அத்தியாயம் 132: நீ என்னை வருண்னே கூப்பிடு (பார்ட் 1)
ராகவியின் வீட்டில்….
நாராயணன் குடும்பத்தினர் ராகவியை பெண் பார்த்துவிட்டு அவளை உறுதிப் பேசி விட்டு செல்வதற்காக ராகவியின் வீட்டிற்கு வந்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் தன் ஒருவரால் ஸ்நாக்ஸ் கொடுக்க முடியாது என்று நினைத்த ரேவதி, ராகவியின் அறையில் இருந்த ஷாலினியை அழைத்தாள். ராகவியின் தங்கை என்ற முறையில் அவர்களை வரவேற்று உபசரித்தாள் ஷாலினி. இதற்கிடையில் அவளும் விஷ்ணுவும் தங்களை மாறி மாறி ஒருவரை ஒருவர் சைட் அடித்துக் கொள்ள தவறவில்லை.
ஷாலினி ஒரு ட்ரேவில் டீ மற்றும் சாக்ஸுடன் கிச்சனில் இருந்து வெளியே வந்தாள். ராகவியின் அளவிற்கு அவளுக்கு நீண்ட கூந்தல் இல்லை என்பதால், ஷாலினி தன்னுடைய கூந்தலை விரித்துவிட்டு ஒரே ஒரு கிளிப் மட்டும் நடுவில் போட்டு இருந்தாள். அதனால் அவள் அன்ன நடை வர, அவளுடைய சின்ன இடை அசைந்தாட… அவளுடைய கூந்தல் காற்றில் பறந்து கொண்டு இருந்தது. தங்க சிலையே தனக்காக இறங்கி தரையில் நடந்து வருவதை போல் நினைத்து, விஷ்ணு அவளையே ரசித்து படி வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தான். 😍 👀
அதை கவனித்த ஷாலினி சிறு வெட்கத்துடன், ஒவ்வொருவருக்கும் தன் கையில் இருந்த உணவுகளை பரிமாறி கொண்டு இருந்தாள். அப்போது விஷ்ணுவின் அருகில் நின்று கொண்டு இருந்த பிராத்தனாவிடம் ஷாலினி தன் கையில் இருந்த ட்ரேவை நீட்ட, அவளை ஏளனமாக பார்த்த பிராத்தனா, “நோ தேங்க்ஸ். எனக்கு இந்த மாதிரி லோ கிளாஸ் ஐட்டம்ஸ் எல்லாம் பிடிக்காது.” என்று முகத்தில் அடித்தார் போல் பட்டென்று சொன்னாள். 😒
பிராத்தனா அதை தன்னுடைய குரலை சற்று உயர்த்தி சொன்னதால், அந்த அறையில் இருந்த அனைவருக்கும் அவள் பேசியது தெளிவாக கேட்டது. அதனால் அங்கு இருந்த அனைவரும் அவர்களை தான் பார்த்துக் கொண்டு இருந்தனர். அதனால் ஷாலினியின் முகம் சுருங்கி விட்டது. 😞 அவள் பாவமாக விஷ்ணுவை பார்த்தாள். 🙁 செண்பகம் பிராத்தனாவை பார்த்து முறைக்க, “பிராத்தனா பிஹேவ் யுவர் செஃப். இங்க வா. வந்து என் பக்கத்துல உக்காரு.” என்று விஷ்வா கண்டிப்பான குரலில் சொல்ல, அமைதியாக அவன் அருகே சென்று அமர்ந்து கொண்டாள் பிராத்தனா.
இந்த சூழ்நிலையை சகஜமாக நினைத்த விஷ்ணு ஷாலினியை அன்பாக பார்த்தவன், “அட அவ கடைக்கிறா அனபெல் பொம்ம. நீ அவ பேசறத எல்லாம் கண்டுக்காத ஷாலு. இங்க வா முதல்ல எனக்கு டீ குடு. அது ஆறிட போது. நானும் எப்படா எனக்கு குடுப்பீங்கன்னு பார்த்துகிட்டே இருக்கேன். ஆனா நீ என்ன தவிர மத்த எல்லாருக்கும் குடுத்துட்டு இருக்க. ரேவதி அம்மா கையால சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. இன்னைக்கு ஒரு புடி தான்.. குடு.” 🤪 என்று சிரித்துக் கொண்டே சொன்னவன், தனக்கு ஒரு கப் டீயை ☕ எடுத்துக் கொண்டு பின் போர் அடிக்கும் போதெல்லாம் சாப்பிடுவதற்காக அதில் இருந்த அனைத்து ஸ்னாக்ஸையும் எடுத்து காபி டேபிளில் அடுக்கி வைத்துக் கொண்டான். 😄 😁 😁 😁
“யாரு சாமி நீ…??” என்பது போல ஷாலினி அவனையே குறுகுறுவென்று பார்த்துக் கொண்டு இருந்தாள். 🤨 🙄 ஷாலினி தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்த விஷ்ணு, “இப்ப எதுக்கு இங்கயே நின்னுகிட்டு நீ என்னையே பாத்துட்டு இருக்க..??? இங்க இருக்கிறது எல்லாம் எனக்கு மட்டும் தான். நான் யாருக்கும் தர மாட்டேன். நீ போய் வேற ஸ்னாக்ஸ் கொண்டு வந்து மத்தவங்களுக்கு குடு.” என்று அந்த தட்டில் இருந்த ஒரு பஜ்ஜியை எடுத்து மென்றபடியே சொன்னான். அவனுக்கு அதன் சுவை மிகவும் பிடித்து இருந்தது. 🤤 அதனால் கணக்கு வழக்கின்றி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான்.
“ஏன் டா இப்படி மானத்தை வாங்குற…???” என்று தன் மனதிற்குள் நினைத்த ஹரி விஷ்ணுவை பார்த்து முறைத்தான். 😒 🤨 அதை கவனித்த விஷ்ணு அவனை கேஷுவலாக பார்த்தவன், “எதுக்கு டா இப்ப என்ன பாத்து முறைக்கிற..?? உனக்கு வேணும்னா, நீயும் கூச்சப்படாம கேட்டு வாங்கி சாப்பிடு. இதுவும் நம்ம வீடு தான். ரேவதி அம்மா எது சமைச்சாலும் தரமா இருக்கும்.” என்று ஒரு பெரிய லட்டை எடுத்து வாயில் போட்டு மென்ற படியே சொன்னான். 😁 😁 😋 மீண்டும் ஸ்னாக்ஸ் ஐ எடுத்து கொண்டு வருவதற்காக கிச்சனுக்கு சென்றிருந்த ஷாலினி, அங்கே வரும்போது இவர்கள் பேசியதைை கேட்டவள், அதனால் ட்ரேவை ஹரியின் முன் நீட்டி, “எடுத்துக்கோங்க” என்றாள்.
விஷ்ணு: “எடுத்துக்கோ டா. நல்லா சாப்பிடு. சாப்பிட்டு உடம்பை தேத்து.” என்று கிண்டலாகக சொன்னான். 😂 😂 😂
ஹரி: “எனக்கு வேண்டாம் மா. நீ இதயும் கொண்டு போய் அவன் கிட்டையே குடு. சாப்பிடும்போதாவது இவன் கொஞ்ச நேரம் வாய மூடுறானான்னு பார்க்கலாம்.” என்று சிரித்துக் கொண்டே சொன்னான். 😂 😂 😂
அதனால் அந்த ட்ரேவை மீண்டும் விஷ்ணுவிடம் நீட்டினாள் ஷாலினி. “உனக்கு வேண்டாம்னா போடா. நானே இது எல்லாத்தையும் தனியா சாப்பிட்டுபேன்.” என்று சொன்ன விஷ்ணு மீண்டும் அந்த தட்டில் இருந்த அனைத்தையும் எடுத்து காபி டேபிளில் அடுக்கி வைத்துக் கொண்டான். விஷ்வாவும், செண்பகமும், வெகு நாட்களுக்குப் பிறகு தாங்கள் குடும்பமாக இப்படி மகிழ்ச்சியாக இருக்கும் தருணத்தை பார்த்து உள்ளம் நெகிழ்ந்தனர். 😍 😁 😁 😁
அங்கு இருந்த அனைவரும் பிஸியாக ஸ்னாக்ஸ் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, தர்ஷினியை தன் அருகில் அழைத்து நிறுத்திய செண்பகம்; அவளை சுதாகருக்கும், ரேவதிக்கும், அறிமுகப்படுத்தி வைத்தாள். ஏற்கனவே அவளை மருத்துவமனையில் பார்த்து இருந்ததால், உடனே அவள் தான் நாராயணன் குடும்பத்தின் இரண்டாவது மருமகன் ஆகப்போகிறவள் என்று புரிந்து கொண்டனர் ராகவியின் பெற்றோர்கள். தர்ஷினி அவர்களுடன் மிகுந்த மரியாதையுடன் பேசினாள். பின் ரேவதியை பார்த்த செண்பகம், “ராகவி ரெடி ஆயிட்டான்னா அவள வர சொல்லுங்க. எனக்கு என் மருமகள பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு.” என்று சொன்னாள். ஷாலினியை அழைத்த ரேவதி, ராகவியை அழைத்து வரும் படி அவளிடம் சொல்லி அனுப்பினாள்.
சில நொடிகளிலேயே ராகவியின் அறை கதவு திறக்க பட, ராகவியும், ஷாலினியும், ஒரே நிற புடவையில் ஒன்றாக அந்த அறையில் இருந்து வெளியே வந்தனர். இங்கே விஷ்ணு தன்னுடைய அண்ணனுக்காக பொண்ணு பார்க்க வந்து இருந்தாலும் சங்கதி சாக்கில், இதை தனக்கும், ஷாலினிக்கும், ஆன ஃபங்க்ஷன் ஆகவும் நினைத்து அதை என்ஜாய் செய்ய தொடங்கினான். 😍 🥰 அரேஞ்ச் மேரேஜில் முதல் முதலாக தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரை பார்ப்பது போல விஷ்ணுவும், ஷாலினியும், ஒருவரை ஒருவர் வெட்கத்துடன் பார்த்துக் கொண்டு இருந்தனர். ☺️ 😍 ❤️
ஆனால் ராகவியும், விஷ்வாவும், அவர்களுக்கு நேர்மாறாக இருந்தனர். ராகவியின் இதயம் பதட்டத்தின் வேகமாக துடித்துக் கொண்டு இருந்தது. ❤️ அந்த இடம் மட்டும் இப்போது அமைதியாக இருந்தால், அவளுடைய இதய துடிப்பின் சத்தம் துல்லியமாக விஷ்வாவின் காதுகளை சென்றடைய கூட ஓரு வாய்ப்பு இருக்கிறது. ❤️ பயத்தில் ராகவி தன்னுடைய சேலையின் முந்தானையை கையில் இறுக்கமாக பிடித்துக் கொண்டு பயத்தில் அதை கசக்கி கொண்டு இருந்தாள். அவளுடைய முகம் தரையை பார்த்த படி இருந்தது. விஷ்வாவும் ராகவியை பார்க்காமல் தன் கையில் இருந்த மொபைல் போன் ஐ பார்ப்பது போல் சீன் போட்டுக் கொண்டு இருந்தான்.
இப்படி இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் கூட இருந்ததால், “விஷ்வா நம்ப இங்க பொண்ணு பாக்க தான் வந்து இருக்கோம். போன பாக்குறதுக்கு இல்ல.” என்று செண்பகம் சற்று தன்னுடைய குரலை உயர்த்தி சொல்ல, ராகவியும் விஷ்வாவும் ஒரே நேரத்தில் தங்களுடைய தலையை மேலே உயர்த்தி பார்க்க, அவர்களுடைய பார்வை இரண்டும் சந்தித்துக் கொண்டன. 😍 👀
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்..!! 😍 👀
இந்த பார்வை பரிமாற்றங்களில்.. அவர்களுடைய இதயங்களும் பரிமாறிட கூடுமோ…??? ❤️ 👩❤️👨 ❤️
எண்ணுவதற்கே அரிய நலன்களைக் கொண்டவள்.. இப்படி நின்றிருக்க,
அண்ணலும் அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன. 😍 ❤️
இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன. 👩❤️👨 ❤️
அவர்கள் இருவருமே இதற்கு முன் ஏற்கனவே ஒருவரை மற்றொருவர் பார்த்து இருந்தாலும், இந்த சந்திப்பு அவர்கள் இருவருக்குமே ஒரு புதிதான, புதிரான, உணர்வை கொடுத்தது. ☺️ இம்முறை ராகவியை பார்க்கும்போது இவள் தன்னுடைய மனைவியாகபோகிறவள் என்று நினைத்து விஷ்வா அவளை பார்த்ததாலோ என்னமோ தெரியவில்லை, திடீரென்று அவனுடைய கண்களுக்கு ராகவி பேரழகையாக தெரிந்தாள். 😍 அதனால் அவன் தன்னை அறியாமல் அவளை அனுவனுவாக ரசித்து கொண்டு இருந்தான். ராகவியும் அதே மன நிலையில் இருந்ததால், அவனை வெளிப்படையாகவே சைட் அடித்துக் கொண்டு இருந்தாள். 😍 ❤️
அவர்கள் இருவரும் வார்த்தைகள் இன்றி பார்வையிலேயே தங்களுடைய பல்லாயிரம் உணர்ச்சிகளை பரிமாறிக் கொண்டு இருப்பதை பார்த்து அங்கு இருந்த அனைவரும் மகிழ்ந்தனர். ☺️ முக்கியமாக ராகவியின் பெற்றோர்களுக்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது. ஹரியின் அருகே சென்ற விஷ்ணு; டோரா தன்னுடைய வியூவர்சிடம் நீங்க அதை பார்த்தீங்களா..?? என்று கேட்பது போல,
“டேய் நீ அத பாத்தியா..??? அவங்களுக்குள்ள நேச்சுரலாவே ஏதோ ஒரு பாண்ட் இருக்கு. நான் கூட அண்ணன நெனச்சு ரொம்ப பயந்துட்டேன். ஆனா அவர பாரேன்… ஒரே ஒரு பார்வை அவ்ளோ தான். அண்ணி அவர போட்டு தாக்கிட்டாங்க. மனுஷன் கிளீன் போல்ட் ஆயிட்டாரு.” என்று உற்சாகமாக ஹரியின் காதுகளில் கிசுகிசுத்தான். ☺️ 😁 😁 ராகவி வந்துவிட்டதை கவனித்த சித்தார்த் வேகமாக அவள் அருகே ஓடு சென்று அவளுடைய காலை கட்டிப்பிடித்துக் கொண்டு, “ராகா அம்மா” என்று பாசமாக அவளை அழைத்தான்.
சித்தார்த்தின் அழைப்பால் விஷ்வா, ராகவி, இருவருமே சுதாரித்து கொண்டனர். செண்பகம் தன்னிடம் ராகவி தான் உன்னுடைய அம்மா என்று சொல்லி இருந்ததால், ராகவியை சித்தார்த் தன்னுடைய சொந்த அம்மாவாகவே நினைத்து பழக தொடங்கி இருந்தான். ராகவியும் சித்தார்த்தின் பெறாத அம்மாவாக மாறி அவனை தன்னுடைய சொந்த பையனாக நினைக்க தொடங்கி இருந்தாள். இப்போதெல்லாம் விஷ்வாவிற்கு சித்தார்தின் மீது எவ்வளவு உரிமை இருக்கிறதோ, அதே உரிமை தனக்கும் இருக்கிறது என்று கூட யோசிக்கும் அளவிற்கு சித்தாரத்துடன் ஒன்றி போயிருந்தாள் ராகவி.
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் என்னுடைய facebook குரூப்பில் இணையுங்கள் ❤️)