Home FREE NOVELSதாபம் தீர்க்க வந்த தாரமே CH 130

தாபம் தீர்க்க வந்த தாரமே CH 130

by Thenaruvi Tamil Novels

அத்தியாயம் 130: சுதாகரின் பயம்

தன்னுடைய அம்மாவின் ஆப்ரேஷன் என்னானது என்று நினைத்து பதறியவன் மேத்யூவின் ரத்த துளிகள் தன்னுடைய ஆடையில் ஆங்காங்கே படிந்து இருப்பதை கூட மறந்துவிட்டு அப்படியே வெளியே வந்தான். சுதாகர் “என்னங்கடா நடக்குது இங்க…???” என்பது போல அவர்கள் அனைவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டு இருந்தான். அதை கவனித்த சிவா உடனே சுதாகரின் மனநிலையை புரிந்து கொண்டு அவர் அருகே சென்றவன், “அந்த டாக்டரை வச்சு யாரோ நம்ம செண்பகம் மேடம் கொலை பண்ண ட்ரை பண்ணி இருக்காங்க. அதான்  விஷ்வா சார் கோவப்பட்டு அவன அடிச்சு போலீஸ்ல சரண்டர் பண்ணிட்டாரு. நீங்க ஒன்னும் தப்பா நினைச்சுக்காதீங்க அங்கிள்.” என்று சொன்னான். 

சிவா சொன்னதை கேட்ட சுதாகர் அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல், அவனை புறக்கணித்துவிட்டு வந்து அங்கு இருந்த ஒரு சேரில் அமர்ந்தார். அவர்களுடைய சொந்த மருத்துவமனையிலேயே சென்பகத்தை ஒருவன் கொலை செய்ய பார்த்ததை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்படி ஒரு குடும்பத்தில் தன்னுடைய பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா…?? என்ற தயக்கம் அவருக்குள் ஏற்பட்டது. ஏற்கனவே இவ்வளவு பெரிய சம்பந்தம் தங்களுக்கு தேவையா என்று பயந்து கொண்டு இருந்த சுதாகருக்கு இந்த சம்பவம் இன்னும் அவரை அச்சுறுத்தியது. 

கோவிலுக்கு ஷாலினி மற்றும் ரேவதியுடன் சென்று இருந்த ராகவி மீண்டும் ஹாஸ்பிடலுக்கு வந்தாள். விஷ்வா இன்னும் அதை ரத்தக்கரை படிந்த சட்டையை அணிந்து கொண்டு தான் அங்கே அமர்ந்து இருந்தான். அதைப் பார்த்து அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதனால் என்ன நடந்தது என்று சுதாகரிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். வேதனை தோய்ந்த முகத்துடன் ராகவியை பார்த்த சுதாகர், “நம்ப கண்ணு முன்னாடியே இப்படி எல்லாம் நடக்குது. இன்னும் நமக்கு தெரியாம என்னென்னலாம் நடந்து இருக்கோ, ஒரு பக்கம் இவ்வளவு பெரிய ஹாஸ்பிடல்ல வெளி நாட்டில இருந்து வந்த அவ்வளவு ஃபேமஸான டாக்டர் செண்பகம் மேடம கொல்ல பாத்தது எனக்கு அதிர்ச்சியா இருந்தா, இன்னொரு பக்கம் என்ன தான் அவன் அவங்க அம்மாவ கொல்ல வந்ததுனால அவன் மேல அவருக்கு கோவமா இருந்தாலும், அதுக்குன்னு விஷ்வா இப்படியா போட்டு வெறித்தனமா இவ்வளோ இரத்த வர அளவுக்கு அடிப்பான்..??? ஏற்கனவே எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லை. இப்ப இத எல்லாம் பாத்த உடனே எனக்கு ரொம்ப பயமா இருக்கு. இப்ப கூட ஒன்னும் லேட் ஆகல. உனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் பாப்பா.” என்று ராகவியின் கையை பிடித்துக் கொண்டு சொன்னான். 😟

ராகவி: தன்னுடைய அப்பாவின் கைகளை இறுக்கமாக பற்றி கொண்டவள், “யாரோ பண்ண தப்புக்கு அவரு என்ன அப்பா பண்ணுவாரு…??? உங்கள யாராவது ஏதாவது பண்ண வந்தா எனக்கு மட்டும் கோபம் வராதா..??? அப்போ எனக்கே யாரா இருந்தாலும், அவங்கள தூக்கிப்போட்டு மிதிக்கணும்னு தான் தோணும். அப்ப அவரு இவ்ளோ செலவு பண்ணி ஒரு டாக்டர அவரோட அம்மாவுக்காக வெளி நாட்டில இருந்து கூட்டிட்டு வந்து அவங்களோட ஹாஸ்பிடல்யே ட்ரீட்மென்ட் பாக்கும்போது, வந்த டாக்டர் இப்படி பண்ணா, அவர் எப்படி அவனை சும்மா விடுவாரு…??? அவரு கோபப்பட்டதுலையோ, அவன அடிச்சதுலையோ, எந்த தப்பும் இல்லை. இதுக்காக நீங்க அவர தப்பா நினைக்காதீங்க.” என்றவள்; நேற்று இரவு அவள் விஷ்வாவுடன் பேசியது பற்றியும், ஜான்வியின் பிறந்த நாள் அன்று அவள்  அவனை அவள் சந்தித்தபோது நடந்தவை பற்றியும் சொல்லி, அவன் அப்படி ஒன்றும் மோசமான ஆளில்லை என்று நிரூபிக்க போராடினாள்.

ராகவி என்ன சொன்னாலும் சுதாகரின் மனம் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இருப்பினும் தான் என்ன சொன்னாலும் தன்னுடைய மகள் அதை கேட்க போவதில்லை என்று புரிந்து கொண்ட சுதாகர், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து கொண்டார். பின் அவர்கள் அனைவரும் செண்பகத்தின் ஆபரேஷன் முடிவதற்காக காத்திருந்தனர். இதற்கிடையில் தொலைக்காட்சிகளில் பிரேக்கிங் நியூஸ் ஆக “ஜெர்மனியை சேர்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணர் மேத்யூ, நாராயணன் குடும்பத்தை சேர்ந்தவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதாகி உள்ளார்.” என்ற செய்தி வெளியான வண்ணம் இருந்தது. அடுத்த கணமே அது சென்சேஷனல் நியூசாக மாறியது.

பெரிய குடும்பங்களில் கூட இப்படி எல்லாம் நடக்குமா..?? என்று மக்கள் தங்களுக்குள் கிசுகிசுத்து கொண்டு இருந்தனர். அந்த செய்தியை பார்த்த பிரவீன், தான் சொன்ன வேலையை மேத்யூ சரியாக செய்து முடிக்காததால் எரிச்சல் அடைந்தான். 😒 அதனால் மேத்யூவிற்கு தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று நினைத்தவன், வெளி நாட்டில் இருந்த அவனுடையய அடியாட்களுக்கு கால் செய்து, மேத்யூவின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றுவிடும் படி ஆணையிட்டான். 

பிரவீனின் அழைப்பிற்காக காத்து இருந்த மேத்யூவின் வீட்டில் இருந்த அடியாட்கள், அவன் சொன்ன வேலையை தடயம் இன்றி செய்து முடித்துவிட்டு அந்த வீட்டை விட்டு வெளியே சென்றனர். அந்தச் செய்தியை கேட்ட பிரவீன் மகிழ்ந்தான். 😃 அவனுடைய இந்தத் திட்டத்தில் இருந்து விஷ்வாபின் அம்மா தப்பித்து விட்டதால், அடுத்து விரைவில் வேறு ஏதாவது செய்து விஷ்வாவை மன உளைச்சலுக்கு ஆளாக்க வேண்டும் என்று நினைத்தான் பிரவீன். 

சில மணி நேரத்திற்கு பின்…

நாராயணன் மருத்துவமனையில்..

செண்பகத்திற்கு இருஅறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த விஷ்வாவின் மருத்துவர்கள் குழு, ஆபரேஷன் தியேட்டரை விட்டு வெளியே வந்தனர். அவர்களை கண்டவுடன் வேகமாக அவர்களின் அருகே ஓடிச் சென்ற விஷ்வா, “டாக்டர் என் அம்மா எப்படி இருக்காங்க..?? அவங்களுக்கு எதுவும் ஆகல இல்ல..???” என்று பதட்டமான குரலில் கேட்டான். 😟 அவனைப் பார்த்து லேசாக புன்னகைத்த டாக்டர், “ஷீ இஸ் கம்ப்ளீட்லி ஃபைன் நவ். ஆப்ரேஷன் இப்ப தான் முடிஞ்சது. அதனால அவங்களுக்கு மயக்கம் தெளியறதுக்கு கொஞ்ச நேரம் ஆகும். ஆப்ரேஷன் தான் முடிஞ்சிடுச்சேன்னு நினைச்சு அவங்கள அப்படியே விட்டுறாதீங்க. இனிமே தான் நீங்க அவங்கள இன்னும் கேர்ஃபுல்லா பாத்துக்கணும். கொஞ்ச நாளைக்கு அவங்க எழுந்து கூட அதிகமாக நடக்க கூடாது. வெயிட் தூக்க கூடாது. 

 சிம்பிளா சொல்லனும்னா நம்ப ஒரு பொறந்த குழந்தையை எப்படி பார்த்துக்கிவமோ அதே மாதிரி தான் பாத்துக்கணும் அவங்கள.” என்றான்.

விஷ்வா: அந்த டாக்டரின் இரு கைகளையும் இறுக்கி பிடித்து கொண்டவன், “தேங்க்ஸ் டாக்டர். நீங்க காப்பாத்துனது என்னோட அம்மாவை மட்டும் இல்ல. எங்க மொத்த ஃபேமிலியோட சந்தோஷத்தையும் தான். உங்க எல்லாருக்கும் கண்டிப்பா நான் பெருசா ஏதாவது பண்ணுவேன். நீங்க இப்ப பண்ணதை நான் எப்பயுமே மறக்க மாட்டேன். தேங்க்யூ சோ மச் டாக்டர். 

இனிமே அம்மாவ நான் பத்திரமா பாத்துக்குறேன். அவங்கள பாத்துக்கிறதுக்குன்னு தனியா நர்ஸ் அப்பாயிண்ட்மெண்ட் பண்றேன். நீங்களே நம்பிக்கையானவங்களா யாரையாவது சஜஸ்ட் பண்ணுங்க.” என்று நன்றி உணர்வுடன் நம்பிக்கையாக டாக்டரை பார்த்து கேட்டான்.

டாக்டர்: இது எங்களோட டூயுட்டி சார். இதுக்காக நீங்க எங்களுக்கு ஸ்பெஷலா எதும் பண்ணனும்னு அவசியம் இல்ல. நீங்க கேட்ட மாதிரி நானே ஒரு நல்ல எக்ஸ்பீரியன்ஸ் ஆன நர்சா பாத்து அப்பாயிண்ட்மெண்ட் பண்றேன்.

விஷ்வா: “நீங்க எதுவும் வேணாம்னு சொன்னாலும், என்னால உங்களை அப்படியே விட முடியாது. உங்க எல்லாருக்குமே உங்களுடைய ஒன் இயர் சேலரிய நான் கிப்ட்டா குடுக்குறேன். அதுமட்டும் இல்லாம உங்களுக்கு எப்ப எந்த ஹெல்ப் வேணும்னாலும் என்கிட்ட கேளுங்க. நான் எதுவா இருந்தாலும் பண்றேன்.” என்று நன்றி உணர்வுடன் சொன்னான்.

விஷ்வாவின் இந்த ஆஃபர் அந்த டாக்டர்கள் அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. ☺️ அதனால் மன நிறைவுடன் அவனுக்கு நன்றி தெரிவித்துவிட்டு அங்கு இருந்து சென்றனர். இப்போது தான் நாராயணன் குடும்பத்தினர் அனைவருக்கும் போன உயிர் மீண்டும் வந்ததை போல் இருந்தது. அதனால் மகிழ்ச்சியுடன் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டனர். 😁😁  தன்னுடைய வேண்டுதலை கடவுள் நிறைவேற்றி விட்டதால், தன்னுடைய மனதிற்குள் கடவுளுக்கு நன்றி சொன்னாள் ராகவி.

15 நாட்களுக்குப் பின்…

இந்த 15 நாட்களில் செண்பகத்தின் உடல் நிலை சற்று முன்னேறி இருந்தது. இருப்பினும் செண்பகத்தை எழுந்து நடக்க கூட விடாமல் அவளுக்கென பணியாட்களை அமர்த்தி விஷ்வா வீல் சேரிலேயே அவளை வைத்து இருந்தான். செண்பகமும் வேறு வழியின்றி தன்னுடைய மகன்களின் அன்பு தொல்லையை சகித்துக்் கொண்டாள். செண்பகத்திற்கு இன்னும் முழுமையாக உடல் நலம் சரியாக வில்லை என்பதால்,, விஷ்ணு பள்ளிக்கு கூட செல்லாமல் முழு நேரமும் செண்பகத்துடனே இருந்தான். 

தன்னுடைய செயலுக்காக அவனிடம் மன்னிப்பு கேட்க விரும்பிய ஷாலினி, அவனை நேரில் பார்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள். இருப்பினும் எப்போதாவது அவனுக்கு கால் செய்து பேசி கொண்டு இருந்தாள்.  ராகவி தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாராயணன் பேலஸ் -க்கே வந்து செண்பகத்தை அவ்வப்போது பார்த்துவிட்டு சென்றாள். விஷ்ணுவையும் ஷாலினியையும் எப்படி பிரிப்பது என்று வைஷாலி, திட்டம் போட்டுக் கொண்டு இருந்தாள். தன் மீது விருப்பம் இல்லாத ஒருவரை தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி தன்னுடைய குடும்பம் வற்புறுத்துவதால், சோகத்தில் இருந்தாள் தர்ஷினி. 😞 😐

தர்ஷினியின் வருகையால் தனக்கும் ஹரிக்கும் திருமணம் நடக்காதோ, என்ற பயத்தில் இருந்தாள் ஆராதனா. தன்னுடைய உயிருக்கு மேலாக தான் காதலித்த ஜான்வியை மறந்துவிட்டு தான் இப்போது இவளை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா என்று நினைத்து வேதனையில் இருந்தான் விஷ்வா. 😞 💔 ராகவியின் திருமணத்தை நினைத்து பயத்தில் இருந்தார் சுதாகர். விஷ்ணுவால் அடி வாங்கி ஹாஸ்பிடலில் கிடந்த ரவி, எப்படியாவது அவளையும் ஷாலினியையும் பழிவாங்க வேண்டும் என்று திட்டம் போட்டுக் கொண்டு இருந்தான். ஆனால் யார் என்ன நினைத்தாலும், எது நடக்குமோ அது தானே நடக்கும். வாருங்கள் அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். 

நாராயணன் பேலஸில்….

செண்பகம் வீல் சேரில் இருந்தாலும் அதன் உதவியாலும், சோபியா மற்றும் தாராவின் உதவியாளும், அங்கும் இங்கும் உற்சாகமாக நடமாடிக் கொண்டு இருந்தாள். ☺️ விஷ்வா கூட இந்த காலை நேரத்திலும் ஆபீசுக்கு செல்லாமல் வீட்டில் இருந்தான். நாராயணன் பேலஸ் விழா கோலம் பூண்டு இருந்தது. பிராத்தனா முதல் விஷ்ணு வரை அனைவரும் தங்களுடைய  அறையில் வெளியில் செல்வதற்காக அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டு இருந்தனர். 

விஷ்வாவின் அறையில்…

எப்போதும் அவன் ஆபீசுக்கு செல்லும்போது கோட் சூட் அணிவதைப்போல இப்போதும் அதே கருப்பு கோட் அணிந்து கொண்டு, கண்ணாடியை பார்த்து தன்னுடைய டையை கட்டிக் கொண்டு இருந்தான் விஷ்வா. ஆனால் அவனுடைய முகத்தில் எந்த ஆர்வமோ, உற்சாகமோ துலியும் இல்லை. 😐

 – நேசம் தொடரும் ❤️

(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் நன்றி 🙏)

You may also like

Leave a Comment

About Me

Featured