Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 136

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 136

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 136: என் உயிர் உங்களுடையது தேவி (பார்ட் 1)

ராகவியின் வீட்டில்…

பெரியவர்கள் இணைந்து விஷ்வா மற்றும் ராகவியின் திருமணத்தை உறுதி செய்த பின், அவர்களை ஜோடியாக சோபாவில் அமர வைத்து பார்த்து ரசித்தனர்.😍 அப்போது விஷ்வாவும், ராகவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, அந்த அழகான காட்சியை விஷ்ணு தன்னுடைய மொபைல் போனில் இருந்த கேமராவில் படம் பிடித்தான். செண்பகத்திற்கு இப்போது தான் மன நிறைவாக இருந்தது. 

அதனால் தன் அருகில் நின்று கொண்டு இருந்த ரேவதியின் கைகளில் பாசமாக பிடித்துக் கொண்டவள், “எனக்கு இவங்கள இப்படி ஒண்ணா பாக்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குங்க அண்ணி. இன்னைக்கு என் மனசு நிறைஞ்சிருக்கு. நாங்க போயிட்டு வரோம். நீங்களும் மாப்பிள்ளை வீடு பாக்குறதுக்கு நம்ம வீட்டுக்கு வரணும்.” என்றாள். 

ரேவதி: “என்ன சம்மதி அம்மா அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்றீங்க..??? காலையிலயே நேரமா எந்திரிச்சு, நானும் ராகவியும் சமைச்சு வச்சுட்டோம். சாப்பாடு எல்லாம் ரெடியா இருக்கு. நீங்க சாப்பிடாம யாரும் இங்க இருந்து கிளம்ப கூடாது.” என்று உரிமையாக சொன்னாள்.

ரேவதியின் அன்பு கட்டளையை செண்பகத்தால் நிராகரிக்க முடியவில்லை. அதனால் அவளைப் பார்த்து அன்பாக புன்னகைத்தவள், “சரிங்க அண்ணி நாங்க இருந்து சாப்பிட்டுட்டே போறோம். நான் ஒரு நல்ல நாளா பாத்து சொல்றேன். அப்ப நீங்களும், அண்ணனும், ராகவிய கூட்டிகிட்டே நம்ம வீட்டுக்கு வாங்க. அப்போ ஜோசியர வர சொல்லி நல்ல நாளும் பாத்துடலாம். அன்னைக்கு நீங்க விருந்து சாப்பிடாம அங்க இருந்து கிளம்ப கூடாது பாத்துக்கோங்க.” என்று அவளும் உரிமையாக சொல்ல அதை கேட்டு புன்னகைத்த ரேவதி, “கண்டிப்பா நாங்க வரோம். சாப்பிடாம அங்க இருந்து கிளம்ப மாட்டோம். இப்ப வாங்க… நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன் எல்லாரும் சாப்பிடலாம்.” என்று பாசமாக அழைத்தாள். 

“எனக்கு பசிக்கல அம்மா. நாளைக்கு எனக்கு செமஸ்டர் எக்ஸாம் வேற இருக்கு. நான் வீட்டுக்கு போய் படிக்கிறேன்.” என்று ஏதோ ஒரு காரணத்தை தயாரித்து செண்பகத்திடம் சொன்ன பிராத்தனா, அங்கு இருக்க பிடிக்காமல் தன்னுடைய வீட்டிற்கு சென்று விட்டாள். அவள் இங்கே இருந்து ஏதும் தேவை இல்லாத பிரச்சினைகளை செய்து கொண்டு இருப்பதற்கு அவள் கிளம்புவதே மேல், என்று நினைத்த அவளுடைய குடும்பத்தினர்கள் யாரும் அவளை தடுக்கவில்லை.

கல்யாண வீடுகளில் தரையில் சாப்பிட அமர்பவர்களுக்கு தரையில் விரிப்பதற்காக பயன்படுத்தும் பாய்களை வாடகைக்கு வாங்கி வைத்து இருந்த சுதாகர், அதை ஹாலில் இருந்து சுவற்றின் ஓரத்தில் விரித்து அதன் மேல் ஒரு புதிய வெள்ளை துணியையும் விரித்து தங்களால் முடிந்தவரை அனைத்தையும் நேர்த்தியாக செய்ய முயற்சித்தார். செண்பகத்தால் தரையில் அமர முடியாது என்பதால் வீல்சேரில் அமர்ந்து இருந்த செண்பகத்திற்கு மட்டும் ஒரு புதிய தட்டில் உணவு பரிமாறிய ரேவதி, மற்றவர்களை அந்த விரிப்பில் அமர வைத்து தலைவாழை இலையை வரிசையாக கொண்டு வந்து தரையில் போட்டுக் கொண்டு இருந்தாள். 

ஷாலினி ஒரு சொம்பில் தண்ணீரைக் கொண்டு வந்து அந்த இலையில் வரிசையாக தெளித்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் விஷ்ணுவின் இலையில் தண்ணீர் தெளிக்கும்போது வேண்டுமென்றே, “நல்லா குனிஞ்சு ஒழுங்கா தண்ணி தெளி. அப்ப தான் இலையில இருக்கிற அழுக்கெல்லாம் போகும்.” என்று விஷ்ணு நக்கலாக சொல்ல, அதைக் கேட்டு கடுப்பான ஷாலினி, “அங்க விட… இங்க தான் அழுக்கு நிறைய இருக்கு.” என்றவள் போற போக்கில் விஷ்ணுவின் முகத்திலும் தண்ணீரை தெளித்து விட்டு சென்றாள். அதை கவனித்த ஹரி, “வாய் இருக்குன்னு பேசிக்கிட்டே இருக்கல… இதெல்லாம் உனக்கு தேவை தான் டா.” என்று சொன்னவன், பலமாக சிரிக்க தொடங்கினான். 😂 😂 😂 “விஷ்ணு.. அழுக்கு பையன்.” என்று தன் பங்கிற்கு சொன்ன சித்தார்த்தம் ஹரியுடன்  சேர்ந்து சிரித்தான். 😂 😂 😂

“வாட் எ கிரேட் இன்ஸ்டன்ட்.” என்று முணுமுணுத்த விஷ்ணு தன்னுடைய ஒரு கையால் தன்னுடைய முகத்தில் இருந்த நீரை துடைத்தவன், சாப்பிடும் ஆர்வத்தில் இருந்ததால்  பெரிதாக எதையும் கண்டு கொள்ளவில்லை. பரிமாறுவதற்கு ஆட்கள் குறைவாக இருந்ததால், ராகவியும் உணவு பரிமாறுவதற்காக வந்தாள். அவளை கவனித்த சித்தார்த், “நீயும் வா ராகா அம்மா. நான் உன் கூட தான் சாப்பிடுவேன். எனக்கு நீதான் ஊட்டி விடணும்.” என்று சொல்லி அடம் பிடித்தான். 

அதனால் விஷ்வாவிற்கும், சித்தார்த்திற்கும், நடுவே அமர்ந்து இருந்த தர்ஷினி எழுந்து கொண்டவள்; “நீங்க இங்க வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க. அவன் அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான்னா, யார் சொன்னாலும் கேட்க மாட்டான். இங்க இருக்கிற எல்லாருமே நம்ம வீட்டு ஆளுங்க தானே..!! யார் பரிமாறினா என்ன…?? நான் பரிமாறுறேன். நீங்க வாங்க. விஷ்வா மாமா பக்கத்துல உக்காந்து சாப்பிடுங்க.” என்று வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் சொல்ல, “இல்ல பரவால்ல. நீங்க சாப்பிடுங்க. சாப்பிட உட்கார்ந்துட்டு நீங்க ஏன் எந்திரிக்கிறீங்க..???” என்று ராகவி சொல்லிக் கொண்டு இருக்க அவர்களுடைய சம்பாசனைக்குள் குறுக்கிட்ட சித்தார்த், “ப்ளீஸ் ராகா அம்மா, என் பக்கத்துல வந்து உட்காரு. இல்லைனா நான் சாப்பிடவே மாட்டேன் பாத்துக்கோ.” என்று கெஞ்சும் தோரணையில் பாவமாக தன் முகத்தை வைத்து கொண்டு கேட்டான். 😟

அதனால் வேறு வழியின்றி ராகவி தர்ஷனின் இடத்தில் சென்று அமர்ந்தாள். இப்போது ஹரியின் அருகே விஷ்வா அமர்ந்து இருக்க, விஷ்வாவிற்கும் சித்தார்த்திற்கும் அருகே ராகவி அமர்ந்து இருந்தாள். கையில் ஒரு சாப்பாட்டு பேசனுடன் அங்கே வந்த தர்ஷினி அவர்கள் மூவரும் ஒரே குடும்பமாக அமர்ந்து இருப்பதை பார்த்து தனக்குள் புன்னகைத்தவள் தன் கையில் இருந்த சாப்பாட்டை ஒரு கணம் பார்த்துவிட்டு, “என்னோட தகுதி இவ்ளோ தான் போல. யார் யாருக்கு என்னென்ன கிடைக்கணும்னு இருக்கோ, அது தானே கிடைக்கும்.” என்று தனக்குள் நினைத்தவள், மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் அன்பாக உணவு பரிமாற தொடங்கினாள். 😁 😁 😁

இன்னொரு வரிசையில் தர்ஷன், சிவா, தாரா, சோபியா மற்றும் ஆதித்யா அமர்ந்து இருந்தனர். தன் அருகே அமர்ந்து இருந்த சோபியாவை பார்த்து கண்ணடித்த ஆதித்யா, “எனக்கு எப்ப டி ஓகே சொல்ல போற..???” என்று காதல் பொங்கும் குரலில் சோபியாவின் காதுகளில் கிசுகிசுத்தான். 😍 😉

சோபியா: “இப்ப நீ எத பத்தி கேக்குற..???” என்று எதுவும் தெரியாதவளை போல் அமைதியான குரலில் கேட்டாள். 

ஆதித்யா: “போதும் ரொம்ப நடிக்காத.” என்று கடுப்பாக சொன்னவன், வேறு புறமாக தன்னுடைய முகத்தை திருப்பிக் கொண்டான். 😏

சோபியா: அவனுடைய செய்கைகளை பார்த்து தனக்குள் ரசித்தவள்; வெளியில் தன்னுடைய முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு அவனுடைய தோளில் லேசாக தட்டி அவனை அழைத்தவள், “நீ பாட்டு லூசுத்தனமா கேள்வி கேட்டுட்டு நான் புரியலைன்னு சொன்னா, நீ என்னவே நடிக்கிறேன்னு சொல்றியா..???” என்று அவனைப் பார்த்து முறைத்த படி கேட்டவள், தன்னுடைய இடுப்பில் அவள் சொருகி வைத்து இருந்த துப்பாக்கியை தன்னுடைய கண்களால் சைகை செய்து அவனுக்கு காட்டியவள், “மவனே…!! இன்னொரு தடவை இந்த மாதிரி தேவை இல்லாம என் கிட்ட வந்து உளறிட்டு இருந்தேன்னு வையேன், யோசிக்கவே மாட்டேன். பட்டுன்னு என் கன் ஐ எடுத்து உன் வாயிலயே பொட்டுன்னு சுட்டுட்டு போயிட்டே இருவேன் பாத்துக்கோ.” என்று எரிச்சலான குரலில் சொன்னாள். 😒 🤨

அவள் சொன்னதைக் கேட்டு சிறிதும் அலட்டிக் கொள்ளாத ஆதித்யா; தன்னுடைய ஆள்காட்டி விரலை வைத்து தன்னுடைய இதயத்தை சுட்டிக்காட்டியவன் பின் அவளை சுட்டிக்காட்டி, “என்னுடைய உயிர் உங்களுடையது தேவி. வேண்டும் என்றால் நீங்களே அதை கொள்ளுங்கள். உங்கள் கைகளில் அடியேன் சந்தோஷமாக செத்து மடிவேன்.” என்று தன் வாயில் இருக்கும் அனைத்து பற்களும் தெரியும் வண்ணம் பெரிதாக புன்னகைத்த படி சொன்னான். 😁 😁 😁

அவன் சொன்னதைக் கேட்டு அவனுடைய வாயிலயே பட்டென்று தன்னுடைய ஒரு கையால் சிறிய குழந்தைகளை அடிப்பது போல் அவனை அடித்த சோபியா, “இந்த வாய வச்சு தான் டா நீ எல்லாம் வாழ்ந்துட்டு இருக்க. இந்த வாய் மட்டும் உனக்கு இல்லைன்னு வச்சுக்கோவே, உன்னையெல்லாம்  நாய் தூக்கிட்டு போயிடும்.” என்று சிறு புன்னகையுடன் சொன்னாள். ☺️ 😁

ஆதித்யா: தன்னுடைய தட்டையான சிக்ஸ் பேக்ஸ் வயிற்றையும், முறுக்கேரிய புஜங்களையும் சுட்டி காட்டியவன், “இங்க பாரு ஜிம்முக்கு எல்லாம் போய், இந்த பாடிய எப்படி பிட் ஆ ஏத்தி வச்சிருக்கேன்..!!! என்ன போய் ஈஸியா நாய் தூக்கிட்டு போயிடும்னு சொல்ற…???” என்று கேட்டவன், கோபத்தில் தன்னுடைய உதட்டை கோணலாக வளைத்து அவளுக்கு பலிப்பு கட்டினான். 😏

“அட போடா லூசு.” என்று சிரித்துக் கொண்டே சொன்ன சோபியா அதற்கு மேல் அவனை கண்டுகொள்ளாமல் சாப்பிட தொடங்கினாள். தர்ஷன், தேவ தர்ஷினியின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்துக் கொண்டு இருந்தான். தர்ஷினி தன் கையில் சாப்பாட்டுடன் வந்தால் உடனே அவளை அழைத்து தனக்கு சாப்பாடு வேண்டும் என்று கேட்பான். அடுத்த முறை அவள்தன் கையில் குழம்பு வைத்து இருந்தால், அந்த குழம்பு வேண்டும் என்று கேட்டு வாங்கிக் கொள்வான். பின் அவள் தன்னை கடந்து செல்லும்போது வேண்டுமென்றே தன்னுடைய கிளாஸில் மீதம் இருக்கும் அனைத்து தண்ணீரையும் குடித்துவிட்டு அவளை அழைத்து தண்ணீர் வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தான்.

தான் எத்தனை முறை எது வேண்டும் என்று கேட்டாலும், அதை சலிக்காமல் முகம் மலர செய்து கொடுக்கும் தர்ஷினியை அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. ரேவதி சூடாக அப்பளங்களை பொரித்துக் கொடுக்க அதை ஒரு தட்டில் எடுத்து போட்டு கொண்டு வெளியே எடுத்து வந்த ஷாலினி, ஒவ்வொருவரின் இலையிலும் அதை வைத்துக் கொண்டு இருந்தாள். அப்போது அவள் விஷ்ணுவின் அருகே வர, “எனக்கு இரண்டு அப்பளம் வேணும்.” என்று சிறு குழந்தை போல் கேட்டான் விஷ்ணு. விஷ்ணு அப்படி கேட்டதால், “அப்ப எனக்கும் ரெண்டு அப்பளம் வேணும் ஷாலி” என்று சித்தார்ததும் கேட்டான். 

அவர்கள் இருவரையும் பார்த்து அழகாக புன்னகைத்த ஷாலினி, “இந்த விஷ்ணு பாக்குறதுக்கு தான் நல்லா எருமை மாடு மாதிரி வளர்ந்து இருக்கான். ஆனா இவனும், சித்தார்த்தம், ஒரே மாதிரி தான் இருக்காங்க.” என்று தனக்குள் நினைத்து புன்னகைத்தவள் அவர்கள் கேட்டப்படியே இருவருக்கும் இரண்டு இரண்டு அப்பளங்களை வைத்துவிட்டு, மற்றவர்களுக்கும் அப்பளங்களை வைக்க சென்றாள். 😁 😁

வழக்கம்போல் சித்தார்த் சரியாக சாப்பிடத் தெரியாமல், மேலேயும் கீழேயும் உணவுகளை சிந்திக் கொண்டு இருந்தான். அதை கவனித்த ராகவி அவனுக்கு ஊட்டி விட தொடங்கினாள். அவள் அருகே அமர்ந்து கொண்டு அதைப் பார்த்த விஷ்வாவின் வயிறு பொறாமையில் பற்றி எரிந்தது. 😡 🔥 தன் மகன், பெற்ற தந்தை தன் அருகே அமர்ந்து சாப்பிடுவதற்கு கூட பயந்து நடுங்கும் போது; இப்படி யாரோ ஒருவள், ஊட்டி விட  இப்படி மகிழ்ச்சியாக அவன் சாப்பிடுவதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 😒 

அதனால் கடுப்பான விஷ்வா, தன் கை நிறைய உணவுகளை எடுத்து தன் வாய் நிறைய போட்டு வேகவேகமாக  உன்ன தொடங்கினான். அதனால் அவனும் மேலையும் கீழையும் உணவுகளை சிந்தி கொண்டு சாப்பிட்டான். அதை கவனித்த சித்தார்த், “ராகா அம்மா, அங்க பாரு. என்ன மாதிரியே அப்பாவுக்கும் சாப்பிட தெரியல. அவரும் கீழே சிந்திக்கிட்டே சாப்பிடுறாரு. நீ அவருக்கும் ஊட்டி விடு. அவரும் பாவம்ல. பசிக்கும்.” என்று தன்ம ழலை குரலில் ராகவியை பார்த்து அப்பாவியாக சொன்னான். அதைக்கேட்ட விஷ்வாவிற்கு ஒரு நொடியில் பொறையே ஏறிவிட்டது. 

அதனால் அவன் வேகமாக இரும்பி கொண்டு இருக்க, அவனுடைய கண்களில் இருந்து இரண்டு சொட்டு கண்ணீர் கூட வந்தது. அதனால் தன் அருகே இருந்த தண்ணீர் கிளாசை எடுத்து அவன் முன்னே நீட்டினாள் ராகவி. சித்தார்த் சொன்னதை கேட்டு, விஷ்வாவை பார்த்து அங்கு இருந்த அனைவரும் சத்தமாக சிரிக்க தொடங்கிவிட்டனர். 😂 😂 😂 புன்முறுவலுடன் ராகவியை பார்த்த செண்பகம், “ஆமாம்மா. என் பேரன் சொன்னது கரெக்டு தான். நீ உன் பையனுக்கு மட்டும் ஊட்டி விடுறியே… அப்ப என் பையன் மட்டும் பாவம் இல்லையா..??? அவனுக்கும் ஊட்டி விடு.” என்று கிண்டலாக சொன்னாள். 😂 😂 😂

“ஆமா எங்க அண்ணா பாவம். ஊட்டி விடுங்க அண்ணி.” என்று விஷ்ணுவும் சொல்ல, அங்கு இருந்த அனைவரும் அவனை வழிமொழிந்தனர். சித்தார்த் மீண்டும், “ஊட்டி விடு ராகா அம்மா.” என்று சொல்ல வேறு வழி இல்லாமல் ராகவி தன் இலையில் ஓரமாக தன் கைப்படாமல் இருந்த சாதத்தை எடுத்து விஷ்வாவின் முன் நீட்ட, அவளை பார்த்து முறைத்த விஷ்வா, தன்னுடைய மகனுக்காக வேறு வழி இன்றி அதை தன் வாயில் வாங்கிக் கொண்டு சாப்பிட்டான். தந்தை, மகன், இருவருக்குமே தாயாக மாறிய ராகவி; அவர்கள் இருவருக்கும் உணவுகளை ஊட்டி விட்ட பின் தான் சாப்பிமுடித்துவிட்டு அங்கு இருந்து எழுந்தாள். 

இதற்கு மேலும் ராகவியின் முகத்தை பார்த்துக்கொண்டு அங்கே இருக்க விஷ்வாவிற்கு பிடிக்கவில்லை. அதனால், தனக்கு முக்கியமான மீட்டிங் இருப்பதாக சொன்ன விஷ்வா, சிவாவை கூட்டி கொண்டு அங்கு இருந்து கிளம்பினான். சோபியா அங்கே இருந்ததால், கிளம்ப மனம் இன்றி அவளுடனே இருந்தான் ஆதித்யா. சிறிது நேரத்திற்கு பின் ஹரியும் தர்ஷன் உடன் அங்கு இருந்து கிளம்பி விட, செண்பகம் ராகவியின் பெற்றோர்களுடன் சிறிது நேரம் திருமணத்தைப் பற்றி விவாதிவிட்டு விட்டு அவளும் அங்கு இருந்து தாரா, சோபியா மற்றும் தர்ஷினியுடன்  கிளம்பினாள். ஷாலினி அங்கே இருந்ததால் அவளுடனே தன்னுடைய நேரத்தை செலவிட விரும்பிய விஷ்ணு, அவனும் அவர்களுடன் அங்கேயே இருந்து கொண்டான். ராகவி பரிமாற, ராகவியின் பெற்றோர்கள் ஷாலினியுடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்க, “எனக்கும் இலை போடுங்க. நான் என் ஆளோட இன்னொரு தடவை சாப்பிடுறேன். நீங்க மட்டும் உங்க ஆளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டீங்கல்ல.. அதே மாதிரி இப்ப நானும் என் ஆளுக்கு சாப்பாடு ஊட்டி விடுவேன்.” என்று சொன்ன விஷ்ணு ஷாலினியின் அருகே சென்று அமர்ந்து கொண்டான். 😍 ❤️

அவன் சொன்னதைக் கேட்டு தன் தலையில் அடித்துக் கொண்ட ஷாலினி விஷ்ணுவின் தொடையில் நன்றாக கிள்ளி வைத்தவள், “ஏன் டா இப்படி அம்மா அப்பா முன்னாடி என் மானத்தை வாங்குற..??” என்று மெல்லிய குரலில் கேட்க, அவள் கில்லிய இடத்தில் தேய்த்தபடியே… “பாருங்க அம்மா உங்க பொண்ணு நான் ஆசையா ஊட்டி விடுறேன்னு சொன்னதுக்கு இப்படி என்ன கிள்ளி வைக்கிறா… சரியான ராட்சசிய வளர்த்து வச்சிருக்கீங்கங்க நீங்க.” என்று விளையாட்டாக கம்ப்ளைன்ட் செய்தான் விஷ்ணு. “நான் ராட்சசியா டா உனக்கு…???” என்று கேட்ட ஷாலினி மீண்டும் விஷ்ணுவின் தலையின் நங் என்று கொட்டினாள். 😒

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் என்ற பேஸ்புக் குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured