கொண்டு இருக்க, “என்னால இந்த குடும்பத்துக்குள்ள சண்டை வர வேண்டாம். நானே இந்த வீட்டை விட்டு போயிடுறேன் அண்ணா.” என்று சொன்ன ஆராதனா தன்னுடைய அறையை நோக்கி சென்றாள்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)