அத்தியாயம் 138: சதி திட்டம் (பார்ட் 1)
நாராயணன் பேலஸில்…
தன்னுடைய ஆடையை கூட மாற்றாமல் வாடிய முகத்துடன் இருந்த தர்ஷினி அங்கு இருந்த தோட்டக்காரர்களை வீட்டுக்கு செல்லுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டு, அவளே அனைத்து செடிகளுக்கும், மரங்களுக்கும், தண்ணீர் பாய்ச்சி கொண்டு இருந்தாள். 😟🚿 அப்போது அவள் அருகே வந்த தர்ஷன், “மேம்” என்று சொல்லி அவளை அழைத்தான். தோட்டக்காரர்கள் தான் அவள் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் மீண்டும் தன்னை அழைக்கிறார்கள் என்று நினைத்த தர்ஷினி, “அண்ணா.. அதான் நான் உங்கள போக சொன்னேன்ல…!!! நானே தண்ணி ஊத்துறனே ப்ளீஸ் விடுங்க.” என்று சொன்னபடியே திரும்பியவள், தன் கையில் இருந்த அதிக வேகத்தில் தண்ணீர் வந்து கொண்டு இருந்த தண்ணீர் டியூப்பை கவனிக்கவில்லை.
அதனால் அதில் இருந்து வந்த தண்ணீர் தர்ஷனை குளிப்பாட்டியது. அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தர்ஷினி வேகமாக தன் கையில் இருந்த டியூப்பை தூக்கி கீழே போட்டவள், “அய்யய்யோ சாரிங்க. தெரியாம இப்டி பண்ணிட்டேன்.” என்று அவசரமான குரலில் சொன்னாள். 😨 நாம் வெட்டப் போவதற்கு முன் ஆட்டின் மேல் தண்ணீர் தெளித்தால் அது எப்படி துளிர்க்குமோ, அதேபோல் தன்னுடைய தலையை சிலப்பிய தர்ஷன், “இட்ஸ் ஓகே. நோ ப்ராப்ளம். அடிக்கிற வெயிலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று தடவ குளிச்சா ஒன்னும் தப்பில்ல. நீங்க டென்ஷன் ஆகாதீங்க” என்று சிறு புன்னகையுடன் சொன்னான். 😁 😁 😁 அவன் தன்னுடைய தலையை ஆட்டியதில் அதில் இருந்த தண்ணீர் துளிகள் தர்ஷினியின் முகத்தில் வந்து விழுந்தது. 💦 அதை தன்னுடைய ஒரு கையால் துடைத்தவள், ஃபார்மாலிட்டிக்காக அவனைப் பார்த்து புன்னகைத்தாள். 😁 😁 😁
தன் கையில் இருந்த ஒரு உணவு பார்சலை தர்ஷினியின் முன் நீட்டிய தர்ஷன், “நீங்க எப்படியும் அங்க திரும்ப சாப்பிட்டு வந்திருக்க மாட்டீங்கன்னு, நான் உங்களுக்காக தான் சாப்பாடு வாங்கிட்டு வந்தேன். இந்தாங்க போய் முதல்ல சாப்பிடுங்க. அப்புறமா இந்த வேலை எல்லாம் பாத்துக்கலாம்.” என்று அக்கறையுடன் சொன்னான். ஒரு ஆணிடம் இருந்து கிடைக்கும் இந்த மாதிரியான அக்கறை அவளுக்கு மிகவும் புதிது. அதனால் அவனை ஆச்சரியமாக பார்த்தவள், “இதை நீங்க நெஜமா எனக்காக தான் வாங்கிட்டு வந்தீங்களா…???” என்று நம்ப முடியாமல் கேட்டாள். 😦
தர்ஷன்: தன்னுடைய ஈரத் தலையில் ஒரு கையை வைத்தவன், “அம்மா சத்தியமா உங்களுக்கு தாங்க வாங்கிட்டு வந்தேன். ப்ளீஸ் இத வாங்கிட்டு போய் சாப்பிடுங்க.” என்றான்.
தர்ஷினி: “இல்லையே… நான் சாப்பிடலைன்னு உங்களுக்கு யார் சொன்னது..??? நான் அங்கயே நல்லா சாப்பிட்டு தான் வந்தேன்.” என்று பொய் சொன்னாள்.
தர்ஷன்: “அதான் உங்களுக்கு ஒழுங்கா போய் கூட சொல்ல தெரியலல்ல…!! அப்புறம் ஏன் இப்படி பச்சையா பொய் சொல்றீங்க..??? உங்க ஃபேஸ பாத்தாலே நீங்க சாப்பிடலைன்னு நல்லா தெரியுது.” என்று உறுதியான குரலில் சொன்னான்.
தர்ஷினி: தன்னுடைய முகத்தில் ஒரு கையை வைத்து தொட்டுப் பார்த்தவள், “முகத்தை பாத்தாலே அதெல்லாம் கூட தெரியுமா என்ன..??? எப்படி நீங்க இத எல்லாம் உடனே உடனே கண்டுபிடிக்கிறீங்க..?? அன்னைக்கு நைட்டு கூட நான் தூங்காம இங்க வந்து நின்னுட்டு இருந்தப்போ, கரெக்டா நான் சோகமா இருக்கேனான்னு கேட்டீங்க. இன்னைக்கு நான் சாப்பிடலைன்னு கண்டுபிடிச்சீங்க. உங்களுக்கு ஏதாவது மாயாஜால வித்தை தெரியுமா..??? ” என்று ஆச்சரியமான குரலில் அப்பாவித்தனமாக கேட்டாள். 😨 😦
தர்ஷினியின் சாந்தமான முகமும், அனைவரிடமும் பாசமாக பழகும் அவளுடைய குணமும், தன் சோகத்தை மறைத்துவிட்டு எப்போதும் அவளுடைய முகத்தில் அவள் மாஸ்க் போல் அணிந்து இருக்கும் ஒரு புன்னகையும், அவளுடைய இந்த மாதிரியான அப்பாவித்தனமான செய்கைகளும், தர்ஷினை தேவ தர்ஷணியின் பக்கம் காந்தம் போல் ஈர்த்தது. 😍 அதனால் அவளை காதலுடன் பார்த்தவன், “ஆமா இது ஒரு மேஜிக் தான். இந்த மேஜிக் எல்லார் கூடையும் நடக்காது. சிலர பார்த்த உடனே நமக்கு எதுக்குன்னே தெரியாம டக்குனு அவங்கள ரொம்ப பிடிச்சு போயிடும். முதல் தடவ பாக்கும்போதே அவங்க கூட ரொம்ப வருஷம் பழகின மாதிரி ஒரு ஃபீல் வரும். அவங்க சொல்லாமலே அவங்க மனசுல இருக்குற எல்லா நமக்கு புரியும். நம்மள சுத்தி எத்தனை பேர் இருந்தாலும் நம்ம கண்ணு அவங்களை மட்டும் தான் தேடும். அந்த மாதிரி ஒரு மேஜிக் எனக்கு உங்க கூட தான் என் லைஃப்ல இப்ப தான் ஃபர்ஸ்ட் டைம் நடக்குது.” என்று தன் மனதில் இருந்தவற்றை அப்படியே அவளிடம் சொன்னான். 😍 ❤️ 💫 🌟 ✨
தர்ஷனின் ஒவ்வொரு வார்த்தைகளும் அவளுடைய மனதை தொட்டது. ஆனால் அவன் சொன்னதில் பாதிக்கு மேல் என்ன அர்த்தம் என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், உடைந்து போய் சுக்கு நூறாக கிடந்த அவளுடைய இதயத்திற்கு அது இதமான மருந்தாக இருந்தது உண்மை தான். 😍 ❤️ அதனால் அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்தவள், அவன் கையில் இருந்த உணவுகளை வாங்கிக் கொண்டு, “தேங்க்ஸ். இந்த உலகத்துல என்ன பத்தியும் யோசிக்கிறதுக்கு ஒரு ஆள் இருக்காங்கன்னு எனக்கு இப்ப தான் தெரியுது.” என்று உற்சாகமான குரலில் சொன்னாள். 😍 😁 😁 😁
தர்ஷன்: அவளைப் பார்த்து சிறு வெட்கத்துடன் புன்னகைத்தவன், “நான் இப்படி சொன்னா நீங்க கோச்சிக்குவீங்களானு தெரியல. உண்மைய சொல்லனும்னா நான் உங்கள முதல் தடவ பாத்ததுல இருந்து இப்ப வரைக்கும், உங்கள பத்தி மட்டும் தான் நெனச்சுக்கிட்டே இருக்கேன். ஏன்னு தெரியல, எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு. நீங்க ரொம்ப அமைதியா, ஹோம்லியா, அழகா, ட்ரெடிஷனலா இருக்கீங்க.
இந்த சாரில காலையில் உங்கள பார்க்கும்போது, அப்படியே கோயில்ல இருந்து இறங்கி வந்த சாமி மாதிரி இருந்தீங்க. உங்கள கையெடுத்து கும்பிடலாம் போல தோணுச்சு. 🙏 நான் ஏதோ ஓவரா பேசுறேனு நினைச்சா, ப்ளீஸ் என்ன மன்னிச்சிடுங்க. என்னால என் மனசுல இருக்குறத உங்கிட்ட சொல்லாம இருக்க முடியல.” என்று காதல் பொங்கும் கண்களுடன் அவளுடைய கண்களை நேராக பார்த்துச் சொன்னான். 😍 🥰 👩❤️👨
அவன் சொன்னதை கேட்ட தர்ஷணியின் இதயம் படபடத்தது. அவளால் தர்ஷனையும் கண்களில் இருந்து வரும் கதிர்வீச்சை தாங்க முடியவில்லை. ☺️ அதனால் அவனுடைய பார்வையை தவிர்த்து தன்னுடைய முகத்தை வேறு புறமாக திருப்பிக் கொண்டாள். ☺️ அவளுடைய செய்கையை பார்த்து குலம்பிய தர்ஷன், “உங்களுக்கு நான் இப்படி உங்ககிட்ட பேசுனது புடிக்கலைன்னா, அத என்கிட்டயே டைரக்டா சொல்லிடுங்க. இனிமே நான் உங்கள டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். ஆனா அதுக்காக இத பத்தி விஷ்வா சார் கிட்டையோ, ஹரி சார் யார்கிட்டயோ, சொல்லிடாதீங்க. அவங்க என்னை தப்பா நினைச்சுட்டாங்கனா, அத என்னால தாங்க முடியாது.” என்று நிஜமான வருத்தத்துடன் சொன்னான். 😔 😞
தர்ஷினி: வேகமாக அவன் புறம் திரும்பியவள், “சேச்சே புடிக்கலைன்னு எல்லாம் இல்ல. இத போய் நான் எதுக்கு அவங்க கிட்ட சொல்ல போறேன்..!!! எனக்கு உங்ககிட்ட என்ன பாதில் சொல்லணும், எப்படி சொல்லணும்னு, தெரியல. இப்படி எல்லாம் என்கிட்ட யாரும் பேசினதில்ல. நானும் யார்கிட்டயும் பேசினது இல்ல. இது புதுசா இருக்கு, ஆனா நல்லா தான் இருக்கு.” என்று அவளும் சிறு வெட்கத்துடன் சொன்னாள். 😍 😌
அவள் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த தர்ஷன் திருப்தியாக அவளை பார்த்து புன்னகைத்து விட்டு, தன்னுடைய கார்டை அவளிடம் கொடுத்தவன், “இதுல என்னோட நம்பர் இருக்கு. உங்களுக்கு என் கூட பேசணும்னு தோணுச்சுன்னா, கால் பண்ணுங்க. இல்லைனா ஒரு மெசேஜ் ஆவது பண்ணுங்க… அது போதும். நான் வெயிட் பண்றேன்.” என்றான். 😁😁 😁
தர்ஷினி: “ஆனா, நான் அதிகம் படிக்காதவ. எனக்கு இங்கிலீஷ்ல எல்லாம் மெசேஜ் பண்ண தெரியாது. யார்கிட்டயாவது ஏதாவது சொல்லனும்னா கூட தமிழ்ல தான் மெசேஜ் இல்லைனா, வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி அனுப்புவேன்.” என்று பாவமாக தன்னுடைய முகத்தை வைத்து கொண்டுு சொன்னாள். 😒 😞
தர்ஷன்: அவளுடைய இன்ஃபபிரியாவிட்டி காம்ப்ளக்ஸ் புரிந்து கொண்டவன், “அட படிப்புல என்னங்க இருக்கு..?? மனுஷனுக்கு மனசு தான் முக்கியம். அப்புறம் தமிழ்நாட்டுல இருந்துகிட்டு தமிழ்ல பேசுறதுல என்ன தப்பு..??? நம்ம தாய் மொழிய நமக்கு பேச தெரியலைனா, தான் அத நினைச்சு நம்ம வருத்தப்படணும். என்ன தான் கிளாஸா மாஷா நிறைய வந்தாலும்; எனக்கு நம்ம ஊரு ஆட்கள், மன் மனம் மாறா மக்கள், அவங்களுடைய கள்ளம் கபடம் இல்லாத மனசு, அவங்க கிட்ட இருந்து கிடைக்கிற உண்மையான பாசம் எல்லாமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.” என்று பெரியதாகஃபீல் செய்து சொன்னான்.
தர்ஷினி: “அது சரி போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது. நீங்க ஈரத்துல ரொம்ப நேரம் இருக்காதீங்க. போய் முதல்ல தலையை துவடைங்க. இல்லைனா உடம்பு சரி இல்லாம போயிடும். நானும் போய் சாப்பிடுறேன். உங்க கூட பேசி இன்னும் டயட் ஆகி எனக்கு ரொம்ப பசிக்குது.” என்று சொன்னவள், தண்ணீர் பைப்பை ஆப் செய்து விட்டு தன்னுடைய அறைக்கு மகிழ்ச்சியாக சென்றாள். 😍 🥰
செல்பவளின் பின்னழகை அவள் தன் கண்களில் இருந்து மறையும் வரை பார்த்து ரசித்த தர்ஷன், உடை மாற்றுவதற்காக தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)