Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 140

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 140

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 140: நீ என்னை விட்டுப் போக போறியா (பார்ட் 1)


நாராயணன் குரூப்ஸ் அலுவலக கட்டிடம்…

சிவா தன்னுடைய கேபினில் இருந்தான். அப்போது அவனுக்கு கால் செய்த திவ்யா, “நான் உங்கள உடனே பாக்கணும். நீங்க என் ஹாஸ்டலுக்கு வரீங்களா..???” என்று கேட்டாள். 

சிவா: “என்னாச்சு டி..??? ஏன் ஒரு மாதிரி டென்ஸ்ட் ஆ பேசுற..???” என்று குழப்பமான குரலில் கேட்டான். 🙄

திவ்யா: இது போன்ல பேசுற விஷயம் இல்ல. நீங்க கிளம்பி உடனே நேர்ல வாங்க. இன்னைக்கு நான் என் மனசுல இருக்குறத உங்ககிட்ட சொல்லலைனா, என்னால அத எப்பயுமே உங்க கிட்ட சொல்ல முடியாம போயிடுமோன்னு எனக்கு பயமா இருக்கு.” என்று இன்னும் ஒரு நொடி பேசினால் கூட நான் அழுது விடுவேன் என்ற நிலையில் பேசி கொண்டு இருந்தாள். 😟

அவள் பேசியதை வைத்து இத்தனை நாளாய் தன்னுடைய திவ்யா தன்னிடம் வெளிப்படுத்தாமல் இருந்த அவளுடைய காதலை இப்போது சொல்வதற்காக தான் தன்னை அழைக்கிறாள் போல என்று நினைத்து மகிழ்ந்த சிவா, “சரி… சரி.. டென்ஷன் ஆகாத. டோன்ட் வரி. நான் இன்னும் 10 மினிட்ஸ்ல அங்க இருப்பேன்.” என்று சொன்னவன் அந்த கால் ஐ கட் செய்து விட்டு தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து அங்கே விரைந்தான். 

பிரசாத் குரூப்ஸுன் அலுவலகத்தில்….. 

செண்பகத்தை கொள்வதற்கான பிரவீனின் திட்டம் தோல்வியடைந்ததால், வருணை ஏதாவது செய்ய வேண்டும் என்று அவனுடைய மேனேஜர் சங்கரிடம் டிஸ்கஸ் செய்து கொண்டு இருந்தான் பிரவீன். அப்போது, “அதான் நம்ம ஆராதனா மேடம் நாராயணன் பேலஸில இருக்காங்கல்ல சார்… அவங்கள வச்சு ஏதாவது பண்ண முடியுமான்னு யோசிச்சு பாருங்க.” என்று சங்கர் அவனுக்கு ஒரு யோசனை சொல்ல; தன்னுடைய சுழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டு விட்டத்தை பார்த்துக் கொண்டு இருந்த பிரவீன் ஆராதனாவை வைத்து என்ன திட்டம் போடலாம் என்று யோசித்துக் கொண்டு இருந்தான். 

அப்போது திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனாய் நேராக எழுந்து அமர்ந்த பிரவீன், “டேய் எனக்கு ஒரு ஐடியா தோணுது. பேசாம அவன் என் தங்கச்சிய கடத்திட்டான்னு போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணடட்டுமா..???” என்று கேட்டான்.

சங்கர்: ஆனா, அது எப்படி சார் முடியும்..??? போலீஸோட நம்ம அங்கு போய்… ஆராதனா மேடம் கிட்ட போலீஸ் விசாரிச்சாங்கன்னா, நான் விருப்பப்பட்டு தான் இங்க இருக்கேன்னு அவங்களே சொல்லுவாங்களே…!!! கடைசில நம்ப மொக்கை வாங்கிட்டு தான் திரும்பி வர மாதிரி இருக்கும்.” என்று நிதர்சனத்தை அவனுக்கு விளக்கினான்.

பிரவீன்: “உன்னோட இத்துனுண்டு மூளைக்கே அதெல்லாம் தோணும்போது, அது எனக்கு தோணாதா..??? என் தங்கச்சி தான் என்ன விட, அவன் மேல அதிகமா பாசமா இருக்காளே…!!! சோ, நீ சொன்ன மாதிரி தான் கண்டிப்பா சொல்லுவா. பெருசா இல்லைன்னாலும் சின்னதாவாவது வருணிற்கு ஏதாவது குடைச்சல் குடுக்கலைன்னா, எனக்கு நிம்மதியா தூக்கமே வர மாட்டேங்குது டா. அவன் நிம்மதி இல்லாம தூங்காம தைத்தியம் பிடிச்சவன் மாதிரி இருந்தா தான், என்னால நல்லா தூங்க முடியும். 

இப்படி நான் போய் ஒரு பிரச்சனை பண்ணா… கண்டிப்பா அவனோட அம்மாவுக்கு எங்க குடும்பத்து மேல இருக்கிற கோவத்துக்கு, அவங்க ஏதாவது பிரச்சனை பண்ணி ஆராதனாவ வீட்டைவிட்டு வெளியில அனுப்புவாங்க. அப்படி அவங்களே அனுப்பலைனாலும், வருண் அவளுக்கு சப்போர்ட் பண்ணி செண்பகத்துக்கூட சண்டை போட்டா… என் தங்கச்சி தான் ரொம்ப நல்லவளாச்சே… அதனால அவளே என்னால உங்களுக்கு பிரச்சனை வேணாம்னு வீட்டை விட்டு வந்துருவா. எது எப்படி நடந்தாலும், நமக்கு ஒன்னும் லாஸ் இல்ல. 

போலீஸ் நாராயணன் பேலஸ் ஸ்கூல்ல போறதே மீடியாவுக்கு பெரிய நியூஸ் தான். சோ, நம்ம போலீஸை எப்படியாவது உள்ளே கூட்டிட்டு போனா போதும். மீதிய மீடியா காரனுங்களே பாத்துப்பானுங்க.” என்று சொன்னவன், தன்னுடைய உதட்டை கோணலாக வளைத்து வில்லத்தனமாக புன்னகைத்தான். 😁 😁 😁

சங்கர்: “சூப்பர் சார். அப்போ நம்ம முதல்ல ஆராதனா மேடம் தங்கி இருந்த ஹாஸ்டலுக்கு போய் அவங்கள தேடுற மாதிரி சீன் போட்டுட்டு, அப்புறம் நம்ம அவங்கள தேடி அலையும் போது அவங்க நாராயணன் பேலஸ் -லா இருக்கிறது அப்ப தான் நமக்கு தெரிஞ்ச மாதிரி பெரிசா பில்டப் பண்ணலாம். அப்ப தான் மீடியாவோட கவனம் நம்ம பக்கம் திரும்பும். மக்கள் எல்லாரும் இப்ப உங்கள தப்பானவரா நினைச்சுட்டு இருக்காங்க. சோ நீங்க இப்படி ஒரு தங்கச்சி பாசம் சென்டிமென்ட் சிம்பாலிக்கா சீன்  போட்டீங்கன்னா, உங்க  பாக்குறவங்களுக்கு ஒரு சாஃப்ட் கார்னர் வரும்.” என்றவன் அவனுடைய இந்த திட்டத்தின் சாதக, பாதகங்களை, அவனுக்கு விளங்கினான். 

பிரவீன்: சங்கர் சொன்னதை கேட்டு திருப்தியாக புன்னகைத்தவன், “பார்றா… டேய் சங்கரு..!!! என் கூடஇருந்து உனக்கும் கொஞ்சம் அறிவு வந்துருச்சு டா. கீப் இட் ஆப். அப்படியே இந்த அறிவ யூஸ் பண்ணி மத்தவங்களை எப்படி கேடுக்கிறதன்னு மட்டும் யோசிக்காம, நம்ம கம்பெனிய எப்படி லாஸ்ல இருந்து ரெக்கவர் பண்றதுன்னு யோசி.” என்று சொன்னவன் தன்னுடைய காரை ஸ்டார்ட் செய்து கொண்டு ஆராதனா முன்பு தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு விரைந்தான். 

சில நிமிடங்களுக்கு பின்…

திவ்யாவை பார்ப்பதற்காக அவளுடைய ஹாஸ்டலின் அருகே வந்த சிவா, அவளுக்கு கால் செய்து அவளை வெளியே வரும் படி சொன்னான். சிவா அவளுடைய ஹாஸ்டலுக்கு சற்று தொலைவில் தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அவளுக்காக காத்திருந்தான். சில நொடிகளிலேயே அவன் காரின் அருகே கையில் ஒரு கவருடன் திவ்யா அங்கே வந்தாள். அவளைப் பார்த்த சிவா தன்னுடைய காரின் கதவை திறந்து விட்டு, தன்னுடைய கண்களால் அவளை தலை முதல் கால் வரை ஒரு முறை ஸ்கேன் செய்தான்.

வழக்கத்தை காட்டிலும் திவ்யா சற்று உடல் மெலிந்து மிகுந்த விரத்தியும், சோகத்திலும், இருப்பதைப் போல் அவனுக்கு தோன்றியது. அப்படி இவளுக்கு என்ன பிரச்சனை வந்துவிட்டது என்று நினைத்து பயந்தவன், அப்படி ஒரு பிரச்சனை இருக்கும் போது ஏன் இவள் அதை பற்றி தன்னிடம் சொல்லவில்லை…?? என்று நினைத்தும் சில நொடிகளில் அவள் மேல் கோபப்பட்டான். 😒 

 காரின் முன் சீட்டில் சிவாவின் அருகே வந்து அமர்ந்த திவ்யா,  காரின் கதவை சாத்தினாள். அவளை ஒரு சிறு கோபத்துடன் பார்த்து முறைத்த சிவா, “என்ன தான் டி ஆச்சு உனக்கு..??? ஏதாச்சும் சொல்லி தொலையேன்…!!! நீயா எதுவுமே சொல்லாம இருந்தா, எனக்கு என்ன பிரச்சனைன்னு எப்படி தெரியும்..??? எதுக்கு இப்படி எதையோ பறிக்குடுத்த மாதிரி இருக்க…???” என்று காட்டமான குரலில் கேட்டான். 😒 🤨

திவ்யா: “நான் எதையும் பறிக்குடுத்துற கூடாதுன்னு தான், என் உயிரை கைல புடிச்சுகிட்டு இங்க வந்து இருக்கேன். ஆனா உங்களுக்கு அத பத்தி எல்லாம் என்ன கவலை..??? உங்களுக்கு என் மேல கோபப்படுறது, என்ன பயமுறுத்துறது என்னை மிரட்டுறது, இது மட்டும் தானே தெரியும்…!!! எப்பயாவது என் மனசுல என்ன இருக்குன்னு நீங்க யோசிச்சு பாத்திருக்கீங்களா..???” என்று விரக்தியில் கேட்டவள் தன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை அவனுக்கு தெரியாமல் ஒரு பக்கம் திரும்பி துடைத்தவள், “உங்களுக்கு என் மனசுல என்ன இருக்குன்னு புரிஞ்சு இருந்தா தான் பரவாயில்லையே…!!! நீங்க என்ன பத்தி கொஞ்சமாவது யோசிச்சு பாக்கறீங்களான்னும் எனக்கு தெரியல. நீங்க என்ன தான் யோசிக்கிறீங்கன்னும் எனக்கு புரியல. மொத்தத்துல நீங்க நல்லா தெளிவா தான் இருக்கீங்க. நான் தான் இப்படி பைத்தியக்காரி மாதிரி புலம்பிட்டு இருக்கேன்.” என்று சொன்னவள், கோபத்தில் தன்னுடைய முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள். 😒 😏 

சிவா: அவள் பேசியதில் அவனுக்கு பாதி புரிவது போலும், மீதி புரியாதது போலும் இருந்தது. ஒரு வேளை தான் தன்னுடைய காதலை அவளிடம் சொல்லவில்லை என்ற கோபம் அவளுக்கு இருந்தாலும்; அதை பற்றி அவள் தன்னிடம் நேராக கேட்டால் இப்போது கூட தானே அதை அவளிடம் தன்னுடைய காதலை ஒப்புக்கொள்ள தயாராக இருக்கும்போது, இவள் என்ன சம்பந்தம் இல்லாமல் இவ்வளவு கோபப்பட்டு கொண்டு இருக்கிறாள் என்று யோசித்து குழம்பியவன், அவளுடைய முகத்தை தன் பக்கம் திருப்பி அவளுடைய கண்களை நேருக்கு நேராக பார்த்தவன், “நீ சொல்றது கரெக்டு தான். நான் உன் கிட்ட என்னோட மனசுல இருக்குறத சொல்லல தான். ஆனா அதுக்காக ஏன் டி இவ்ளோ கோவப்படுற..??? எனக்கு அது தான் புரிய மாட்டேங்குது. ப்ளீஸ் என்ன ஆச்சுன்னு சொல்லு.” என்று மெதுவான குரலில் கேட்டான். அவனுடைய குரலில் காதலும், அக்கறையும், பொங்கி வழிந்தது. 

அவன் சொன்னதை கேட்டு கடுப்பான திவ்யா, “ஆமா உனக்கு ஒரு மயிரும் புரியாது டா. ஆமா நான் சொல்லல.. அதுக்கு நான் சொல்லலன்னு நீ இத்தன தடவ சொல்றதுக்கு, அத ஒழுங்கா இப்பயாவது நீயே சொல்லித் தொலைய வேண்டியது தானே..??? நீ சொல்லுவ.. சொல்லுவன்னு.. நான் வெயிட் பண்ணிக்கிட்டே இருந்தா, எல்லாமே என் கைய மீறி போயிடும் போல… 

ஆனா நீ முதல்ல சொன்னா தானே டா நல்லா இருக்கும்… நானா எப்படி அத உன்கிட்ட  சொல்றது..???” என்று தன் மனதிற்குள் சொல்லி வருந்தியவள், சலிப்பாக அவனைப் பார்த்து.. “அட போடா.” என்றாள். 

சிவாவிற்கு அவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்றே தெரியவில்லை. 😐 அதனால், “அட போடி..!!!” என்று அவனும் சலித்துக் கொண்டே சொன்னவன், நேராக தன்னுடைய டிரைவர் சீட்டில் வசதியாக சாய்ந்து அமர்ந்தவன் தன்னுடைய இரு கைகளையும் மடக்கி அவனுடைய புடனிக்கு பின்னே வைத்து கொண்டு கண்ணை மூடி படுத்து விட்டான். அவனுடைய அந்த செயல்களை பார்த்து கடுப்பான திவ்யா தன் கையில் இருந்த கவரை தைத்து அவனை சரமாரியாக  நன்கு அடித்து வெளுத்தவள், “டேய் எரும… ஒழுங்கா எந்திரி டா. நான் ஒருத்தி இங்க இவ்ளோ டென்ஷன் ஆகி பீலிங்ல சோகமா உன் கிட்ட பேச வந்தா, நீ பாட்டுக்கு படுத்து தூங்குற..??? சரியான மனசாட்சி இல்லாத மங்கி டா நீ..!!!” என்று சொல்லி அவனை மீண்டும் எழுப்பி அமர வைத்தாள். 

அதை ஒரு பெரிய ஆயுதமாக நினைத்து அந்த கவர் ஐ வைத்து திவ்யா தன்னை அடித்துக் கொண்டு இருந்ததால் அவளுடைய கையில் இருந்து அந்த கவரை பிடுங்கிய சிவா, “அடியேய்… என்ன டி உனக்கு ஏதாவது பேய்… கீயு.. பிடிச்சிருச்சா..??? இத்தனை நாளா என்னமோ சார்.. சார்ன்னு  பம்பிட்டு இருந்த, இப்ப என்னான்னா இப்படி பாய்ஞ்சு.. பாய்ஞ்சு.. அடிக்கிற..??? என்ன பாத்தா உனக்கு பாவமா இல்லையா திவ்யா மா..???” என்று கெஞ்சும் குரலில் கேட்டான். 😔 😞

திவ்யா: தன்னுடைய இரு கைகளையும் அவளுடைய மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டவள் அவனைப் பார்த்து முறைத்த படி, “பின்ன நீ பண்ற வேலைக்கு எல்லாம் உன்னை அடிக்காம, உன்ன தூக்கி வச்சு கொஞ்ச சொல்றியா…??? உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல. உன்ன எல்லாம் எப்படி தான் வருண் சார் அவருடைய மேனேஜரா வச்சிருக்காரோ தெரியல. முதல்ல அந்த கவர ஓபன் பண்ணி பாரு.” என்று கோபமாக சொன்னாள். 😒 🤨 😡

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured