Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 133

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 133

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 133: என்னை வருண்னே கூப்பிடு (பார்ட் 2)

வருணிற்கு சித்தார்தின் மீது எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை தனக்கும் இருக்கிறது என்று கூட யோசிக்கும் அளவிற்கு சித்தாரத்துடன் ஒன்றி போயிருந்தாள் ரித்திகா. 

அதனால் சித்தார்த் தன்னை அணைத்தவுடன் பாசமாக கீழே குனிந்து அவனை தூக்கி தன்னுடைய இடுப்பில்  அமர்த்தி வைத்து கொண்ட ரித்திகா, அவனுடன் சகஜமாக பேசி விளையாட தொடங்கினாள். அதைப் பார்த்த செண்பகமும், ரித்திகாவின் பெற்றோர்களும், மகிழ்ச்சியாக புன்னகைத்தனர். 😁 😁 😁 ஆனால் வருண்னி மனநிலையோ வேறு விதமாக இருந்தது . நியாயமாக தன்னுடைய மகனை தன்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறவள் சித்தியாக இல்லாமல், சொந்த அம்மாவாக பார்த்துக் கொள்கிறாளே என்று நினைத்து அவன் மகிழ்ச்சி அடைந்து இருக்க வேண்டும். 

ஆனால் அவனோ ரித்திகாவும், சித்தார்த்தையையும், இப்படி உண்மையான அம்மா மகனைப் போல் மகிழ்ச்சியாக ஒன்றாக இருவரும்  நெருக்கமாக இருப்பதை பார்த்து எரிச்சல் அடைந்தவன்   பொறாமையில் பற்றி எரிந்து கொண்டு இருந்தான். 🙁 😡 🔥 சித்தார்த்தை பெற்ற தந்தை தான் இங்கு அவன் அருகே இருக்கும்போது, எப்போதும் அவன் தன்னை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. ஆனால், இவளை மட்டும் ஏன் தன்னுடைய தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டு இருக்கிறானே என்று யோசிக்கும்போதே அவனுக்கு சித்தரத்தின் மீது இருக்கும் பாசம், ரித்திகாவின் மீது வெறுப்பாய் மாறியது. 😒 

சில நொடிகளுக்கு முன் தன் கண்களுக்கு அழகியாக தெரிந்த ரித்திகா இப்போது தன் மகனை தன்னிடம் இருந்து பிரிக்க வந்த அரக்கியாக வருண்னின் கண்களுக்கு தெரிந்தாள். 😡 இதற்கு மேலும் அவனால் அவர்களுடைய அம்மா பாசம் சென்டிமென்ட் காட்சிகளை எல்லாம் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. அதனால் முதலில் தான் இங்கு வந்த வேலையை செய்து முடிக்க வேண்டும் என்று நினைத்தவன் செண்பகத்தின் காதுகளில், “அம்மா நான் அவகிட்ட கொஞ்சம் தனியா பேசணும். நீங்க அவங்க அப்பா, அம்மா, கிட்ட சொல்லுங்க.” என்றான். 

இவன் ரித்திகாவிடம் தேவை இல்லாதது எதையாவது பேசி குட்டையை குழப்பி விடுவான் என்று நினைத்த செண்பகம் திருமணத்திற்கு முன் அப்படி இவர்கள் எதையும் பேசிக்கொள்ள தேவையில்லை என்று நினைத்து, “அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல. சும்மா இரு. இதென்ன நீ முன்னாடி பண்ண மாதிரி லவ் மேரேஜ் -ன்னு நினைச்சியா…??? கல்யாணத்துக்கு முன்னாடி அப்படி எல்லாம் பையனையும் பொன்னையும் தனியா எல்லாம் பேச விட மாட்டாங்க. எதுவா இருந்தாலும் கல்யாணத்துக்கு அப்புறம் பேசிக்கோ.” என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி விட்டாள். 

செண்பகத்தின் எண்ணத்தை புரிந்து கொண்ட வருண் இதற்கு மேலும் தன்னுடைய அம்மாவிடம் கேட்டு பிரயோஜனமில்லை என்று நினைத்தவன் சுதாகரின் பக்கம் திரும்பி, “சார் இது அரேஞ்ச் மேரேஜ் அப்படின்றதுனால எங்க ரெண்டு பேருக்குமே ஒருத்தரை பத்தி ஒருத்தருக்கு அவ்வளவா ஒன்னும் தெரியாது. இப் யு டோன்ட் மைண்ட், நான் பிஃபோர் மேரேஜ் உங்க பொண்ணு கூட கொஞ்சம் தனியா பேசணும்னு நினைக்கிறேன். அப்ப தான் இந்த மேரேஜ் லைப் எங்க ரெண்டு பேருக்குமே கொஞ்சம் கம்பேர்டபிலா இருக்கும். ஐ ஹோப் யூூ அண்டர்ஸ்டாண்ட்.” என்று சொன்னான். 

 சுதாகரின் மனதிலும் இதே எண்ணம் தான் இருந்தது ஆனால் அதை எப்படி வருனிடம் கேட்பது என்று நினைத்து அவர் தயங்கிக் கொண்டு இருந்தார். அதனால் வருணாவே இப்போது அதை பற்றி கேட்டது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

சுதாகர்: அதனால என்ன போய் பேசுங்க. நீங்க ரெண்டு பேரும் தான் சேந்து வாழ போறீங்க. சோ, உங்களுக்குள்ள நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும். அண்ட் நீங்க என்ன சார் -ன்னு எல்லாம் கூப்பிடாதீங்க. நீங்க என் கிட்ட மாமா என்று உரிமையா பேசுனா தான் எனக்கும் நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளைன்னு வந்து நானும் உங்க கிட்ட சகஜமா பேச முடியும். 

தான் ஒரு நொடி தாமதித்தாலும் தன்னுடைய அம்மா இடையில் பூந்து ஏதாவது செய்து விடக்கூடும் என்று நினைத்த வருண் தன்உடனே வேகமாக எழுந்து நின்றவன், “ஓகே மாமா. தேங்க்ஸ் ஃபார் அண்டர்ஸ்டாண்டிங். நாங்க எங்க போய் பேசுறது…???” என்று வெளிப்படையாக கேட்டு விட்டான். 

வருணின் இந்த அதிகப்படியான ஆர்வம் அனைவரையும் யோசிக்க வைத்தது. “பொண்ணு பாக்க வந்தா சும்மா பாத்துட்டு போக வேண்டியது தானே..!!! இப்ப இவர் என்கிட்ட என்ன பேச போறாம்..??? ஒரு வேளை என்னை லவ் பண்றேன்னு சொல்ல போறாரோ….??? ஐய்யயோ…!!! ஒரு வேளை நிஜமாவே அப்படி சொல்லிட்டா என்ன பண்றது…???” என்று பலவாறாக யோசித்த ரித்திகாவின் இதயம் பயத்தில் வேகமாக துடித்துக் கொண்டு  இருந்தது. ❤️ “நீ அப்பா கூட போய் பேசிட்டு வா. நான் வெயிட் பண்றேன் ரித்திமா.” என்ற சித்தார்த் தானாக அவளுடைய இடுப்பில் இருந்து கீழே இறங்கிக் கொண்டான். 

ரித்திகாவை பார்த்த சுதாகர், “மாப்பிள்ளைய உன்னோட ரூம்க்கு கூட்டிட்டு போ மா ரித்திகா.” என்று சொல்ல… வருணை பார்த்து “வாங்க” என்று மெல்லிய குரலில் சொன்ன ரித்திகா, அவனை தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றாள். ரித்திகா முன்னே செல்ல… அவள் பின்னே வந்த வருண், அவன் உள்ளே வந்ததும் கதவை சாற்றி தாளிட்டான். பிரைவசிக்காக வருண் இப்படி செய்கிறான் போல என்று வெளியில் இருந்தவர்கள் நினைத்துக் கொண்டு அதை பெரிது படுத்தவில்லை.

சிக்னல் செய்து விஷ்ணுவை தன் அருகே வரும் படி அழைத்த ஹரி, “இவன் இவ்ளோ ஆர்வமா இருக்குறத பாத்தா ஏதோ சரி இல்லைன்னு தோனுதே டா…!!! ஒரு வேளை இவனே உள்ள போய்.. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. வேற வழி இல்லாம தான் எங்க அம்மாவுக்கு ப்ராமிஸ் பண்ணி குடுத்தேன். பட் என்னால இந்த கல்யாணத்துக்கு நோ சொல்ல முடியாது. சோ, நீயே என்ன புடிக்கலைன்னு எங்க அம்மா கிட்ட இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லிருன்னு சொல்ல சொல்ல போறானோ..???” என்று அவனுடைய காதுகளில் கிசுகிசுத்தான். 

விஷ்ணு: “சேச்சே அப்படி எல்லாம் இருக்காது. அவரு ரொம்ப நியாயமான ஆளு. அவர் சொன்னபடியே அம்மாவுக்கு பண்ண பிராமிஸ்சா காப்பாத்துவாரு. ஐ டிரஸ்ட் ஹிம்.” என்று உறுதியாக சொன்னான். 

ஹரி: “லெட்ஸ் சி.” என்று நம்பிக்கை இல்லாமல் சொன்னான். 

ரித்திகாவின் அறையில்…

வருண் .தன்னை உள்ளே விட்டு கதவை சாத்தியதால் பயந்து போன ரித்திகா, “கடவுளே…!! இவரு என்ன சும்மா பேசணும்னு தானே சொன்னாரு. அதுக்கு எதுக்கு இப்ப கதவ சாத்துறாரு…??? ஒரு வேளை கதவை சாத்திட்டு… முத்தம் கித்தம் குடுத்துடுவாரோ…!!! ஐயையோ இப்ப என்ன பண்றது…???” என்று ஒரு நொடிக்குள் பலவாறாக யோசித்தவள், “கமான் ரித்திகா, நீ ரொம்ப ஸ்ட்ராங் ஆன லேடி. நீ எதுக்கு இவர பாத்து எல்லாம் பயப்படணும்..??? கல்யாணம் ஆனா கூட உன் பர்மிஷன் இல்லாம அவரால உன் கிட்ட வர முடியாது. இன்னும் கல்யாணமே ஆகல அப்புறம் என்ன..??? அவர் அந்த மாதிரி இன்டென்ஷன்ல நம்ம கிட்ட வந்தா, எனக்கு அதெல்லாம் பிடிக்காதுன்னு ஸ்ட்ரைட்டா சொல்லிடலாம்.” என்று நினைத்தாள். 

வருண்: கூர்மையான கண்களுடன் அவளை பார்த்தவன், “உனக்கு ஏதாவது என்கிட்ட கேட்கணும்னா கேளு, இல்ல சொல்லனும்னா சொல்லு.” என்றவன் முதலில் அவளுடைய மனதில் இருப்பதை தெரிந்து கொள்ள முயற்சித்தான்.

ரித்திகா: “இல்ல அப்படியெல்லாம் எதுவும் இல்ல. நீங்க தானே ஏதோ பேசணும்னு சொன்னீங்க என்னான்னு சொல்லுங்க.” என்று பயந்து போன குரலில் சொன்னாள்.

வருண்: “உனக்கு என்ன பாத்தா பயமா இருக்கா…????” என்று சாதாரண குரலில் கேட்டான். 

ரித்திகா: ஆமாம் என்பது போல் தன்னுடைய தலையை மேலும் கீழும் ஆட்டினாள். 

வருண்: “என்னது..??” என்று அதட்டலான குரலில் கேட்டான். 😒

 அவனுடைய கணீர் குரலால் இன்னும் பயந்து போன ரித்திகா, “இல்ல.. இல்ல.. நான் பயப்படல.” என்று அவசரமான குரலில் சொன்னாள். அவளுடைய உதடுகள் மட்டும் தான் அப்படி சொன்னது. ஆனால் பயத்தில் அவளுடைய முகம் முழுவதும் வியர்வைத் துளிகள் பூத்து இருந்தன. 😨 😱

வருண்: அவளைப் பார்த்து திருப்தியாக புன்னகைத்தவன், “குட், அந்த பயம் இருக்கணும். என்ன பாத்து எவ்வளவோ பெரிய பெரிய பிசினஸ் மேன் எல்லாம் பயந்து நடுங்கி இருக்காங்க இத்துனூண்டு இருந்துட்டு நீ என்ன பாத்து பயப்படலைன்னா என்னோட மரியாதை என்ன ஆகிறது…???” என்று சைக்கோ தனமாக கேள்வி கேட்டான். 😁 😁 😁 

ரித்திகா“ஆமா சார்.” என்று பயந்து போன குரலில் மெதுவாக சொன்னாள். 😬 😨

வருண்: “இனிமே நீ என்ன இந்த மாதிரி சாரு, மோர்ன்னு, எல்லாம் கூப்பிடாத. நாளைக்கு அப்புறம் வெளியில போனாலும் உனக்கு  இதே பழக்கம் தான் வரும். இத எவனாவது கேட்டு தொலைஞ்சிட்டானா, அப்புறம் வெளியில எல்லார்கிட்டயும் அவன் இஷ்டத்துக்கு ஏதாவது புரளியை கிளப்பி விட்டுருவான். நியூஸ்ல எல்லாம் வருண் ஒரு சின்ன வயசு பொண்ண போர்ஸ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டான் போல… அந்தப் பொண்ணு அவளோட புருஷனையே third பர்சன் மாதிரி மரியாதையா சாருன்னு கூப்பிட்டு இருக்கான்னு கண்டமேனிக்கு எழுதி தள்ளுவானுங்க. இதெல்லாம் தேவையா எனக்கு…???” என்று அவளைப் பார்த்து முறைத்த படியே கேட்டான். 😒 🤨

ரித்திகா: “அப்ப நான் உங்கள என்ன சொல்லி கூப்பிடுறது..???” என்று தயங்கியபடியே கேட்டாள். 

வருண்: குப்பிடுறதுக்கு தானே எனக்கு பேர் வச்சிருக்காங்க…!!! என்ன வருண்னு கூப்பிடு. 

ரித்திகா: நான் எப்படி உங்கள பேர் சொல்லி கூப்பிட முடியும்???

வருண்: “என்ன பொண்டாட்டி செண்டிமெண்ட்டா..??? அவ்ளோ சீன் எல்லாம் ஒன்னும் இல்ல. உனக்கு எப்படி தோணுதோ அப்படி கூப்பிடு. ஆனா இந்த சார் மட்டும் வேணா. மார்னிங் -ல இருந்து நைட் வரைக்கும் எல்லாரும் என்ன சார்.. சார் -ன்னு கூப்பிட்டுறத கேட்டு… கேட்டு… எனக்கு இரிட்டேட் ஆகுது. வீட்டுக்கு வந்தும் என்னால அதைவே கேட்க முடியாது.” என்று சிறு எரிச்சலுடன் சொன்னான். 😒

ரித்திகா “ஓகே மிஸ்டர் வருண் நான் இனிமே உங்கள அப்படி கூப்பிடல.” என்று தயங்கி தயங்கி சொன்னாள். 🙁

வருண்: “ஃபைன் நான் இங்க பேச வந்த விஷயத்தை பத்தி பேசுவோம். உனக்கு என்ன பத்தி என்ன தெரியும்ன்னு எனக்கு தெரியல. பேபி இந்த கல்யாணத்தை பத்தி உனக்கு நிறைய எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கலாம். நாளைக்கு அதெல்லாம் நடக்காமல் போய் நீ டிஸ்அப்பாய்ண்ட் ஆகிறது விட, இப்ப நானே என்ன பத்தி எல்லாத்தையும் சொல்றேன். 

அத தெளிவா கேட்டுட்டு அதுக்கப்புறம் உனக்கு இந்த கல்யாணம் வேணுமான்னு சொல்லு.” என்று பொறுமையான குரலில் சொன்னான். 

ரித்திகா: ம்ம்ம்.. என்று மெதுவாக சொன்னாள். 

வருண்: நான் உன்கிட்ட என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும். 

ரித்திகா: ம்ம்ம்… கேளுங்க. 

வருண்: “உண்மைய சொல்லு, நீ எதுக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட…???” என்று கம்பீரமான குரலில் கேட்டான். 

– நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் எங்களது தேனருவி தமிழ் நாவல்ஸ் என்ற பேஸ்புக் குரூப்பில் இணையுங்கள் ❤️)

You may also like

Leave a Comment

About Me

Featured