அத்தியாயம் 134: நான் உன்னை என் வைஃபா ஏத்துக்க மாட்டேன் (பார்ட் 1)
விஷ்வா: நான் உன்கிட்ட என்ன பத்தி சொல்றதுக்கு முன்னாடி, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.
ராகவி: ம்ம்ம்… கேளுங்க.
விஷ்வா: “உண்மைய சொல்லு, நீ எதுக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்ட…???” என்று கம்பீரமான குரலில் கேட்டான்.
ராகவி: ஒரு நொடி கூட யோசிக்காமல், “சித்தார்த்துக்காக மட்டும் தான்.” என்று அவனுடைய கண்களை நேராக பார்த்து தயக்கமின்றி சொன்னாள்.
ராகவியின் கண்களில் உள்ள உண்மையை அவனால் தெளிவாக பார்க்க முடிந்தாலும், விஷ்வாவின் மனதில் ராகவி, தன்னை பணத்திற்கு ஆசைப்பட்டு தான் திருமணம் செய்து கொள்கிறாள் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. அதனால் அவளை ஏளனமாக பார்த்தவன், “ஓ… ஓகே..!!! பட் எனக்கு ஒன்னு மட்டும் தான் புரியல. அது எப்படி நீங்க மீட் பண்ணி மேக்ஸிமம் ஒரு டூ மந்த்ஸ் இருக்குமா…??? அதுக்குள்ள எப்படி அவனுக்கு உன் மேல இவ்ளோ பாசம்…??? சரி அவன் தான் சின்ன பையன் அப்படி இருக்கான்னா, அவனுக்காக கல்யாணம் ஆகாத நீ, விடோவர் என்ன கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு சம்மதிச்சிட்டியா…??? அதுவும் நமக்குள்ள 9 இயர்ஸ் ஏஜ் டிஃபரன்ஸ் இருக்கு. ஏன் அப்படி…???” என்று நக்கலான குரலில் கேட்டான். 😒
அவன் ஏன் இப்படி தன்னிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறான் என்று கூட அந்த அப்பாவி பெண்ணிற்கு புரியவில்லை. அதனால் பெரிதாக எதை பற்றியும் யோசிக்காமல், உண்மையாக தன் மனதில் இருப்பதை அப்படியே அவனிடம் சொன்னாள் அவள்.
ராகவி: “தயக்கம் இன்றி அவனைப் பார்த்தவள், “நீங்க கேட்ட கொஸ்டின்லையே ஆன்சரும் இருக்கு மிஸ்டர் விஷ்வா. நீங்க சொன்ன மாதிரி எனக்கு கொஞ்ச நாளா தான் சித்தார்த்த தெரியும். ஆனா அவன் என் மேல எவ்ளோ பாசமா இருக்கான்னு நீங்களே பாக்குறீங்களே…!!! ஐ அம் எ டீச்சர். எனக்கு பேசிக்காவே குழந்தைங்க கூட இருப்பதின்னா ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
சித்தார்த்த ஃபர்ஸ்ட் டைம் நான் பாத்தப்பவே எனக்கு அவன் மேல ஒரு இனம் புரியாத பாசம் வந்துருச்சு. அவனுக்கும் அப்படி தான் அது ஏன்னு இப்ப வரைக்கும் எனக்கு தெரியல. சித்தார்த் லைஃப்ல நடந்தத பத்தி எல்லாத்தையும் செண்பகம் அம்மா என்கிட்ட சொன்னாங்க. அத கேட்ட உடனே சித்தார்த்துக்காக ஏதாவது பண்ணனும்னு தோணுச்சு. அவன் என் மேல கற்ற பாசத்தை விட அவன் மேல நான் இன்னும் அதிகமா பாசம் காட்டி நல்லா பாத்துக்கணும்னு தோணுச்சு. நான் அத செண்பகம் அம்மாகிட்டயும் சொன்னேன்.
அவங்க உடனே அப்போ என் பையனை கல்யாணம் பண்ணிக்கிட்டு சித்தார்த்துக்கு நல்ல அம்மாவா இருந்து அவனை பாத்துக்குவியான்னு கேட்டாங்க. எனக்கு அது முதல்ல ஷாக்கிங் ஆதான் இருந்துச்சு. அப்புறம் யோசிச்சு பாத்தேன். என் மேல இவ்ளோ உயிரா இருக்குற என் சித்து குட்டிக்காக என்ன வேணாலும் பண்ணலாம்னு தோணுச்சு. அதான் உடனே ஓகே சொல்லிட்டேன். அவனுக்கு அம்மாவா இருக்குறதுக்கு நான் ரொம்ப குடுத்துவச்சு இருக்கணும்.” என்று நடந்தவற்றை எதுவும் மறைக்காமல் அப்படியே சொன்னாள்.
ராகவி என்ன தான் நேர்மையாக உண்மையை அப்படியே சொல்லி இருந்தாலும், அதை உண்மை தான் என்று ஒப்புக்கொள்ள விஷ்வாவின் மனம் தயாராக இல்லை. அவனைப் பொறுத்தவரை ராகவி வெறும் பணத்தாசை பிடித்தவள் மட்டுமே. அதனால் இத்தனை நேரம் அவள் பேசியது அனைத்துமே நாடகம் என்று தான் அவன் நினைத்துக் கொண்டு இருந்தான். அதனால் அவளை கேஷுவலாக பார்த்தவன், “ஓகே தென், இந்த மேரேஜ் லைப்ல உனக்கு வேற ஏதாவது எக்ஸ்பெக்டேசன்ஸ் இருக்கா..???” என்று நேரடியாக கேட்டான்.
ராகவி: “இருக்கு. நானே இத பத்தி உங்க கிட்ட பேசலாம்னு நெனச்சேன். பரவால்ல நீங்களே கேட்டுட்டீங்க. நான் இதை பத்தி கேட்டா நீங்க வேணான்னு சொல்ல மாட்டீங்கன்னு நம்புறேன்.” என்று சிறு தயக்கத்துடன் சொன்னாள்.
விஷ்வா: ஏற்கனவே ராகவியின் வாயில் இருந்து இந்த வார்த்தைகள் தான் வரும் என்று கணித்திருந்தவன், “அதானே பாத்தேன்..!!! எவ்ளோ நேரம் தான் நல்லவ வேஷம் போட முடியும்…, இதோ இப்ப பாயிண்டுக்கு வந்துட்டால்ல…. பாப்போம் காசு லட்சத்துல வேணும்னு கேட்கிறாளா, இல்ல கோடில வேணும்னு கேக்குறாளான்னு…!!!” என்று தன் மனதிற்குள் நினைத்தவன், “உனக்கு என்ன வேணும்னு சொல்லு. எதுவா இருந்தாலும் குடுக்கிறேன். என் பையனுக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்னு உனக்கு தான் நல்லா தெரியுமே…!!!!” என்று குத்தலாக சொன்னான். அவனை பொறுத்தவரை ராகவி சித்தார்த்தை ஒரு கருவியாக பயன்படுத்தி நாராயணனின் குடும்பத்திற்குள் வர முயற்சிப்பவள் மட்டுமே.
ராகவி: “எனக்கு உங்க கிட்ட இருந்து எதுவும் வேண்டாம். நான் எனக்காகவோ, என்னோட குடும்பத்துக்காகவோ, ஏதாவது செய்யும்போது நீங்க என்ன தடுக்காம இருந்தாலே போதும். இப்போ நான் பாத்துட்டு இருக்குற வேலைய கல்யாணத்துக்கு அப்புறமும் நான் கண்டினியூ பண்ண ஆசைப்படுறேன்.
எனக்கு டான்ஸ் தான் எல்லாமே. அதனால நீங்க எப்பவும் என்ன டான்ஸ் ஆடக்கூடாதுன்னு சொல்லாம இருக்கணும். எங்க அப்பா, அம்மாவுக்கு, நான் மட்டும் தான் இருக்கேன். அதனால நான் அவங்கள பாக்கணும்னு எப்ப நினைச்சாலும், நீங்க என்ன இங்க வர விடனும். அவங்கள பாத்துக்கிறது என்னோட ரெஸ்பான்சிபிலிட்டி நீங்க அத புரிஞ்சுக்கணும். அவ்ளோ தான். வேற எதையும் உங்க கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல.” என்று உறுதியான குரலில் சொன்னாள்.
அவன் வேறு ஒன்றை எதிர்பார்த்து இருக்க ராகவி இப்படி ஒன்றை கேட்டதால், விஷ்வா அதிர்ச்சி அடைந்தான். இருப்பினும், “ப்பா…!!! நம்ம இவளை நடிகைன்னு நினைச்சா, ஆனா இவ மகா நடிகையா இருக்காளே…!!! எப்படியும் இவனை கல்யாணம் பண்ணா நம்ம பேருலயும் ப்ராப்பர்ட்டீஸ்ல ஷேர் இருக்க போது தானே…!!! அதான் தனியா கேட்க வேணாம்னு தெளிவா யோசிக்கிறா போல.” என்று தனக்குள் நினைத்தவன், “அதெல்லாம் எந்த பிரச்சனையும் இல்ல. நான் உன்ன கல்யாணம் பண்ணா நீயும், உன்னோட ஃபேமிலியும், என்னோட ரெஸ்பான்ஸ்சபிலிட்டி தான். நானே உன்னோட பேரன்ட்ஸ நல்லா பாத்துப்பேன். பட் ஸ்டில் நீ அவங்களுக்கு ஏதாவது செய்யணும்னு நினைச்சேனா, செய் அது உன்னோட இஷ்டம்.
உண்மையை சொல்லணும்ன்னா, எனக்கு இந்த கல்யாணத்துல இன்டெரெஸ்ட்டே இல்ல. நான் என்னோட அம்மாவுக்காகவும், பையனுக்காகவும், தான் உன்னை கல்யாணமே பண்ணிக்கிறேன். என் மனசுல இப்பவும் என் ஜான்வி தான் இருக்கா, எப்பவும் அவ மட்டும் தான் இருப்பா. உன்ன என்னால என்னோட வைஃப் ஆ எப்பவுமே அக்செப்ட் பண்ணிக்க முடியாது. உனக்கு என்னோட வைஃப்பா இருக்கணும்னு ஆசை எல்லாம் இருந்துச்சுன்னா, இப்பவே இந்த மேரேஜ் வேணாம்னு ஓடி போயிரு. நான் அம்மாகிட்ட பேசிக்குறேன்.
நீ சொசைட்டிக்கு மட்டும் தான் என்னோட வைஃப்பா இருப்ப. உனக்கு ஏதாவது வேணும்னா, கண்டிப்பா நான் அத செஞ்சு குடுப்பேன். பட் நீ நாராயணன் குடும்பத்தோட பேர கெடுக்கிற மாதிரி தப்பா எதுவும் பண்ணாத வரைக்கும், நான் உன்னோட பர்சனல் லைஃப்ல இன்டெர்ஃபியர் ஆகி உன்ன எதுவும் கேள்வி கேட்க மாட்டேன். நீ உனக்கு புடிச்ச மாதிரி இருக்கலாம். அட் த சேம் டைம், நீ என்னோட வைஃப்னு நினைச்சு என் கிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க ட்ரை பண்ண கூடாது. சித்தார்த்த பத்தி எதையும் டிசைட் பண்றதுக்கு உனக்கு ரைட்ஸ் கிடையாது. அவன பத்தின சின்ன விஷயமா இருந்தாலும், அதை நீ என்கிட்ட டிஸ்கஸ் பண்ணாம செய்யக்கூடாது. இதுக்கு எல்லாம் உனக்கு ஓகேன்னா சொல்லு நம்ப கல்யாணம் பண்ணிக்கலாம்.” என்று கண்டிப்பான குரலில் சொன்னான்.
விஷ்வா உன்னிடம் இப்படி தான் நடந்து கொள்வான் என்று ராகவியிடம் ஏற்கனவே செண்பகம் சொல்லி வைத்து இருந்தாள் தான். விஷ்வாவுடன் ஆன தன்னுடைய வாழ்க்கை இப்போது அவன் சொன்னதைப் போலத்தான் இருக்கப் போகிறது என்று அவளுக்கே நன்றாக தெரியும். இருப்பினும் அது மாதிரியான சொற்களை அவன் சொல்ல, அதை கேட்க.. கேட்க.. ராகவியின் முகமே ஒரு மாதிரி மாறிவிட்டது. 😟 விஷ்வாவும் அதை கவனித்துக் கொண்டு தான் இருந்தான். ஆனால் அதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
ராகவி: “நீங்க சொல்றது எனக்கு புரியுது. இது எல்லாமே ஆல்ரெடி எனக்கு தெரிஞ்சது தான். உங்களோட கண்டிஷன்ஸ் ஐ நான் அக்செப்ட் பண்றேன். என்னோட லிமிட் என்னான்னு எனக்கு தெரியும். அண்ட் மோர் ஓவர், இந்த கல்யாணத்தை நான் சித்தார்த்துக்கு அம்மாவா இருக்கறதுக்காக மட்டும் தான் பண்ணிக்கிறேன். எனக்கு உங்க மேலயும் இன்ட்ரஸ்ட் இல்ல. மேரேஜ் மேலயும் இன்ட்ரஸ்ட் இல்ல. சோ, டோன்ட் வரி மிஸ்டர் விஸ்வா. நான் தெரியாம கூட உங்ககிட்ட அட்வான்டேஜ் எடுத்துக்க மாட்டேன்.” என்று அவளும் உறுதியாக கம்பீரமான குரலில் சொன்னாள்.
ராகவி சொன்னதை கேட்டு திருப்தியாக அவளைப் பார்த்து புன்னகைத்த விஷ்வா, “குட், யு ஆர் எ ஸ்மார்ட் கேர்ள். யார்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு உனக்கு தெரிஞ்சிருக்கு. எப்பவும் இப்படியே இரு.” என்றவன், “ஐ ஹவ் சம்திங் ஃபார் யூ.” என்று சொல்லி கொண்டே அவனுடைய பேண்ட் பாக்கெட்டில் தன் கையை விட்டு எதையோ வெளியே எடுத்தான். அது ஒரு சிறிய அழகிய மரத்தால் ஆன பெட்டி. அதை ராகவியின் முன் நீட்டியவன், “இது உனக்காக. என்னோட ஒரு ஸ்மால் கிப்ட்.” என்று சொன்னான்.
இப்போது தான் சற்று நேரத்திற்கு முன் தன்னை எப்போதும் மனைவியாக ஏற்றுக் கொள்ளவே மாட்டேன் என்று சொன்னவன், இப்போது தனக்கு ஏன் பரிசு கொடுக்கிறான்..?? என்று நினைத்து குழம்பிய ராகவி தயக்கத்துடன் அதை வாங்கி திறந்து பார்த்தாள். 🙄 அவளுடைய மனதின் ஏதோ ஒரு ஆழத்தில் அதற்குள் என்ன இருக்கப் போகிறது என்ற ஆசை எட்டிப் பார்த்ததை அவளால் இல்லை என்று மறுத்துவிட முடியாது. அந்தப் பெட்டிக்குள் இருந்ததை பார்த்தவுடன் ராகவியின் கண்கள் ஆச்சரியத்திலும், அதிர்ச்சியிலும், பெரிதாக விரிந்தன. 😮 👀
அதற்குள் ஒரு பிளாட்டினம் பென்டன்ட் இருந்தது. அதன் டாலரில் ஒரு பெரிய ப்ளூ கலர் டைமண்ட் கல் பதித்த டாலரும் இருந்தது. எனக்கும் அவனுக்கும் இடையில் எந்த உறவும் இருக்கப் போவதில்லை எனும்போது, அவனிடம் இருந்து இது போன்ற பரிசுகளை பெற்று வைத்துக்கொள்வதில் ராகவிக்குு விருப்பமில்லை. அதனால் அந்த பெட்டியை மீண்டும் மூடி அவனிடமே நீட்டியவள், “ஐ அம் சாரி. நான் இப்படி சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்கு இவ்ளோ எக்ஸ்பென்சிவான கிப்ட் எல்லாம் வேண்டாம்.” என்று தட்டு தடுமாறி சொன்னாள்.
அவள் அப்படி சொன்னதை கேட்ட விஷ்பாவிற்கு உடனே கோபம் வந்துவிட்டது. 😒 “இவளுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இவ என்னையவே எதிர்த்து பேசுவா..???” என்று தன் மனதிற்குள் நினைத்தவன், “நான் நீ இத வச்சுக்கிறியான்னு உன்கிட்ட பர்மிஷன் கேட்கல. வச்சுக்கோன்னு சொல்றேன். இப்ப என் கண்ணு முன்னாடியே நீ இந்த பென்டென்டா உன் கழுத்துல போடுற. இத நீ எப்பவுமே கழட்டக்கூடாது. இத நீ கலட்டுனேன்னு எனக்கு தெரிஞ்சது அவ்ளோ தான்..!!!” என்று தன்னுடைய ஆள்காட்டி விரலை அவள் முன் நீட்டியவன், அதிகார தோரணையில் கிட்டத்தட்ட அவளை மிரட்டினான். ☹️
இதுவரை இல்லாத அளவிற்கு விஷ்வா இப்போது தன்னுடைய குரலை உயர்த்தி பேசியதால் ராகவி பயந்துவிட்டாள். 🙁 😨 😟 கண்டிப்பாக நாராயணன் குரூப்ஸ் இன் தலைவரை எதிர்த்து பேசும் தைரியம் அவளுக்கு இல்லை. அதனால் நடுங்கிய கைகளுடன் மீண்டும் அந்த பாக்ஸை திறந்தவள், அதில் இருந்த பென்டன்-டை எடுத்து தன்னுடைய சங்கு போன்ற கழுத்தில் அதை போட முயன்றாள். பயத்தில் அவளுடைய உடம்பெல்லாம் நடுங்கிக் கொண்டு இருக்க, அவளுடைய கண்கள் பதட்டத்தில் விஷ்வாவையே பார்த்துக் கொண்டு இருந்தன. 🙄 👀
– நேசம் தொடரும் ❤️
(என்னை மறக்காமல் பிரதிலிப்பியில் ஃபாலோ செய்யுங்கள் மற்றும் நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் facebook குரூப்பில் இணையுங்கள்.)